Aug 11, 2008

சுப்பரமணியபுர சுவாதி- ஒன்னும் சொல்றதுக்கு இல்ல

எல்லாரும் சுப்பரமணியபுரம் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்த தள்ள,சரி என்ன தான் படத்த எடுத்துவச்சு இருக்காய்ங்கன்னு பாக்க போனேன்.சும்மா சொல்ல கூடாது.. மிரட்டலான படம் தான்!படத்த பத்தி நிறைய பேரு சொல்லிட்டாங்க...ஆக நான் விமர்சனம் போட வரல்ல... ஆனா ஒன்னே ஒன்னு! ஜெயின் voice modulation சில இடங்களில் இன்னும் அதிக கவன செலுத்தி இருக்கலாம். சென்னை 28ல் பேசியது மாதிரி இருந்துச்சு...சரி அத விடுங்க..ஆனா அவர் நடிப்பு...ம்ம்ம்..பின்னிட்டாரு!

இப்போ மேட்டர் என்னன்னா... அந்த புள்ள பேரு என்னா...ஆ..சுவாதி!

என் தோழன் ஏற்கனவே படத்த பாத்துவிட்டு, சுவாதி சுவாதின்னு இரண்டு மூன்னு நாளா உலறிகிட்டு இருந்தான்...புள்ள ஏதோ சூப்பரா பண்ணியிருக்குன்னு நம்பி போனேன்...

ஐயோ ஐயோ ஒன்னும் சொல்றதுக்கு இல்ல! ஏங்க, அதான் வெட்கமா? வெட்கப்படற மாதிரி பாக்க சொன்னா, ஏதோ வெத்தல பெட்டி டப்பாவ திருடிக்கிட்டு போற மாதிரி ஒரு பார்வை. இயக்குனர் சசிகுமார் சொல்லி கொடுத்த மாதிரியே இருந்துச்சு!!!! காதல் படத்துல சந்தியா கிளைமெக்ஸ் சீன்ல அழுத மாதிரியே இருந்துச்சு சுவாதியின் நடிப்பு இப்படத்தின் கிளைமெக்ஸ் சீன்லையும்.

ஆனா என்ன, நல்ல தமிழ் பொண்ணு மாதிரி தெரிஞ்சுச்சு படத்துல. எதிர்காலம் இருக்கு! ஆனா, நடிப்புல இன்னும் தேறனும்! ரொம்ம்பப எதிர்பார்த்துட்டேனு நினைக்கிறேன், அதுனால தான் சுவாதி நடிப்பு அவ்வளவாக ரசிக்க முடியல. காதல் சந்தியா மாதிரி முதல் படத்துல பின்னி எடுத்து இருக்கும்னு நினைச்சேன். ஆனா...ம்ம்ம்...

அது என்ன, பட தலைப்புல சுப்பரமணின்னு வார்த்தை இருந்தா ஹீரோயின்களுக்கு சரியான நடிப்பு வராதா... (என்ன முழிக்கிறீங்க...) இந்த படத்துல இவங்க இப்படி..

சந்தோஷ் சுப்பரமணியம் படத்துல ஜெனிலியா...5 ரூபாய்க்கு நடிக்க சொன்ன 5.50 ரூபாய்க்கு நடிச்சது.சாரி சாரி.. நடிக்கல...பறந்துச்சு! ஏன்னா..முக்காவாசி நேரம் அந்த புள்ள டையலாக் பேசும்போது குதிச்சு குதிச்சு தானே பேசுனுச்சு!:)))))))

(இத படிச்சுபுட்டு, சுவாதி மற்றும் ஜெனிலியாவின் fans, iron boards, tables, washing machines, electric cookers...இப்படி யாரா இருந்தாலும் கோப படகூடாது!)

13 comments:

தமிழ் பிரியன் said...

சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி

தமிழ் பிரியன் said...

சுவாதியின் ஒரு போட்டோ கூட போடாததைக் கண்டிக்கிறேன்... :(

Ramya Ramani said...

