"ஏய் ரவீன், உன் ஆளு சுஜி ரொம்ப சோகமா இருக்கா.. என்ன மேட்டர்னு தெரியுமா?" என்றேன்.
"தெரியும்ப்பா. சுஜிக்கு இந்த இடம் பிடிக்கல. பேய் அப்படி இப்படினு சொல்லிக்கிட்டு இருந்தா. நான் அவ்வளவுக்கு எத்தன தடவையே சொல்லிட்டேன். ஆனா கேட்க மாட்டேங்கறா. i am totally disturbed too. i don't know what to do man!" என்றான் சற்று வெறுப்புடன்.
ஆஹா அப்படி என்றால் ரவீனாலும் இந்த விஷயத்துக்கு தீர்வு காண முடியாது என்று தெரிந்துவிட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டே காலை உணவுக்காக வரிசையில் நின்றேன்.
திடீரென்று "ஐயோ!! ரத்தம்! ரத்தம்!" என்று அலறல் சத்தம். பெண்கள் விடுதியிலிருந்து தான் அந்த சத்தம் வந்தது. அனைவரும் பதறி அடித்துகொண்டு அங்கே ஓடினோம். அறையில் சுஜி மட்டும் தான் இருந்தாள். அவள் முகம் முழுக்க பயத்தால் கொட்டிய வேர்வை. கண்கள் சிவப்பாக மாறி இருந்தன. எதையோ பார்த்து பயந்துவிட்டாள் என்பது மட்டும் அனைவருக்கும் புரிந்தது.
"என்ன ஆச்சு சுஜி" என்றார் ஷீலா மேடம்.
"மேடம்...ரத்தம்.... ரத்தம்." என்று வார்த்தைகள் வர மறுக்க பதற்றமாகவே கூறினாள், ஜன்னல் ஓரத்தில் ஒழிகி இருந்த ரத்தத்தை பார்த்து.
அங்கே ரத்தம் எப்படி வந்தது? ஏன்? யாரு? என்று அனைவரின் மனதில் பயம் அலைகள் பாய்ந்தன.
மற்ற ஆண் மாணவர்கள் சுற்றி நின்று ஒருவருக்கொருவர் என்ன நடந்திருக்கும் என்று பேசி கொண்டிருந்தனர். ரவீன் சுஜியை சமாதானம் செய்து கொண்டிருந்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்ப, உண்மையாகவே பேய் இருக்கா?? பேயின் வேலையா இது?
குளித்துவிட்டு ஒரு பெண் அறைக்குள் நுழைந்தாள். கூட்டமாக இருந்ததை பார்த்து, " என்ன மேன், ஒரே கூட்டம்? what happened?" என்று வினாவினாள். நடந்ததை கூறினேன் நான். சொல்லி முடிப்பதற்குள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். அவள்,
"ஏய் fools, இது ரத்தமா? நான் நேத்திக்கு burger சாப்பிடும்போது chilli sauce கொட்டிட்டு. நாளைக்கு தொடச்சிக்கலாம்னு விட்டுட்டேன்... அதுக்குள்ளே இப்படி சீன் create பண்ணிட்டீயே?" என்றாள் அவள் சுஜியைப் பார்த்து.
அங்கே உள்ள பலர் நடந்த கூத்தை பார்த்து சிரிக்க தொடங்கினர். சுஜிக்கு சற்று ஒரு மாதிரியாக போய்விட்டது. எப்படி react செய்வது என்று தெரியாமல் முழித்தாள். ரவீனுக்கு கோபம் ஒரு புரம், அவமானம் ஒரு புரம். ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு ஏன் இப்படி செய்கிறாள் என்று ரவீன் நினைக்க, அறையைவிட்டு வெளியேறினான்.
