இப்பலாம் ஜாலிக்காககூட ஒருசில வார்த்தையா பேசமுடியல... அட அத ஏங்க தமிழ்ல இரண்டு வார்த்தைகூட பேசமுடியல(ரொம்ப யோசிச்சு யோசிச்சு பேச வேண்டியதா இருக்கு... எப்படி பேசினாலும் அதுல ஒரு double meaning இருக்கு என்கிறார்கள்? என்ன கொடுமை சார் இது?
ஆப்பு- இது ஒரு கெட்ட வார்த்தையா?? காமெடிக்காக சொல்வதை சீரியஸா எடுத்துகிட்டா என்ன செய்வது?
கடுப்பாக்குற- இதுவும் ஒரு கெட்ட வார்த்தை? வெறுப்பேற்றினான் என்பதற்கு இன்னொரு வார்த்தை தான் கடுப்பாக்குறான். இது எப்படி கெட்ட வார்த்தையாக நினைக்க முடியும்? இந்த வார்த்தைய சொன்னதற்கு 'அசிங்கமா பேசாத' என்று நல்ல பூஜை விழுந்தது!!!:(
பிடுங்குதல்- களை பிடுங்கினார். அன்னிக்கு செய்தித்தாள் படிக்கும்போது, விவாசயத்தை பற்றி ஒரு செய்தி. அதில் களை பிடுங்குதல் பற்றி இருந்தது. வாய்விட்டு படித்தேன். 'அந்த' வார்த்தையை படித்தபோது, ஒரு மாதிரி பார்த்தார்கள்.:(
ஆட்டுதல்- மாவு ஆட்டினான்.
தலைமுடிக்கு பழமையான தமிழ் சொல் ஒன்று இருக்கு- மயிர். இங்க பாருங்க இதை படிக்கும்போதுகூட எத்தனை பேரு முகம் சுழிப்பார்களோ! இன்றைக்கும் என் தாத்தா தலைமுடி என்று சொல்லமாட்டார். 'அந்த' வார்த்தையை தான் பயன்படுத்துவார். உண்மையான தமிழ் சொல் தானே அது!
words have become vulgarised by us! பிறக்கும்போதே, இது கெட்ட வார்த்தை இது நல்ல வார்த்தை என்று பிரிக்கபடவில்லை. நாம் தான் அதை கெட்ட வார்த்தையாக்கி கொண்டிருக்கிறோம். சரி எவனோ ஒருவன் அதை கெட்ட வார்த்தையாக்க, அந்த வார்த்தைய சொன்னால் அது அசிங்கம் என்று நினைத்து நாமும் அதற்கு துணை போகிறோம். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்! இல்லை என்றால், எல்லாம் வார்த்தைகளுக்கும் இதே கதி தான்!
அப்பரம், தமிழே பேசமுடியாமல் போகிவிடும்!
4 comments:
நீ ஒன்னும் ஃபீல் பண்ணாத தங்கச்சி.. இதுல எதுமே கெட்ட வார்த்தை இல்ல. கேக்கறவங்க கிட்ட குறை இருந்தா நாம ஒன்னும் பண்ண முடியாது.
..
உண்மைதான்.எந்த வார்த்தை சொன்னாலும் அதற்க்கு இன்னொரு பொருள் கண்டு பிடிச்சு கொடுமை படுத்துறாங்க...
ம்ம்ம்.
நல்ல பதிவு.
Post a Comment