Feb 11, 2009

உன் வெட்கங்களை வேடிக்கை பார்த்தேன்!

இனி
குளியலறையில் எதற்கு டி
துண்டும் சோப்பும்?
நீயும் உன் வெட்கங்களும்
போதுமே!


காலை, மதியம், இரவு
மூன்று வேளையும்
கொடுக்க வேண்டும்.
மருந்து இல்லடா விருந்து.
நான் சொல்வது
உன் உதடுகளுக்கும் விரல்களுக்கும்
புரியும்!



நீ செய்த குறும்புகள்
மறுபடியும் என் வெட்கங்களை
தீண்டியது,
காலை வேளையில் நான்
தேடிய ஸ்டிக்கர் பொட்டு,
உன் உதட்டோரத்தில்
கண்டபோது!


'நீ இல்லாமல் நானில்லை
நான் இல்லாமல் நீயில்லை'
என்று மௌன மொழியில்
பேசிகொண்டன
நம் உதடுகள்.



நீ இருக்கையில்
தலையணைக்கும்
போர்வைக்கும்
என்ன வேலை
படுக்கையில்?


காலையிலேயே உன் இம்சையை
ஆரம்பிக்கிறாயே,
வேலைக்கு நேரம் ஆச்சு
என்று என்னை விரட்டுகிறாய்.
நான் என்ன செய்ய?
ஆபிஸுக்கு கிளம்பும்போதும்கூட
நீ அழகாய்
இருக்கிறாயே!



உன் தேகம் காகிதமானால்
என் உதடு பேனாவானால்,
நிச்சயம்
எழுதுவேன்டா
ஒரு கவிதை!


உன் கண்களும் என் கண்களும்
சந்தித்த வேளையில்
நம் விரல்கள்
சேர்ந்து கொண்டன.
உதடுகள், என்ன பாவம் செய்தன?
அதன் ஜோடியை
கொடுத்துவிடேன், ப்ளீஸ்!





நீ வெட்கப்பட்டு சிரிக்கும்போது
'அட இவனுக்குகூட
வெட்கப்பட தெரியுமா?
என்று என் வெட்கங்கள்
உன்னை பார்த்து
சிரிக்கின்றன!



* இது என் 50வது காதல் கவிதை! :)

அனைவருக்கும் என் அன்பர் தின/காதலர் தின நல்வாழ்த்துகள்!

17 comments:

gayathri said...

நீ இருக்கையில்
தலையணைக்கும்
போர்வைக்கும்
என்ன வேலை
படுக்கையில்

athena enna velai

kavithai varikal nalla iruku

ஆ.ஞானசேகரன் said...

எல்லா வரிகளும் நல்லா இருக்கு, குறிப்பிட்டு சொல்ல மிடியவில்லை

ரிதன்யா said...

ம் போங்க, என் மனசு எங்கிட்ட இல்ல.

Divyapriya said...

ஒரு range ஆ தான் எழுதியிருக்கீங்க

நவீன் ப்ரகாஷ் said...

ஆஹா... காயத்ரி... படிக்க படிக்க காதல்
செய்ய தூண்டுகின்றன வரிகள்...
அருமையா இருக்கு... !!! :)))

நவீன் ப்ரகாஷ் said...

//இனி
குளியலறையில் எதற்கு டி
துண்டும் சோப்பும்?
நீயும் உன் வெட்கங்களும்
போதுமே! //

அழகான குறும்பு...:)))

//காலை, மதியம், இரவு
மூன்று வேளையும்
கொடுக்க வேண்டும்.
மருந்து இல்லடா விருந்து.
நான் சொல்வது
உன் உதடுகளுக்கும் விரல்களுக்கும்
புரியும்! //

ஆனா எனக்குத்தான் புரிய மாட்டீங்குது காயத்ரி...
விளக்கம் ப்ளீஸ்...
;)))

//நீ செய்த குறும்புகள்
மறுபடியும் என் வெட்கங்களை
தீண்டியது,
காலை வேளையில் நான்
தேடிய ஸ்டிக்கர் பொட்டு,
உன் உதட்டோரத்தில்
கண்டபோது!//

அட்ரா சக்கை...:)))

//நீ இல்லாமல் நானில்லை
நான் இல்லாமல் நீயில்லை'
என்று மௌன மொழியில்
பேசிகொண்டன
நம் உதடுகள்.//

இது ரொம்ப அழகு..!!!

//உன் தேகம் காகிதமானால்என் உதடு பேனாவானால்,நிச்சயம்எழுதுவேன்டாஒரு கவிதை! //
ஆஹா ஆஹா...:))

//உன் கண்களும் என் கண்களும்சந்தித்த வேளையில்நம் விரல்கள்சேர்ந்து கொண்டன.உதடுகள், என்ன பாவம் செய்தன?அதன் ஜோடியைகொடுத்துவிடேன், ப்ளீஸ்!//

என்ன ஒரு கெஞ்சல் ?? :)))))))


கவிதைகள் அனைத்தும் காதலில் விழுந்து
ஆனந்தமாக முத்தம் குளித்துக்கொண்டிருக்கின்றன‌

வாழ்த்துக்கள்....:)))

Karthik said...

என்ன சொல்றதுன்னே தெரியல. ரொமான்டிக் மழையா பொழியறீங்க!

Congrats for 50. :)

கார்த்திகைப் பாண்டியன் said...

அம்பது அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்.. கவிதை சூப்பர்..

Divya said...

Congrats for the 50th kavithai post Tamilmangani:))

priyamudanprabu said...

s//
நீ இருக்கையில்
தலையணைக்கும்
போர்வைக்கும்
என்ன வேலை
படுக்கையில்?
///

நடக்கட்டும் நடக்கட்டும்

Anonymous said...

கவிதை அழகு :-)

FunScribbler said...

வாழ்த்துகள் கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!!:)

priya said...

Hi Friend, Super super super. All are very nice, good. Love s all-time favourite for all. Love poems also. Keep it up. Fantastic kavidhaigal. I cant expressed it in any words. Nice, nice, nice.

ARV Loshan said...

wow கலக்கல்.. காதல் சொட்டுகின்றன கவிதைகள்..
படங்களோ கிறங்கடிக்கின்றன..;)

ஐம்பதாவதில் அசத்திட்டீங்க..

சில கவிதைகளும்,படங்களும் A1 ;)

FunScribbler said...

@லோஷன்

//wow கலக்கல்.. காதல் சொட்டுகின்றன கவிதைகள்..
படங்களோ கிறங்கடிக்கின்றன..;)//

நன்றி:)

Ramesh said...

மெய்யாலுமே நீங்க எழுதினதா? தபு சங்கர் சாயல் தெரியுது...

FunScribbler said...

@ramesh, நான் தான்பா எழுதினேன்:) நன்றி உங்களது பாராட்டுகளுக்கு:)