Jul 20, 2008

அடங்க மாட்டீயா நீ- என் 150வது பதிவு

"ஏய், அடங்க மாட்டீயா நீ!" என்றது என் உள்மனம் உற்சாகத்திலும் சந்தோஷத்திலும். இது என் 150வது பதிவு!! என்னமோ பெரிய சாதனை செய்துவிட்டதாக நான் பெருமிதத்தில் தத்தளிக்க, என் மனம் என்னை அடக்கியது! :)) இது அவ்வளவு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம் பலருக்கு. ஆனால், என்னை பொறுத்தவரை நான் வாழ்க்கையில் உருப்படியாக செய்து மிக சில விஷயங்களில் இதுவும் ஒன்று!

சற்று வரலாற்றை புரட்டி பார்த்தால்(சரி முறைக்காதீங்க.... ), நான் எப்படி இந்த வலைப்பூ உலகிற்குள் வந்தேன்? என்று எனக்கே சற்று வியப்பாகத்தான் உள்ளது. முதன்முதலில் என் தோழி (australiaவில் படித்து கொண்டிருக்கிறாள்..) 4 வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்....

MSN chatல் பேசி கொண்டிருக்கையில் ப்ளாக் பற்றி சொன்னாள். என்னையும் எழுத சொன்னாள்.

எனக்கு அதில் விருப்பம் இல்ல. என்னத்த எழுதி அத மத்தவங்க படிச்சு.. என்று நான் ஆர்வம் காட்டவில்லை. அப்பரம் அவள் ரொம்பவே கட்டாயப்படுத்தி எழுத சொன்னதால், ஒரு வலைப்பூவை ஆரம்பித்தேன் ஆங்கிலத்தில். எப்பவாவது ஒரு முறை எழுதுவேன். பிறகு, ஒரு நாள் முற்றிலுமாக மூடிவிட்டேன். எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

மறுபடியும் அவள் ஆரம்பித்தாள். அப்போது நான் +2 முடித்த காலக்கட்டம். அந்த வருஷத்தில் ரொம்ப பெரிய வேதனைகள், சோகங்கள். என் மனத்திற்கு ஒரு வடிகால் தேவைப்பட்டது.. டைரி எழுத ஆரம்பித்தேன். அதையே வலைப்பூவில் எழுதினேன் ஆங்கிலத்தில். அதன் பிறகுதான் வலைப்பூவை ரசிக்க ஆரம்பித்தேன்.

ப்ரியன் நட்பு கிடைத்தது. அதுவரைக்கும் தமிழ் இணைய உலகம் பற்றி தெரியாது.அவர் மூலம் அன்புடன் குழுமத்தில் அறிமுகமானேன். அப்பரம் பல தமிழ் இணையதளங்கள், தமிழ் வலைப்பூக்களை படிக்க ஆரம்பித்தேன். என் சிந்தனை விரிவடைந்தது.


நம்ம ஏன் தமிழ் வலைப்பூ ஒன்றை ஆரம்பிக்ககூடாது என்று என் மனம் கேட்டது. சரி எழுதி பார்ப்போம் என்று தொடர்ந்தேன். அங்க ஆரம்பித்த பயணம் இதுவரைக்கும் நீடித்து இருக்கு. இதன் இடையில் எத்தனையோ முகம் தெரியாத நட்புகள், பாசத்தை காட்டும் அண்ணன்கள், அக்கறை கொண்ட அக்காக்கள், என்னைய கிண்டலடித்து உற்சாகம் ஊட்டும் சித்தப்பாக்கள்... என்று எனக்கென்று ஒரு இணையகுடும்பம்/நண்பர்கள் இன்றைய அளவில் இருக்கிறார்கள் என்று நினைக்கையில் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ப்ளாக் எழுத தூண்டிய தோழிக்கும், தமிழ் இணைய உலகிற்கு அறிமுகம் செய்துவைத்த ப்ரியனுக்கும், அன்புடன் குழுமத்திற்கும் நான் ரொம்பவே நன்றிகடன் பட்டிருக்கிறேன்!! :)) உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி!!

என் வலைப்பூவை படிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்! நான் எழுதுவதை ரசித்து என்னை ப.பா சங்கத்தில் சேர்த்த மை ஃபிரண்ட்க்கு என் நன்றிகள்!


இப்போ சமீபத்தில் புதுசா ஜோக்ஸ்களுக்காகவென்றே ஒரு வலைப்பூ ஆரம்பித்து உள்ளேன். இப்படி ஒவ்வொரு முன்னேற்றித்திருக்கும் தூணாக நின்றவர்களுக்கு கோடி நன்றிகள்!::)

முக்கியமா என் பள்ளி, கல்லூரி நண்பர்களுக்கு என் நன்றிகள்! நான் கிறுக்கிய கவிதைகளை புத்தகமா போடுறேண்டி என்று சபதம் எடுத்து கொண்டு திரியும் ஒரு பள்ளி தோழி இருக்கிறாள், அவளுக்கும் என் நன்றிகள். இத்தனை இருந்தாலும்... ஏதோ ஒரு சின்ன வருத்தம்.


