Aug 1, 2008

சிங்கையில் தாதியர் தினம்

உலக தாதியர் தினம் மே 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால், சிங்கையில் இன்று (ஆக்ஸ்ட் 1ஆம் தேதி) கொண்டாடப்படுவதின் நோக்கம் தாதியர் வளர்ச்சி மன்றம் இன்றைய தினம் தான் 1885ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன் தாதியர்கள் அவ்வளவாக கிடையாது. நோயாளிகளை பார்த்து கொள்ள தாதியர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டது 1885ஆம் ஆண்டு தான்.



அப்போது இருந்த உள்ளூர் french convent மூலம் நிறைய தாதியர்கள் வேலையில் சேர்ந்தனர். ஆகவே தான் அந்த தினத்தை சிங்கையில் தாதியர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலகளவில் மே 12ஆம் தேதி கொண்டாடப்படுவதின் காராணம், அன்று தான் florence nightingale அவர்களின் பிறந்த நாளாம்.



இன்று சிங்கையில் வேலை பார்க்கும் அனைத்து தாதியர்களுக்கும் என் வாழ்த்துகள்! நன்றிகள்! என்னுடைய தோழிகள் சிலர் தாதியராக வேலை செய்கின்றனர். அவர்களுக்கு முக்கியமாக என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தாதி என்று சொன்னவுடன் எனக்கு ஒன்னு ஞாபகத்துக்கு வரும். 'மனதில் உறுதி வேண்டும்' படமும் அப்படத்தில் நடித்த சுஹாசினியும்!! the movie is simply gr8!!! ஒரு பேட்டியில் அப்படத்தின் இயக்குனர் பாலச்சந்தர் சொன்னார் தான் இப்படத்தை எடுத்ததற்கு காரணம் தனக்கு உடல் நலம் மோசமான நிலையில் இருந்தபோது பார்த்து கொண்ட தாதி ஒருவர் தான் இப்படத்துக்கு inspiration என்று.



இவ்வாறு மற்றவர்களின் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு தாதியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!::))

4 comments:

விஜய் ஆனந்த் said...

என்னுடைய வாழ்த்துக்களும்!!!!!!!!

வடுவூர் குமார் said...

இன்று காலை சுமார் 7.40க்கு வானொலியில் ஒரு தாதி பேசினார்,அருமையாக இருந்தது.

narsim said...

தாதியர்களின் வாழ்க்கையை சற்று நெருங்கிப் பார்த்தால் "பாவம்","வேதனை""தியாகம்"குதூகலம்" என அனைத்தும் இருக்கும்- "அருவருப்பு" மட்டும் இருக்கவே இருக்காது. . .

வாழ்த்துக்கள்

FunScribbler said...

@குமார்

//இன்று காலை சுமார் 7.40க்கு வானொலியில் ஒரு தாதி பேசினார்,அருமையாக இருந்தது.//

நானும் கேட்டேன் சில பேட்டிகளை மதிய வேளையில்.. ரொம்ப நல்லா இருந்துச்சு!:)