"ஒகே students, leave the matter. எல்லாரும் hikingக்கு கிளம்புங்க" என்றார் ஷீலா மேடம். ரவீன் கோபமாக இருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட சுஜி, அவனிடம் மன்னிப்பு கேட்க ஓடினாள். காலையின் ஆரம்பமே இப்படி இருக்கிறதே என்று என் மனம் யோசித்தது. இன்னும் 10 நிமிடங்களில் திடலில் assemble ஆகவேண்டும் என்ற ஒரு அறிவிப்பு ஒலிக்க, நாங்கள் அனைவரும் hikingக்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு திடலுக்கு சென்றோம்.
physics, maths, biology, history department என்று பல departmentகள் வாரியாக நாங்கள் குழு அமைத்தோம். ஒவ்வொரு குழுக்கு ஏற்ற பொறுப்பாசிரியர்கள் hikingக்கு உரிய குறிப்புகளை கூறினர். பின்னர் மலைப்பகுதிக்குள் சென்றோம். அன்றைக்கு முடிக்கவேண்டிய நடவடிக்கைகளை முடித்தோம்.
சுவாரஸ்சியமாக இருந்தாலும் அனைவருக்கும் களைப்பாக இருந்தது. திரும்பி விடுதிக்கு வர இரவு 7 மணி ஆகிவிட்டது. 8 மணிக்கு இரவு உணவு என்று ஆசிரியர்கள் கூறினர். ஆக, அனைத்து மாணவர்களும் சீக்கிரமாக குளித்துவிட்டு இரவு உணவுக்காக தயாராகினர். அன்று மலைப்பகுதியில் hiking சென்றபோது எப்படியோ சுஜியும் ரவீனும் சமாதானம் ஆகினர். இருவரும் சற்று நேரம் விடுதியின் கீழ்தளத்தில் நின்று பேசி கொண்டிருந்தனர். கடைசியாகதான் ரவீன் குளிக்க சென்றான். கிட்டதட்ட அனைத்து மாணவர்களும் சாப்பிடும் இடத்திற்கு வந்தனர். சுஜியும் குளித்துவிட்டு வந்தாள். நானும் அவளும் அங்கே சென்றோம்.
நாங்கள் அளவளாவி கொண்டிருந்தபோது, ஒரு பயங்கர கதறல் சத்தம், "டேய், ரவீன் is missing!!" என்றான் ஒரு மாணவன். சுஜிக்கு கண்ணீர் தாரை தாரையாக கொட்ட, நான் அவளிடம், " ஏய் சுஜி, control yourself. please.. please" என்றேன் அவள் கைகளை பிடித்து கொண்டு.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. எனக்கு காலையில் நடந்த சம்பவம் மனதில் உதிக்க, என்னுள் உள்ள பயம் அதிகமாகியது. ஆசிரியர்கள் ஒரு பக்கம் தேட, மற்ற மாணவர்கள் இன்னொரு பக்கம் தேட. சில பெண் மாணவர்கள் சுஜிக்கு ஆறுதல் கூறினர்.
"மக்கள்ஸ், ரவீன் toiletல மாட்டிகிட்டான்." என்றான் ஒருவன்.
ரவீன் குளிக்கும்போது யாரோ அவனின் கழிவறை கதவை பூட்டிவிட்டான்.
ரவீனை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தபிறகு தான் சுஜிக்கு போன உயிர் திரும்பி வந்தது.
"யார் கதவை பூட்டியிருந்திருப்பார்கள்?" என்றேன் நான்.
"காலையில chilli sauce ஊத்தன புள்ளையா இருக்கும்!" என்று பாலா கிண்டலடித்தான்.
"உனக்கு கிண்டலடிக்க வேறு நேரமே கிடையாதா?" என்றான் ரவீன்.
"students, இது யாரோ செஞ்ச prank மாதிரி தான் தெரியுது. யாரா இருந்தாலும் please own up. " என்று எச்சரிக்கைவிட்டார் தலைமையாசிரியர்.
