சிலம்பாட்டம்- அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அவ்வ்வ்வ்வ்...யோவ் என்னைய கொஞ்ச நேரம் அழுக விடுங்கய்யா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்னால முடியலடா, ரீலு அந்து போச்சுடா சாமி!
சென்னைக்கு போயிட்டு வந்த அம்மாவும் அப்பாவும் அங்க இந்த படத்த பாத்து இருக்காங்க. 'யப்படி இருந்துச்சும்மா'ன்னு கேட்டேன்.
"காயத்ரி, this is simbu's best movie. சிம்பு அவ்வளவு அருமையா நடிச்சுருக்கான். தசாவதாரம் மாதிரி இருக்கு'ன்னு சொன்னாங்க. சிம்புவே பிடிக்காத எங்க அம்மா இப்படி சொல்லிட்டாங்களேன்னு நம்பி போனேன்..... அவ்வ்வ்வ்வ்வ்வ்..
என்னைய மறுபடியும் கொஞ்ச நேரம் அழுக விடுங்க....அவ்வ்வ்வ்....
ஏன் எப்படி எதனால அம்மா அப்படி சொன்னாங்கன்னு இது வரைக்கும் தெரியல? படத்த போய் நானும் பார்த்தேன். கொலைவெறிய ஏத்திவிட்டார் சிம்பு! ஒன்னுமே இல்லாத படத்திற்கு எங்க அம்மா போன்றவர்கள் கொடுக்கும் ceritificate என்னால தாங்க முடியல...
டான்ஸ் என்ற பெயரில் உடற்பயிற்சிகள், இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள். வாதி எடுக்க வைக்கும் கெட்ட வார்த்தைகள். பேதி போகும் அளவிற்கு காமெடி என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். 10 டாலருக்கு படம் பார்த்து 20 டாலருக்கு மருந்து வாங்கி சாப்பிட்டேன். சின்ன தல என்று தனக்கு தானே மகுடம் சூட்டி கொள்ளும் சிம்புவே, தமிழ் மக்களை விட்டுவிடுங்கள். ஒரு காட்சியில் அவர் ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு என்று பல மொழி பேசுவார்..... யப்பா....முடியல்ல...
சினேகாவின் கதாபாத்திரம் பெயர் காயத்ரி. இதுக்காகவே நான் high court வரைக்கும் போவேன். அது என்ன, சீரியலயும் சரி, படத்தலயும் சரி, எப்படியாச்சும் ஒரு புள்ள பெயரு காயத்ரினு வந்திடுது. அதுவும் பாத்தீங்கன்னா, ஓடிபோனவ, வழுக்கி விழுந்தவ...இப்படிப்பட்ட பொண்ணுங்க பெயர் தான் காயத்ரி! நான் இத வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த படத்துக்கு censor board என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்கன்னு தெரியல.
---------
பூ. நல்ல படம் தான். கதை இருந்துச்சு. நாவலின் அடிப்படையாக எடுத்த படம். ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் படம் பார்த்தேன். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. திரைக்கதையில் இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம். கிளைமெக்ஸை மாற்றி இருக்கலாம். கடைசியில் மாரி(ஹீரோயின் பெயர்) சத்தம் போட்டு அழுவதற்கு காரணம் பெரிதாக இல்லை. ஆக, ஒரு நல்ல கதையை இப்படி சாதாரணமாக எடுத்துட்டாங்களேன் என்று வருத்தம் தான் மிஞ்சியது.
கடைசியில் ஹீரோவின் மனைவி ஒரு ஊனமுற்றவராகவோ, அல்லது அவர்களின் குழந்தைக்கு ஏதேனும் ஒரு நோய் என்று காட்டியிருந்து, அதை கண்டு மாரி அழுது இருந்தால்..படம் கண்டிப்பா என்னை உருக வைத்து இருக்கும். இப்படி எதுவுமே இல்லாமல் போனது!
பூ- எதிர்பார்த்ததைவிட குறைவு!
சிலம்பாட்டம்- யப்பா சாமி...இப்படி நான் எதிர்பாக்கவே இல்லபா! மிஞ்சியது மனதில் தளும்பாட்டம் தான்!
13 comments:
:-))))
//அதுவும் பாத்தீங்கன்னா, ஓடிபோனவ, வழுக்கி விழுந்தவ...இப்படிப்பட்ட பொண்ணுங்க பெயர் தான் காயத்ரி!//
ROTFL!!
நல்ல விமர்சனம்..யதார்த்தமா சொல்லியிருக்கீங்க..நாங்க தப்பிச்சோம் போல!!
