Showing posts with label காதல் கவிதை. Show all posts
Showing posts with label காதல் கவிதை. Show all posts

Apr 4, 2018

முதல் e-kavithai நூல்- கா _ _ Comes First.


ஏற்கனவே எழுதிய கவிதைகள் சிலதும், சமீபத்தில் எழுதியதையும், ஒன்றாக சேர்த்து உருவாக்கிய e-kavithai. படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க, மக்கா!

கீழே  உள்ள லிங்-கை அழுத்தவும்,

http://online.anyflip.com/hnnb/fguh/mobile/index.html#p=1

Feb 13, 2018

காமம் comes first( கவிதை)


மஞ்சத்தில் தஞ்சம் புகுந்தபடி
நாம் கிடக்க,

வெறும் போர்வையை மட்டும்
ஆடையாய் கோர்க்க,
வேர்வை காய்ந்த முதுகில்
உன் ஆள்காட்டி
விரலும்
நடுவிரலும்,
மயிலிரகாய்
கழுத்திலிருந்து
கீழே வருட
மறுபடியும் புரிந்தது
எவ்வளவு பெரிய
வித்தைக்காரன் நீ என்று!

புயல் அடித்து ஓய்ந்த
நிசப்தம் கலைக்க,
“Wake up baby Ma” 
காதுமடல் உரச
உன் உள்ளங்கை
மட்டும் திருட்டுத்தனமாய் 
என் இடுப்பை
அணைக்க
என்னிடம் பதில் இருந்தும் அமைதிகாக்கிறேன்.
கொஞ்சம் நேரம்
உன் மூச்சுகாற்று படரட்டும்.

கைபேசியில் நீ எதையோ 
தேடிகொண்டிருக்க,
மூன்று நாட்கள் ஷேவ் செய்யாத தாடியும்
அதில் ஓரமாய் மலர்ந்த நரை முடியும்
லேசாய் இடிக்கும் குட்டி தொப்பையும்

அனைத்தையும் நான் ரசிக்க,

“why are you so hot?” 
இதழ் பதித்தேன் 
கன்னக்குழிக்கும் தாடைக்கும் இடையே,
நீ வெட்கப்பட்டு புன்னகையிக்கும்
இடம் எதுவென்று அறிந்தே. 

“baby ma, how do I delete this in fb?”
அவனுக்கு தெரியவில்லை.

சொல்லி கொடுத்தேன்.

நேற்று இரவு போல்.

facebookல் யார் யாரோ போட்ட
படங்களை பார்த்து நக்கல் அடித்து

சேர்ந்து சிரிக்க,
கல்யாணம் செய்ய போகும் 

அவனது பள்ளி நண்பன் ஒருவனது
படத்திற்கு, 
“காமம் comes first da.” என்று கிண்டல்
செய்து வாழ்த்து கூற,

“baby ma, evening ஆச்சு டா. Get up” 

என அவன் எழ,
மீண்டும் தேடல்கள்
முளைத்த ஆசைகள்
கலைந்த ஆடைகள்.




Apr 11, 2015

எனக்கென்ன யாருமில்லையே!- காதல் தோல்வி கவிதை

மழை காலத்தில்
'ஐ மிஸ் யூ' மெசெஜ்கள்
குவியும் அவள் கைபேசியில்
இப்போது வெறும் மழை சாரல்
மட்டும் பட்டு பட்டு போனது!
கைகோர்த்து தோள் சாய்ந்து
படம் பார்த்த நினைவுகளெல்லாம்
திரையரங்கு தரையில் கிடக்கும்
பாப்கான் போல சிதறி போனது!
மனம்
மண்ணுக்குள் புதைந்த
கல்லறையாக
கண்ட காதல்
மண்ணில்
விழுந்த சில்லறையாக
வாழ்கிறாள் தாடி இல்லா
பெண் தேவதாஸாக!

Sep 9, 2014

பாப்கான் காதல்






என் முழுங்கை 
உன் கையை லேசாய் இடித்து
என் விரல் 
உன் உள்ளங்கையோடு
உரசி 
தரப்படும்
பாப்கான்-கள்
அனுபவிக்கும்
சந்தோஷத்தை,
அப்படியே தூங்கி
கொடுக்கப்படும் பாப்கான் பாக்கெட்-டுக்கு
தெரிவதில்லை.



                                                                                   

                                                                                 
                                                                                    cheesecake கொண்டு 


வந்தவரிடம் 
இரண்டு கரண்டிகள்
வேண்டாம்
ஒன்று போதும்
என்று சொல்லிவிட்டு
என்னை பார்த்து
வீசிய புன்னகையை
மறுபடியும்
ரசிப்பதற்காகவே,
ஆர்டர் செய்வேன்
இரண்டு கரண்டிகளோடு 
இன்னொரு cheesecake! 



