இடியும் மின்னலுமாய் மழை பயங்கரமாக பெய்து கொண்டிருந்தது. மாலை மணி 6 தான். இருப்பினும் இருட்டாக காட்சியளித்தன மேகங்கள். அப்போது தான் ரோஹித் தன் வீட்டுக்குள் நுழைந்தான். வேலை பளுவால் களைப்பாக இருந்த ரோஹித் தன் அறைக்குள் சென்று படுக்கையில் தொப்பென்று விழுந்தான். அவன் கை படுக்கை பக்கத்திலிருந்த photoframeமை தொட்டது. கையில் அதை எடுத்து ரசிக்க தொடங்கினான்.
படத்தில் ரோஹித்தும் அவன் அன்பு மனைவி ஷீலாவும்!
"i miss you sheela" என்று சொல்லிகொண்டே ஷீலாவின் படத்திற்கு முத்தமிட்டான்.
திடிக்கிட்டு எழுந்தான் இடி சத்தத்தை கேட்டு. ஜன்னல் அருகே வந்து மழையின் அட்டகாசத்தை கண்டான். தன் சட்டையில் இருந்த கைபேசியை எடுத்து ஷீலாவுக்கு ஸ் எம் ஸ் அனுப்பினான்.
hi ma, ரொம்ப மழையா இருக்கு. பத்திரமா வா. நான் வேணும்னா வந்து pickup பண்ணட்டா?
வேணாம் என்று பதில் வந்தது. குளித்து முடித்துவிட்டு ரோஹித் தன் லேப்டாப் பையில் இருந்த receipe புத்தகத்தை எடுத்தான். பக்கம் 26க்கு திருப்பி ஜெய்பூர் கோழியும் மிளகு ரசமும் வைக்க ஆரம்பித்தான். ஷீலாவுக்கு மிளகு ரசம் ரொம்ப பிடிக்கும்.
மணி 745 ஆகிவிட்டது. ஒலித்தது வீட்டின் அழைப்பு மணி . வாசலில் ஷீலா.
ஷீலாவின் லேப்டாப் பையை வாங்கி கொண்ட ரோஹித், “என்னமா, நனைஞ்சுட்டீயா?”
ஷீலாவின் பதில் “friend lift கொடுத்தா.”
சமையலைறையிலிருந்து வந்த வாசத்தை நுகர்ந்த ஷீலா “மிளகு ரசமா?” என்றாள்.
“ஆமா ஷீலா. இன்னிக்கு ஆபிஸ்ல பிரியா ஒரு புது receipe புக் கொடுத்தா. அத பாத்து செஞ்சேன். வாசம்லாம் ஒகே. சாப்ட்டு பாத்தா தான் தெரியும்.” என்று சிரித்து கொண்டு மேசையில் தான் சமைத்ததை எடுத்து வைத்தான்.
ஷீலா எதற்குமே ஆர்வம் காட்டாமல் இருந்தாள்.
“சரி மா, போய் குளிச்சுட்டு வா. சேந்து சாப்பிடலாம். தனியா சாப்பிட பயமா இருக்கு” என்று புன்னகையத்தபடி தன் சமையலை தானே கிண்டலடித்து கொண்டான்.
ரோஹித்தின் பொழுது போக்கு என்றால் பலவித உணவுகளை சமைப்பதுதான். நன்றாக சமைப்பான். இருந்தாலும் எப்போதுமே தன் சமையலை பற்றி கிண்டலடிப்பது அவன் வழக்கம். கொஞ்சம் தன்னடக்கம் என்றே சொல்லலாம். இந்த மாதிரி பல முறை வித்தியாசமாக சமைத்து ஷீலாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறான். அவள் ரசித்து உண்டு மகிழ்ந்திருக்கிறாள்.
“ரோஹித்.......ம்ம்ம்...எனக்கு பசிக்கல... நீ சாப்பிடு.” என்றாள் ஷீலா. ஷீலா ஆபிஸ் முடிந்து வந்தபிறகு அதிகமாய் பேசாததை கவனித்தான் ரோஹித். எப்போதுமே கலகலப்பாகவும், கிண்டல் அடித்து கொண்டு, ஆபிஸில் நடந்ததை ஒவ்வொன்றையும் நடித்தே காட்டுவாள். ஆனால் ஒரு வாரமாக அவள் அவளாகவே இல்லை.
