Apr 22, 2009

விழி மூடி யோசித்தால்....


ஆபிஸுக்கு 'லேட்' என்று
தெரிந்திருந்தும் உன் முத்தங்கள்
வேண்டுமென்றே
வம்புக்கு இழுக்கிறதே!
உன் உதடுகளை என்ன செய்ய?
ஐயோ, அவை மீது
கோபப்படவும் தெரியவில்லையே!


ச்சீ.. கண்ட இடத்திலெல்லாம்
கை வைக்காதே என்று
அதட்டுகிறாய்
நான் கண்ட இடங்களிலாவது
கை வைக்க
உத்தரவு தருவீயா?


நீ கொடுத்த முத்தங்களும்
உன் மீசையின் குறும்புகளும்
ஒரே நேரத்தில்
என்னை சீண்டியபோது
உணர்ந்தேன்
சுகமான அவஸ்த்தை
என்றால்
என்னவென்று!


நெடுந்தூரம் கார் பயணத்தை
இனியதாக்க
பாட்டு சத்தம் வேண்டாம்.
உன் முத்தச்சத்தம்
மட்டும் போதும்!

வாழும் போதே
சொர்க்கத்தை
அனுபவிக்க செய்கிறாய்
நீ சிந்தும் வெட்கத்துளிகளாலும்
அதில் ஜில்லென்று
தெறிக்கும் உன் முத்தங்களாலும்!
இன்று இரவு
நிறைய ஆபிஸ் வேலை
இருக்குடா என்னை
இம்சை பண்ணகூடாது
என்று திட்டவட்டமாய்
நீ சொல்லும்போதே
தெரிகிறது
'என்னை இம்சை
பண்ணுடா' என்று.


சக்கரை கசப்பு தான்
காலையில் கண் விழிக்கும்போது
நீ கொடுக்கும்
முத்தத்தை ஒப்பிடும்போது


கண்டதும் காதல்
நம் பார்வைகள்
கண்டதும் மோதல்
நம் உதடுகள்

40 comments:

goma said...

விழிமூடி யோசித்தால் இப்படித்தான் கண்ட கண்ட கனவா வரும் .

விழி மூடி யோசித்தே இப்படி என்றால் விழி திறந்து யோசித்தால் என்னன்னல்லாம் எழுதுவீர்கள் ?

அதையும்தான் வாசித்துப் பார்க்கலாமே! எழுதுங்கள் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்

goma said...

நான் கண்ட இடங்களிலாவது
கை வைக்க
உத்தரவு தருவீயா?

சூப்பர் பன்ச்....
-----
பாட்டு சத்தம் வேண்டாம்.
உன் முத்தச்சத்தம்
மட்டும் போதும்....
வைரமுத்து உங்களிடம் வார்த்தைகளை இரவல் வாங்கணும்

வந்தியத்தேவன் said...

கலக்கல் கவிதைகள் அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள்

ivingobi said...

ungkalin kavithaigalum avatrirku neengal tharukindra pictures m really superb....

புதியவன் said...

//விழி மூடி யோசித்தால்....//

ரொம்ப அழகாத்தான் யோசிச்சிருக்கீங்க...

புதியவன் said...

முத்தக் கவிதைகள் மொத்தமும் அழகு...

//கண்டதும் காதல்
நம் பார்வைகள்
கண்டதும் மோதல்
நம் உதடுகள்//

இது வெகு அழகு...

Srivats said...

adaada.. madam lovea ?

ennama ezhudhirukeenga, orey MTV posterkku suntv masala paatu potta maari

ennamo ponga comment poda kuda vekka vekkama varudhu

Srivats said...

madam padathula yaarukkum meesai ellaiye ?

Karthik said...

நீங்க கவிதை எழுதிட்டு போட்டோ தேடுவீங்களா? இல்லை, போட்டோவுக்கு கவிதையா? ரேடியோ மிர்ச்சி மாதிரி இருக்கு. :)

Karthik said...

//வந்தியத்தேவன் said...
கலக்கல் கவிதைகள் அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள்

ரிப்பீட்டேய்..!

Thamizhmaangani said...

@goma

//வைரமுத்து உங்களிடம் வார்த்தைகளை இரவல் வாங்கணும்//

ஐயோ அந்த அளவுக்கும் ஒன்னுமில்ல.. சும்மா எழுதியது..அவ்வளவு தான்:)

Thamizhmaangani said...