Aug 24, 2013

ராஜா ராணி கவிதைகள்!

 
கொடுக்கவா?
என்று இனி
கேட்காதே!
வெட்கத்தில்
வேண்டாம் என
சொல்லி
சொதுப்பிவிடுவேனோ
என்ற பயம்
எனக்கு!
 

 
தெரிந்து எடுத்தால்
திருட்டு!
தெரியாமல் எடுத்தால்
ம்ம்ம்...
காதலோ?
 


 
தேவையில்லாத சண்டை போட்டு
ஒரு வாரம் மௌனமாக இருந்து
திடீரென்று ஒரு நாள்
உன் கன்னத்தில் முத்தம் வைத்து
உன் தோளில் சாய்ந்து
'சாரி' கேட்க,
எதிர்பார்க்காத நீ,
வெட்கப்படனும்!
 


Jan 11, 2013

மச்சான், அவள் என்னை பார்த்து சிரிச்சா டா!


ஆபிஸில் யதேர்ச்சியாய் 
நீ என்னை
பார்த்து புன்னகையித்தபோது
புரிந்தது,
'யோகம் அடிக்கும்' என்ற
காலெண்டரின் வாசகம்.



நீ ஆபிஸ் வராத
நாட்களில்
நான்
சன்யாசியாய் வாழ்கிறேன்!



நீ நடத்தும் ஒவ்வொரு
'மீட்டிங்'- 
உன் அழகும்
நானும் போகும்
'டேட்டிங்'



அழகு கோபபட்டால்
எப்படி இருக்கும்?
அன்று ஒரு நாள்
நீ உன் ஜீனியர்களிடம்
கோபப்பட்டபோது
கண்டு கொண்டேன்.



கண்ட நேரங்களில்
ஏற்படும் மின்சார தடை
நீயும் நானும்
ஒரே மின் தூக்கியில்
போகும்போது ஏற்பட்டதில்லை
இந்த கடவுளை
என்ன சொல்லி திட்டுவது?




அறிவில்லாத பாஸ்
தெளிவில்லாத மேனெஜர்
மூளையில்லாத டீம்
அனைத்தையும்
சகித்து கொள்கிறேன்
சகியே, நீ இருப்பதால்! 

Oct 10, 2012

காதல் கவிதை-55





கோயிலில் நீ சாமிகும்பிட்டு
திரும்பி பார்க்கையில்
நான் உன்னையே பார்த்து கொண்டிருந்தபோது
'என்ன'? என்று உன் கண்கள் கேட்டன.


உன் காது அருகே சென்று

'நீ ரொம்ப அழகா இருக்கே'
என சொன்னபோது
வெட்கம் கலந்த முறைப்புடன்
நீ என்னை பார்த்தாய்
நான் சொர்க்கத்தை பார்த்தேன்!

Jul 8, 2012

ஐ மிஸ் யூ!

காற்றுக்கு பதிலாய்,
நீ கொடுக்காமல் சென்ற 'முத்தத்தையும்'
நீ சொல்லாமல் விட்ட 'ஐ லவ் யூ'யையும்
சுவாசிக்கிறது
என்
இதயம்!






நம் குழந்தையுடன்
நீயும் குழந்தையாய் மாறி
மணல் வீடு கட்டியபோது
என் மனம்
உனக்காக கோயில் கட்டியது.









வீட்டு வேலைகளை
முடிக்க உதவுகிறேன் என்று
குழந்தைபோல் எல்லாவற்றையும்
கலைத்து போட்டு வைத்திருக்கிறாயே!
உன்னை
அடிப்பதா?
அணைப்பதா?








ஆபிஸ் வேலையாய்
ஒரு வாரம்
வெளியூர் செல்வதாய்
சொல்லிவிட்டு நீ போகும்போது
நாய்க்குட்டி போல்
உன் துப்பட்டாவை பிடித்துகொண்டு
வந்த என் மனதை
கவனித்தாயா?











உலகத்திலேயே பிடித்த விஷயம்
நீ முத்தம் கொடுத்து செல்வது
பிடிக்காத விஷயம்
கைபேசியில் அதை
வெறும் சத்தமாக மட்டும் தருவது!





Jan 24, 2012

உன் ஞாபகம்!

கூட்டமாய் ஜாலியாய்
போய் கொண்டிருந்த
தோழி கல்யாணத்தில்
திடீரென்று bore அடித்தபோது
உன் ஞாபகம் வந்ததே?
இதுக்கு பெயர் தான் காதலா?



Mar 7, 2010

என் முத்த மெசேஜ்களை

என் முத்த மெசேஜ்களை
உன் உதட்டு இன்பாக்ஸில்
போட்டுவிட்டேன்.
என் இன்பாக்ஸ்
காலியாக தான் இருக்கு.
உன் அவுட்பாக்ஸ்
ஏன் சும்மா இருக்கு?