ஏதோ வேலை டென்ஷன் என்று ரோஹித் அதை பற்றி கேட்காமல் இருந்தான். ‘இந்த இரண்டு வருட கல்யாண வாழ்க்கையில் ஷீலா இப்படி நடந்து கொண்டதே இல்லையே. இப்ப என்ன ஆச்சு. shall i ask her’ என்று ஒரு பக்கம் குழப்பத்திலும் இன்னொரு பக்கம் அவள்மீது கொண்ட அக்கறையிலும் மனம் பந்தாடி கொண்டிருந்தது.
“இல்ல மா, கொஞ்சமா...சாப்பிடு. ஒன்னுமே சாப்பிடாம....” என்று தன் வாக்கியத்தை முடிப்பதற்குள் ஷீலா
“ரோஹித், am not a child to be nagged at. எனக்கு வேண்டாம்ன்னா விட்டுடேன்...எதுக்கு torture பண்ணுறே!” என்று கத்தினாள். அறை கதவை ‘படார்’ன்னு சாத்திவிட்டு தூங்க சென்றாள்.
ரோஹித்துக்கு தூக்கம் போனது. செஞ்ச சாப்பாடும் வேஸ்ட்டா போனது. அவனும் சாப்பிடவில்லை. அவன் மனம் குழப்பமாக இருக்கும்போதெல்லாம் டைரி எழுதுவான்.
அன்று டைரிக்கும் பேனாவுக்கும் வேலை வந்தது. எழுத தொடங்கினான்,
ஷீலாவுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு. அது மட்டும் புரியது. அவ என்னிக்குமே சத்தம் போட்டது கிடையாது. எனக்கு அவ மேல கோபம் வரது. சத்தம் போட்டதுக்காக இல்ல... ஆனா அவ பிரச்சனைய ஏன் என்கிட்ட share பண்ணிக்காம இருக்கா, அதுக்கு தான். எனக்கு ஆபிஸ்ல எத்தனையோ கஷ்டம் வந்தப்போ, எனக்காக பக்கபலமா இருந்தா. such a bold woman she is. ஆனா அந்த தைரியமெல்லாம் இப்போ எங்க போச்சு?
no, whatever it is, i need to help her. i hav to help her. god, pls be my support!
i love you sheela.
மறுநாள் காலையில் அவனுக்கு முன்பே அவள் கிளம்பி வேலைக்கு சென்றுவிட்டாள்.
இன்று எப்படியும் பேசிவிட வேண்டும் என்று ரோஹித் lunch break நேரத்தில் ஷீலாவின் ஆபிஸ் பக்கத்திலுள்ள காபி ஷாப் கடையிலிருந்து ஃபோன் செய்தான் அவளுக்கு.
நம்பரை பார்த்ததும் அவள் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து 10 முறை ஃபோன் செய்தான். 11வது முறை தான் எடுத்தாள் ஷீலா.
மறுமுனையில் “ஷீலா, listen to me. don't cut the line. sorry to disturb u. நீ பிஸியா இருப்பேன்னு தெரியும். but i have to talk to you. கொஞ்சம் காபி ஷாப்புக்கு வர முடியுமா? உன் ஆபிஸ் பக்கத்துல உள்ள கடையில தான் வேட் பண்ணுறேன். i won't take much of your time. just 5 mins. 5 mins only. pleaseee......" என்று கெஞ்சி கேட்டான் ரோஹித்.
போலாமா வேண்டாமா என்ற குழப்பத்தை தவிர்த்து 20 நிமிடம் கழித்து சென்றாள்.
புன்னகை மாறாத அவன் முகத்தில் அப்போது தெரிந்த சோகம் அவளை அதிகம் காயப்படுத்தியது.
”காபி ஏதேச்சு வேணுமா? sorry to disturb u. but இத உன்கிட்ட பேசியே ஆகனும்.” ரோஹித் தொடங்கினான்.