//டைசியில் ஹீரோவின் மனைவி ஒரு ஊனமுற்றவராகவோ, அல்லது அவர்களின் குழந்தைக்கு ஏதேனும் ஒரு நோய் என்று காட்டியிருந்து, அதை கண்டு மாரி அழுது இருந்தால்..படம் கண்டிப்பா என்னை உருக வைத்து இருக்கும்.//
ஏங்க இந்த கொல வெறி!!
lol
இதோ பாரு... காயத்திரி...ஒன்னு நீ படம் பார்பதை நிறுத்து இல்லேன்னா நாங்கள் படம் பார்பதை நிறுத்தவேண்டியிருக்கும்! நானே வருஷத்துக்கு 2 படம் அல்லது 2 வருடத்திற்கு ஒரு படம் என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன், இந்த கூத்தில் இதுபோன்று விமர்சனங்களை எழுதி தள்ளினால்...எங்க போய் முட்டிக்கொள்வது! என்ன மாதிரி படம் எடுக்கனும் என்று கோலிவுட்டுக்கு ஒரு அறிவிப்பு அனுப்பிவிடுங்கள்...பிறகு அந்த மாதிரி படம் வந்தால் பாருங்கள் காயு!!
அது என்ன காயத்திரி மந்திரம் மாதிரி எல்லா படங்களிலும் காயத்திரி வருகிறது! காயத்திரி நல்ல பெயர், அது நல்லவர்களுக்குதான் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை சரியா....அதை உங்க அப்பா அம்மாவே யோசிக்கவில்லை....இதில் யாரை குறை சொல்வது! ஹா.ஹா.ஹ்...அஹ்ஹ்... ஜாரி...காயு! Indeed its a nice name ya!
@பிரியமுடன்
//.இதில் யாரை குறை சொல்வது! ஹா.ஹா.ஹ்...அஹ்ஹ்... ஜாரி...காயு! Indeed its a nice name ya!//
பிரிச்சு மேஞ்சுடுவேன்! ஐயோ...உங்கள சொல்லல..சிலம்பாட்டம் படத்துல வர பஞ் டயலாக்!
சிங்கப்பூரு'லே எந்த தீயேட்டரு'லே "பூ" படம் போட்டுருக்காங்க?
@இராம்
ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்துச்சுப்பா,இப்போ எடுத்துட்டாங்க. இண்டெர்நெட்ல பாக்கலாமே:)
நல்லவேளை நான் ரெண்டையும் பார்க்கலை. பாட்டை டீவியில் பார்த்தபோதே தெரிந்தது சிலம்பாட்டம் பற்றி.
:)
//சிலம்பாட்டம்- அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அவ்வ்வ்வ்வ்...யோவ் என்னைய கொஞ்ச நேரம் அழுக விடுங்கய்யா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்னால முடியலடா, ரீலு அந்து போச்சுடா சாமி!//
ஹா ஹா ஹா
//சின்ன தல என்று தனக்கு தானே மகுடம் சூட்டி கொள்ளும் சிம்புவே//
அவர் தான் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆச்சே ;-)
//இராம்/Raam said...
சிங்கப்பூரு'லே எந்த தீயேட்டரு'லே "பூ" படம் போட்டுருக்காங்க?//
கோல்டன் திரை அரங்கம்.. இப்ப ஓடுதான்னு தெரியல.. நான் அங்கே தான் பார்த்தேன்
//அது என்ன, சீரியலயும் சரி, படத்தலயும் சரி, எப்படியாச்சும் ஒரு புள்ள பெயரு காயத்ரினு வந்திடுது. அதுவும் பாத்தீங்கன்னா, ஓடிபோனவ, வழுக்கி விழுந்தவ...இப்படிப்பட்ட பொண்ணுங்க பெயர் தான் காயத்ரி! நான் இத வன்மையாக கண்டிக்கிறேன்//
ஒரு குரூப்பா தான் அலையுறாங்க போல
:))
காயத்ரிங்கிறது ரொம்ப நல்ல பேருங்கோ அதனாலதான்...:)
:-)))...
வர வர வில்லத்தனம் ரொம்ப ஜாஸ்தி ஆயிட்டேயிருக்கு...
@விஜய் ஆனந்த்
//வர வர வில்லத்தனம் ரொம்ப ஜாஸ்தி ஆயிட்டேயிருக்கு...//
என்னங்க பண்றது...நான் நல்லவளா தான் இருக்க பாக்குறேன், என்னைய கெட்டவளா மாத்துறாங்களே!:)
Post a Comment