Feb 20, 2009

ரெண்டு பிள்ளைகளின் அம்மாவே, ஐ லவ் யூ!

வாங்கி வந்த செய்தித்தாளையும் காய்கறிகளையும் மேசையில் வைத்தார் சங்கர். பூஜை அறையில் ஒலித்து கொண்டிருந்த முருகன் சாமி பாடலை நிறுத்திவிட்டு, ஹாலில் இருந்த hi-fi setல் 'where is the party tonight' பாடலை போட்டார். பூனை உருட்டுவது போல் சிடிக்களை உருட்டி எடுக்கும் சத்தம் கேட்ட மாலதி சமையலறையிலிருந்து குரல் கொடுத்தார்,

"யாருது... அங்க? பூனை உருட்டற மாதிரி எத உருட்டிக்கிட்டு இருக்க?"

சங்கர் பதில் அளித்தார் "நான் தான் டி !" என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

மாலதி சமையலறையிலிருந்து எட்டி பார்த்துவிட்டு மீண்டும் தன் வேலைகளை தொடர்ந்தார்.

"அட நீங்களா? நான் சத்யாவோ, சாந்தியோ ஏதோ பண்றாங்கன்னு நினைச்சேன்.....அது இருக்கட்டும்.... என்ன சொன்னீங்க, டி யா?

அதற்குள் சங்கர் சமையலறையின் நுழைவு வாசலில் நின்று மாலதி பேசுவதை கேட்டார்.

"டி போட்டு பேசுற அளவுக்கு தைரியம் வந்தாச்சா...ம்ம்ம்...இன்னிக்கு 'டி' யும் கிடையாது, காபியையும் கிடையாது." என்று சொன்னபடி வெண்டைக்காயை வெட்டினார்.

"ஐயோ சாரி டி....ச்சி.. ஐ மின் சாரி மா...சும்மா கூப்பிட்டு பாத்தேன்.." என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு புன்னகையிட்டார்.

"ஆமா.... சத்யாவும், சாந்தியும் எங்க?" தொடர்ந்தார் சங்கர்.

"ரெண்டு பேரும் கீழே விளையாட போய் இருக்குதுங்க..." என்றபடி carrotயை வெட்ட ஆரம்பித்தார் மாலதி.

"ஓ...அப்படியே...இன்னிக்கு என்ன சமையல்?" வெட்டி வைத்திருந்த carrotயை வாயில் போட்டபடி கேட்டார் சங்கர்.

"சாம்பார்...வெண்டைக்காய் பொரியல், carrot salad."

"ம்ம்ம்.... கோழி, கருவாடு... இப்படி எனக்கு பிடிச்ச மாதிரி ஒன்னுமில்லையா..." இழுத்தார் சங்கர், மாலதி முகத்தை பார்த்தவாறு.

தன் வேலையில் மும்முரமாக இருந்தவள் சங்கரை ஒரு கணம் பார்த்து முறைத்து, "ச்சி.... வெள்ளிக்கிழமை போய்...இப்படி அசைவம் சாப்பிடுவாங்களா... ?"

மாலதி பக்கத்தில் நின்ற சங்கர், கொஞ்சம் அவள் பின்னாடி சென்று மாலதியை கட்டிபிடித்து கொஞ்சலுடன் கெஞ்சினார் " சாப்பாட்டுல அசைவம் வேண்டாம்... மத்ததக்கு அசைவம் கிடைக்குமா?" தன் கன்னத்தை மாலதி கழுத்தோரத்தில் உரசினார்.

"ஐயோ...ச்சே...விடுங்க... என்னது காலங்காத்தால...இப்படி பண்றீங்க?" என்று மாலதி சங்கரை பின்னாடி தள்ள முயற்சித்தார். ஒன்னும் அசைவதுபோல் தெரியவில்லை, சங்கர்!

"என்னைய கொஞ்சம் விடுங்களேன்...ப்ளீஸ்....இப்படி செஞ்சா என் வேலைய நான் எப்படி பாக்குறது?" மீண்டும் கெஞ்சினார் மாலதி.

"குழந்தைங்க வந்துட போதுங்க..."

"யாரு வந்தாலும் சரி.. உன்னைய விடுற மாதிரி இல்ல...." சிரித்தார் சங்கர்.

மாலதியின் காதோரம் நுகர்ந்தபடி கேட்டார் "ம்ம்....வாசம் தூக்குது மா... எப்படி மா இப்படி?"

