May 23, 2008

எனக்கு பயமா இருக்கு- பாகம் 1

(இது நிஜம் அல்ல, வெறும் கதை தான்..:))
college camping & hiking என்ற banner ஒன்றை பேருந்தில் கட்டினார் தலைமையாசிரியர். எங்கள் காலேஜ் மூன்றாவது ஆண்டு படிக்கும் 274 மாணவர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டனர். எங்கள் காலேஜிலிருந்து 103 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு மலை இருக்கிறது.

அந்த மலை அடியில் முகாம் அமைக்கப்பட்டிருக்கும், அங்கு தான் நாங்கள் அனைவரும் சென்றோம். மாணவர்களும் மற்ற ஆசிரியர்களும் பேருந்துகளில் கிளம்பி சென்றோம். இப்படிப்பட்ட ஒரு முகாம் நடவடிக்கையை ஆண்டுதோறும் நடத்திவந்தனர் எங்கள் காலேஜ் நிறுவாகம்.


மாணவர்கள் ரொம்ப குஷியாகவும் உற்சாகமாகவும் பேருந்தில் ஆடி பாடி மகிழ்ந்தனர். ஆனால் சுஜி மட்டும் ரொம்ப சோகமாக இருந்தாள். " கத்தாழ கண்ணால" பாடலுக்கு ஆடி கொண்டிருந்தோம் நாங்கள்.
சுஜியை பார்த்தவுடன் அவள் அருகே சென்று 'என்ன ஆச்சு' என்பதுபோல் தலையை அசைத்து கேட்டேன் பாடலுக்கு ஆடி கொண்டே. அவள் பதில் சொல்லாமல் சன்னல் வழியே பார்த்து கொண்டிருந்தாள். ஆஹா பொண்ணு ரொம்ப சீரியஸா இருக்கு என்று மனம் சொல்ல அவள் அருகிலுள்ள இருக்கையில் உட்கார்ந்து அவள் முகத்தை என் பக்கம் திருப்பி,


"என்ன சுஜி, என்ன ஆச்சு? ஏன் ஒரே சோகம்ஸ்?" என்றேன் நான்.

"எனக்கு பயமா இருக்கு.." என்றாள் சுஜி.


அதற்குள் ஆடி கொண்டிருந்த பாலா பக்கத்தில் வந்துவிட்டான் ஆட்டத்தை நிறுத்தாமல்


"என்ன சுஜி, டல்லா இருக்கே? உன் ஆளு வேற பஸ்ல வறான்னு சோகமா.." என்று கலாய்த்துவிட்டு அவன் பாட்டுக்கு சென்றுவிட்டான்.


"ச்சே.. சரியான லூசு இவன்." என்று திட்டினாள் சுஜி.


"என்ன matterனு சொல்லுப்பா" என்றேன் நான்.


"எனக்கு பயமா இருக்கு. நம்ம போக போற இடத்த நினைச்சு பயமா இருக்கு." என்றாள் சுஜி கண்களில் பதற்றத்துடனும், கை நடுக்கத்துடனும்.


தொடர்ந்தாள் சுஜி, "ஆமாடி, என் வீட்டுபக்கத்து தெருவுல இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நம்ம காலேஜுல படிச்ச சீனியர் ஒருத்தி இருக்கா. அவ போயிட்டு வந்துருக்கா இந்த முகாமுக்கு. வந்து கதை கதையா சொன்னா, பயந்து போயிட்டேன். அங்க நைட்ல பேய் வருமாம்!!!! அவளோட போன ஒருத்தி கண்ணால பார்த்து இருக்கா பேய்ய. அதான் ரொம்ப பயமா இருக்கு. எனக்கு இதுக்கு வரவே பிடிக்கல. ஆனா நீங்கலாம் compel பண்ணதுனால வந்தேன்." என்று சொல்லவே அவள் முகம் வாடியது.


நான் பதில் சொல்வதற்குள் பாலா வந்து சுஜி பேசியதை அறைகுறையாக கேட்டுவிட்டு, " என்ன பேய்? யாரு பேய்? கோபால் கோபால்னு ஒரு painter இருக்கான். அவன் நாலு மணிக்கலாம் போயிடுவான்" என்று சந்திரமுகி வடிவேல் காமெடியை சொல்லி அவனே சிரித்து கொண்டான்.


சுஜி, பாலா செய்யும் லூசுத்தனம் பிடிக்காமல்,


"மரியாதை போயிடு. don't irritate me bala!" என்று கத்தினாள்.


பையன் பயந்து பறந்துபோய் கடைசி சீட்டில் உட்கார்ந்து கொண்டான்.


