May 27, 2008

எனக்கு பயமா இருக்கு- பாகம் 3

பாகம் 1
பாகம் 2

எனக்கு கழிவறைக்கு போக வேண்டிய சூழல். நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடித்ததால் வந்த வினை இது! ராத்திரி நேரம்.. தனியே கழிவறைக்கு செல்ல வேண்டாம்னு சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. நான் சுஜியை எழுப்பினேன்.

ஆனால் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். மற்ற வகுப்பு மாணவிகள் எவளும் எழும்பவில்லை. கடைசியாக ஒரு குரல் கொடுத்தேன்,



"நான் toiletக்கு போகனும். யாராச்சும் வர முடியுமா? it's urgent."



ஒருத்தி தூக்க மயக்கத்தில், "i love விஷால்.. u are so cute da..." என்று உளறினாள். அடச்சே அவசரம் புரியாமல் பேசுகிறாள் என்று நோந்து போனேன்.



பயத்தை புதைத்து, தைரியத்தை வரவழைத்து என் torchlightயை எடுத்து கொண்டு புறப்பட்டேன். பெண்கள் விடுதியிலிருந்து கழிவறை கட்டடத்திற்கு செல்ல 10 நிமிடங்களாகும். எனக்கு தெரிந்த எல்லா சாமி பாடல்களை மனதில் பாடி கொண்டே சென்றேன்.



இருட்டு ரொம்பவே இருட்டாக இருந்தது!

தவளைகளின் சத்தம்!

பனித்துளி இடி மாதிரி தலையில் விழுவதுபோல் இருந்தது.

திடீரென்று torchlightலில் உள்ள வெளிச்சம் மங்களாக போனது. battery இன்னும் கொஞ்சம் நேரம் வரைக்கும் தான் தாக்குபிடிக்கும் என்பதை நான் அறிந்து கொண்டேன். என் நடை வேகத்தை அதிகரித்தேன். வேகமாக நடக்க நடக்க மனம் இன்னும் அதிகமாக பயத்தினால் அடித்தது.



நான் கழிவறை கட்டடத்தை வந்த அடைய, battery முற்றிலும் போனது. திரும்பி எப்படி போவது என்று அடுத்த பயம் மனதிற்குள் புகுந்தது. கட்டடத்தின் கடைசியில் தான் கழிவறை. சத்தமில்லாமல் காலடியை ஒவ்வொன்றுமாக மெதுவாய் எடுத்து வைத்தேன். கழிவறையில் வெளிச்சம் தெரிந்தது. யாரோ அங்கே இருக்கிறார்கள். அருகே செல்ல செல்ல பெண்களின் குரல் கேட்டது.

"யப்பாடா, நம்ம பெண்ணுங்க எவளோ இருக்கிறா. " என்று மனம் தைரியமானது.

உள்ளே நுழைந்தேன். மூன்று பெண்கள் தண்ணீர் துளிகளை ஒருவர் மீது இன்னொருவர்மேல் அள்ளி வீசி விளையாடி கொண்டிருந்தனர்.

"hi girls, என்ன toiletக்கு வந்தீங்களா?" என்றேன்.

"இல்ல இல்ல, படம் பார்க்க வந்தோம்" என்றார்கள். சரி நான் கேட்ட முட்டாள்தனமான கேள்விக்கு பதில் இப்படி தான் வரும்.

"நீங்கலாம் எந்த department?" என்று கழிவறைக்கு போய்விட்டு tap தண்ணீரில் கை கழுவி கொண்டே கேட்டேன்.

மூவரும் கோர்ஸாக, "நாங்க physics department" என்றனர்.

"இவ ராணி, நான் மாலா, இவ ரோகினி." என்றாள் மாலா.

"ஒகே, nice names." என்றேன் நான்.

"சரி நான் first போகவா? இல்ல உங்களுக்காக wait பண்ணவா?" என்றேன். இருந்தாலும் எல்லாரும் ஒன்றாக போக வேண்டும் என்பதே என் ஆசை. நம் பயத்தை மற்றவர்களிடம் காட்டிக்ககூடாது என்பதற்காக அந்த கேள்வி.

"நோ.. நோ.. நம்ம எல்லாம் ஒன்னாவே போவோம்." என்றனர் மூவரும்.

யாரிடமும் torchlight கிடையாது. ஆக, ஒருவருக்கொருவர் கைகளை பிடித்து கொண்டு பத்திரமாக நடந்தோம். யாரும் பேசாமல் வந்தனர்.

"யாராச்சும் பேசலாமே?" என்றேன் அமைதியான குரலில்.

"பேசலாமே. hiking நல்லா இருந்துச்சுல. நம்ம nightல போய் இருந்தா சூப்பரா இருந்திருக்கும்." என்றாள் மாலா.

"அட நீங்க வேற, பகல போனதுக்கே பயங்கரமா இருந்துச்சு.. இதுல வேற night effect கேட்குதா உங்களுக்கு." என்றேன்.

"நாங்க எல்லாம் யாரு. புலி வந்தாகூட மடியில் தூக்கிவச்சிகிட்டு புலிக்கு புல்லு ஊட்டிவிடுவோம்ல." என்றாள் ரோகினி தங்களது தைரியத்தை பற்றி.