நான் எழுதுவது என் வீட்டில் யாருக்கும் தெரியாது. இன்றைய அளவிலும்கூட chatting, blogging, orkut என்பது கெட்ட விஷயங்களாகவே நினைத்து கொண்டிருக்கையில் நான் எழுதுவதை பலமுறை சொல்லமுற்பட்டு பயத்தால் சொல்லாமலேயே இருந்துவிட்டேன். கவிதை/கதை எழுதுவதுகூட தெரியாது. :((

அப்பரம் பொண்ணு காதல் கவிதை எழுதுறான்னு தெரிஞ்சு அவங்க என்ன ஃபீல் பண்ணுவாங்க... எப்போ சொல்வேன் என்று தெரியவில்லை. ஒரு வேளை 40 வருடம் கழித்து

"டேய் பசங்களா இங்க வாங்க... this is ur grandma's blog" என்று என் பேரன் பேத்திகளிடம் சொல்வேனோ என்னவோ!:))

------------------------------------------

சரி இருக்கட்டும். நடப்பதே நடக்கட்டும்!:)

150 போஸ்ட்களில் எனக்கு பிடித்த 7 போஸ்ட்கள் :

1) மாமோய்-குட்டி கிறுக்கல்கள்


2) ஜில்லுனு ஒரு காதல்


3) நான் நியூட்டனா புத்தனா?


4) நான் எழுதியதில் எனக்கு பிடித்த கதை- அத்தை மகன் சிவா

5) என்னை கொள்ளையடித்த கள்வனே

6) பச்சை தண்ணி வித் பறக்கும் குருவி விஜய்

7) தேனீர் வித் வைரமுத்து

28 comments:

MyFriend said...

வாழ்த்துக்கள்மா..

பதிவு பிறகு வந்து படிக்கிறேன்மா. :-)

மங்களூர் சிவா said...

"ஏய், அடங்க மாட்டீயா நீ!"

மங்களூர் சிவா said...

தலைப்பு சூப்பர்

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள்மா..

பதிவு பிறகு வந்து படிக்கிறேன்மா. :-)

Sanjai Gandhi said...

//நான் எழுதுவது என் வீட்டில் யாருக்கும் தெரியாது. இன்றைய அளவிலும்கூட chatting, blogging, orkut என்பது கெட்ட விஷயங்களாகவே நினைத்து கொண்டிருக்கையில் நான் எழுதுவதை பலமுறை சொல்லமுற்பட்டு பயத்தால் சொல்லாமலேயே இருந்துவிட்டேன். கவிதை/கதை எழுதுவதுகூட தெரியாது. :((//

அட என்ன தங்கச்சி இது?.. நீ இவ்ளோ அருமையா எழுதறத பாத்தா நிச்சயம் பெருமை படுவாங்க.. உடனே சொல்லு... நெருப்ப பத்தி பேசனும்ன அதுல விழுந்திருக்க வேண்டியதில்லை. சோ.. எதும் திட்ட மாட்டாங்க சொல்லிடு...

வாழ்த்துக்கள் தங்கச்சி.. சீக்கிறமே 1500 அடிக்க வாழ்த்துக்கள். :)

Anonymous said...

வாழ்த்துக்கள் :)

Karthik said...

Congrats!

But I want more.

Divya said...

தொடர்ந்து பல பதிவுகள் படைக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்:)))

ரசிகன் said...

//"ஏய், அடங்க மாட்டீயா நீ!" என்றது என் உள்மனம் உற்சாகத்திலும் சந்தோஷத்திலும். இது என் 150வது பதிவு!! என்னமோ பெரிய சாதனை செய்துவிட்டதாக நான் பெருமிதத்தில் தத்தளிக்க, என் மனம் என்னை அடக்கியது! :)) இது அவ்வளவு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம் பலருக்கு. ஆனால், என்னை பொறுத்தவரை நான் வாழ்க்கையில் உருப்படியாக செய்து மிக சில விஷயங்களில் இதுவும் ஒன்று!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்...... இவ்ளோ சஸ்பென்ஸ் இண்ட்ரோ..:))

ரசிகன் said...

//அப்போது நான் +2 முடித்த காலக்கட்டம். அந்த வருஷத்தில் ரொம்ப பெரிய வேதனைகள், சோகங்கள். என் மனத்திற்கு ஒரு வடிகால் தேவைப்பட்டது..//

ஏன்? ஒழுங்கா பரிட்சை எழுதலையா?:P

ரசிகன் said...

//MSN chatல் பேசி கொண்டிருக்கையில் ப்ளாக் பற்றி சொன்னாள். என்னையும் எழுத சொன்னாள்.//

அந்த பிரண்டு அட்ரஸ் கொஞ்சம் சொல்ல முடியுமா?

ரசிகன் said...

