Jan 28, 2009

9 வருஷ நட்பு இன்னும் தொடரனும்.

பள்ளி நண்பர்களின் சந்திப்பு- 26/01/09

ஒவ்வொரு வருஷமும் குறைந்தது இரு முறையாவது சந்தித்து கொள்வோம். போன வருஷம் அதிகமாகவே இருந்தது. காரணம் எல்லாரும் தங்களது 21வது பிறந்தநாள் கொண்டாடத்தை கொண்டாடினர். ஒவ்வொரு நண்பரின் பிறந்த நாளுக்கும் போய்விடுவோம் (பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்தே...பட்ஜெட் சங்கர் படம் அளவுக்கு ஏறிபோச்சு...அத வேற கதை..)


மதியம் 12 மணிக்கு வந்துடுங்க என்று தோழி ஸ் எம் ஸ் செய்தாள் அதற்கு முன் தினம். எங்களை ஒன்று திரட்டி ஏற்பாடு செய்த தோழிக்கு பெரிய கட் அவுட் வைக்கனும். ஏன்னா, ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வது எவ்வளவு கஷ்டம் என்று எல்லாருக்கும் தெரியும். இதை ஒரு மாதம் முன்பே, தொடங்கிவிட்டாள். கெட்டிக்காரி! (என் ஃபிரண்டாச்சே..:)


அக்காவுக்கும் என் பள்ளி நண்பர்களை நன்கு தெரியும் என்பதால், அக்காவும் வந்தாங்க. நானும் அக்காவும் தான் சொன்ன நேரத்திற்கு சென்றோம். அதுக்கு அப்பரம் ஒவ்வொரு ஆளா வந்து சேர்ந்தாங்க. ஒவ்வொருவரும் ஒரு சாப்பாடு ஐட்டம் கொண்டு வரனும். mee goreng (noodles வகை மாதிரி ஒன்னு), egg fried rice, sambal chicken, sardine fish curry, chicken nuggets, egg masala,chips, biscuits, coke, miranda...என்று பலவகையான சாப்பாடு.

இவ்வளவு வந்துவிடும் என்று தெரியாது. தெரிந்து இருந்தால், இரண்டு நாள் பட்டினியா இருந்திருப்பேன்!:)


நண்பர் விக்கி என்பவர் பாவம். கால்ல ஆப்ரேஷன் அவனுக்கு. இருந்தாலும் பதினாறு வயதினிலே சப்பானி மாதிரி வந்து சேர்ந்துட்டான். எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இவங்க எல்லார்கிட்டயும்- என்ன நடந்தாலும் சரி, சந்திப்பு என்றால் கண்டிப்பா வந்துடுவாங்க.

இன்னொரு தோழியின் தங்கையோட பிறந்தநாள். அப்படி இருந்தும் அன்று, தோழி இங்கு வந்தாள். சாப்பாடு வயிற்றை நிரப்பியது. இவர்கள் பாசம் மனசை நிரப்பியது (ஃபீலிங்ஸ் ஆஃ தளபதி ரஜினி, மம்மூட்டி)

பொங்கலுக்கே வெடி வெடிப்போம். தீபாவளி வந்தா சும்மா விடுவோமா! ஒருத்தர் இரண்டு பேர சந்திச்சுக்கிட்டாலே, முடிஞ்சுது. இதுல பத்து பேரு நாங்க, சும்மா இருப்போமா...கேலிக்கும் கூத்துக்கும் பஞ்சமே இல்ல!

இங்க குரூப்ல இங்களவிட கொஞ்ச வயது அதிகம் முத்து என்னும் நண்பருக்கு தான். அவருக்கு கூடிய சீக்கிரத்தில் கல்யாணம் ஆக போகுது, புது வீடு வாங்கிவிட்டார்- இப்படி அவர் சொந்த கதைய சொல்ல, நாங்க கிண்டல் பண்ண...டைம் போனதே தெரியல.

