யாரடி நீ மோகினி படம் பார்த்தேன். ரொம்ப நாள் எதிர்பார்த்த படம். ரொம்ப நாளைக்கு அப்பரம் ரசித்து ரசித்து பார்த்த படம் எனலாம். படத்தின் மிகப்பெரிய பலமே காமெடி தான். வாழ்க்கையில் வரும் யதார்த்தமான காமெடியை காட்சியில் கொண்டு வந்த இயக்குனருக்கு முதல் பாராட்டு.
தனுஷ் காமெடியில் பின்னி இருக்கிறார். இருந்தாலும், மாமனாரை 'காப்பி' அடிக்கும் சில காட்சிகள் படத்தில் இருப்பது ஏதோ வலிந்து சேர்க்கப்பட்ட காட்சி போல இருக்கு.
- வயலில் பாம்பை தூக்கி கொண்டு பயப்புடுவது நடிப்பது அண்ணாமலை ரஜினி மற்றும் முத்து படத்தில் வருவது போல் இருந்தது.
இருப்பினும், இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். அப்பரம்.. நம்ம நயன்.. அட.. நயனுக்கு நடிக்க தெரியும் என்று பெயர் வாங்கி கொடுக்கபோகும் படமாக அமைந்தவிட்டது இப்படம். 'அலைபாயுதே' மற்றும் 'கண்ட நாள் முதல்' கார்த்திக் நடிப்பில் இன்னும் தேரவேண்டும். அதே நடிப்பு. வெள்ளக்காரன் தமிழ் பேசுவது போல் அங்கங்கே அவர் தமிழ் உச்சரிப்பு உள்ளது. கொஞ்சம் ஸ்டைலாக இருந்தாலும், இந்த கதாபாத்திரத்துக்கு ஒட்டவில்லை.
இப்படத்தில் நடிப்பு பொருத்தவரை முதல் இடத்தில் இருப்பவர் ரகுவரனைதான். என்னமா இயல்பாக நடிச்சுருக்காரு!!! வில்லனாக நடித்த ரகுவரனா இவர் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பு பிரமாதம். காமெடி பேச்சிலும் நடவடிக்கையிலும் வசனங்களிலும் நான் பார்த்தது ஒரு உண்மையான மிடில்-கிளாஸ் அப்பாவை தான்!! இரண்டாவது இடம், நயனுக்கு தங்கச்சியாக நடித்த பொண்ணு, சரண்யா!! சூப்பர் ஜாலியான கதாபாத்திரம்! படத்தை பார்த்தா உங்களுக்கே புரியும்!
படத்தில் எனக்கு ரொம்ப பிடித்தது 'பாலக்காடு' ரீமிக்ஸ் மற்றும் அதை பாடலாக்கிய விதம்! செல்வராகவனின் கதை, திரைக்கதையா இது என்று சற்று வியப்பாக உள்ளது. அவர் வசனங்கள் பல இடத்தில் 'நச்'! புதுமையாக நகைச்சுவை கதையை சொல்லி அசத்தியுள்ளார். எப்போதுமே சோகமான கதைக்களத்துடன் படைப்புகளை கொடுக்கும் ராகவன் இம்முறை வேறு கோணத்தில் குடும்பத்தோடு பார்க்கவேண்டிய காதல் கதையை சொல்லி இருக்கிறார்.
இருந்தாலும், அவர் காதலில் தப்பு செய்பவர்கள் பெண்களே என்று சொல்லவருவது போல் தோன்றியது. ஒரே ஒரு இடத்தில் நயன் சொல்லும் 'பொண்ணுங்க நான் கொஞ்சம் டைம் எடுத்துதான் சொல்லுவோம்' என்று. அதற்கு தனுஷ் 'என்னடி டைம் வேணும்? வாழ்க்கைங்கறது இப்படிங்கறதுக்குள்ளே முடிஞ்சு போயிடும்...' என்பார். ஆக உடனே முடிவு எடுக்கனும் என்று சொல்ல வருவதுபோல் இருந்தது.