@தேவன்

//கலக்கல் கவிதைகள் அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள்//

அனுபவமா? ஐயோ அங்கிள், நான் இப்ப தான் எல் கே ஜியே படிச்சுகிட்டு இருக்கேன்:)

Thamizhmaangani said...

@gobi

//ungkalin kavithaigalum avatrirku neengal tharukindra pictures m really superb....//

நன்றி நன்றி:)

Thamizhmaangani said...

@sri

//adaada.. madam lovea ?//

மேடமா? அப்படி யாரும் இங்க இல்ல.

லவ்வா?? ஐயோ... எனக்கு எதுவும் தெரியாதுங்க...:)

//madam padathula yaarukkum meesai ellaiye ?//

எனக்கெல்லாம் எழுத வருதே ரொம்ம்ப கஷ்டம். இதுல வேற continuity,logic எல்லாம் பாக்க முடியாதுங்க... கொஞ்சம் adjust பண்ணிக்குங்க..:)

Thamizhmaangani said...

@கார்த்திக்

//நீங்க கவிதை எழுதிட்டு போட்டோ தேடுவீங்களா? இல்லை, போட்டோவுக்கு கவிதையா//

இரண்டும் தான். எப்படி வருதோ அப்படி!:)

நவீன் ப்ரகாஷ் said...

என்ன இது ஒரே "இச்ச்" சத்தம்...??!! காதல் சுமந்த வரிகளில் காயத்ரின் முத்ததாண்டவம்...!! :)))

நவீன் ப்ரகாஷ் said...

//ச்சீ.. கண்ட இடத்திலெல்லாம்
கை வைக்காதே என்று
அதட்டுகிறாய்
நான் கண்ட இடங்களிலாவது
கை வைக்க
உத்தரவு தருவீயா?//

:)))) வெட்கம் தின்ற உணர்வுகள் அழகான வரிகளில்.. எப்படி காயத்ரி இப்படி..?? :)))

நவீன் ப்ரகாஷ் said...

//நீ கொடுத்த முத்தங்களும்
உன் மீசையின் குறும்புகளும்
ஒரே நேரத்தில்
என்னை சீண்டியபோது
உணர்ந்தேன்
சுகமான அவஸ்த்தை
என்றால்
என்னவென்று!//

அட சுகமான அவஸ்தைன்னா இதுதானா..??? இப்போதானே தெரியுது..!! :)))))))

Thamizhmaangani said...

@நவீன்

//காதல் சுமந்த வரிகளில் காயத்ரின் முத்ததாண்டவம்...!! :)))//

ஆஹா.. நல்ல பீதிய கிளப்புறீங்கய்யா! நான் எதுக்கும் காரணமில்ல.:)

நவீன் ப்ரகாஷ் said...

//வாழும் போதே
சொர்க்கத்தை
அனுபவிக்க செய்கிறாய்
நீ சிந்தும் வெட்கத்துளிகளாலும்
அதில் ஜில்லென்று
தெறிக்கும் உன் முத்தங்களாலும்!//

அழகான காதலும் இன்பமான வெட்கமும் தெரிக்கும் வரிகளில் கவிதை முழுதும் படிப்பவர் மனதை ஜில்லென்று நனைக்கிறது !! வாழ்த்துக்கள் காயத்ரி...

gils said...

avvvvvvvvv...........kissu kissu kavithaina ithaano? kalkiputel pongo..first time here..first postay pattaya kelaputhu :)

gils said...

tamizh maanganiya unga name :D :D tamizhaga mani nu padichen :D

gils said...

//madam padathula yaarukkum meesai ellaiye ?//
adai..anga enna vazhuthu..enamo 23 pulikesi rangeku meesa vachiruka mari nee pesara..naansense :)

Ramya Ramani said...

adade madam semmaya kadhal rasam sottum kavidhai ellam romba nalla irukku :)

Divya said...

வாரே வாவ்!!! ஒவ்வொரு வரியும் போட்டி போட்டுக்கொண்டு முத்த மழை பொழியுதே!!

விழி மூடி யோசிச்சு எழுதின மாதிரி தெரிலியே.....இதழ் மூடி யாசிச்சு, முத்த'கவிதை' பெற்ற மாதிரி தோனுதே:))

JUst kididng Gayathri:)

தலைப்பு நல்லாயிருக்கு!!
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு!!!

