Dec 13, 2008
விடுமுறை to நியூசிலந்து(1)
நியூசிலந்தின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே....
அட ச்சே ரிமெக்ஸ் பண்ணி பண்ணி எத எழுதுனாலும் அதுவே வருது..:)
ஆமாங்கோ... நியூசிலந்துக்கு 10 நாள் சுற்றுலா பயணம் சென்றேன் குடும்பத்துடன். டூர் குரூப் ஏற்பாடு மூலம் தான் சென்றோம். எனினும் எனக்கு free and easy tour(சொந்தமாக போவது) போல் செல்வது தான் பிடிக்கும். நாமே நம்ம route ப்ளான் பண்ணி செல்லலாம். சொந்தமா டிரைவ் பண்ணி செல்லலாம். ஜாலியா இருக்கும். ஆனா குடும்பத்தோடு செல்லும்போது சரிபட்டு வராது. அப்பா northல போக சொன்னால், அம்மா இல்ல இல்ல southல route போகும் என்பார், நான் நடுவில் நின்று கொண்டு இல்ல இல்ல eastல தான் போகனும் என்று சொல்வேன். ஆக, இது சரிபட்டு வராது.
இந்த டூர் குருப்ல 34 பேர். 10 குடும்பங்கள் மொத்தம். தன் வயதான பெற்றோருடன் வந்தார் ஒரு பெண்மணி. ரொம்ப friendly type. அப்பரம் இன்னொரு குடும்பம்- ஒரு பொண்ணு. அவருக்கு இரட்டை குழந்தைகள(15 வயசு). இன்னும் இரண்டு பஞ்சாபி குடும்பத்தினர்-அண்ணன் குடும்பமும் தம்பி குடும்பமும். இந்த சகோதரர்களின் கடைசி தம்பி எங்க வீட்டு apartmentலில் தான் இருக்கிறார். பேசும்போது தெரிந்து கொண்டோம். அப்பரம் இன்னொரு சீன குடும்பம்- இரண்டு பெண் குழந்தைகளுடன். குடும்ப தலைவர் படுஅமைதி. நானே கேட்டுவிட்டேன் “ஏன் அங்கிள், நீங்க எப்போதுமே இப்படி தானா?” அவர் அமைதி பிடித்திருந்தது. பிறகு இன்னொரு குடும்பம்- 5 வயது பையனுடன். அவன் வாயை திறந்தால் எட்டூருக்கும் பேசுவான்!! இப்படி பலவித மக்கள்.
டூர் சிறப்பாக சென்றதிற்கு முதல் காரணம் எங்களின் அருமையான சுற்றுலா வழிகாட்டி. ரொம்ப ரொம்ப நல்லவர், ரொம்ப friendly, எல்லாருக்கும் எந்த குறையும் வராத அளவுக்கு பார்த்து கொண்டார்.
சிங்கையிலிருந்து நியூசிலந்துக்கு 10 மணி நேரம் விமான பயணம். விமான டிவியில் சமீபத்தில் வந்த ஹிந்தி படங்கள், தமிழ் படங்கள், korean, arabic இப்படி பல படங்களை பார்த்து 10 மணி நேரத்தை ஓட்டினேன். எங்கள் முதல் சுற்றுலா தடம் auckland. மதிய வேளை என்றதால் சற்று வெயிலாக இருந்தது. ஆனால் சொன்ன அளவு “பயங்கரமா குளிரும்” என்பதுபோல் ஒன்றும் இல்லை. அடடே இவங்கள நம்பி நான் 2 சட்டை போட்டிருந்தேன்.
ஆனா, எங்களது சுற்றுலா லீடர் சொன்னது சரி தான். இரவு நேரங்களில் 12degree celsius. சிங்கையில் 32 degree celsiusல் இருந்த எங்களை ஏதோ fridgeக்குள் வைத்தது போல் உணர்ந்தோம். aucklandல் பல இடங்களுக்கு சென்றோம்.
நியூசிலந்தின் சிறப்பு என்றால், இயற்கை தான்! அடேங்கப்பா எத்தன மலைகள், எத்தன ஏரிகள். எத்தன மலர்கள்... தமிழ் சினிமா பாடல்களின் அபிமான பல இடங்கள். சந்தோஷ் சுப்பரமணியம் படத்தில் வந்த சில பாடல்களை அங்குதான் எடுத்தார்களாம்.
சரி சாப்பாடு விஷயத்துக்கு வருவோம். scrambled eggs, bread toast, chips, sausages, becan, hashbrown, tomatoe இப்படி காலை உணவு! முதல் 3 நாள் நல்லா இருந்துச்சு. ஒரு ‘america america london london' feel நம்மளுக்கு இருந்துச்சு. நாலாவது நாளு நாக்கு செத்து போச்சு. அடக்கம் பண்ண முடியாம அல்லோலப்பட்டு கொண்டிருந்தோம். வீட்டுல இட்லி, தோசை சுட்டு வச்சு சாப்பிட சொல்லி அம்மா கெஞ்சி கேட்கும்போது macdonald'sக்கு போய் சாப்பிட்ட வாய் தானே எனது. எனக்கு நல்லா வேணும் என்று நினைத்து கொண்டு மீதி நாட்களை கஷ்டத்துடன் கழித்தேன்! எதுவுமே நம்ம கிட்ட இருக்கும்போது அதோட அருமைய தெரிஞ்சிக்க மாட்டோம்,
காலை உணவாக இருந்தாலும் சரி
காதலா இருந்தாலும் சரி!
