Jun 26, 2011

அப்பரம் இன்னிக்கு என்ன plan?- 5

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4


சந்தோஷ் சொன்னது அவளுக்குக் கேட்டது. இருப்பினும் அதற்கு பதில் சொல்லவில்லை. menu cardயைப் பார்த்து கொண்டிருந்தாள். சந்தோஷின் முகத்தைப் பார்க்கவில்லை. சந்தோஷும் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். அச்சமயம் சர்வர் வந்தான். அவர்களது ஆர்டராக காத்திருந்தான். மாயா மெனு கார்ட்டையே பார்த்து கொண்டிருந்தாள். சர்வருக்கும் பதில் அளிக்கவில்லை. அவளது மௌனம் சந்தோஷுக்குச் சற்று பயத்தைத் தந்தது.

சர்வரிடம் அப்பரம் வருமாறு சொல்லி அனுப்பிவைத்தான் சந்தோஷ். கூட்டம் அக்கடையில் வர தொடங்கியது. "மாயா.." என்றான் சந்தோஷ்.

"are you ok? I am sorry.... i just...." என்று சிக்கி விக்கி வெளியே வந்து விழுந்தன அவனது வார்த்தைகள்.

மாயா நிமிர்ந்து அவனது கண்களைப் பார்த்தாள். அதில் தெரிந்தது ஒருவித வியப்பு, பயம், சோகம். நல்ல நட்பைக் கலங்கப்படுத்திவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அவனது மனசாட்சியை கொஞ்சம் கொஞ்சமாய் திண்றது.

"எனக்கு இதலாம் தெரியாது. i don't know...." அவளது மனம் படபடவென்றது. வேர்த்துகொட்டியது அவளுக்கு. சுற்றிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததால், அவளால் ஒன்றும் சொல்லவும் முடியவில்லை. எழுந்தாள். கடையைவிட்டு வெளியேறினாள். ஒன்றும் புரியாத சந்தோஷும் அவளைப் பின் தொடர்ந்தான். கார் நிறத்தும் இடத்திற்குச் சென்றனர். ஒரு தூண் பின்னல் இருவரும். யாருமே அங்கு இல்லை.

நெற்றியில் கைவைத்து யோசித்தாள். அவளது வலது கை சற்று நடுக்கத்துடன் இருந்ததைக் கவனித்த சந்தோஷ் அவளது நடுக்கிய கையைப் பிடித்து, " yes or no. ஏதாச்சு சொல்லேன். what's stopping you?" அவனது கைப்பிடியிலிருந்து கையை எடுத்தாள் மாயா.

"நான் மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல, சந்தோஷ்?" என்றாள்.

"what?" ஆச்சிரியம் அடைந்தான் சந்தோஷ்.

"normal girls மாதிரி இல்ல. வேலைக்கு போயிட்டு. வீட்டுக்கு வந்து சமையல் வேலை பாத்துகிட்டு... என்னால அப்படி இருக்க முடியாது. நான் அப்படி இல்ல. i have an ambition, சந்தோஷ்." என்று அவனுக்கு புரிய வைத்தாள் மாயா.

சிரித்தான் சந்தோஷ். புருவங்களைச் சுருக்கி மாயா, "ஏன் சிரிக்குற?"

"இல்ல. நீ normal girls மாதிரி இல்லேனு சொன்னீயே, நான் என்னமோ நினைச்சுட்டேன் நீ fire படத்துல வர பொண்ணுங்க மாதிரினு..." என்று சொல்லி மறுபடியும் சிரித்தான். சீரியஸா போய் கொண்டிருக்கும் பேச்சு இடையே அவன் செய்த நகைச்சுவையும் ரசித்தவளாய் சின்னதாய் ஒரு புன்னகை வீசினாள் மாயா.