//நான் எழுதுவது என் வீட்டில் யாருக்கும் தெரியாது. இன்றைய அளவிலும்கூட chatting, blogging, orkut என்பது கெட்ட விஷயங்களாகவே நினைத்து கொண்டிருக்கையில் நான் எழுதுவதை பலமுறை சொல்லமுற்பட்டு பயத்தால் சொல்லாமலேயே இருந்துவிட்டேன். கவிதை/கதை எழுதுவதுகூட தெரியாது. :((

அப்பரம் பொண்ணு காதல் கவிதை எழுதுறான்னு தெரிஞ்சு அவங்க என்ன ஃபீல் பண்ணுவாங்க... எப்போ சொல்வேன் என்று தெரியவில்லை. ஒரு வேளை 40 வருடம் கழித்து//

காயத்ரி,உண்மைய சொல்லனும்ன்னா, அவங்க தப்பா நெனைச்சிக்கறாங்களோ இல்லையோ, நம் பதிவை நம் குடும்பத்தார் படிக்கறாங்கன்னு தெரிஞ்சாலே எழுதும்போது ,இயல்பா எழுத முடியாது.அவங்க இதைப் படிக்கும் போது என்ன நினைப்பாங்களோன்னு மனத்தடையோடயே எழுதும்போது,நமது கருத்துச் சுதந்திரம் மனதளவில் தடைப்படும்ன்னு நினைக்கிறேன். பிளாக் நம் மனதிற்க்காக எழுதுறோம்.அதை வீட்டில் சொல்வது அவசியம்ன்னு தோனலை. பொது விவாதம் பற்றிய கட்டுரைகளை மட்டும் பிரிண்ட் எடுத்து கொடுக்கும் பழக்கம் இருக்கு:)

ரசிகன் said...

150வது பதிவிற்க்கு வாழ்த்துக்கள் காயத்ரி:)

FunScribbler said...

வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி!

FunScribbler said...

@சிவா சித்தப்பு

//தலைப்பு சூப்பர்//

ம்ஹும்.. ஏன் சொல்லமாட்டே!?

FunScribbler said...

@சஞ்சய்

// நீ இவ்ளோ அருமையா எழுதறத//

நன்றி அண்ணாத்த..

//நெருப்ப பத்தி பேசனும்ன அதுல விழுந்திருக்க வேண்டியதில்லை//

ஆஹா... 1330வது தத்துவமா!

//வாழ்த்துக்கள் தங்கச்சி.. சீக்கிறமே 1500 அடிக்க வாழ்த்துக்கள். :)//

இருந்தாலும் உங்களுக்கு பேராசே ரொம்ப ஜாஸ்தி!

FunScribbler said...

@கார்த்திக்

//But I want more.//

kya more? ஹாஹா.. இது என்ன pepsi விளம்பரமா? :)

வாழ்த்துகளுக்கு நன்றி

FunScribbler said...

@ரசிகன்

//ஏன்? ஒழுங்கா பரிட்சை எழுதலையா?:P//

அதுவும் ஒரு காரணம்

FunScribbler said...

@ரசிகன்

//அந்த பிரண்டு அட்ரஸ் கொஞ்சம் சொல்ல முடியுமா?//

வேண்டாம்.. தர்மடி எல்லாம் வாங்கும் சக்தி அவளுக்கு கிடையாது :))

FunScribbler said...

@ரசிகன்

// ,இயல்பா எழுத முடியாது.அவங்க இதைப் படிக்கும் போது என்ன நினைப்பாங்களோன்னு மனத்தடையோடயே எழுதும்போது,நமது கருத்துச் சுதந்திரம் மனதளவில் தடைப்படும்ன்னு நினைக்கிறேன்//

சரியா சொன்னீங்க...:))

முகுந்தன் said...

150 க்கு வாழ்த்துக்கள் . இன்னும் நிறைய எழுதுங்கள்.

Anonymous said...

Hey da!!

U know what I've always wished for.. Make it come true and I'll be more than glad to be the host on ur big Book Release!!

Endrum Anbudan,

Un thozhi (was that me u wrote?)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

150 க்கு வாழ்த்துக்கள் :)
நிறைய எழுதுங்கள் தமிழ்!!

FunScribbler said...

@cap

//Un thozhi (was that me u wrote?)//

nee thaan di athu!! hahaha...thanks di!

FunScribbler said...

நன்றி சதீஷ்!:)

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

ரசிகன் said...
காயத்ரி,உண்மைய சொல்லனும்ன்னா, அவங்க தப்பா நெனைச்சிக்கறாங்களோ இல்லையோ, நம் பதிவை நம் குடும்பத்தார் படிக்கறாங்கன்னு தெரிஞ்சாலே எழுதும்போது ,இயல்பா எழுத முடியாது.அவங்க இதைப் படிக்கும் போது என்ன நினைப்பாங்களோன்னு மனத்தடையோடயே எழுதும்போது,நமது கருத்துச் சுதந்திரம் மனதளவில் தடைப்படும்ன்னு நினைக்கிறேன். //


ரிப்பீட்டேய்....

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள்
தேவா...