Thamizhmaangani said...

@திவ்ஸ்

//இதழ் மூடி யாசிச்சு, முத்த'கவிதை' பெற்ற மாதிரி தோனுதே:))//

யக்கா யக்கா, என்னக்கா நீங்களே கிண்டல் பண்றீங்கோ! ஹாஹா... நான் தீவிரமான அஞ்ஜநயா பக்தை க்கா!:)

" உழவன் " " Uzhavan " said...

இந்த மாதிரியான கவிதைகளால்தான் முத்தமே அழகு பெறுகிறது. காதலி இல்லாதவன் இதைப் படித்தால் ஏங்கியே வாடிவிடுவான். காதலி கிடைத்தவனோ அவளுக்கு முத்தம் கொடுத்துக் கொடுத்தே வாடிவிடுவான்.
அத்தனையும் கலக்கல்!

வந்தியத்தேவன் said...

//Thamizhmaangani said...

அனுபவமா? ஐயோ அங்கிள், நான் இப்ப தான் எல் கே ஜியே //

அங்கிளா? நான் யூத்தும்மா யூத். உங்கள் கவிதைகளை என் மூஞ்சிப்புத்தகத்தில்(facebook) உங்கள் பெயரைப்போட்டு பிரசுரிக்கலாமா?

Thamizhmaangani said...

@தேவன்

//உங்கள் கவிதைகளை என் மூஞ்சிப்புத்தகத்தில்(facebook) உங்கள் பெயரைப்போட்டு பிரசுரிக்கலாமா?//

தாராலமா செய்யுங்க. permission granted uncle.. oh sorry sorry.. mr youth!:)

வந்தியத்தேவன் said...

//Thamizhmaangani said...
தாராலமா செய்யுங்க. permission granted uncle.. oh sorry sorry.. mr youth!:)//

நன்றிகள் அக்கா எனக்கு வயது 18 டீனேஜ் பருவம் ஹிஹிஹி

reena said...

விழி மூடி யோசித்தாலும் வெட்கப்பட வைக்கும் கவிதைகள்... காதல் வழிகிறது கவிதைகளில்... சூப்பர் காயத்ரி...

reena said...

//நீ கொடுத்த முத்தங்களும்
உன் மீசையின் குறும்புகளும்
ஒரே நேரத்தில்
என்னை சீண்டியபோது
உணர்ந்தேன்
சுகமான அவஸ்த்தை
என்றால்
என்னவென்று!//

;))) ம்ஹ்ம்ம்ம்... அழகான வரிகள்... வேறென்ன சொல்ல?

reena said...

சரி... கவிதைகள் தான் வெட்கப்பட வைக்குதுனு பார்த்தா படங்கள் அதை மிஞ்சற மாதிரி இருக்கே...

Thamizhmaangani said...

@தேவன்

//நன்றிகள் அக்கா எனக்கு வயது 18 டீனேஜ் பருவம்//

சாரி, எனக்கு இப்படி வதந்திகளை படிக்க பிடிக்காது:)

Thamizhmaangani said...

@ரீனா

//சரி... கவிதைகள் தான் வெட்கப்பட வைக்குதுனு பார்த்தா படங்கள் அதை மிஞ்சற மாதிரி இருக்கே...//

நானே கண்ண மூடிகிட்டு தான் போட்டேன்:)
உங்கள் ஆதரவுக்கு நன்றி:)

Karthik lollu said...

Kavidai vida potos sooperu!!

ram_goby said...

ஹாய் தமிழ்மாங்கனி நைஸ் டு மீட் யு..
உங்கள் காதல் கவிதைகள் அனைத்தும் படித்தேன்...வரிகள் அனைத்தும் அனுபவத்தில் பெயரால் வந்தது போல தோன்றியது..எனி வே..மிகவும் ரசிதேன்....
rameshsowreesh

Thamizhmaangani said...

@ram

//வரிகள் அனைத்தும் அனுபவத்தில் பெயரால் வந்தது போல தோன்றியது.//

ஆஹா..இப்ப தான் நான் எல் கேஜி முடிஞ்சு யூகேஜி போறேன்....என்னைய போய்...அவ்வ்வ்...

JACK and JILLU said...

அச்சோ காயத்ரி... காதல் சொட்டுகிறது கவிதைகளில்...

Thamizhmaangani said...

@jack and jill

thanks for ur comments:)