Feb 10, 2009

அட இவ்வளவுதானா-ஸ்லம்டாக் மில்லியனேர்

முதலில் இந்த படத்தின் online linkயை எனக்கு கொடுத்து உதவிய வினையூக்கிக்கு மற்றும் சஞ்சய் அண்ணாவுக்கும் நன்றி!:)

பரபரப்புக்கு பஞ்சமில்லை. இந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து தேடி கண்டுபிடித்து பார்த்தேன். படம் பார்த்தபிறகு 'அட ச்சே, இவ்வளவு தானா?' என்றது மனம்.

முதல் பாதி, அருமை. விறுவிறுப்பு இருந்தது. ஆனா, இரண்டாம் பாதியில் ரொம்பவே பாலிவுட் ஸ்டைல்! இரயில் நிலையத்தில் கிளைமெக்ஸ், அதுக்கு அப்பரம் ஒரு டான்ஸ்! அட பாவமே!

திரைக்கதை வித்தயாசமாக தோன்றினாலும், கொஞ்ச நேரத்திற்கு அப்பரம் சலிப்பை தட்டியது. ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன. உதராணத்திற்கு, தூப்பாக்கியை கண்டுபிடித்தவர் யார்? என்ற கேள்விக்கு, ஹீரோவின் அண்ணன் ஒரு முறை தூப்பாக்கி கொண்டு வில்லன்களை சுடுவதால், அதற்கு பதில் தெரியுமாம்! நம்ப முடியவில்லை!!!!

வசனங்கள் நல்லா இருந்துச்சு. குழந்தைகளின் நடிப்பு டாப்! ஏனோ தெரியவில்லை இக்குழந்தைகளுக்கு அதிகப்படியான விருதுகள் கிடைக்கவில்லை. சொல்ல போனால், இவர்களுக்கு தான் விருதுகள் வந்து குவிந்து இருக்க வேண்டும்.

ஒரு சில காட்சிகள் கைதட்ட வைத்தது. அமிதாப் பச்சன் வருகிறார் என்று ஊரே சத்தம்போடுகிறது. சிறு வயது ஹீரோ கழிவறையில் இருக்கிறார். ஆனால், அண்ணன் வெளியே உள்ள கதவை பூட்டிவிடுகிறார். வெறித்தனமான அபிதாப் பச்சனின் ரசிகரான ஹீரோ வெளியே வர முடியாமல் தவிக்கிறார்.

என்ன செய்வது என்று தெரியாமல், ஒன்றை முடிவெடுக்கிறார். கழிவறையில் கீழே தான் ஒரே வழி. ஆனால், அங்கு தான் பலரின் மலம் கிடக்கிறது. அதையும் பாராமல் ஹீரோ அதில் விழுந்து வெளியே வருகிறார், தனது ஹீரோவை பார்க்க! அசத்தலான சிந்தனை, நடிப்பு!

இப்படி ஒரு சில அருமையான காட்சிகள். அப்படியே documentary film ஸ்டைலில் படத்தை எடுத்து சென்று இருந்தால், சூப்பரா இருந்திருக்கும். (ஆனா...ஆஸ்கார் அளவுக்கு வந்திருக்குமோ தெரியுல...)

நாவலின் அடிப்படையில் வந்த கதை என்பதால், அந்த நாவலை படிக்க ஆர்வம் வந்துள்ளது.

ஆனா, இன்னொரு ஆச்சிரியம். இந்த படமா ஆஸ்காருக்கு போவுது?

அப்படி என்றால், மணிரத்னம் எடுத்த பாதி படங்கள் ஆஸ்காரை வென்று இருக்க வேண்டுமே! ஏ ஆரின் பிரமிக்க வைத்த எத்தனையோ பாடல்கள் இருக்க, இந்த படம் மூலம் அவருக்கு ஒரு ஆஸ்கார் கிடைக்க போவது என்று நினைத்தால், சந்தோஷ கலந்த வருத்தம் தான் மிஞ்சுகிறது.

சரி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை,

ஆஸ்காரை தொட்டுவிட்டது!- ஒரு இந்தியனாக எனக்கு பெருமை

ஏ ஆருக்கு ஆஸ்கார் கிடைத்தால், ஒரு தமிழனாக இன்னும் பெருமைப்பட்டு கொள்வேன்!:)

9 comments:

Sanjai Gandhi said...

i agree with you Thangachi.. :)

Divyapriya said...

ரொம்ப ஆஹா ஓஹோன்னு இல்லாட்டியும், எனக்கு ஒரளவுக்கு பிடிச்சி்ருந்தது :))

priyamudanprabu said...

///
ஆனா, இன்னொரு ஆச்சிரியம். இந்த படமா ஆஸ்காருக்கு போவுது?

அப்படி என்றால், மணிரத்னம் எடுத்த பாதி படங்கள் ஆஸ்காரை வென்று இருக்க வேண்டுமே!
///

எல்லோரும் இதைத்தான் சொல்லுறாங்க

*இயற்கை ராஜி* said...

//என்னுடன் வா ப்ளாக் வரைக்கும் என் ப்ளாக்கை பார் என்னை பிடிக்கும்:)//

blogla irukka choloate romba pudikkithu:-))

*இயற்கை ராஜி* said...

//ஆனா, இன்னொரு ஆச்சிரியம். இந்த படமா ஆஸ்காருக்கு போவுது?/

intha doubt than yenakkum

Karthik said...

//'அட ச்சே, இவ்வளவு தானா?' என்றது மனம்.

mine too. :(

//நாவலின் அடிப்படையில் வந்த கதை என்பதால், அந்த நாவலை படிக்க ஆர்வம் வந்துள்ளது.

q & a. i think i told u 'slumdog millionaire'.

//மணிரத்னம் எடுத்த பாதி படங்கள் ஆஸ்காரை வென்று இருக்க வேண்டுமே! ஏ ஆரின் பிரமிக்க வைத்த எத்தனையோ பாடல்கள் இருக்க, இந்த படம் மூலம் அவருக்கு ஒரு ஆஸ்கார் கிடைக்க போவது என்று நினைத்தால், சந்தோஷ கலந்த வருத்தம் தான் மிஞ்சுகிறது.

repeatayyy!

Karthik said...

sanjay anna,

enakku ethaavathu koduthu uthava kootathaa??
:)

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Anonymous said...

Maniratnam's films? you are funny