அப்பரம் இன்னொரு தோழி இருக்கா. சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவள், 1008 தடவ ஃபோன் வரும் அவளுக்கு. சென்னையில் மாமா மகன் ஒருத்தர் இருக்கார் அவளுக்கு. இவளுக்கும் இந்த மாமா மகனுக்கு கல்யாணம் ஆக போகுது. ஆக, இத வச்சே இவள கன்னாபின்னான்னு கிண்டல் அடிப்போம்.

அவள் ஃபோன் attend பண்ணிட்டு வந்தாள்.

அக்கா: ஏய், can u come and eat first? who was that on the line?
அவள்: overseas call...
நான்: அப்பரம், அத்தான் சாப்பிட்டார? மாமியார் சாப்பிட்டாங்களா? மாமனார் சாப்பிட்டாங்களா?
இவங்களாம் சாப்பிட்டு பிறகு தான் இவ சாப்பிடுவாள். இவங்க சாப்பிடலன்னா, பச்சை தண்ணிகூட பல்லுல படாது பாப்பாவுக்கு!

என்று சொல்லி முடிப்பதற்குள் என்னைய அடிக்க ஓடி வர, நானும் ESCAPE!

அப்பரம் உலக கதை, சொந்த கதை, சோக கதை. sydneyயில் படித்து கொண்டிருக்கிறாள் இன்னொரு தோழி. அவளை 'sydney-return' என்று கிண்டல் அடிப்போம். ஏன் என்றால் அவள் இட்லியைகூட spoon/forkல் தான் சாப்பிடுவாள்.

ஏதோ ஒன்னு பேசிகிட்டு இருந்தபோது, ஆஸ்பித்திரி என்ற வார்த்தை வந்துவிட்டது. உடனே அக்கா, "ஏய் guys, எனக்கு ஒரு கவிதை தோனுது."

எல்லாரும் ஆர்வமாய் அவள் சொல்வதை கேட்க,

"ஆஸ்பித்திரி போனா ஒரு கற்பஸ்திரி
புள்ள பொறந்த பிறகு தெரிஞ்சுது
அவள் history!"

என்றாள்.

பக்கத்திலுள்ள கல்ல எடுத்து தூக்கிபோட்டனர் சிலர். ஆஹா ஓஹோ என்று பாராட்டினர் சிலர். இதுக்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் குழம்பி இருந்தனர் சிலர்.

அதற்கு அப்பரம், guessing-the-movie-name விளையாட்டை விளையாடினோம். இரு குழுக்களாய் பிரித்தோம். ஒரு படத்தின் தலைப்பை பாவனை செய்து தன் குழுவை அத்தலைப்பை சொல்ல வைக்கனும். கேள்வி படாத பட பெயர்லாம் வந்துச்சு... செம்ம காமெடியா போச்சு. எல்லாருக்குள்ளயும் ஒரு நடிப்பு திறமை இருக்குப்பா!

இதுல டாப் காமெடி என்னவென்றால் 'sydney-return' அடிக்கும் கூத்து தான். எல்லா படத்துக்கு ஒரே மாதிரியான பாவனை செய்து காட்டி எங்களை கொலைவெறிக்கு ஆளாக்கினாள்!!!

நேரம் 430 ஆகிவிட்டது. சில புகைபடங்களை எடுத்து கொண்டு வீடு திரும்பினோம்.

அடிச்சு போட்ட மாதிரி உடல் சோர்வு ஏற்பட்டது. இத்தனைக்கும் நாங்க அதிகமா ஒன்னுமே பண்ணல!???!!! :)

3 comments:

வினையூக்கி said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... குட் குட். தொடரும்

Karthik said...

Nice experience.

I miss my schooll buddies.
:(

பிரியமுடன்... said...

இந்த படம்....ம்ம்ம்ம்ம்....இடைவேளை வரை ஓடும்!