Jul 20, 2008

weekend கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஓயாத வருடம் இது என்றே சொல்லலாம். இந்த பிறந்தநாள் பரிசு வாங்கியே நான் நொந்து போயிட்டேன்... தோழிகளுக்கு என்றால், watch, doll, book இப்படி எதாச்சு கொடுக்கலாம்... தோழர்களுக்கு என்றால் wallet, shirt, tie இப்படி கொடுக்கலாம். இந்த வருடம் ஆரம்பித்தது முதல் பிறந்த நாள் பரிசு வாங்கி வாங்கி, எனக்கே கொஞ்சம் bore அடிச்சுபோச்சு!:)

நேத்திக்கு பள்ளி தோழன் வினோத் பிறந்தநாள். பள்ளி மாணவ தலைவனாக இருந்தவன். அதே வருடம் நான் பள்ளி மாணவ துணை தலைவியாக இருந்தே. நல்ல பையன்... இவனுக்கு கொஞ்சம் தமிழ் தடுமாறி தான் வரும்.. அதவச்சு செமையா கிண்டல் செய்த காலமெல்லாம் உண்டு. தமிழ் வகுப்புல முன்னாடி உட்கார்ந்து இருப்பான்.. அப்படியிருந்தும், நல்லா தூங்குவான் வகுப்பில். அதுக்கு அப்பரம் +1 படிக்க வேற பள்ளிக்கு போயிட்டான். ஆனாலும், எங்கள் பள்ளி குரூப் நண்பர்கள் மாதம் ஒரு முறை மீட் பண்ணுவோம்...

போன திங்கட்கிழமை ஃபோன் செய்தான்...

வினோத்: ஏய் காயத்ரி, நான் வினோத் பேசுறேன்.

நான்: சொல்லு, எப்படி இருக்க?

வினோத்: ஐ எம் குட். by the way..என் birthday party celebration வீட்ல வச்சிருக்கேன் வர saturday. can u make it?

நான்: saturday...முடியாதுனு நினைக்குறேன்...anyway i confirm with u by friday.

வினோத்: அதுக்கு முன்னாடியே சொல்லிடு. ஏன்னா i am goin to order food.

நான்: அப்படியா? which resturant?

வினோத்: sakunthala's food palace.

நான்: really!!! ok நான் வரேன்...

அந்த கடையிலிருந்து சாப்பாடு என்றால்.. எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனாலேயே சென்றேன். இரவு 7 மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன். நான் ரொம்ப லேட்டா போயிருப்பேன் என்று பாத்தா... அங்க நான் தான் முதல் ஆளு!! என்னப்பா வினோத் யாரையும் காணும்? என்றேன்.

வந்துகிட்டு இருப்பாங்க என்றான். பொதுவா, வீடுகளில் வைக்கும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தான் எனக்கு பிடிக்கும். feel at home என்ற ஃவீலிங் கிடைக்கும். நான் என் சொந்த வீடு மாதிரி டீவிய ஆன் செய்து விஜய் டீவியில் இசை குடும்ப பார்த்து கொண்டே, வினோத் அப்பா அம்மாவிடம் அளவளாவி கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில், என்னுடைய மற்ற பள்ளி தோழிகளும்/தோழர்களும் வந்துவிட்டனர். அப்படியே அரட்டை அடித்து கொண்டிருந்தோம். அப்ப, ஒரு பொண்ணு வந்துச்சு. வினோத் +1 பள்ளியில் படித்த பொண்ணாம். அதுக்கு முன்னாடி நாங்க யாரும் பார்த்தது இல்ல. வினோத் அவளை எங்களிடம் அறிமுகம் படுத்தினான்.

வினோத்: hi guys, she is my(என்றவரைக்கும் சத்தமாக இருந்தது அவன் குரல்..)
my girlfriend(மெல்லிய குரலில் யாருக்கும் கேட்காதவாறு சொன்னான்..)

புரிந்துகொண்டோம்! ஹாஹா...

நான்: அது மட்டும் ஏண்டா censor பண்ணி சொல்லுறே!

நாங்கள் கிண்டலடித்து சிரித்தோம். பையனுக்கு ஒரே வெட்கம்! :)))) அவன் பெற்றோர்களுக்கு ஓரளவுக்கு தெரியுமாம்!:)

வந்த வேலையை கவனிக்க சென்றோம். கோழி, மீன், மட்டன், பிரியாணி, பாயாசம்... என்று ஒரு வெட்டு வெட்டினோம். இரண்டு மூன்று ரவுண்டு... வயிறு வாயிலிருந்தே ஆரம்பித்தது! அம்புட்டு சாப்பிட்டோம். இத்தனையும் சாப்பிட்டு, நான் கேட்டேன் "கொஞ்சம் தயிர் கிடைக்குமா". தோழன் ஒருவன் என்னை முறைத்து பார்த்தான்.

ஆண்ட்டி எனக்காக ஸ்பெஷலா கொண்டுவந்தாங்க. அப்பரம் ஐஸ்கீரிம் கேட்டேன். அதையும் முழுங்கிவிட்டு நடக்க முடியாமல், உருண்டு கொண்டு வீடு திரும்பினேன்.

4 comments:

Sanjai Gandhi said...

வினோதுக்கு : இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி.

என் பாசமலருக்கு : இதெல்லாம் ஒரு பொழப்பா?

FunScribbler said...

//இதெல்லாம் ஒரு பொழப்பா?//

oh my god, this is a great insult of the constitution of the insistution of the indian economy of the pakistan!!!:)))

Karthik said...

//மெல்லிய குரலில் யாருக்கும் கேட்காதவாறு சொன்னான்

அங்கேயும் இதே கதைதானா? உலகம் முழுக்க பசங்கதான் வெட்கப்ப்ட்டு கொண்டு இருக்கிறோம். என்ன்ன்ன்ன்ன்ன கொடுமை சரவணன் இது?

FunScribbler said...

@kaarthik

// உலகம் முழுக்க பசங்கதான் வெட்கப்ப்ட்டு கொண்டு இருக்கிறோம்//

ஏ தோடா... !:))