May 12, 2008

எனக்காக..

கால் நடக்க முடியாத என்னை
காலையில் எழுப்பி
குளிக்க வைத்து
காலை உணவு ஊட்டிவிட்டு
என்னுடன் பேசிகொண்டே

சமையல் வேலைகளை பார்த்து
என் பேர குழந்தைகளை
பள்ளிக்கு அனுப்பிவைக்கிறாள்
மதியம் 2 மணி நேரம் என்னை
உறங்கவைத்து

மாலையில் ஒரு மணி நேரம்
வீட்டு அருகே இருக்கும்
பூங்காவில் நடை பயிற்சி செய்ய
சக்கரநாற்காலியில் என்னை
அழைத்து செல்கிறாள்.

நான் சிந்திவிடும் உணவை
சுத்தம் செய்து
முகம் சுழிக்காமல்
என்னை கவனித்து கொள்கிறாள்
நான் பெறாத மகள்-
என் வீட்டு பணிப்பெண்!

11 comments:

MyFriend said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ.. :-)

Anonymous said...

:)
nalla irunthathu kavithai...

FunScribbler said...

நன்றி துர்கா!

// .:: மை ஃபிரண்ட் ::. said...
மீ தி ஃபர்ஸ்ட்டூ.. :-)//

யாருப்பா அங்க, அந்த தங்க சங்கலிய வந்து போடுங்கப்பா இவருக்கு!

ரசிகன் said...

//மதியம் 2 மணி நேரம் என்னைஉறங்கவைத்து//

நல்லா அனுபவப்பட்டு எழுதியிருக்கிங்க,,:P

ரசிகன் said...

//நான் சிந்திவிடும் உணவை சுத்தம் செய்துமுகம் சுழிக்காமல் என்னை கவனித்து கொள்கிறாள்நான் பெறாத மகள்-என் வீட்டு பணிப்பெண்!//

பெற்றவர்களை கவனிக்கத் தவறும் பிள்ளைகளை விட ,இவர்கள் மேலானவர்கள் தான்.

நல்ல சிந்தனை.. வாழ்த்துக்கள். தமிழ்மாங்கனி:)

நிஜமா நல்லவன் said...

நல்லா இருக்குங்க.

FunScribbler said...

பாராட்டுகளுக்கு நன்றி ரசிகன் மற்றும்
நிஜமா நல்லவன்:)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

touching!

Divya said...

வித்தியாசமான கோணத்தில் அருமையான கவிதை!!

[sorry for the late attendence ma'm, manichukonga(-:]

FunScribbler said...

பாராட்டுகளுக்கு நன்றி திவ்ஸ் மற்றும் சதீஷ்!

//[sorry for the late attendence ma'm, manichukonga(-:]//

அட இதுக்கு போய்... பரவாயில்லங்க..

Anonymous said...

பணி பெண்களின் பாசத்தையும் ,நேசத்தையும் ,வெளிபடுத்தும் மனதை நெகிழவைக்கும் கவிதை.

by
mcxmeega@gmail.com