Jun 2, 2008

saturday night parties

சனிக்கிழமை 17th may

இந்த வருஷம் ரொம்ப சபெஷல். ஏனா, 21st பிறந்தநாள் கொண்டாட்டம் தான் எங்க gangல உள்ள பல பசங்களுக்கு. 17th may தோழன் சுவின் பிறந்தநாள். அவன் வீட்டிலேயே பிறந்தநாள் கொண்டாட்டம். உறவினர்கள், நண்பர்கள் என்று கிட்டதட்ட 70 பேருக்கு மேல். செட்டிநாட்டு உணவகத்திலிருந்து சாப்பாடு. இது தெரிந்து, நான் இரண்டு நாளுக்கு முன்புலிருந்தே ஒன்னும் சாப்பிடாமல் இருந்தேன். அப்பதான், ஒரு வெட்டு வெட்டலாம்னு!

தோழனுக்கு தியானம், யோகா, உடற்பயிற்சி போன்ற விஷயங்களில் ரொம்ப ஈடுபாடு. ஆக, அவனுக்கு 'tips in meditation' என்ற புத்தகத்தை பரிசாக கொடுத்தேன். எனக்கு வீட்டுல வைக்குற celebration தான் பிடிக்கும். ஏனா, அப்ப தான் ரொம்ப freeya போகலாம் வரலாம். 630 pm வர சொன்னான். நம்ம இந்திய வழக்கபடி கரக்ட்டா 730க்கு சென்றேன். ஒரே கூட்டம்! சரி நம்ம gang எங்கேனு ஒரு பார்வை அலசல்.

தோழனைவிட அவங்க அம்மா தான் எனக்கு பயங்கர தோஸ்த். வந்து என்னை வரவேற்று அவங்க உறவினர்களிடம் ஒன்னு சொன்னாங்க... அத கேட்டு உச்சி குளிர்ந்துபோயிட்டேனுங்கோ!


அவங்க அம்மா, "காயத்ரி பேசுன்னா.. நான் சிரிச்சுகிட்டே இருப்பேன். சொல்ல போனா, எனக்கு இன்னொரு மகள் மாதிரி!' (அவ்வ்வ்வ்....)

மற்ற நண்பர்கள் தோழனின் அறையில். விவேக் பாணியில் எல்லாருக்கும் ஒரு 'hi hi hi' சொல்லிவிட்டு சும்மா அரட்டை அடித்தோம். அரட்டை குறட்டை போல் சென்று கொண்டிருந்ததால், நேபாளி படம் வீசிடியை மடிக்கணினியில் போட்டு பார்க்க நினைத்தோம். ஆனால், எந்த நேரத்துல அந்த படத்த போட்டும்னு தெரியல. படம் ஆரம்பிச்சுதுலேந்து சின்ன பிள்ளைகள் அறைக்குள்ள வந்து போவது, ஓடி விளையாடுவது.. அப்படி இப்படினு படத்தையே பார்க்க முடியல. மடிக்கணினியை மூடிவைத்துவிட்டு hallக்கு வந்தோம்.
தோழன் கேக் வெட்டினான். அவன் அம்மா ஜாலிக்காக, "டேய் உனக்கு 21 வயசு ஆச்சு. இப்பவாவது சொல்லு உன் girlfren யாருன்னு?"
எல்லாரும் விழுந்து சிரித்தோம். உடனே நான், " ஆமா ஆண்ட்டி அவனுக்கு ஏகப்பட்ட girlfrens. திரிஷா, நயன் தாரா, ஷ்ரேயா, அசின்..."