"ச்சே அப்படிலாம் ஒன்னும் இருக்காது டி. இந்த காலத்துல வந்து பேய்யாவது பிஸாசாவது! u don't worry. don't be scared! எங்களோடவே இருந்துகோ. that's all." என்று சொல்லி முடிப்பதற்குள் 'குட்டி பிசாஸே குட்டி பிசாஸே' பாடல் ஒலிக்க, நான் மற்றவர்களுடன் சேர்ந்து ஆட தொடங்கினேன். பயப்பட வேண்டும் என்று சுஜிக்கு ஆறுதல் சொன்னாலும், என் மனத்திற்குள் எதோ ஒரு சின்ன பயம், சஞ்சலம்!


பேருந்து இடத்தை வந்து அடைந்தது. மாணவர்கள் அனைவரும் திடலில் வரிசையாக நிற்க சொல்லி ஆசிரியர்கள் ஆர்டர் போட்டனர். பின்னர் ஒவ்வொரு மாணவருக்கும் instruction sheet கொடுக்கப்பட்டன.


மூன்று நாளுக்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் ஒரு முறை ஆசிரியர்கள் எங்களுக்கு நினைவுப்படுத்தினர்.



அங்கு ஒரு பெரிய கட்டடம் இருந்தது. அதில் கீழ் தளத்தில் ஆண்களுக்கு ஒதுக்குப்பட்ட படுக்கும் மற்றும் குளியல் அறை வசதிகள். பெண்களுக்கு இரண்டாவது மாடியில்.



ஆனால், அக்கட்டடத்தில் பெண்கள் குளியல் அறைகளோ கழிவறைகளோ கிடையாது. ஆக, கொஞ்ச தூரத்தில் இருந்த இன்னொரு கட்டடத்தில் தான் எங்களுக்குரிய குளியல் மற்றும் கழிவறை வசதிகள் இருந்தன. எனவே, எங்களுக்கு சொன்ன முதல் அறிவுரை



'கொஞ்ச மறைவில் அந்த கட்டடம் இருப்பதால், யாரும் தனியே அங்க செல்ல வேண்டாம். குறிப்பாக ராத்திரியில். முடிந்தால் இரண்டு பேராகவோ அல்லது கூட்டமாகவோ செல்லுங்கள்.'


பெண்கள் நாங்கள் எங்கள் இடத்தில் சென்று பெட்டிகளை வைத்தோம். எங்களில் ஒருத்தி, 'this is unfair. guys have everything. we need to go so far for the toilets. what kodumai is this?" என்ற ஆங்கிலத்தில் ஆதங்கத்தை கொட்ட.


இன்னொத்தி, " நிறுத்து உன் பீட்டர. இங்கிலீஷல் கொஞ்சம் மிச்சமீதி வை!" என்று கிண்டலடித்தாள்.


நான் பீட்டர் புள்ளைய பார்த்து, " ஓவரா சீன் போடாத. உனக்கு ஈசியா போச்சு. இதையே சாக்கா வச்சு, குளிக்காம இருந்துடுவே." என்று சொல்ல, பெண்கள் அனைவரும் கைதட்டி சிரித்தனர்.


சுஜி என் கிளாஸ் பெண்களோடு பேசிகொண்டு இருந்தாள். ஆனால் முகத்தில் பயம் கலந்த ஒரு சோகம்.


என் மனதில் "சரி முதல இவள சரிபடுத்தனும். இவ ஆளுகிட்ட சொன்னாதான் சரிவரும்..."


(பயம் தொடரும்)

16 comments:

ரசிகன் said...

//மாணவர்கள் ரொம்ப குஷியாகவும் உற்சாகமாகவும் பேருந்தில் ஆடி பாடி மகிழ்ந்தனர். //

நல்லாத் தான் நோட் பண்ணியிருக்கே காயு:P

ரசிகன் said...

//"என்ன சுஜி, டல்லா இருக்கே? உன் ஆளு வேற பஸ்ல வறான்னு சோகமா..//

//என் மனதில் "சரி முதல இவள சரிபடுத்தனும். இவ ஆளுகிட்ட சொன்னாதான் சரிவரும்...//

சந்தடி சாக்குல ,சுஜியோட மேட்டரை பப்ளிக்கா இப்டி போட்டு ஒடைச்சுப்புட்டியே மக்கா:P

ரசிகன் said...

//this is unfair. guys have everything. we need to go so far for the toilets. what kodumai is this?/.

அவ்வ்வ்வ்வ்வ்......

ரசிகன் said...