அவர்கள் பேசுவது காமெடியாக இருந்தது. ரசித்து கேட்டு கொண்டு வந்தேன். பெண்கள் விடுதியை அடைந்துவிட்டோம். அப்போது சாப்பிடும் இடத்தில் இருந்த பெஞ்சில் ஷீலா மேடம் தனியாக உட்கார்ந்து இருந்தாள். இவர்கள் மூவரும் ஷீலா மேடத்தை நோக்கி சென்றனர்.

"நாளைக்கு plan பத்தி discuss பண்ணனும்." என்றாள் ராணி. அவர்கள் ஷீலா மேடத்திடம் பேசினர். நான் சிறிது நேரம் மறைந்து நின்று கேட்டு கொண்டிருந்தேன்.

"good.ராணி, நான் சொன்ன மாதிரி இன்னிக்கு boys toiletலை lock பண்ணிட்டே..." என்றார் ஷீலா மேடம்.

எனக்கு மிக பெரிய அதிர்ச்சி!!

அதற்கு பிறகு அவர்கள் பேசியது என் காதுகளில் கேட்கவில்லை. ரொம்ப அமைதியான குரலில் பேசியதால் சரியாக கேட்க முடியவில்லை. அதனால், நான் என் இடத்திற்கு சென்று தூங்க முயற்சி செய்தேன். ஆனால், தூக்கம் வரவில்லை. ஷீலா மேடம், toilet lock, ராணி, மோகினி, மாலா என்ற பெயர்கள் லட்சம் முறை மண்டையில் சுற்றி வந்தன.

யோசித்து யோசித்து என்னை அறியாமலேயே தூங்கிவிட்டேன். காலை மணி 6க்கு சுஜி எழுப்பினாள். நானும் கண் விழித்தேன் மெதுவாய்.

"get ready soon. எல்லாரும் ரெடி." என்றாள் சுஜி. அவளிடம் நேற்று இரவு நடந்ததை இப்பவே சொல்லவேண்டாம் என்றது என் மனம்.

சோம்பலாக இருந்ததால் ஜன்னல் வழியே சற்று எட்டி பார்த்தேன். சிறிது நேரம் கழித்து திரும்பி பார்க்கையில் என் வகுப்பு மாணவி ஒருத்தியின் பையில், முகாமிற்கு வந்த நாள் அன்று வாங்கிய செய்தித்தாள் இருந்தது.
சும்மா அதை புரட்டி பார்த்து கொண்டிருந்தபோது என் கண்களில் தென்பட்டது,

'ராணி, மாலா, மோகினி.
5ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி'.

ஆம் நான் பார்த்த அதே மூன்று பெண்கள்!!! என் இதயமே வெடித்துவிட்டது. அப்படி என்றால் நேற்று நான் பார்த்தது பேய்யா??

நான் என்ன செய்வது என்று தெரியாமல், அடுத்த அறையில் இருந்த ஷீலா மேடத்திடம் ஓடினேன். செய்தித்தாளை காட்டி, நடந்தவற்றை கூறினேன்.

"what nonsense? நான் இவங்ககிட்ட பேசிகிட்டு இருந்தேனா? don't blabber like this. போய் ரெடியாகு. நீ நேத்திக்கு எதாச்சு கனவு கண்டு இருப்பே! i got to go to the assemble area now." என்று சொல்லிவிட்டு தன் பையில் இருந்த ஏதோ ஒரு மாத்திரையை வாயில் போட்டார். தண்ணீரை அருந்திவிட்டு சென்றார் என் பேச்சை பொருட்படுத்தாமல். அவர் மாத்திரை பாட்டிலை பார்த்தேன். அதில் எழுதி இருந்தது,

'split personality disorder. take one tablet in the morning and one tablet at night.'

****முற்றும்****

9 comments:

Divya said...

ஆஹா........எப்போ இப்படி திகில் கதை எழுதும் காயத்ரி ஆனீங்க,

நம்புற மாதிரி பயமுறுத்தியிருக்கிறீங்க தமிழ்:))))

Divya said...

பாகம் 2 ஏங்கே????.....கொஞ்சம் லேட்டா வந்தா..........ஒரு பாகமே காணோம்........பேய் தூக்கிட்டுப் போய்டுச்சா??

Dreamzz said...

:) nalla irundhuchu

FunScribbler said...

@ திவ்ஸ்,

//எப்போ இப்படி திகில் கதை எழுதும் காயத்ரி ஆனீங்க,//

புதுசா எதாச்சு try பண்ணலாம்னு செஞ்சது தான் இந்த கதை. உங்களுக்கு பிடிச்சுருக்கு... அதுவே பெரிய மகிழ்ச்சி! :))

FunScribbler said...

@dreamz,

நன்றி! :))

Anonymous said...

Really nice.....

FunScribbler said...

@சையட்,

நன்றி படித்ததற்கு!!

Shwetha Robert said...

'Split Personality disorder'.....different approach in your story telling attempt,good effort Tamilmangani.

FunScribbler said...

@shwetha,

//'Split Personality disorder'.....different approach in your story telling attempt,good effort Tamilmangani.//

வாங்க அக்கா, நன்றி உங்க பாராட்டுகளுக்கு!