இந்த tuitionக்கும் போகும் பிள்ளைகள் ரொம்ப ரொம்ப பாவமான பிள்ளைகள்! எனக்கு இந்த மாணவர்கள் tuitionக்கு போற விஷயமே பிடிக்கல்ல. டியூஷன் என்ற பெயரில் அவர்கள் இன்னும் அதிகமான சுமையை தான் சுமக்கிறார்கள். பள்ளியில் சொல்லிகொடுக்கும் ஆசிரியர்கள் தான் டியூசன் எடுப்பார்கள். பள்ளியில் சரிவர சொல்லிகொடுக்காதவர்களா டியூஷனில் சொல்லி கொடுத்துவிட போகிறார்கள்?
நான் பள்ளி படிக்கும் காலத்தில் 1008 டியூஷனுக்கு சென்று நொந்து noodles ஆனது தான் மிச்சம். வார நாட்களில் 3 நாட்களுக்கு டியூஷன். சனிக்கிழமை காலையில் கணக்கு டியூஷன்.
ஞாயிற்றுகிழமை காலை 7 மணிக்கு physics டியூஷன். 9 மணிக்கு முடிந்துவிடும். 930 அடுத்த கணக்கு டியூஷனுக்கு ஓடனும். மதியம் 12 மணிக்கு தான் வீடு திரும்புவேன். அப்போது எல்லாம் நானே என் மனதில் நினைத்து கொள்வேன், "நீ ஏதோ போன ஜன்மத்துல பாவம் பண்ணியிருக்கே. அதான் இந்த ஜன்மத்துல அனுபவிக்கிற இப்படியலாம்."
அந்த காலத்தில் டியூஷனுக்கு சென்றால் மக்கு பிள்ளை என்பார்கள். ஆனால், இந்த காலத்தில் டியூஷனுக்கு போகாத பிள்ளைகளைதான் மக்கு பிள்ளை என்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்று நான் கருதுகிறேன். அடிப்படையை சரி செய்ய வேண்டும். ஆசிரியர்கள் புரியும் வண்ணம் சொல்லி கொடுத்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும். அதற்கு, ஆசிரியர்கள் தான் முழு காரணம் என்று நான் சொல்லவரவில்லை.
உதாரணத்திற்கு ஒரு கேள்வி,
"மரம் வளர எது காரணம்?" என்றால் எப்படி பதில் சொல்வது... "எது" என்று கேட்டதால் ஒரே ஒரு காரணத்தை தான் கூறமுடியும். கேள்வி "எவை காரணங்கள்" என்று கேட்டிருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களை கூறலாம். ஆனால் கேட்ட "எது" என்ற கேள்விக்கு அனைத்து காரணங்களையும் கூறவில்லை என்பதால் அந்த மாணவனுக்கு மதிப்பெண்களை குறைப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?
ஆக, இப்படி இருக்கும் மாணவர்கள் குறைவாக மதிப்பெண்களை வாங்க, இவர்களை டியூஷனுக்கு அனுப்பிவிடுகிறார்கள் பெற்றோர்கள். யாரோ செய்யும் தவறுக்கு மாணவர்கள் பலியாகுகிறார்கள்?
டியூஷனுக்கு போனால் தான் பிள்ளை நல்லா படிப்பான் என்று எண்ணம் கொண்டு பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் மீது கொஞ்சம் நம்பிக்கை வையுங்கள்!!
பிள்ளை ஒரு பரிட்சையில் fail ஆகிட்டான் என்றால் அவனை உடனே "டியூஷனுக்கு போனால் தான் நீ சரிப்பட்டு வருவே." என்று சொல்லி அவனை தள்ளிவிடாதீங்க. மற்ற பாடங்களில் அவன் நல்லா செய்திருப்பான். ஆக, அவன் முட்டாள் இல்லை. மற்ற எத்தனையோ திறமைகள் இருக்கும் அவனிடத்தில். ஆக அவன் மக்கு பையனும் இல்ல. இந்த ஒரு பாடம் அவனுக்கு சரியாக வரவில்லை என்றால் அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அதை மற்ற கோணங்களிலிருந்து பார்க்க வேண்டும்.