(அவ்வ்வ்வ்...ஐயோ காயு என்ன ஒரு philosophy.பின்னிட்டேள், பிச்சிட்டேள்)
ok back to the new zealand trip. நியூசிலந்தில் சில சிறப்புகள் உண்டு.
tip-top ஐஸ்கீரிம், cadbury chocolates, waterfalls, sheeps, rabbit, milford sound, jetboatting, luge ride,sky diving, sky jump, bungee jumping, lakes. இப்படி நிறைய உண்டு.
குறிப்பா சொல்லபோனால் நியூசிலந்து மக்கள் பெருமையாக எண்ணும் அவர்களது maori கலாச்சாரம். அதை பத்தி அடுத்த பகுதியில் சொல்லுறேன்...
kia Ora ( maori மொழியில் goodbye என்று அர்த்தம்)
அடுத்த பகுதி
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
எனக்கும் ரொம்ப ஆள் ஆசைங்க தமிழ்மாங்கனி... மலேசியா அல்லது நியூஸிலாந்து சுற்றுலா என் பெற்றோருடன் போக வேண்டுமென்று.. ம் பார்ப்போம்... காலம் பதில் சொல்லுமா என்று.. ;)
இது என்ன அக்கிரமம்? இவ்வளோ தூரம் வந்துட்டு ஒருபதிவர் சந்திப்பு இல்லாம....ச்சேச்சே......
தெற்குத் தீவு வந்தீங்களா?
என்னங்க இது..... போங்க.மனசே சரியில்லை.
நியூஸிக்குன்னு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரு பதிவர் இருக்கறனேங்க.....
//காலை உணவாக இருந்தாலும் சரி
காதலா இருந்தாலும் சரி!
முன் அனுபவம்???
:)
Nice post ya..
அடுத்த பகுதியா?
Good. Plz do..
:)
/////
வீட்டுல இட்லி, தோசை சுட்டு வச்சு சாப்பிட சொல்லி அம்மா கெஞ்சி கேட்கும்போது macdonald'sக்கு போய் சாப்பிட்ட வாய் தானே எனது. எனக்கு நல்லா வேணும் என்று நினைத்து கொண்டு மீதி நாட்களை கஷ்டத்துடன் கழித்தேன்!
////
அது அப்படித்தாங்கா......
மனசும்,நாக்கும் எப்பவுமே "அது" இருந்தா "இதை" கேட்க்கும் இது இருந்தா அதைகேட்டும்
////
அப்பா northல போக சொன்னால், அம்மா இல்ல இல்ல southல route போகும் என்பார், நான் நடுவில் நின்று கொண்டு இல்ல இல்ல eastல தான் போகனும் என்று சொல்வேன்
////
அடடா......
எனக்கெல்லாம் சொந்த ஊருக்கு போரதே இன்ப சுற்றுலா
//வீட்டுல இட்லி, தோசை சுட்டு வச்சு சாப்பிட சொல்லி அம்மா கெஞ்சி கேட்கும்போது macdonald'sக்கு போய் சாப்பிட்ட வாய் தானே எனது. எனக்கு நல்லா வேணும் என்று நினைத்து கொண்டு மீதி நாட்களை கஷ்டத்துடன் கழித்தேன்! எதுவுமே நம்ம கிட்ட இருக்கும்போது அதோட அருமைய தெரிஞ்சிக்க மாட்டோம்,//
உண்மை :)
முதல் படம் சூப்பர் :)
@ துளசி : நீங்களும் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டே இருக்கீங்க.. இன்னும் அமையல போல :) விரைவில் நான் வரேனுங்க :)
வாங்க சிவா.
வெற்றிகரமாப் பதிவர் சந்திப்பை..ச்சே..பதிவர் மாநாட்டை நடத்திடலாம்:-)
நியூ
நியூசிலந்து
நியூஸ்
நினைத்தாலே இனிக்கிறது!
குளிர்சியா இருக்கு உங்கள்
பதிவை படிக்குபோது!
அடுத்த வருட விடுமுறைவரை
அந்த பசுமையான நினைவுகள்
என் தங்கையின் இதயத்தில்
என்றுமே இருக்கட்டும்!
வாழ்த்துக்கள் கூறி
விடைபெறுகிறேன் வாலு!
Wow......NZ trip aa,
nalla enjoy panineengala Gayathri?
waiting for the.....next post:))
@துளசி
//தெற்குத் தீவு வந்தீங்களா?//
வந்தோம்!:)
@கார்த்திக்
//முன் அனுபவம்???//
அட நீங்க வேற...சும்ம்ம்ம்ம்மா!
@பிரியமுடன்
//வாழ்த்துக்கள் கூறி
விடைபெறுகிறேன் வாலு!//
நன்றி:)
@திவ்ஸ்
//Wow......NZ trip aa,
nalla enjoy panineengala Gayathri//
yep:)
wow.. superb.. :)
Post a Comment