கேக் வெட்டியபிறகு, வந்த வேலையை கவனிக்க சென்றோம். அதான்ங்க, சாப்பாடு!! நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை. ஆமா, இரண்டு நாளா வயிற்றை emptyaa வச்சுருந்தேன். நினைத்தபடியே சாப்பாடு செம்ம தூள்!! ஓடுறது, பறக்குறது, தாவுறது.. அப்படி இப்படினு ஒரு குட்டி discovery channelலே இருந்துச்சு! முதல் round முடிஞ்சு அடுத்த round சாப்பாடு எடுக்கும்போது ஆண்ட்டி,
"காயத்ரி, வெட்கபடாம சாப்பிடு!"
நான், "வெட்கமா... அது எங்க இருக்கு? அதுலையும் எனக்கு ஒரு plate வேணும்" என்றேன். சிரிக்க ஆரம்பிச்சவங்க, நிறுத்தவே இல்ல. அப்பரம் மீண்டும் அரட்டை, சிரிப்பு, கலாய்த்தல் என்று முடித்து இரவு 10 மணிக்கு வீடு திரும்பினேன்.

-----------------------------------------------------


சனிக்கிழமை 24th may
நான் சொன்ன மாதிரி வாரம் வாரம் ஒரு saturday night party! ஆனா இந்த கொண்டாட்டம் ஒரு தோழிக்கு, அதுவும் riverside party. இடத்த கண்டு பிடிச்சு போறதுக்குள்ள.... யப்பா! நோந்து போயிட்டேன். ஏதோ ஒரு காட்டுக்குள்ள இருந்துச்சு அந்த இடம். எல்லாரும் பார்த்து அசந்துபோகும் அளவில் ஒரு பெரிய பரிசு (பரிசு பெருசுதான்... ஆனா விலை சற்று கம்மி தான்..ஹாஹா..)


theme of the celebration is princess/prince. அதாவது ராஜா, ராணி மாதிரி உடை அணிந்து வரவேண்டும். ஆமா, எங்களுக்கு இது ஒன்னு தான் குறைச்சல்!
நிறைய விளையாட்டுகள், ஆடல், பாடல்! couple dance என்ற ஒரு அங்கம். தோழி மைக்கை எடுத்தாள் , "நாம இப்போ couple dance பார்க்க போறோம். நிறைய பேரு வந்து இருக்கீங்க. உங்களேந்து 5 ஜோடிய choose பண்ணி அவங்க இங்க முன்னாடி வந்து ஆடனும்." என்றாள்.
மற்ற நண்பர்கள் நாங்கள் ஒருவருக்கொருவர் சும்மா பேசி கொண்டிருந்தோம். திடீரென்று பார்த்தால், பொண்ணு என் பெயரு சொல்லிட்டு!
"காயத்ரி வா!" என்றாள்.
எனக்கு செம்ம கோபம்!! நானும் இன்னொரு பையனை ஜோடி சேர்த்து ஆட சொல்லிட்டு அதுவும் "ஏ மாமா ஏ மாமா வரியா" (மருதமலை பட பாடல்) என்ற பாட்டுக்கு. ஆஹா.. நான் பாட்டுக்கும் அங்கிருந்த tomato சூப்பு குடிச்சிகிட்டு இருந்தேன். சூப்பு குடித்தவளுக்கு இப்படி ஆப்பு வச்சுட்டாளே!!
சரி ஏதோ கைகளையும் கால்களையும் அசைத்து, ஒரு டப்பாங்குத்து அளவுக்கு ஏதோ ஒன்று ஆடிவிட்டேன். couple danceனு சொல்லி என் மானத்தை கப்பல் ஏற்றியவளின் நட்பை 'கட்' செய்துவிடலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்.
சாப்பாடு சரியில்லை. ஆக சீக்கிரமாகவே கிளம்பிவிட்டேன்.