“ஒரு வாரமா ஆச்சு. என் ஷீலாவ பாத்து! ஏதோ...something....something has been disturbing you. அது என்னன்னு கேட்டு நான் தொல்லை பண்ண மாட்டேன். உனக்குன்ன ஒரு personal space கண்டிப்பா இருக்கு. இருக்கனும். நீ என்கிட்ட share பண்ணனும்னு அவசியமில்ல.... உன் office colleauges, friends....பக்கத்துவீட்டு மீனாட்சி ஆண்ட்டி, இல்ல உன் அம்மா, sister....இப்படி யாருக்கிட்டையாவது சொல்லி உன் மனசுல இருக்குற பாரத்த இரக்கி வை மா. problems வந்துட்டாலே அதுக்கு கண்டிப்பா solutions இருக்கும். நீ யாருக்கிட்டையும் சொல்லாம இருந்தா... உனக்கு தான் பாதிப்பு வரும். இப்படி சாப்பிடாம, யாருக்கிட்டையும் பேசாம.... ரொம்ப கஷ்டமா இருக்கு உன்னைய இப்படி பாக்க....” என்று தன் மனதில் பட்டதை அவன் கொட்டினான். கண்களில் ஒருவித தவிப்பு, உதடுகளில் ஒருவித படபடப்பு.
“யோசிச்சு பாரு மா....ok...5 mins ஆச்சு.... நான் கிளம்புறேன். take care ma."
" i love u sheela" என்றவன் ஆறுதலாய் அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து மேசையிலிருந்த கைபேசியையும் கார் சாவியையும் எடுத்து கொண்டு சென்றான். வாசலின் கண்ணாடி கதவை திறந்து கொண்டு காரில் ஏறி செல்லும்வரை அவனையே பார்த்து கொண்டிருந்தாள் ஷீலா.
குழப்பம், அவள்மீது அவளுக்கு இருந்த கோபம், கொன்றுகொண்டிருந்த மனசாட்சி, ரோஹித்தின் அன்பு வார்த்தைகள், அவன் காட்டிய பரிவு, சொன்ன சொல், கொடுத்த காதல் முத்தம்-இப்படி அனைத்தும் அவளை பலமுனைகளில் நின்று குத்தியது. கண்களிலிருந்து வழிந்தது கண்ணீர் அருவிகள்.....
(தொடரும்)
10 comments:
Wow, Nice!
Next part plzzz...
nice...waiting for the next part
good narration
அழகான ஆரம்பம்... சுவாரஸ்யமாக செல்கிறது காயத்ரி....
இவ்வளவு பொறுமையான ஆண்களும் இருக்கிறார்களா என்ன..??!!! :)))
Excellent flow of writing .........superb!!
Apt pictures potirukirathu romba nalla irukku Gayathri:))
Waiting for the next part.......!
\\ரோஹித்தின் பொழுது போக்கு என்றால் பலவித உணவுகளை சமைப்பதுதான். நன்றாக சமைப்பான்.\\
ipdi COOKING hobby vaichirukira paiyan details iruntha kodunga gayathri:))))
@நவீன்
//இவ்வளவு பொறுமையான ஆண்களும் இருக்கிறார்களா என்ன..??!!! :)))//
ஹாஹா.... அதுனால தான் அது கதை! நிஜமா இருந்தா நல்லா தான் இருக்கும்!:)
@திவ்ஸ்
//ipdi COOKING hobby vaichirukira paiyan details iruntha kodunga gayathri:))))//
ஹாஹா... கண்டிப்பா சொல்றேன்! அவருக்கு தம்பி இருந்தா.. நான் பாத்துகிறேன்.:)
காயு....கதை சூப்பரா போய்கிட்டு இருக்கு.....ஆனா... இரண்டு எழுத்துப்பிழை இருக்கும்மா...
1. ரோஹினி என்பதற்குபதிலாக ரோஹித் என்றும்
2. அவள் என்பதற்கு பதிலாக அவன்
என்றும் தவறுதலாக அதுவும் பலமுறை தொடர்ந்து தவறுதலாக டைப் செய்திருக்கிறாய்!!
தொடர்ச்சியில் இந்த பிழை வராமல் எழுதினால் நல்லாயிருக்கும்...வர்டா....
Post a Comment