சுஜி என் காதுகளுக்கு மட்டும் கேட்கும் அளவில் என் அருகே வந்து, " இது பேய் செஞ்ச வேலையாதான் டி இருக்கும்!" என்றாள்.
இரவு உணவை முடித்து கொண்டு நாங்கள் உறங்க சென்றோம். சுஜி சாப்பிடவில்லை. ரவீன் பயப்படவில்லை. இருந்தாலும் யார் செய்த வேலையாக இருக்கும் என்ற குழப்பத்தில் இருந்தான். சுஜி தூங்காமல், தன் பையில் இருந்த முருகன் சாமி படத்தை எடுத்து வைத்து கொண்டு சாமிகும்பிட்டாள்.
எனக்கு தூக்கம் வரவில்லை. இரவு 1030 ஆகிவிட்டது. மற்ற மாணவிகள் சிலர் பேசி கொண்டிருந்தனர். சிலர் தலையணைகளை தூக்கி வீசி விளையாடினர். சிலர் ipodலில் பாட்டு கேட்டு கொண்டிருந்தனர். பக்கத்தில் அறையிலிருந்து வந்த ஷீலா மேடம் எங்கள் அறைக்குள் வந்து, "girls, டைம் ஆயிட்டு. lights off. sleep now." என்று சொல்லிவிட்டு அறையின் விளக்கை off செய்தார்.
என் கைப்பேசியை திறந்து பார்த்தேன். மணி நள்ளிரவு 12.....
(பயம் தொடரும்)
9 comments:
வாவ்... த்ரில்லர்... நல்லா இருக்கு :)
ம்ம்ம்ம்.... பயமுறுத்துரதுன்னு முடிவு பண்ணியாச்சு... நல்லாவே பண்ணறீங்க... :))) தொடரட்டும்....:))
@ dreamzz,
நன்றி!!
@நவீன்,
//பயமுறுத்துரதுன்னு முடிவு பண்ணியாச்சு//
ஹாஹா.. நாங்க ஒரு தடவ முடிவு பண்ணிட்டா, அப்பரம் எங்க பேச்சை நாங்களே கேட்க மாட்டோம்!!
இரண்டாவது பாகம் இப்போ வந்துடுச்சா??
த்ரில்லர் தொடர்ல இப்படி பாகம் மர்மமான முறையில் காணாம போனது ரொம்ப பொருத்தமான எஃப்க்ட் காயு!!
\\ ரவீன் கோபமாக இருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட சுஜி, அவனிடம் மன்னிப்பு கேட்க ஓடினாள். \\
எதுக்கு இப்படி ஓடுறா சுஜி......அம்புட்டும் இந்த லவ்ஸ் பண்ற வேலை:))
\\இருவரும் சற்று நேரம் விடுதியின் கீழ்தளத்தில் நின்று பேசி கொண்டிருந்தனர். \\
அய்யோ பாவம் , காதல் ஜோடிக்கு தனியா பேசிக்க அப்போதான் ஃப்ரைவேசி கிடைச்சுச்சு போலிருக்கு:)))
\\சுஜிக்கு கண்ணீர் தாரை தாரையாக கொட்ட, நான் அவளிடம், " ஏய் சுஜி, control yourself. please.. please" என்றேன் \
ஐயோ பாவம் சுஜி:(
\\அறையின் விளக்கை off செய்தார்.என் கைப்பேசியை திறந்து பார்த்தேன். மணி நள்ளிரவு 12.....(\\
மிட் நைட் த்ரில்லர் ரேஞ்சுக்கு சும்மா சூப்பரா இருக்கு தமிழு:)))
@திவ்ஸ்,
//அம்புட்டும் இந்த லவ்ஸ் பண்ற வேலை:))//
ஹாஹா..
//மிட் நைட் த்ரில்லர் ரேஞ்சுக்கு சும்மா சூப்பரா இருக்கு தமிழு:)))//
நன்றி திவ்ஸ்!
Post a Comment