May 20, 2011

சோ- உலகத்தையே திருப்பி போட போற படம்!

(producer தனது ஆபிசில் சில தெலுங்கு பட விசிடிகளை பார்த்து கொண்டிருந்தார். )

director: சார்! உள்ள வரலாமா சார்?

prod: யோவ்! பாரதிகௌதம்....என்னய்யா ஆளே காணும்? வா வா...உட்காரு.

dir: சார், போன தடவ நீங்க தான் சார் என்னைய அடிச்சு விரட்டிவுட்டீங்க!

prod: ஆமா யா! பன்னி கதை, நாய் கதைனு சொன்னா....கோபம் தான் வரும்! சரி, அப்பரம்..இப்ப என்ன படம் direct பண்ணிகிட்டு இருக்க?

(மேசையில் இருந்த தெலுங்கு பட விசிடிகளை பார்த்த கௌதம்)

dir: சார், என்ன சார், தெலுங்கு படம் எடுக்க போறீங்களா?

prod: அது ஒன்னுமில்லையா, சிம்பு கால்ஷீட் இருக்கு. அப்படியே ஏதாச்சு ஒரு தெலுங்கு படத்த ரீமேக் பண்ணலாம்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்.

dir: என்ன சார் நீங்க? நீங்க இப்படி பண்ணலாமா? ரீமேக் படமெல்லாம் எடுத்தா, எங்கள மாதிரி creative ideas இருக்குற இயக்குனர்களுக்கு வாய்ப்பு இல்லாமா போயிடாதா சார்:)

prod: அதலாம் ஒன்னும் போகாது. உங்கிட்ட கதை இருக்கா? சொல்லு?

dir: ஆமா சார்! உங்களுக்கு தெலுங்கு படம் மேல இப்படி ஒரு மோகம் இருக்குன்னு எனக்கு தெரியும் சார். என்கிட்ட ஒரு script இருக்கு. ஒரு படம், 5 கதை.....

prod: (வாய் விட்டு சிரித்தார்)

dir: சார், இது காமெடி கதையா? action கதையான்னு கூட தெரியாம ஏன் சார் சிரிக்கிறீங்க?

prod: உன்கிட்ட கதை இருக்குதுனு சொன்னதே பெரிய காமெடி, அதலயும் 5 கதைனு சொன்ன பாத்தீயா....(சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார்)

dir: சார், கிண்டல் பண்ணாதீங்க...கதைய கேளுங்க....5 கதை, 5 characters, எல்லாரும் வெவ்வேற வாழ்க்கை வாழுறாங்க...ஆனா கடைசில ஒரு ipl match சந்திக்குறாங்க. அங்க என்ன நடக்குது....அது தான் சார் கதை. எப்படி?

prod: படத்துக்கு title?

dir: பூமி, கீழே tagline 'எங்க காமி?'

prod: என்னய்யா? என்னைய பாத்தா geography professor மாதிரி இருக்கா? இந்த 5 பட கதை எல்லாம் உனக்கு ஒத்து வராது. ஒரே கதை, நல்ல கதையா சொல்லு?

dir: so

prod: அதான் சொல்லிட்டேன்ல. நீ தான் கதைய சொல்லனும்.

dir: so

prod: என்னய்யா மறுபடி மறுபடியும் so? கதை இருக்கா இல்லையா?

dir: ஐயோ சார், கதை பெயரே அது தான் சார்!

prod: என்னது?

dir: சோ!

prod: (முகம் மலர்ந்தது) ரொம்ப வித்தியாசமா இருக்கே!

dir: எனக்கு தெரியும் சார்! உங்களுக்கு இந்த கதை பிடிக்கும்னு. இந்த படம் முழுக்க ரொம்ப hi techல போகும் சார். படத்துல hero ஆப்பிள் விக்கிறவரு!

prod: ஆப்பிளா? யோவ்...சாத்துகுடி, மாம்பழம்...இப்படி ஏதாச்சு விக்க சொல்லுய்யா!

dir: சார்! அந்த ஆப்பிள் இல்ல. apple products விக்கிறாரு. iphone salesman.

prod: ஓ...ஓ...சரி சரி.

dir: ஹீரோவோட ஆயுதமே iphone4 தான். அத வச்சு ரோட்ல நடக்குற traffic குற்றங்களையும், அரசியல் வாதி பண்ணுற தப்புகளை ஃபோட்டா எடுத்து, facebookல upload பண்ணுறதுனு அவரோட பொழப்பு!

prod: (அமைதியாக இருந்தார், கொஞ்சம் நேரம் கழித்து) படத்துல ஹீரோயின்?

dir: சார், நம்ம ஊர் பொண்ணு தான் போடனும். அந்த காலத்துல famousஆ இருந்த ஹீரோ அல்லது ஹீரோயின் பொண்ண போட்டால் தான் சரியா இருக்கும்!

prod: ஏன்?

dir: சார்! நம்ம படத்துல எல்லாத்தலயும் புதுமை புகுத்திகிட்டே இருக்கனும் சார்! நவரச நாயகன் கார்த்திக் பொண்ண போடலாமா?

prod: யோவ் அவருக்கு பொண்ணே இல்லையா!

dir: தேவையானி பொண்ணு?

prod: யோவ்...அதுங்க இப்ப தான் எல்கேஜி போகுதுங்க!

dir: ம்ம்....ரம்பாவுக்கு....

