சென்ற சனிக்கிழமை நெருங்கிய தோழியின் பிறந்தநாள். ஒரு மாசத்துக்கு முன்பே ஃபோன் செய்திருந்தாள்.
தோழி: ஏய் காயு, 27th அன்னிக்கு ஒரு mini bthday celebration வச்சுருக்கேன். வந்துடு தெரியுமா. அப்பரம் ஒரு small request. நீ எதாச்சு performance போடனும்.
நான்: performanceஆ??? என்ன செய்யனும்?
தோழி: ஏதாச்சு பண்ணு.
நான்: ஏதாச்சுன்னு, கோழி பிரியாணி எப்படி செய்யனும்னு காட்டவா?
தோழி: ஆண்டவா!! இந்த புள்ளைக்கு நல்ல புத்திய குடு!
நான்: சரி சரி, அதலாம் இப்ப stockல இல்ல....
தோழி: டேய், உன் கவிதைய ஒன்னு வாசி. super performanceaa இருக்கும்!
அவள் சொன்னது முதல் எனக்கு வயிறு கலக்கல்ஸ் ஆரம்பித்துவிட்டது. எழுத சொன்னால் எழுதிவிடுவேன். ஆனா அதை பல பேர் முன்னிலையில் படித்து காட்டுவது எல்லாம் வாழ்க்கையில் செய்யாத ஒன்று. சரி முயற்சி செஞ்சு பார்ப்போம் என்று கிளம்பினேன் 27th அன்று. முதல் நிகழ்ச்சியே என்னுடையது தான். அதற்கு பிறகு தான் மத்த நண்பர்களின் பாடல், ஆடல்.
குரல் சற்று தயக்கத்துடனும், கைகால் ஒருவித படபடப்புடனும் மைக்கை பிடித்தேன். 50 மக்களின் பார்வைபட தொடங்கினேன்,
அழகான கவிதை ஒன்று
எழுத சொன்னால்
எழுதியிருப்பேன்
அழுகுக்கு ஒரு கவிதை
எழுத சொன்னால்
என்ன எழுதுவேன்?
உன்னை பற்றி எழுத தமிழில்
வார்த்தைகள் பஞ்சம்
எனினும் இயற்றுகிறேன்
என்னால் இயன்ற கொஞ்சம்.
சூர்யா ஜோதிகாவுக்கு
நீ எத்தனையாவது
ரசிகை என்று
எனக்கு தெரியாது
ஆனால்
உன்னுடைய முதல் ரசிகை
நான்!
நான் தூளாக துவண்டிருந்தபோது
எனக்கு தூணாக துணையாயிருந்தாய்
இந்த தேவதையை உலகிற்கு அனுப்பிய
இறைவனுக்கு
பல கோடி நன்றிகள்
வள்ளுவன் இருந்திருந்தால்
உன்னை பார்த்தபிறகு
1330 குறட்களையும் உதறிவிட்டு
உன்னை பற்றியே பல லட்சம்
குறட்களை எழுதியிருப்பான்
கம்பன் இருந்திருந்தால்
உன்னை கண்ட பிறகு
பல்லாயிரம் காவியங்களை
படைத்திருப்பான்.
அவர்கள் பாவம் செய்தவர்கள்
உன்னை பற்றி எழுதமுடியவில்லை.
நான் புண்ணியம் செய்தவள்
இங்கு உன்னை பற்றி மட்டுமே
எழுதுகிறேன்.
நண்பர்கள் டாப் 10 வரிசையில் இனி
உனக்கும் எனக்கும் மட்டுமே
முதல் இடம்!
நட்பின் ஆஸ்கார் விருது உனக்கே
உனக்கு!
தளபதி ரஜினி மம்மூட்டி
நட்புக்காக விஜயகுமார் சரத்குமார்
காதல் தேசம் அப்பாஸ் வினித்
பட்டியல் ஆர்யா பரத்,
இப்படி நட்புக்காக வாழ்ந்தவர்கள்
வரிசையில்
உன் பெயரையும்
என் பெயரையும்
சேர்த்து கொள்வோம்!
