காரணங்கள்- ஷாருக்கானின் subtle way of acting. புதுமுகம் அனுஷ்கா, பாடல்கள், கதையிலிருந்து சொல்ல வந்த கருத்து. வசனங்கள். ஷாருக்கான் hairstyle மாற்றியுடன் மனைவிக்கே அடையாளம் காணமுடியவில்லை என்பதில் லாஜிக் இடித்தாலும் படம் போக போக அது ஒன்னும் பெரிதாக தெரியவில்லை. படம் எல்லாம் நாடுகளில் சக்கை போடு போடுகிறது!
நமக்குள் ஒருவித போராட்டம் இருக்கு.
"the person that we are." Vs "the person that we want to be."
இந்த இரண்டுக்கும் நடக்கும் போராட்டம் தான் படத்தின் கதை. கடைசியில் ஜெயிப்பது முதல் வகை தான்! படத்தில் மட்டும் இல்லை, நிஜ வாழ்க்கையிலும் அது தான் ஜெயிக்கும். படத்தின் இரண்டாம் பாதியில் நிறைய emotions, யதார்த்தமான வசனங்கள். i could easily relate with the film என்று ஒரு வரியில் சொல்லலாம்.
கதையாக இருந்தாலும் சரி, நிஜத்தில் இருந்தாலும் சரி, in every ordinary love jodi, there is always an extraordinary love story. படம் பார்க்கும்போது அது புரியும்.
என்னை பிரமிக்க வைத்தது ஷாருக்கானின் தைரியம். அவருக்கு இருக்கும் பெரிய stardom, market value ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் இப்படி ஒரு படத்தில் நடிக்க முன் வந்தது படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் என்றே கூறலாம். அப்பரம், girl-next-door போன்ற முக அமைப்பில் இருக்கும் புதுமுகம் அனுஷ்கா.
படத்தில் இன்னும் காமெடி அளவை கூட்டியிருக்கலாம். ஆனா, படத்துக்கு ஒரு serious tone maintain பண்ண வேண்டும் என்ற காரணத்தால் என்னவோ, காமெடி சில இடங்களில் மட்டுமே இருக்கிறது. இருந்தாலும், என்னை பொருத்தவரை
rab ne bana di jodi- every couple's mirror!
5 comments:
even i saw lots of people has given bad review for this movie. but i liked it.eventhough i dont understand hindi fully, i liked it very much.
நான் இன்னும் பார்க்கலை. நெக்ஸ்ட் வீக் பார்த்திடுறேன்.
:)
நல்லாதான் எழுதி இருக்க.. ஆனா எனக்கு ஹிந்தி தெரியாதே.. :)
Testing.. :)
@sanjai anna
பக்கத்து வூட்டுல ஒரு சேட்டு பொண்ணு ஹிந்தி சொல்லி கொடுக்குறாங்க... போயிட்டு வரீங்களா!
Post a Comment