"அத நீங்க hamam சோப் கம்பெனிக்காரன்கிட்ட கேக்க வேண்டிய கேள்வி" என்று மாலதி பதில் அளித்தவுடனே பிடியிலிருந்து மாலதியை விட்டு கைகளை அகல தட்டி சிரித்தார்.

"இது தான் மால்ஸ்... இது தான்... இந்த காமெடி சென்ஸ் தான்... உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது...not many women have this kind of comedy sense u know."

"வயத்து வலியில கத்துற மாதிரி ஒரு பாட்ட போட்டுவிட்டு வந்தீங்களே... அத செத்த நேரம் off பண்றீங்களா...கேக்க சகிக்கல...." மாலதி கடாயில் எண்ணெய் ஊற்றினார்.

"இது தான் மால்ஸ்... இன்னிக்கு ஹாட் சாங்... நீ சரியான பழைய பஞ்சாங்கம்." மாலதியின் கன்னத்தில் செல்லமாக தட்டினார்.

"ஓ... உங்களுக்கு இன்னும் புது மாப்பிள்ளன்னு நினைப்போ.... நினைப்புதான் பொழப்ப கெடுத்துச்சாம்..." கடுகை எண்ணெயில் போட்டார் மாலதி.

"எனக்கு என்ன குறைச்சல்.... அழகான குடும்பம்...எப்போதுமே அழகா தெரியுற மனைவி...உன் அன்பு, பாசம்... ஒரு மனுஷனுக்கு வேற என்ன வேணும். "

குழம்பு வைக்க தேவையான பொருட்களை வரிசையாக கடாயில் போட்டு குழம்பு செய்து முடித்தார். நெருப்பு புகையை கைகளால் விலகிவிட்டு இரும்பினார். மாலதி தலையில் லேசாக தட்டி, அவள் கையை தன் நெஞ்சில் வைத்தார் சங்கர்.

"எனக்கு மட்டும் ஒரு time machine இருந்தா...... " என்றார் சங்கர்.

"இருந்தா...?" தன் புருவங்களை உயர்த்தி குழப்பத்துடன் மாலதி.

"உன்னைய மறுபடியும் பொண்ணு கேக்க ஆசை... இப்படி உன் கையை பிடிச்சுகிட்டே...."

சத்தம் போட்டு சிரித்தார் மாலதி. "இப்படி வேற உங்களுக்கு ஆசையா? போச்சு போ... உளற ஆரம்பிச்சுட்டீங்களா... நேத்திக்கு மொட்டைமாடிக்கு அவசரமா ஓடுனீங்களே பிரண்ஸ பாக்கனும்னு... தண்ணிகின்னி அடிச்சுட்டீங்களா என்ன?"

"இது உளறல் இல்ல காதல்!"

"சரி ரைட்டு... confirmமா அடிச்சு இருக்கீங்க!" என்று சிரித்து கொண்டே மாலதி சொன்னார். அவள் நகைச்சுவையாக பேசியதை ரசித்தார் சங்கர்.

"தண்ணிகின்னி ஒன்னும் அடிக்கல...நாங்க. இன்னிக்கு valentine's day ஆச்சே..அதுக்கு என்ன gift பண்ணி பொண்டாட்டிகளை மயக்கலாம்னு ஒரு discussion."

விளையாடிவிட்டு மேலே வந்த மூன்று வயது சத்யா தன் மழலை பேச்சால், " பாட்டி, எனக்கு பசிக்குது...." என்று வீட்டிற்குள் நுழைந்தான். தன் அக்கா சாந்தி கையில் ஒரு வாழ்த்து அட்டையுடன் "தாத்தா, this is for you. happy valentine's day." என்றாள்.

அவளை அப்படியே தூக்கி முத்தமிட்டு "thanks my little angel." என்றார் சங்கர்.

தொலைப்பேசி மணி ஒலித்தது. அதை எடுத்து பேசினார் மாலதி.

மறுமுனையில்,

"அம்மா, happy valentine's day. அப்பா உங்களுக்கு என்ன கொடுத்து அசத்தினாரு?" சிரித்தான் மாலதியின் மூத்த மகன்.

"அம்மா... இன்னிக்கு ஒரு special dinner outing at cvias resturant. it's valentine's day special. நம்ம எல்லாரும் போறோம். ஆபிஸ் முடிஞ்சு நானும் சுந்தரியும் அங்க வந்துடுறோம். தம்பிக்கிட்டையும் சொல்லிட்டேன். குழந்தைங்கள அழைச்சுட்டு அங்க வந்துடுங்க... see u later மா." சொல்லி முடித்தார்.