---------------------------------------------------------------------


சனிக்கிழமை 31st mayஇது ஒரு surprise party! தோழி சுதாவிற்கு. 12 நண்பர்கள் நாங்கள் pasir ris parkல் இருந்தோம். சசியும் சுதாவும் ரொம்ப thick frens. ஆக சசி சுதாவிடம், வா நம்ம ரண்டு பேரும் சைக்கிளிங் போகலாம்னு சொல்லிட்டு கூட்டிட்டு வந்தாள். நாங்கள் அங்கிருந்த புதர்களுக்குள் ஒளிந்திருந்தோம். அவர்கள் பாதையில் கடந்து செல்ல, நாங்கள் பின்னாடியிலிருந்து பதுங்கி சென்று அவள் மீது மாவு, தண்ணீர், முட்டைகளை தூக்கிவீசி surprise கொடுத்துவிட்டோம்.புள்ளைக்கு என்ன நடக்குதுன்னு சுயநினைவுக்கு வரவே கொஞ்ச நேரமாச்சு. அப்பரம் வாங்கி வச்சிருந்த கேக்கை வெட்டி. அந்த கேக் அவ என் மேல போட. கேக்கே ஏற்கனவே chocolate flavour. அத என் மேல போட்டா ஒரு வித்தியாசமும் தெரியாது. ஆனா, நான் அவ மூஞ்சில தடவி ஒரு facial பண்ணிவிட்டு அமெரிக்கா citizen போல இருந்தவளை africa சிட்டிசன் மாதிரி மாற்றியதில் ரொம்ப சந்தோஷம்!!


பின்னர், பக்கத்திலுள்ள theme parkக்கு(நம்ம ஊர் mgm மாதிரி உள்ள இடம்) போகலாம்னு முடிவு. ஆனா, ஒரு டிக்கெட் விலைய பார்த்தா... அவ்வளவு விலையா இருந்துச்சு!! 4 மாசலா தோசை சாப்பிடலாம் அதுக்கு! நாங்க போலாமா வேண்டாமானு முடிவு பண்ணறதுக்குள்ள...ஆனா, உள்ளே சென்று விளையாடி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த 3 தமிழ் புள்ளைங்க(சிறு வயது தான்...14, 15 வயசு தான் இருக்கும்) எங்ககிட்ட வந்து,"ஹாலோ, இந்தாங்க free டிக்கேட்ஸ். நாங்க உள்ளே game விளையாடினோம். அதுக்கு கொடுத்தாங்க இந்த free டிக்கேட்ஸ். வச்சுக்குங்க." என்று சொல்லி 8 டிக்கேட்களை கொடுத்துவிட்டு சின்னகவுண்டர் விஜய்காந்த் போல சென்றுவிட்டார்கள். அவர்கள் பெயர் என்னவென்றுகூட கேட்கவில்லை.
எங்களுக்கோ ஆச்சிரியம்! அதிர்ஷ்டம் இப்படிகூட வருமா? மீதி உள்ள 4 டிக்கெட்களின் விலையை நாங்கள் அனைவரும் பங்குபோட்டு வாங்கினோம். உள்ளே சென்று ஒரே கூத்து, கும்மாளம்!! விளையாடி தீர்த்தோம்!! வாந்தி வராத குறைதான், பறக்கும் கப்பல், inverter, தலைக்கீழ் போவது, குதிப்பது என்ற அனைத்தை ஒரு கை பார்த்தோம்.


களைப்புடன் வீடு திரும்பினோம்! அடித்த கூத்தும், போட்ட ஆட்டமும் தலைவலியை ஏற்படுத்தியது எனக்கு. வீடுக்கு வந்தவுடனே சாப்பிடாமல் தூங்கிவிட்டேன். மறு நாள் காலையில் எழுந்து என் கைப்பேசியில் பார்த்தேன். புதிதாக ஒரு sms."ஏய் மக்கள்ஸ். நம்ம குருவோட பிறந்தநாள் அடுத்த வாரம்.so we are meeting at vivocity @ 630pm."
ஆஹா....ஆரம்பிச்சுட்டாங்கய்யா!!! அவ்வ்வ்வ்வ்


16 comments:

Divya said...

\\"ஏய் மக்கள்ஸ். நம்ம குருவோட பிறந்தநாள் அடுத்த வாரம்.so we are meeting at vivocity @ 630pm." \\

எம்மாடி காயத்ரி நீங்க தான் அந்த 'குரு'வா??

உங்களூக்கு தான் ஜீன் 7 பொறந்தநாளா கண்ணு??

