என் தோழன் ஒருத்தன் இருக்கான். பள்ளி நண்பன். விதவிதமான ஸ் எம் ஸ் அனுப்புவதில் கிள்ளாடி!
பெருமாள் கோயிலிருந்து ஒரு ஸ் எம் ஸ். இது பெருமாள் சொன்ன விஷயம். இதை அடுத்த 15 நிமிடத்துக்குள் 9 பேருக்கு அனுப்பிவிடனும். அப்படி இப்படின்னு சில நேரங்களில் தேவையில்லாத ஸ் எம் ஸ் அனுப்புவான்! இப்படி ஸ் எம் ஸ் வந்தாலே, நான் செம்ம காண்டாயிடுவேன்!
இப்படிப்பட்டவனாய் நேற்றுக்கு பழி வாங்க சரியான ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுது. நேத்திக்கு பையன் ஒரு ஸ் எம் ஸ் அனுப்பினான்...
"என்னைய பத்தி உனக்கு எவ்வளவு தெரியுதுன்னு பாப்போம்?
1) பிறந்ததேதி-
2)நான் அதிகமா பயன்படுத்தும் வார்த்தை-
3) நான் விரும்புவது-
4) நான் வெறுப்பது-
5) என் கெட்ட குணம்-
6) என் நல்ல குணம்-
7)நான் உனக்கு யாரு?-
8)என் திறமை-
9) என்னிடம் உனக்கு பிடிச்சது-
10) பிடிக்காதது-
11) நான் உன்னை காயப்படுத்தி இருக்கேனா?-
12) என்னைய உனக்கு எவ்வளவு பிடிக்கும்?-
13) எனக்காக நீ வேண்டிகொள்வது-
இதுக்கு என் பதில்...என்ன தெரியுமா?
1) பிறந்ததேதி- feb 31st
2)நான் அதிகமா பயன்படுத்தும் வார்த்தை- பண்ணாட
3) நான் விரும்புவது- திரிஷா
4) நான் வெறுப்பது- மும்தாஸ்
5) என் கெட்ட குணம்- கஞ்சா அடிப்பது
6) என் நல்ல குணம்- சிகரெட் பிடிப்பது
7)நான் உனக்கு யாரு?- வெட்டி ஆபிசர்
8)என் திறமை- தண்ணி அடிப்பது
9) என்னிடம் உனக்கு பிடிச்சது- உன் கலரு...
10) பிடிக்காதது- உன் weight...
11) நான் உன்னை காயப்படுத்தி இருக்கேனா?- ஆமா..இப்படி ஸ் எம் ஸ் அனுப்பி...
12) என்னைய உனக்கு எவ்வளவு பிடிக்கும்?- u mean pyaar?? நோ.. நான் உன் எதிரி!
13) எனக்காக நீ வேண்டிகொள்வது- இந்த பதில்களை படிக்கும்போது, அழகூடாதுன்னு!
பழிவாங்கிய சந்தோஷத்தில் நிம்மதியா தூங்கினேன்! பையன் அதுக்கு அப்பரம் காண போயிட்டான்..
8 comments:
இப்படி பதில் அனுப்புனா எந்த தோழன் ஓடாம இருப்பாங்க??..Btw, நீங்களும் அதே தேதி தானா..?
ஏன் இந்த கொலைவெறி?
:)
இப்படியா நிஜம்மாவே பதில் அனுப்பினீங்க????????
பாவம் உங்க நண்பர்:(
ஆனா......ஒவ்வொரு பதிலும் படிச்சு.....ரொம்ப சிரிச்சேன் காயத்ரி]
@திவ்ஸ்
//இப்படியா நிஜம்மாவே பதில் அனுப்பினீங்க????????//
ஆமாங்க..இப்படி தான் அனுப்பினேன்.
chancey ella po.....kalakitey:))
ஏன் இந்த கொலைவெறி????????
பெருமாளே! என்ன கொடுமை இது! உன்னுடைய பக்தனுக்கு இப்படியொரு கொடுமையா! காயத்திரி என்று பெயர் வைத்துகொண்டு யாரையும் காயப்படுதலாமா! நல்லவேலை சாவித்திரி என்று பெயர் இருந்தால் சாவடித்துவிடுவீர்கள் போலவே! உங்கள் நண்பன் தன்னுடைய கைத்தொலைபேசியை இன்நேரம் விற்பனை செய்திருக்கவேண்டுமே! இந்த பதில் எஸ்.எம்.எஸ் சுக்கு பிறகு அவர் தொலைபேசி பயன்படுத்துவதை நிறுத்திவிடுவது நல்லது!
@பிரேம்குமார்
ஏதோ நம்மாள முடிஞ்ச சேவை:)
Post a Comment