இருப்பினும் செல்வராகவன் ஏதோ ஒரு நடுநிலையாகவே திரைக்கதையை நகர்த்தி செல்வதால், படம் ரசிக்கும் வண்ணம் உள்ளது. செல்வராகவன் லாஜிக் ஓட்டைகளையும் சற்று பார்த்து சரி செய்து இருக்கலாம்.தெலுங்கு ரீமேக் என்ற போதிலும் இயக்குனராவது சரிசெய்து இருக்கலாம். எனக்கு பிடித்தது கிளைமேக்ஸ் காட்சி தான்.. அப்படியே செல்வராகவனின் 'touch'.
ஆக மொத்தத்தில்,
யாரடி நீ மோகினி- பேஷா பாக்கலாம் ஒய்!

16 comments:
இந்த படத்தை நான் தெலுங்கில் பார்த்தேன். செல்வராகவனால் இப்படியும் எடுக்க முடியுமா என ஆச்சரியபட வைக்கும் படம்! லாஜிக் குறைகள் என்னவோ உண்மைதான் அதையெல்லாம் பாராமல் இருந்தால் இரசித்து, சிரித்து பார்க்ககூடிய படம்!
ஆனாலும் என்ன கேட்டா செல்வராகவன் அவருடைய வழக்கமான பானியில் படங்கள் எடுப்பதைத்தான் நான் விரும்புகிறேன்!!
அடடா... காயத்ரி.. சினி விமர்சனம்ல்லா எழுத ஆரம்பிச்சுட்டிங்களா? எங்கயோ போயிட்டிங்க:D
வாழ்த்துக்கள்:)
//வாழ்க்கையில் வரும் யதார்த்தமான காமெடியை காட்சியில் கொண்டு வந்த இயக்குனருக்கு முதல் பாராட்டு.//
யாராவது டைரக்டருக்கு நியுஸ் சொல்லிருங்கப்பா.. நம்ம தமிழ் மாங்கனி பாராட்டிட்டாங்கன்னு :P
naanum parthenga. nalla thaan irundhuchu. second climax konjam improve panni irukalam... but apart from that.. nice movie!
//அவருடைய வழக்கமான பானியில் படங்கள் எடுப்பதைத்தான் நான் விரும்புகிறேன்!!//
கவலை வேணாம் சதீஷ், அவர் அடுத்த படம் 'ஆயரத்தில் ஒருவன்' அப்படிதான் அமையும் என நினைக்கிறேன்.
வணக்கம் ரசிகன், முன்பு விமர்சனம் எழுதி கொண்டு தான் இருந்தேன். இப்போது படம் பார்க்க நேரம் இல்லாததால், எழுதவில்லை. ரொம்ப நாளைக்கு அப்பரம்தான் இப்படத்த பார்த்தேன். அதான் விமர்சனம் போட்டேன்.
//யாராவது டைரக்டருக்கு நியுஸ் சொல்லிருங்கப்பா.. நம்ம தமிழ் மாங்கனி பாராட்டிட்டாங்கன்னு //
இந்த லொள்ளுக்கு மட்டும் குறைச்சல் இல்ல..:))
//but apart from that.. nice movie!//
சரியாய் சொன்னீங்க dreamz!
'பொண்ணுங்க நான் கொஞ்சம் டைம் எடுத்துதான் சொல்லுவோம்' என்று. அதற்கு தனுஷ் 'என்னடி டைம் வேணும்? வாழ்க்கைங்கறது இப்படிங்கறதுக்குள்ளே முடிஞ்சு போயிடும்...' என்பார்.
-- haha! udane solradhuku enna kathirikaaya vaangirom!
padam parthenga. ok... :)
//சத்யா said...
-- haha! udane solradhuku enna kathirikaaya vaangirom!
//
Sathiya annachchi sonna athula oru point irukkum, so elaarum note the point note the point!
ம்ம்.. ஏற்கனவே தெலுங்கில் பார்த்த படம். தமிழில் அப்படியே சுட்டு க்ளைமேக்ஸ் மட்டும் மாத்தியிருக்காங்க.. அதுவும் சரிப்பட்டு வரலைன்னு த்ஹிரும்ப பழைய க்ளைமேக்ஸ் மறுஷூட் பண்ணி எடிட் பண்ணி எல்லா தியேட்டருக்கும் அனுப்பியாச்சு..