//"ச்சே அப்படிலாம் ஒன்னும் இருக்காது டி. இந்த காலத்துல வந்து பேய்யாவது பிஸாசாவது! u don't worry. don't be scared!//

அதானே ,கும்பலா நீங்கல்லாம் இருக்கும்போது தனியா அதெல்லாம் வேற வரணுமா என்ன?:P

ரசிகன் said...

//ஓவரா சீன் போடாத. உனக்கு ஈசியா போச்சு. இதையே சாக்கா வச்சு, குளிக்காம இருந்துடுவே." //

உண்மை எப்டில்லாம் வெளிய வருது பாருங்க மக்கள்ஸ்:P

ரசிகன் said...

இன்ரஸ்டிங்கா இருக்கு பயண அனுபவங்கள்.அதுவும் எல்லாருக்குமே கல்லூரி பயணங்கள் என்றுமே மறக்க முடியாத இனிமையான நினைவுகள் தான். அடுத்து என்ன ஆச்சு???

வெயிட்டிங்கு:).

நவீன் ப்ரகாஷ் said...

சுவரஸ்யமான ஆரம்பம் தமிழ்.....
எப்போ பேய் வரும்....?? நானும்
பார்க்க ஆவலா காத்துகிட்டு இருக்கேன்..:)))

FunScribbler said...

@ ரசிகன்,

//நல்லாத் தான் நோட் பண்ணியிருக்கே காயு://

நன்றி ரசிகன்.. நோட் பண்ணற விஷயத்தில் நாங்க கிள்ளாடி.

//
அதானே ,கும்பலா நீங்கல்லாம் இருக்கும்போது தனியா அதெல்லாம் வேற வரணுமா என்ன?:P//

நீங்களுமா??!! அவ்வ்வ்வ்...

//கல்லூரி பயணங்கள் என்றுமே மறக்க முடியாத இனிமையான நினைவுகள் தான்//

உண்மை தான் ரசிகன். இது தொடர்கதை தான் ரசிகன். உண்மை சம்பவம் அல்ல..:))

FunScribbler said...

@ நவீன்,

//சுவரஸ்யமான ஆரம்பம் தமிழ்.....//

நன்றிபா!! :))

Divya said...

ஆரம்பமே நடுங்குது.....சூப்பர் !!

உரையாடல் எல்லாம் மிக மிக இண்ட்ரெஸ்டிங்,

அடுத்த பாகம் போட்டு எப்போ பயமுறுத்த போறீங்க???.....சீக்கிரம்....சீக்கிரம்:))

தமிழ் said...

கதையின் தொடக்கமே
கலக்கலாக இருக்கிறது

FunScribbler said...

@திவ்ஸ்

//உரையாடல் எல்லாம் மிக மிக இண்ட்ரெஸ்டிங்,//

நன்றி திவ்ஸ்!

FunScribbler said...

//கதையின் தொடக்கமே
கலக்கலாக இருக்கிறது//

நன்றி திகழ்மிளிர்.

Sanjai Gandhi said...

//இது நிஜம் அல்ல, வெறும் கதை தான்..:))
college camping & hiking என்ற banner ஒன்றை பேருந்தில் கட்டினார் தலைமையாசிரியர். எங்கள் காலேஜ் மூன்றாவது ஆண்டு படிக்கும் 274 மாணவர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.//

இது நிஜம் என்று நீ சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம்... ஏன்னா.. நீ எப்போ காலேஜ் படிச்ச?.. காலேஜ் வந்தும் தலைமை ஆசிரியர் தானா? அம்மாடி.. அவர முதல்வர்னு சொல்லோனும்.. அது சரி நீ இன்னும் திக்கி திணறி இஸ்கோல் தான படிச்சிட்டு இருக்க...

..... பாவி.. உன் டார்சர் தாங்காம உன் ப்ளாக் படிக்கிறதுக்காகவே ஃப்யர்ஃபாக்ஸ் 3 இன்ஸ்டால் பண்னேன். இதுல கூகுள் டூல்பார் வேலை செய்ய மாட்டேங்குது.. :(....

FunScribbler said...

//சரி நீ இன்னும் திக்கி திணறி இஸ்கோல் தான படிச்சிட்டு இருக்க//

யாரும் நம்பாதீங்க!

//உன் டார்சர் தாங்காம உன் ப்ளாக் படிக்கிறதுக்காகவே ஃப்யர்ஃபாக்ஸ் 3 இன்ஸ்டால் பண்னேன். இதுல கூகுள் டூல்பார் வேலை செய்ய மாட்டேங்குது.. :(....//

நான் என்னப்பா செய்யுறது..(cough cough)- (read in sivaji's style)

Sanjai Gandhi said...

கொழுப்பு!