உன் மௌனமே
ஆயிரம் சொல்லும்போது
உன் உதட்டிலிருந்து
உதிரும் வார்த்தைகள்
தேவையில்லையடி எனக்கு!

நாம் இருவரும் பேசிகொண்டிருக்கையில்
திடீரென்று முத்தம் வைக்கிறாய்
கன்னத்தில்
எப்படிடா உன்னால் மட்டும்
எதுவுமே நடக்காததுபோல்
மறுபடியும் பேச்சை தொடங்கமுடிகிறது?,
கள்ளசிரிப்பழகா!

Apr 22, 2009

விழி மூடி யோசித்தால்....


ஆபிஸுக்கு 'லேட்' என்று
தெரிந்திருந்தும் உன் முத்தங்கள்
வேண்டுமென்றே
வம்புக்கு இழுக்கிறதே!
உன் உதடுகளை என்ன செய்ய?
ஐயோ, அவை மீது
கோபப்படவும் தெரியவில்லையே!


ச்சீ.. கண்ட இடத்திலெல்லாம்
கை வைக்காதே என்று
அதட்டுகிறாய்
நான் கண்ட இடங்களிலாவது
கை வைக்க
உத்தரவு தருவீயா?


நீ கொடுத்த முத்தங்களும்
உன் மீசையின் குறும்புகளும்
ஒரே நேரத்தில்
என்னை சீண்டியபோது
உணர்ந்தேன்
சுகமான அவஸ்த்தை
என்றால்
என்னவென்று!


நெடுந்தூரம் கார் பயணத்தை
இனியதாக்க
பாட்டு சத்தம் வேண்டாம்.
உன் முத்தச்சத்தம்
மட்டும் போதும்!

வாழும் போதே
சொர்க்கத்தை
அனுபவிக்க செய்கிறாய்
நீ சிந்தும் வெட்கத்துளிகளாலும்
அதில் ஜில்லென்று
தெறிக்கும் உன் முத்தங்களாலும்!
இன்று இரவு
நிறைய ஆபிஸ் வேலை
இருக்குடா என்னை
இம்சை பண்ணகூடாது
என்று திட்டவட்டமாய்
நீ சொல்லும்போதே
தெரிகிறது
'என்னை இம்சை
பண்ணுடா' என்று.


சக்கரை கசப்பு தான்
காலையில் கண் விழிக்கும்போது
நீ கொடுக்கும்
முத்தத்தை ஒப்பிடும்போது


கண்டதும் காதல்
நம் பார்வைகள்
கண்டதும் மோதல்
நம் உதடுகள்

Feb 11, 2009

உன் வெட்கங்களை வேடிக்கை பார்த்தேன்!

இனி
குளியலறையில் எதற்கு டி
துண்டும் சோப்பும்?
நீயும் உன் வெட்கங்களும்
போதுமே!


காலை, மதியம், இரவு
மூன்று வேளையும்
கொடுக்க வேண்டும்.
மருந்து இல்லடா விருந்து.
நான் சொல்வது
உன் உதடுகளுக்கும் விரல்களுக்கும்
புரியும்!



நீ செய்த குறும்புகள்
மறுபடியும் என் வெட்கங்களை
தீண்டியது,
காலை வேளையில் நான்
தேடிய ஸ்டிக்கர் பொட்டு,
உன் உதட்டோரத்தில்
கண்டபோது!


'நீ இல்லாமல் நானில்லை
நான் இல்லாமல் நீயில்லை'
என்று மௌன மொழியில்
பேசிகொண்டன
நம் உதடுகள்.



நீ இருக்கையில்
தலையணைக்கும்
போர்வைக்கும்
என்ன வேலை
படுக்கையில்?


காலையிலேயே உன் இம்சையை
ஆரம்பிக்கிறாயே,
வேலைக்கு நேரம் ஆச்சு
என்று என்னை விரட்டுகிறாய்.
நான் என்ன செய்ய?
ஆபிஸுக்கு கிளம்பும்போதும்கூட
நீ அழகாய்
இருக்கிறாயே!



உன் தேகம் காகிதமானால்
என் உதடு பேனாவானால்,
நிச்சயம்
எழுதுவேன்டா
ஒரு கவிதை!


உன் கண்களும் என் கண்களும்
சந்தித்த வேளையில்
நம் விரல்கள்
சேர்ந்து கொண்டன.
உதடுகள், என்ன பாவம் செய்தன?
அதன் ஜோடியை
கொடுத்துவிடேன், ப்ளீஸ்!