ஹா ஹா பொளந்துட்டீங்க போங்க...

nathas said...

//புள்ள ஏதோ சூப்பரா பண்ணியிருக்குன்னு நம்பி போனேன்...

ஐயோ ஐயோ ஒன்னும் சொல்றதுக்கு இல்ல! //

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் !!!
:P
எவ்வளவு Cutaa இருக்கு அந்த புள்ளை. நீங்க இப்படி சொல்லிடீங்களே... :(

//சுவாதியின் ஒரு போட்டோ கூட போடாததைக் கண்டிக்கிறேன்... :(//

ரிபீட்டு...

Anonymous said...

பாவம் நிறைய இளவட்டப்பசங்க எல்லாம் இதப்படிச்சு மனசொடிஞ்சு போயிருப்பாங்க. இப்பிடி சுத்தி வைச்சு அவங்க இதயத்தை சுக்குநூறாக்கீட்டீங்களே!!!

Thamizhmaangani said...

@தமிழ் பிரியன்

//சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி //

சரி ரைட்டு! புரிஞ்சு போச்சு... ரொம்ப முத்திபோச்சு.

Thamizhmaangani said...

@nathas

//எவ்வளவு Cutaa இருக்கு அந்த புள்ளை. நீங்க இப்படி சொல்லிடீங்களே... :(//

யப்பா சாமி...cutaa? இப்ப அதுக்கு அர்த்தம் மாத்திட்டாங்களா?

படத்த பார்த்த எங்க அப்பா.. கடைசி வரைக்கும் சுவாதி தான் ஹீரோயின்னு தெரியல்ல...ஏதோ சைடு ஆக்கிட்டிங் கொடுக்க வந்த புள்ளனு நினைச்சுட்டாங்க...

Thamizhmaangani said...

@சின்ன அம்மிணி

//இப்பிடி சுத்தி வைச்சு அவங்க இதயத்தை சுக்குநூறாக்கீட்டீங்களே!!!//

நான் உண்மைய சொன்னேன்!
(பாட்ஷா...பாட்ஷா...தீம் மியூசிக் கேட்குதா?):)

Thamizhmaangani said...

@ரம்யா ரமணி

//ஹா ஹா பொளந்துட்டீங்க போங்க...//

ஏதோ என்னால முடிஞ்சது...:)

வெட்டிப்பயல் said...

சுவாதியை பத்தி என்ன வேணா சொல்லிக்கோங்க... எதுக்கு எங்க ஜெனியை வம்புக்கிழுக்கறீங்க...

தெலுகு படத்துக்கு தேவையான மாதிரி ஜெனி நடிச்சிருந்தா. அதையே தமிழ்லயும் பண்ண சொல்லிட்டாங்க. அதனால அவளை தப்பு சொல்லக்கூடாது :-)

ஜி said...

//(இத படிச்சுபுட்டு, சுவாதி மற்றும் ஜெனிலியாவின் fans, iron boards, tables, washing machines, electric cookers...இப்படி யாரா இருந்தாலும் கோப படகூடாது!)
//

Grrr.... Rendu perukkum rasigargal Naanga

M.Saravana Kumar said...

சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி சுவாதி

சுவாதியின் ஒரு போட்டோ கூட போடாததைக் கண்டிக்கிறேன்... :(

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் !!!

எவ்வளவு Cutaa இருக்கு அந்த புள்ளை. நீங்க இப்படி சொல்லிடீங்களே... :(

மங்களூர் சிவா said...

சந்தோஷ் சுப்பிரமணியம் படம் இடைவேளை வரைக்குமே ஜெனிலியா கீழ்பாக்கம் கேஸோ அப்படின்னு ஒரு ஃபீல் இருந்துட்டே இருந்துச்சு!

சுவாதி கண்ணாலயே நடிச்சிருக்கும் நல்லா பாரு தாயி திரும்ப இன்னொருக்கா!
:)

சுவாதி போட்டோ போடாததற்கு கடும் கண்டனங்கள்!