மாயா, "நான் இப்ப செஞ்சிகிட்டு இருக்குற வேலை பிடிக்கல. i want to be a professional football player. அது தான் என் ஆசை. சின்ன வயசுலேந்து எனக்கு அது தான் ஆசை. வீட்டுல ஒத்துக்கல. i wanted to study sports science. அத படிச்சு என்ன கிழிக்க போறேன்னு சொல்லி என்னைய business adminstration படிக்க வச்சாங்க. இப்ப செய்யுற வேலை என் parentsக்காக தான் பாத்துகிட்டு இருக்கேன். நான் ஒவ்வொரு வாரமும் football practice பண்ண போறப்பெல்லாம் வீட்டுல போக கூடாதுனு சொல்வாங்க. அதையும் தாண்டி, திட்டு வாங்கிகிட்டு, சண்டை போட்டு தான் போனும். சொல்ல போனால், i have not lived my life at all!" என்று சொல்லும்போது மாயாவின் கண்கள் குளமாகின.

தொடர்ந்தாள், "ஒரு நாள்கூட எனக்கு பிடிச்ச மாதிரி நான் வாழ்ந்தது இல்ல. அப்படி இருக்கும்போது என் வாழ்க்கைல இன்னொருத்தர் வந்து... அவரையும் கஷ்டப்படுத்த விரும்புல." என்று முடித்தாள். அழுகையை தடுக்க முயன்றாலும் அவளால் முடியவில்லை. தேம்பி தேம்பி அழுதாள்.

"when do you want to live your life then?" என்றான் சந்தோஷ்.

"எனக்கு தெரியல. நிறைய பேர கஷ்டப்படுத்திட்டேன். வீட்டுல என்னால எப்போதுமே பிரச்சன. என்னால இனி யாரும் கஷ்டப்பட வேண்டாம்." என்று தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தினாள்.

அவளது இரு கைகளையும் பிடித்த சந்தோஷ், " இங்க பாரு மாயா! look at me."
அவள் பார்க்க மறுத்தாள். ஆனால் அவனது கைபிடியிலிருந்து அவள் விலக வில்லை. அந்த பிடி அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

"என்னைய பாரேன். please..."என்று மறுபடியும் கெஞ்சினான். பார்த்தாள்.

"எனக்கும் normal girls வேணாம். உன்னைய மாதிரி extraordinary பொண்ணு தான் வேணும். சமையல் வேலை பாக்க தேவையில்ல. இனி உன் ஆசை தான் என் ஆசையும். let us live the life that you wanted to!" என்று நம்பிக்கையுடன் பேசினான். அவனது பிடியிலிருந்து விலகிய மாயா,

"உனக்கு புரிய மாட்டேங்குது சந்தோஷ்? கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாரும் இப்படி தான் சொல்வாங்க...."

"எத்தன தடவ கல்யாணம் பண்ணியிருக்க?" நக்கல் அடித்தான் சந்தோஷ். முழித்தாள் மாயா.

மாயா, "ஐயோ சந்தோஷ். please! என்னைய புரிஞ்சிக்கோ!" மன்றாடினாள். இவர்கள் பேசி கொண்டிருக்கும்போது மாயாவின் கைபேசி அலறியது. எடுத்து பேசினாள்,

"மா, வந்துட்டேன். தெரியும் மா! நான் வரேன். கிளம்பிட்டேன். புரியது. எத்தன தடவ சொல்றது?? நான் வந்துகிட்டு இருக்கேனு," கோபமாக பேசி முடித்தாள்.

சந்தோஷ், "அத்தையா?" என்றான்.

மாயா, "சந்தோஷ், i got to go."

சந்தோஷ், "நான் lift தரவா?"

தான் சமாளித்து கொள்வதாகக் கூறி சிட்டாய் பறந்து சென்றாள். காதலை சொன்னால் மன சுமை குறையும் என்று நினைத்தவனுக்கு அவளது பதில், சுமையை அதிகரித்தது. இருந்தாலும், காதல் குறையவில்லை. அவள் சொன்ன மாதிரி அவள் சாதாரண பெண் இல்லை. அவளது லட்சியத்தை எண்ணி பெருமை அடைந்தான். அவள் பறந்து விரைந்து செல்வதைப் பார்த்து தனக்குள் சொல்லி கொண்டான், " maya, எனக்கு நீ வேணும்!"

நடந்து எல்லாவற்றையும் ரவியிடம் கூறினான் அன்றிரவு.

"what???" பதறி போனான் ரவி. சந்தோஷ், "எதுக்கு இந்த பதற்றம்?"