வெங்கடேஷ் சூப்பரா செஞ்சிருப்பார். நடிக்க தெரியாத த்ரிஷாவே எனக்கு நடிக்க தெரியும்ன்னு காட்டிய படம். நான் பார்த்த வரை நயன் த்ரிஷா அளவுக்கு கூட இந்த படத்தில் முயற்சிக்கவில்லை.
கார்த்திக் ரோல் தெலுங்கில் ரோஜாகூட்டம் ஸ்ரீகாந்த் செய்திருப்பார். வழவழன்னு பேசும் ஸ்ரீகாந்தே அந்த படத்துல அடக்கி வாசிச்சு நல்ல பேர் வாங்கிட்டார். ஐயர் ஆத்து பையனா அவங்க ஸ்லேங்ல பேச வேண்டிய கார்த்திக் இந்த இடத்துல கொஞ்சம் கோட்டை விட்டுட்டார்.
க்ளைமேக்ஸ்ல இயக்குனர் கொஞ்சம் கன்பியூஸ் ஆகி மக்களையும் கொஞ்சம் கன்பியூஸ் ஆக்க பார்த்திருக்கிறார். :-)
//ஸ்ரீகாந்தே அந்த படத்துல அடக்கி வாசிச்சு நல்ல பேர் வாங்கிட்டார். //
இது ரொம்ப சந்தோஷமான செய்தியாச்சே!!
.//பழைய க்ளைமேக்ஸ் மறுஷூட் பண்ணி எடிட் பண்ணி எல்லா தியேட்டருக்கும் அனுப்பியாச்சு..//
கேள்விபட்டேன். இருந்தாலும் எனக்கு அந்த பழைய கிளைக்மெக்ஸ் தான் பிடித்திருந்தது.
//எனக்கு பிடித்தது கிளைமேக்ஸ் காட்சி தான்.. அப்படியே செல்வராகவனின் 'touch'//
உனக்கு மனசாட்சியே இலையா? அதுக்கு பேர்தான் க்ளைமாக்ஸா? படத்தோட முடிவு என்னனே சொல்லாம முடிச்சிடானுங்க.. நயந்தாரா யாரை கட்டிக்கிட்டா அல்லது கட்டிக்க போறானு சொல்ல வேணாமா?
//ஆக மொத்தத்தில்,
யாரடி நீ மோகினி- பேஷா பாக்கலாம் ஒய்!//
ஏன் இந்த கொலை வெறி?.. இதை பார்த்துட்டு தலை தெறிக்க ஓடி வந்தது எனக்கு தான தெரியும்? :P
படம் நீங்க சொன்ன மாதிரி குடும்பத்தோட பார்க்கலாம். கொஞ்சம் ஜாலியான படம். ஆனா எனக்கு தெலுங்கு படம் தான் ரொம்ப பிடிச்சிருந்தது. வெங்கடேஷ் ரொம்ப நல்லா பண்ணி இருப்பார். தனுஷ் வயசுக்கு அவர் அப்பாவாக வர ரகுவரன திட்டுறது நல்லா இல்ல. நீங்க சொன்ன மாதிரி அந்த பாம்பு சீன் எல்லாம் அப்படியே மாமனார பார்த்து காப்பி. இதை வச்சுகிட்டு ரொம்ப நாள் ஓட்ட முடியாது. அதே மாதிரி படத்தோட கிளைமாக்ஸ் சரியான சொதப்பல். நயன்தாரா மனசு மாறி தனுஷை காதலிக்க அழுத்தமான காரணம் எதுவும் இல்லை.
//நயன்தாரா மனசு மாறி தனுஷை காதலிக்க அழுத்தமான காரணம் எதுவும் இல்லை.//
ஒரு வேளை சிம்பு இதுக்கு காரணமா இருப்பாரோ! ஹிஹி..:))
Post a Comment