Divya said...

partys எல்லாம் சும்மா சூப்பரா enjoy பண்ணியிருக்கிறீங்க போலிருக்கு,

அதை பதிவில் எழுதிய விதம் ரசிக்கும்படியாக இருக்கிறது தமிழு:)))

Shwetha Robert said...

your party post is fun to read Tamilmangani:)

so Gayathri is your real name??

Shwetha Robert said...

How do you type in Tamil??

can you help me to learn:)

Dreamzz said...

:) en sarbavum wishes sollidunga. oru cake parcel pls.

ரசிகன் said...

//செட்டிநாட்டு உணவகத்திலிருந்து சாப்பாடு. இது தெரிந்து, நான் இரண்டு நாளுக்கு முன்புலிருந்தே ஒன்னும் சாப்பிடாமல் இருந்தேன். அப்பதான், ஒரு வெட்டு வெட்டலாம்னு!//

:))))

ரசிகன் said...

//"வெட்கமா... அது எங்க இருக்கு? அதுலையும் எனக்கு ஒரு plate வேணும்" என்றேன். //

/சிரிக்க ஆரம்பிச்சவங்க, நிறுத்தவே இல்ல. //

இங்கயும் ஒரே சிரிப்புத்தான் போங்க:))

ரசிகன் said...

//அமெரிக்கா citizen போல இருந்தவளை africa சிட்டிசன் மாதிரி மாற்றியதில் ரொம்ப சந்தோஷம்!!//

என்னா ஒரு நல்ல மனசு பாருங்க மக்கள்ஸ்:P

இன்ஷ்ட்ரு கிங் said...

ஹா ஹா ஹா அப்போ அடுத்த பார்டிக்கு தயாராயாச்சா?

Thamizhmaangani said...

@திவ்ஸ்,

//எம்மாடி காயத்ரி நீங்க தான் அந்த 'குரு'வா??//

ஐயோ சத்தியமா நான் அவள் இல்லை! ஹாஹாஹா.. என்னொரு தோழியின் செல்ல பெயர் குரு.

//உங்களூக்கு தான் ஜீன் 7 பொறந்தநாளா கண்ணு??//

நம்ம பொறந்த நாளா 22nd sept. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி பிள்ளையார் சிலைகள் பால் குடித்த தினம். சத்தியமா!:))

//அதை பதிவில் எழுதிய விதம் ரசிக்கும்படியாக இருக்கிறது தமிழு:)))//

நன்றி திவ்ஸ்!

Thamizhmaangani said...

@ஸ்வேதா,

//your party post is fun to read Tamilmangani:)//

நன்றி!

//so Gayathri is your real name??//

ஆமாங்கோ!! :))

Thamizhmaangani said...

@dreamz,

//oru cake parcel pls.//

சரி don't worry. இப்ப போய் உங்க வீட்டு கதவ திறந்துபாருங்க, ஒரு கேக் பார்சல் இருக்கும்! enjoy! :)

Thamizhmaangani said...

@ரசிகன்,

//இங்கயும் ஒரே சிரிப்புத்தான் போங்க:))//

:))

//என்னா ஒரு நல்ல மனசு பாருங்க //

எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தானே அது!

Thamizhmaangani said...

@கிங்,

//ஹா ஹா ஹா அப்போ அடுத்த பார்டிக்கு தயாராயாச்சா//

yes all aready!

இன்ஷ்ட்ரு கிங் said...

அப்போ பார்டில நாங்களும் ஜாயின் பண்ணிக்கலாமா??

Karthik said...

//630 pm வர சொன்னான். நம்ம இந்திய வழக்கபடி கரக்ட்டா 730க்கு சென்றேன்.

"வெட்கமா... அது எங்க இருக்கு? அதுலையும் எனக்கு ஒரு plate வேணும்"

பரிசு பெருசுதான்... ஆனா விலை சற்று கம்மி தான்

சின்னகவுண்டர் விஜய்காந்த் போல
சென்றுவிட்டார்கள்//


ஹா..ஹா.