நீ வெட்கப்பட்டு சிரிக்கும்போது
'அட இவனுக்குகூட
வெட்கப்பட தெரியுமா?
என்று என் வெட்கங்கள்
உன்னை பார்த்து
சிரிக்கின்றன!



* இது என் 50வது காதல் கவிதை! :)

அனைவருக்கும் என் அன்பர் தின/காதலர் தின நல்வாழ்த்துகள்!

Jan 21, 2009

கள்ளச்சிரிப்பழகா..

கடவுள் 'அழகு'
என்பதை உருவாக்கி
எங்கே வைப்பதென்று
தெரியாமல்
உன் கன்னத்தில்
வைத்தான்!
மிச்சமீதியை உன்
உதட்டில் சேர்த்தான்!

அந்த அழகை
ரசிக்க மட்டுமல்ல
ருசிக்கவும் பிறந்தவள்
நான்!


யார் செய்த தவமோ,
போன ஜென்மத்தில்
பிறந்த வண்டும் பூவும்
இந்த ஜென்மத்தில்
உன் உதடுகளாகவும்
என் உதடுகளாகவும்
மறுபிறவி எடுக்க!




குலதெய்வ கோயிலுக்கு
குடும்பமே புறப்பட
'தலைவலிக்குது நான் வரல'
என்று பொய் சொல்லி
கள்ளச்சிரிப்புடன்
என்னை பார்த்தாய்,
நான் என்ன செய்ய?
எனக்கு பொய் சொல்ல வராதே!


அழகான காயங்கள்
நொடிபொழுதில் ரசிக்க
வைக்கும் மாயங்கள்.
நம்மையே நாம்
மறந்து போவதால்
முத்தமும்
ஒருவித தியானம் தான்!


'ஒன்னு தரவா?' என்று
கெஞ்சி கேட்கிறாயா!
கிறுக்கா,
கேட்காமலே கொடுத்தால்
என்னவாம்?


எத்தனையோ கவிதைகளை
நான் படித்திருந்தாலும்,
என்னை கெஞ்சலாகவும்
கொஞ்சலாகவும்
ரசிக்கும் கவிதை,
நீயடா!


என்னை அப்படி பார்க்காதடா
நான் வெட்கப்படுவதைவிட
என் வெட்கங்கள்
தனியே நின்று
அதிகமாய் வெட்கப்படுகின்றன.



Nov 24, 2008

அடியே கொல்லுதே...



என்னடா பொது இடத்துல
முத்தம் கொடுக்குறேன்னு
சொல்லுறே
ச்சீ...போடா

ஏய்
என் இதழ்களும்
உன் கன்னங்களும்
எனக்கு மட்டுமே சொந்தம்!

Oct 13, 2008

இரயில் பயணத்தில் ஒரு காதல் கவிதை!

உன் இதழும்
என் இதழும்
பிரியாமல் இருக்கட்டும்
இன்றைய இரவும்
நாளைய விடியலும்
சந்திக்காமல்
போகட்டும்!


இனிய இரவு
ஜன்னல் வெளியே மழை
குளிர் காற்று
பக்கத்தில் நீ
உன் மடியில் நான்
இது போதும்டா.
வாழும் போதே
சொர்க்கத்தை
உணர்ந்துவிட்டேன்!


காதல் பார்வையுடன்
என் கை பிடித்து கேட்டாய்
"எத்தனையோ கவிதை
எழுதி இருக்கே
எனக்காக இப்ப
ஒரு கவிதை
சொல்லேன்..ப்ளீஸ்"
உடனே எனக்கு
தோன்றியது
"நான் கொஞ்ச அழுகு
நீ கொஞ்சும் அழுகு"





காதலுக்கு கண் இல்லையாம்.
ச்சே.. அப்படி ஒரு காதல்
வேண்டாம் நமக்கு.
என் காதலுக்கு
கண் வேண்டும்,
இல்லையெனில்
இந்த கருப்பு நிலாவை
எப்படி ரசிப்பது?





ரொம்ப குளிருது.
ஜன்னலை சாத்தவா?
இல்ல
உன்னை போர்வையா
அள்ளி போத்தவா?


சேலை மாற்றவேண்டும்
என்று என்னை
வெளியே அனுப்புகிறாயே.
'compartment'க்கு கிடைத்த பாக்கியம்
இந்த
'companion'க்கு கிடைக்காதா?



என்னை
தனியே விட்டு,
உன் நண்பனிடம்
நீ செல்போனில் பேசிய
அந்த இரண்டு நிமிடங்களில்
என் உயிர் 'செல்'களெல்லாம்
தனிமையில்
தவித்தன!

(இதே concept வச்சு நம்ம காதல் இளவரசன் நவீன் காதல் கவிதைகளை அள்ளி வீசுவார் என்று கூறியுள்ளார். விரைவில் எதிர்பார்க்கலாம்....:)