அம்மா அடித்தால் வலிக்கும்
அப்பா அடித்தால் வலிக்கும்
அண்ணன் அடித்தாலும் வலிக்கும்
‘சைட்’ அடித்தால் வலிக்காது
என்ற தாரக மந்திரத்தை
எனக்கு கற்றுகொடுத்த
குருவே,
நீ வாழ்க!
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
சொல்லிமுடிப்பதற்குள் எல்லாரும் கைதட்டி விசில் எல்லாம் அடிச்சாங்கப்பா! தோழியின் அம்மா ஓடி வந்து கட்டிபிடித்து பாராட்டி தள்ளிட்டாங்க! வாழ்க்கையில என் கவிதைக்கு இப்படி ஒரு நேரடி பாராட்டு கிடைத்தது இதுவே முதல் முறை. வலைஉலகில் மட்டுமே திரிந்து கொண்டிருந்த என் கவிதைக்கு இந்த பாராட்டுகளுக்கு என்னை பிரமிக்க வைத்தது!
21 comments:
கவுஜ கலக்கல்.
(அய்யோ, அடிக்க வராதீங்க!) :)
//
அம்மா அடித்தால் வலிக்கும்
அப்பா அடித்தால் வலிக்கும்
அண்ணன் அடித்தாலும் வலிக்கும்
‘சைட்’ அடித்தால் வலிக்காது
என்ற தாரக மந்திரத்தை
எனக்கு கற்றுகொடுத்த
குருவே,
நீ வாழ்க!
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
//
கண்ணடிச்சாலும் வலிக்கதுங்க :)
ஆனா கண்ணுல அடிச்சா வலிக்கும்
சூப்பரு...:)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் காயத்ரி...
ஹலோ , என்ன அழகிய தமிழ் மகன் சீனை, டயலாக்கை (சாரி, உங்க கவிதை ) மாத்தி டபாய்க்றீங்க....,
கவுஜையில் நாலாவது வரியில் இரண்டாவது எழுத்துக்கப்பறம் ஒரு 'க்' விட்டுப் போச்சா :))
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?
எங்களுக்கும் சந்தோஷமா இருந்துச்சுப்பா :)
கவிதை நல்லா இருக்கு :))
புத்தாண்டு வாழ்த்துக்கள் காயத்ரி!
@கார்த்திக
//(அய்யோ, அடிக்க வராதீங்க!) :)//
பரவாயில்ல பொழச்சுப்போ!:)
@ஆளவந்தான்
//கண்ணடிச்சாலும் வலிக்கதுங்க :)
ஆனா கண்ணுல அடிச்சா வலிக்கும்//
ஆஹா, தலைவா, நீர் வாழ்க:)
@தமிழன் கறுப்பி
உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்:)
@சுல்தான்,
ஐயா, வாங்க. நன்றி சுட்டி காட்டியதற்கு.:)
@பிரேம்குமார், திவ்ஸ்
வாழ்த்துகளுக்கு நன்றி:)
//
Thamizhmaangani said...
ஆஹா, தலைவா, நீர் வாழ்க:)
//
ada ponga neenga enna romba pugalreengka
கோழி பிரியாணி செய்ய எங்கிட்டையும் டிப்ஸ் இருக்கு வேண்டுமா!
பிரியாணிக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் எடுத்துகொள்ளவும், அதை கோழியிடம் கொடுக்கவும், கோழி பிரியாணி செய்துவிடும்....ஹி..ஹீ....ஹி...இது தானே கோழி பிரியாணி செய்யும் எளிய வழிமுறை.....
ROTFL...ஜாலியான கவிதை!!
கலக்கல் கவிதைகள் தமிழ்!!
@புவனேஷ்
நன்றி:)
Super Kavidhai - kalakiteenga - first two para was too good!!
Birth day கவிதை வஞ்ச புகழ்ச்சி அணி போல் உள்ளது.
by
mcxmeega@gmail.com
Post a Comment