வாழ்க்கை
வாழ்வதற்கா?
பிழைப்பதற்கா?
பிடிக்காத படிப்பு
விருப்பமில்லாத வேலை
புரியாத அதிகாரிகள்
மதிக்காத உறவுகள்
புரிந்துகொள்ளாத காதலி
தொடமுடியாத வெற்றிகள்
பெறமுடியாத செல்வங்கள்
அடையமுடியாத ஆசைகள்
நினைத்து பார்த்தான்
கடைசியில் மிஞ்சியது
யாருக்கும் தெரியாமல்
அழுத அழுகையும்
அழுகை நனைத்த
தலையணையும்!
வாழ்க்கை
வாழ்வதற்கா?
பிழைப்பதற்கா?
13 comments:
எல்லாமே பிடிக்கிற மாதிரி நடக்கறது இல்லைங்க வாழ்க்கை! போராடி, நாம தான் அமைச்சுக்கனும்! no risks No Gain :)
Nice கவிதை!
/எல்லாமே பிடிக்கிற மாதிரி நடக்கறது இல்லைங்க வாழ்க்கை! போராடி, நாம தான் அமைச்சுக்கனும்! no risks No Gain :)
Nice கவிதை!/
உண்மை தான்
//Nice கவிதை!//
நன்றிங்கோ!
//ஆசைகள்நினைத்து பார்த்தான்கடைசியில் மிஞ்சியதுயாருக்கும் தெரியாமல்அழுத அழுகையும்அழுகை நனைத்ததலையணையும்!வாழ்க்கை வாழ்வதற்கா?பிழைப்பதற்கா?//
பலரின் மனநிலை இதுதான். அருமையா சொல்லியிருக்கிங்க...
எப்போ விரக்தி வரும். ஆசைகள் கனவாகவே இருந்து விட்டால்.
தேவைகளை குறைத்துக்கொண்டால் ,செலவுகள் குறையுற மாதிரி,
எதிர்பார்ப்புக்களை குறைச்சுக்கிட்டா ,இந்த விரக்தி எண்ணங்கள் குறைஞ்சுடும்.
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதேன்னு எங்க தமிழ் டீச்சர் சொல்லியிருக்காங்கல்ல:P
//வாழ்க்கை வாழ்வதற்கா?பிழைப்பதற்கா?//
குட் கொஸ்டின் :)))))))))
ஹோய் அம்மனி......என்னாச்சு??
நல்லாத்தானே இருந்தீங்க?? திடீர்னு இப்படி ஒரு கவிதை!!!
\\வாழ்க்கை வாழ்வதற்கா?பிழைப்பதற்கா?\\
வாழ்க்கை வாழ்வதற்கே!!!
நல்லாயிருக்கு கவிதை!!!
kavidhai superunga. romba feelingsa irukku..
//வாழ்க்கை
வாழ்வதற்கா?
பிழைப்பதற்கா?//
nalla kelvi!!
//எல்லாமே பிடிக்கிற மாதிரி நடக்கறது இல்லைங்க வாழ்க்கை! போராடி, நாம தான் அமைச்சுக்கனும்! no risks No Gain :)
//
ithu nalla pathil :)
yathaartham intha kavithai!
வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்,
வெற்றி உனக்குண்டு ஒத்துக்கொள்!!!
அடுக்கு வரிகளில் கவிதை நல்லாயிருக்கு.
பாராட்டுகள் கூறிய அனைவருக்கும் நன்றி.:))
//கடமையை செய் பலனை எதிர்பார்க்காதேன்னு எங்க தமிழ் டீச்சர் சொல்லியிருக்காங்கல்ல:P//
சரியா சொன்னீங்க. கருத்து நல்லா இருக்கு ரசிகன்
//நல்லாத்தானே இருந்தீங்க?? திடீர்னு இப்படி ஒரு கவிதை!!!//
சும்மா தான் திவ்ஸ்!
//kavidhai superunga. romba feelingsa irukku..//
ஏய் சத்யா, no no.. அழ கூடாது! :))
மனிதனின் நிராசை வாழ்க்கையை,வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தும் அற்புத கவிதை .
by
mcxmeega@gmail.com
Post a Comment