இப்ப தான் திவ்ஸ் பின்னோட்டத்தை படித்தேன். ரொம்ப நாளா ப்ளாக்ல ஒன்னும் எழுதவில்லை என்பதை உணர்ந்தேன். நிறைய காரணங்கள் இருக்கு...
இந்த 'படிப்பு' என்ற விஷயத்தை கண்டுபிடித்தவனை தீவிரமா தேடிகிட்டு இருக்கேன் கொலைவெறியோட!!
இரண்டு வாரத்துக்கு முன்னாடி, கிரிக்கெட் பயிற்சியின் போது muscle pull ஆச்சு. கொஞ்ச நாள்ல சரியாயிடும் என்று பார்த்தால் வலி அதிகரித்துவிட்டது இரண்டு கால்களிலுமே. டாக்டர்கிட்ட போனேன்.
"your muscle fibre is torn. u should not train for 3 weeks." என்ற பெரிய குண்டை என் தலையில் போட்டார். அதிக நேரம் நடக்க கூடாதாம். நிக்க கூடாதாம். கனமான பொருட்களை தூக்க கூடாதாம். கால்களில் 4 மணி நேரத்துக்கு ஒருமுறை icepack வைக்கனுமாம்.
அவர் 'no training' என்ற சொன்னபோது, எனக்கு அழுகையே வந்துச்சு. இப்ப தான் main teamல விளையாட ஆள் select பண்றாங்க. இந்த நேரத்துல இப்படி ஆச்சுன்னு மனசு நொந்துபோச்சு.. அடுத்த வாரம் என் முதல் match விளையாட வேண்டியது....ஆனா போகமுடியாது!!!
கஷ்டம் singleலா வராது. கூட்டமா தான் வரும்! அதுக்கு அப்பரம், கையில ஒரு பெரிய கட்டி மாதிரி வந்து இருக்கு. என்னவென்றே தெரியல! கைய தூக்க முடியல....
கொடுமைக்கு மேல் கொடுமை!
ப்ளாக்ல எழுதும் ஆசையும் உற்சாகமும் இல்லாமல் போய்விட்டது. அதான் இங்க தலைக்காட்ட முடியல.
10 comments:
:(
/
கொடுமைக்கு மேல் கொடுமை!
/
பதிவ படிச்சிட்டு பதிவ பத்தி நாங்க போட வேண்டிய கமெண்ட் ஆச்சே இது!
//இந்த 'படிப்பு' என்ற விஷயத்தை கண்டுபிடித்தவனை தீவிரமா தேடிகிட்டு இருக்கேன் கொலைவெறியோட!!
Me too!
//கொடுமைக்கு மேல் கொடுமை!
Though its inevitable in Sports, You should be careful.
//கஷ்டம் singleலா வராது. கூட்டமா தான் வரும்! //
பிளாக்ல அப்பறமா எழுதலாம்.. உடல்நிலையை கவனித்து கொள்ளுங்கள்..
TAKE CARE..
@kumar
//பிளாக்ல அப்பறமா எழுதலாம்.. உடல்நிலையை கவனித்து கொள்ளுங்கள்..
TAKE CARE..//
நன்றி:)
அடடா உடம்ப பாத்துக்கோங்க காயத்ரி :)
உடம்பு சரியாயிடுச்சா மேடம்... இப்ப team ல இருக்கிறிங்களா...?
@தமிழன்
//உடம்பு சரியாயிடுச்சா மேடம்... இப்ப team ல இருக்கிறிங்களா...?//
கொஞ்சம் பரவாயில்ல. நலம் விசாரித்ததற்கு நன்றி!:)
அடுத்த வருட tournamentக்கு ஆள் select பண்ணுவாங்க...அப்பரம் தான் தெரியும்.
அச்சச்சோ.. இப்பட் எப்படி இருக்கு?
@மை ஃபிரண்ட்
இப்ப பரவாயில்ல... :)
Post a Comment