சிலர் சொல்வார்கள், பெற்றோர்களுக்கே தெரியவில்லை, சிலர் படிக்காதவர்கள், அப்படி இருக்கையில் டியூஷனுக்கு அனுப்புகிறோம் என்று. அப்பரம் எதற்கு பள்ளிகூடம்? அனைத்து மாணவர்களையும் சரிசமமான நிலையில் கொண்டு வருவதே ஒரு பள்ளியின் நோக்கமாகும். ஆனால், இன்றைய நிலையில் அது அப்படி உள்ளதா? ஆக, அடிப்படையே ஆட்டம் காண,நாம் அனைவரும் கோபுரத்திற்கு சாயம் பூசி கொண்டிருக்கிறோம்!!
இப்போது ஒரு வாசகம் புதிதாக முளைத்து உள்ளது, " i was born smart but education made me stupid." என்னிடம் கேட்டால், இது தான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது!!
10 comments:
Education kandippa doesnt make us intelligent :) It is partly our attitude, partly our genes and partly how we use our knowledge.
and then.. tuitionku pogalana.. eppadi sight adikka? :P
@dreamzz,
/and then.. tuitionku pogalana.. eppadi sight adikka? :/
haha...இது வேற நடக்குதா?? :))
\\மரம் வளர எது காரணம்?" என்றால் எப்படி பதில் சொல்வது... "எது" என்று கேட்டதால் ஒரே ஒரு காரணத்தை தான் கூறமுடியும். கேள்வி "எவை காரணங்கள்" என்று கேட்டிருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களை கூறலாம். \\
நல்லதொரு கேள்வி:))
ரொம்ப சிந்திச்சு......உணர்ச்சிவசப்பட்டு பதிவு எழுதியிருக்கிறீங்க தமிழ்:)))
சிந்திக்க வேண்டிய விஷயம்:))
//உணர்ச்சிவசப்பட்டு பதிவு எழுதியிருக்கிறீங்க தமிழ்:)))//
இந்த சமூகம் என்னை இப்படி ஆக்கிப்புட்டு திவ்ஸ்..
Extra hours in tutions other than school hours is not that important for studious students, but what about average students Tamilmangani??
There are quite a few students who need extra attention & coaching , which is not possible at school hours,
its just my view:-)
By the way, tution hours are the only funfilled time for girls school/boys school students for 'kadalai frying'!!!!!
@shwetha,
//but what about average students Tamilmangani??//
yes i agree with u that all students shld be well-taken care of! that's y i am insisting on the fact that what are schools for? if there are only gg to coach fast learners and the smart ones, what will happen to these avg kids? y schools neglect these students.. that is my concern, shwetha.
@shwetha,
// which is not possible at school hours,//
y?? bcos i feel that school, syllabus, parents, teachers, society is exam-focused. schools have to finish a certain syllabus. and there is no time for all to progress together.
@shwetha,
//'kadalai frying'!!!!!//
ஆஹா.. நீங்களுமா??? :)))
தனிவகுப்பு பத்தி ஒவ்வொருத்தரு ஒவ்வொரு கருத்து சொல்லுவாங்க...
எங்க பள்ளியூடத்துல பாடமே நடத்த மாட்டாங்க... வகுப்பு பரிட்சையும் இருக்காது. அதனால தனி வகுப்பு போனாலாவது ஏதாவது படிக்கலாம்னுதான்...
//@dreamzz,
/and then.. tuitionku pogalana.. eppadi sight adikka? :/
haha...இது வேற நடக்குதா?? :))//
இது இல்லாமையா?? பசங்க கூடையே போட்டி போட்டு கடியா இருக்கும்ல.. பொண்ணுவ கூட போட்டி போட்டா நல்லா படிக்கலாம்ல... அதத்தான் ட்ரீம்ஸும் சொல்றாவ... :)))) நீங்க தப்பா நெனக்காதிய... :)))
Post a Comment