தன் மகன் ஏற்பாடு செய்து இருப்பதை சங்கரிடம் கூறினார் மகிழ்ச்சியுடன்.

"என்னங்க...நீங்க என்ன கொடுக்க போறீங்க" ஆசையுடன் மாலதி.

"எல்லாத்தையும் தந்தவளே, உன்கிட்ட ஒன்னே ஒன்னு தான் சொல்லமுடியும்." சங்கர் புதிர் போட்டார்.

"இரண்டு பிள்ளைகளின் அம்மாவே, இரண்டு குழந்தைகளுக்கு பாட்டியே...." சொன்னவர் மாலதியின் காது அருகே சென்று அமைதியான குரலில்

"ஐ லவ் யூ!" என்றார்.

*** முற்றும்***

19 comments:

சந்தனமுல்லை said...

:-) ட்விஸ்ட் நல்லாருந்துச்சு!

தமிழ் பிரியன் said...

:-)

தமிழன்-கறுப்பி... said...

:)

தமிழன்-கறுப்பி... said...

அப்ப நீங்க பாட்டியாயிட்டிங்களா சொல்லவே இல்ல...:)

தமிழ் பிரியன் said...

///தமிழன்-கறுப்பி... said...

அப்ப நீங்க பாட்டியாயிட்டிங்களா சொல்லவே இல்ல...:)///
அவ்வ்வ்வ்

கார்த்திகைப் பாண்டியன் said...

எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்..

Divyapriya said...

:))

Thamizhmaangani said...

@தமிழன் கறுப்பி

//அப்ப நீங்க பாட்டியாயிட்டிங்களா சொல்லவே இல்ல...:)//

என்னைய வச்சு காமெடி கிமிடி ஒன்னும் பண்ணலையே:) அவ்வ்வ்...

Thamizhmaangani said...

@சந்தனமுல்லை, பாண்டியன்

கருத்துகளுக்கு நன்றி:)

Thamizhmaangani said...

வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் என் நன்றி. உங்க ஆதரவுக்கு ரொம்ம்ம்பப நன்றி:)

வினையூக்கி said...

:)

Karthik said...

கதை, கவிதையெல்லாமே கலக்குறீங்க காயத்ரி..! காரணம் கா....

வேண்டாம். ரொம்பவும் ரைமிங்கா எழுதினா டி.ஆர்னுவீங்க.
;)

Thamizhmaangani said...

@ கார்த்திக்

//கதை, கவிதையெல்லாமே கலக்குறீங்க காயத்ரி..! //

நன்றிங்கோ!

//காரணம் கா.... //

சத்தியமா தெரியல தம்பி!:)

mano said...

Really nice and Great...

சுல்தான் said...

ஒரு தம்பதிகளுக்குள் மிகுந்த சண்டை. அவர் மனைவியை கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டு அடிக்கடி 'நான்கு பிள்ளைகளின் தாயே' என்று அழைப்பாராம். எத்தனை முறை சொல்லிப் பார்த்தும் கேட்காத கணவனுக்கு அதிர்ச்சி வைத்தியம் தர முடிவு செய்தாள் அவள். ஒரு முறை 'நான்கு குழந்தைகளின் தாயே' என்று அழைத்தவனிடம் 'என்ன இரண்டு குழந்தைகளின் தந்தையே' என்றாளாம். எப்படி இருந்திருக்கும்?.

எங்கேயோ படித்த இதை எதிர் நோக்கி வந்தேன். நீங்கள் அருமையான கதையை அழகாகத் தந்திருக்கிறீர்கள். நன்றி.

Thamizhmaangani said...

வருகை தந்த சுல்தானுக்கும் மனோவிற்கும் நன்றி!:)

Nitz said...

Dey the first thing I saw when I opened ur blog was the top intro line where u said:
என்னோடு வா ப்ளாக் வரைக்கும்...

உன் blockக்குகே வந்து உன்னை உதைப்பேன்!!! வாரணம் ஆயிரம் dialogueகா! Why not use some Vijay's dialogue!!!

Thamizhmaangani said...

@nitz

வாடி யம்மா வா!

//உன் blockக்குகே வந்து உன்னை உதைப்பேன்//

ஹாஹா.. நீ எங்க வந்து எப்படி உதைச்சாலும் பரவாயில்ல. மோதிரம் கையால் குட்டு வாங்க நான் பாக்கியம் செய்து இருக்க வேண்டும்.

ivingobi said...

chance a illa Gaayu...... Superb......