Jul 1, 2008

போகாதே நண்பா!

இன்று காலையில் நண்பன் லீவுக்காக துபாய் சென்றுவிட்டான். அவன் தந்தை அங்க வேலை பார்க்கிறார். நண்பனும் அவன் அம்மாவும் இன்று காலையில் சென்றனர். மூன்று வாரம் அங்க இருப்பான். நேத்திக்கு ஃபோன் பண்ணி, "happy holidays. happy journey." என்று சொன்னேன். கொஞ்சம் சோகமா போயிட்டேன். என்னோட best fren, best pal, என்கூட பிறக்காத தம்பி என்றே சொல்லலாம்.

எனக்கு தம்பி இல்லையே என்று நான் எண்ணியதுண்டு. ஆனா, +1 படிக்க போனபிறகு, அந்த குறையை தீர்த்து வைத்தவன். ரொம்ப நல்லவன்! அவனை எனக்கு +1 முதல் தெரியும். ஒன்றை நான் அடிக்கடி சொல்வேன் - எனக்கு தமிழில் ஆர்வம் வந்ததற்கு காரணமே தோழன் தான். ஒரு நாள் பள்ளிக்கு அவன் எழுதிய சில தமிழ் கவிதைகளை கொண்டு வந்து கொடுத்தான். படித்து பார்த்து பிரமித்துவிட்டேன். சீரியஸான விஷயங்களை காமெடியாக எழுதியிருந்தான் அழகு தமிழில். அட நம்ம நண்பனா, கவிஞன் என்று ஆச்சிரியப்பட்டேன். நம்மகூடவே சும்மா அரட்டை அடிச்சு சுத்தி திரிஞ்சுகிட்டு இருந்தவனுக்குள்ள இப்படி ஒரு திறமையா என்று வியந்துவிட்டேன்.

அப்போது அவன் சொன்னான் "ஏன் நீயும் எதாச்சு எழுது, உனக்கும் நல்லா வரும்." என்று சொன்னதால், நான் போய் அன்றிரவே ஏதோ ஒன்று எழுதினேன். அப்படி ஆரம்பித்தது என் முதல் கவிதையும் எனக்குள் இருந்த தமிழும். எனக்கு குரு அவன் தான்!

அதுக்கு அப்பரம் எத்தனையோ சமயங்களில் எனக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறான்.. செம்ம ஜாலியான ஆளு. இரண்டு நாளைக்கு ஒரு தடவ ஃபோன் பண்ணி பேசுவான். சொல்ல போனால் என்னோட energy booster அவன் தான்! அப்படி ஒரு தோழனை மூன்று வாரம் பார்க்க முடியாது என்று நினைக்கையில் கொஞ்சம் கஷ்டமா இருக்கு... ம்ம்ம்...

4 comments:

மோகன் கந்தசாமி said...

///நான் போய் அன்றிரவே ஏதோ ஒன்று எழுதினேன். அப்படி ஆரம்பித்தது என் முதல் கவிதையும் எனக்குள் இருந்த தமிழும்////

அந்த முதல் கவிதைய இப்போ சொல்லுங்க பாப்போம்!
:-))

FunScribbler said...

@மோகன்,

//அந்த முதல் கவிதைய இப்போ சொல்லுங்க பாப்போம்!//

அந்த முதல் கவிதையை இங்கே சென்று படிக்கலாம்
http://enpoems.blogspot.com/2006/12/blog-post_2129.html

ivingobi said...

எல்லா பதிவும் ரொம்ப நல்லா இருக்கு....
ஆனா கடைசியில மரியாதையா ஓட்டு போடுங்கன்னு மிரட்டரிங்க அதான் பயமா இருக்கு...
இருந்தாலும் இந்த டீலிங் எனக்கு பிடிக்குது....

FunScribbler said...

@ivingobi

//எல்லா பதிவும் ரொம்ப நல்லா இருக்கு//

நன்றி:)