prod: நீ வாய மூடு! ஆமா எதுக்கு இப்படிப்பட்ட ஹீரோயின் தேவை?

dir: இந்த படத்துல ஹீரோயினுக்கு கண்ணு பெரிசா இருக்கனும்! அந்த கண்ண வச்சு ஒரு சூப்பர் ஹிட் பாடல் ஒரு புது கவிஞர் எழுதியிருக்கார்!

prod: கதை ஓகே ஆவறதுக்கு முன்னாடியே பாட்டு ரெடி ஆயிட்டா!??

dir: இப்ப எல்லாம் ready-made பாடல்கள் trend. எந்த படத்துக்கும் பாட்டு always ரெடி.

prod: சரி, அந்த புது கவிஞர் யாரு?

dir: (புன்சிரிப்புடன்) நான் தான் சார்!

prod: கொடுமை!

dir: சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

prod: ஐயோ ரொம்ப பெருமையா இருக்குனு சொல்ல வந்தேன். பாட்டு வரிய சொல்லு.

dir: ஹீரோயின் கண்ணு ஷார்ப்பா இருக்குது...அதனால...

"உன் கண்ணு கண்ணமாபேட்டே, அதுல ஏன் என்னைய கொன்னுபுட்ட?"

இப்படி போகுது சார் பாட்டு. இந்த பாடல norway உள்ள ஒரு மலை உச்சியில ஒரு சுடுகாடு இருக்கு. அங்க தான் ஷுட் பண்ண போறோம்.

prod: ஏன்? நம்ம ஊரு சுடுகாட்டுல இந்த பாட்ட எடுக்க முடியாதா?! (கொஞ்சம் கொஞ்சமாய் கோபம் வந்தது)

dir: சார், இந்த பாட்டுல highlightஏ அந்த மலையில் ஒரு சின்ன கல்லு ஒன்னு தொங்கும். அங்க நீன்னுகிட்டு ஆடுனும் நம்ம ஹீரோவும் ஹீரோயினும்.

prod: இந்த ஷாட் பாட்டுல எவ்வளவு நேரம் வரும்?

dir: 10 secondக்கு மேலே காட்ட மாட்டோம்! இந்த பாட்டுல ஒரு speciality இருக்கு.

prod: என்ன அது? (கிண்டலாய் இழுத்தார்)

dir: உலகத்துல உள்ள famous சுடுகாடுகள் இருக்கும் இடத்துக்கு போய் ஷுட் பண்ணுவோம்:)) பாட்டு சூப்பர் ஹிட், எழுதி வச்சுக்குங்க சார்!

prod: போன தடவ என்ன பண்ணேன் நான்?

dir: அடிச்சு விரட்டுனீங்க!

prod: இப்ப விரட்டி அடிக்க போறேண்டா!

dir: ஐயோ சார்!!!

prod: அடிங்க!!!

(அச்சமயம், ஒரு வெள்ளக்காரன் tea glassவுடன் உள்ளே நுழைந்தான்.)

dir: என்ன சார்? வெள்ளக்காரன் எல்லாம் office boyயா வச்சு இருக்கீங்க?

வெள்ளக்காரன்(ஆங்கிலம் கலந்த தமிழில்): நான் office boy இல்ல. tour guide! உங்க ஊருல முக்காவாசி பேரு எங்க ஊருல வந்து தான் படம் எடுக்குறாங்க! அதுக்கு நான் தான் guide.

dir: norway நான் பார்த்தே ஆகனும்.

வெள்ளக்காரன்: உங்க ஊருலே அழகு அழகா இடம் இருக்கு. அதவிட்டுட்டு ஏன் தான் எங்க ஊருல வந்து நாசம் பண்ணுறீங்களோ!!??

*முற்றும்*

8 comments:

Anonymous said...

bloody hilarious. =))

ANaND said...

விழுந்து விழுந்து சிரிச்சேங்க ....

உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு நீங்க பேசாம கோடம்பாக்கம் வந்துடுங்க ..


உன் கண்ணு கண்ணமாபேட்டே, அதுல ஏன் என்னைய கொன்னுபுட்ட?".. .. இந்த லைன் உண்மைலே நல்லா இருக்குங்க ... உங்ககிட்டருந்து இன்னும் எதிர்பாக்குறோம்

FunScribbler said...

@அனாமிகா,நன்றிங்க:)

@ஆனந்த்,
//உங்களுக்கு நல்ல எதிர்காலம்//

வாழ்க்கையில முதல் முதலா நீங்க தான் இப்படி சொல்லியிருக்கீங்க! (வீட்டுல கூட இப்படி சொன்னது இல்லப்பா:)) நன்றி!

//உங்ககிட்டருந்து இன்னும் எதிர்பாக்குறோம்//
pressure தாங்கமாட்டேன் சாமி:)

vijayroks said...

ha ha ha rofl....andha boomi tagline la enga kaami...sema sema sema....aiyyo vayiru valikkudhu sirichu sirichu

Rajan said...

பாரேன் இந்த பையனுக்குள்ளே எதோ ஒன்னு ஒளிஞ்சுற்றுந்துருக்கு

FunScribbler said...

@rajan:

பையனா? யாரு?? நானா!?? ஐயோ நான் ரொம்ப நல்ல பொண்ணுங்க:)

Raja said...

onnum solarathuku illa...u have grt future...inda rangela poona.. :)

எவனோ ஒருவன் said...

இந்த முறை கோ படமா :)

செம காமெடிங்க :-)

Nice.