"பின்ன என்ன டா. opening batsmanஆ சச்சின் இல்லாம sreeshantத்த பாத்தா பதறாம எப்படி இருக்க முடியும்?" என்றான் ரவி.

தொடர்ந்தான் ரவி, "என்னமோ போ. அவளுக்கு உன் மேல வெறுப்பு வராம பாத்துக்கோ." அறிவுரை கொடுத்தான்.

ஏதேனும் குறுந்தகவல் அனுப்பியிருக்கிறாளா என்று சந்தோஷ் தனது கைபேசியை அவ்வபோது பார்த்து கொண்டான். facebookல் தனது statusயை update செய்தான்

இது சரியா தவறானு தெரியல. ஆனா, இந்த வலி எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.

(தொடரும்)

7 comments:

Anonymous said...

Maya = Gayu???? Neeyuma kanna neeyuma?

FunScribbler said...

Ana: of course noooooo! Jai anjaneya!

ANaND said...

wanted to study sports science.

இப்படி ஒரு படிப்பு இருக்கா .. நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும்

சர்க்கரை பொங்கல்ல ஒரு முந்திரி மாதிரி ஒரு நல்ல செய்தி .....

----------------
மாயா நிமிர்ந்து அவனது கண்களைப் பார்த்தாள். அதில் தெரிந்தது ஒருவித வியப்பு, பயம், சோகம். நல்ல நட்பைக் கலங்கப்படுத்திவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அவனது மனசாட்சியை கொஞ்சம் கொஞ்சமாய் திண்றது./////

ஒ ... அந்த நிமிடம் ரொம்ப கஷ்டம்ங்க

-------------------

அப்பறம் ஒரு ரிக்வெஸ்ட் ...
இப்படி ஒரு ரொமாண்டிக்கான ஸ்டோரி க்கு ஹீரோயின் நேம் மாயா ..

ITS NOT SO ROMANTIC

-----------------------

அப்பறம் இந்த ரவி ரொம்ப பாவங்க

FunScribbler said...

@anand:

//அப்பறம் ஒரு ரிக்வெஸ்ட் ...
இப்படி ஒரு ரொமாண்டிக்கான ஸ்டோரி க்கு ஹீரோயின் நேம் மாயா ..

ITS NOT SO ROMANTIC//

பெயர்ல எப்படிங்க romanticஆ இருக்க முடியும்? அப்படிப்பட்ட ஒரு example கொடுங்களேன்:))

காக்க காக்க படத்துல ஜோ பெயர்கூட 'மாயா' தான்! romantic படம் தானுங்க அதுவும்:)))

ANaND said...

இது சரியா தவறானு தெரியல. ஆனா, இந்த வலி எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு./////

ஆஹா .. இவ்ளோ நேரம் இத கதைண்ணுல நெனச்சிட்டு இருந்தன்..

ஜெய் ஆஞ்சிநேயா கிளப்ல இருந்த ஒரே ஒரு ஆளும் போயாச்சா..?

FunScribbler said...

ஆனந்த்:

//ஆஹா .. இவ்ளோ நேரம் இத கதைண்ணுல நெனச்சிட்டு இருந்தன்..

ஜெய் ஆஞ்சிநேயா கிளப்ல இருந்த ஒரே ஒரு ஆளும் போயாச்சா..?//

இது நிஜம் அல்ல, வெறும் கதை தான்:)) இந்த அனாமிகா அக்காவோடு சேர்ந்து நீங்களும் ரொம்ப லொள்ளு பண்றீங்க:))))

உலகமே அழிஞ்சாலும், ஜெய் ஆஞ்சிநேயா கிள்ப் மட்டும் அழியாது!!

எவனோ ஒருவன் said...

மாயா - இந்தக் கதைக்கு இந்தப் பேரு தான் ரொம்ப அழகு சேர்க்குதுன்னு தோனுது. ஒவ்வொரு டைம் சந்தோஷ் மாயான்னு சொல்லும் போதும் ஏதோ சூர்யா ஜோ பேசிக்கிற மாதிரி இருக்கு :-)

Superb writing :-)