Dec 18, 2008

அலைபாயுதே-(2)

ஷீலாவிடம் பேசிவிட்டு ஆபிஸுக்கு வந்தான் ரோஹித். மனதில் உள்ளதை பேசிய பின்பும் அவனுக்கு ஏதோ ஒரு மாதிரியாக இருந்தது. ஆபிஸில் சரியாக கவனிக்கமுடியவில்லை வேலையை. staff lounge areaவுக்கு சென்று coffee dispenserலிருந்து ஒரு காபியை குடித்தான். அவனது நினைவு அலைகள் இரண்டு வருடங்களுக்கு முன்னால் சென்றது. ஷீலாவை பெண் பார்த்தது, கல்யாணம், honeymoon, எத்தனையோ இனிமையான நினைவுகள், அவளின் friendly approach, mannerisms-இவ்வாறு ஒவ்வொன்றையும் நினைத்தான்.


யாரோ ஒருவரின் கை அவன் தோள்பட்டையில் பட்டது. பின்னால் திரும்பி பார்த்தான். boss நிற்கிறார்.

“யோ மேன், என்னாச்சு? என்ன இந்த நேரத்துல...இங்க? any problem?" என்றார்.

“இல்ல சார்... ஒன்னுமில்ல.”

“பொண்ணுங்க ஒன்னுமில்லன்னு சொன்னா அதுல ஏதோ இருக்கு. பசங்க ஒன்னுமில்லன்னு சொன்னா...” என்று நிறுத்திவிட்டு மறுபடியும் தொடங்கினார் பாஸ்,
“அதுலையும் ஏதோ இருக்கு!” என்று தான் அடித்த ஜோக்குக்கு அவரே சத்தம் போட்டு சிரித்தார்.

ரோஹித்துக்கு சிந்தனையெல்லாம் அவள் மீது.

“ரோஹித், are you alright? என்ன சிரிக்காம இருக்கீங்க?ம்ம்ம்....i know i know....something is terribly wrong with you."

ரோஹித் அமைதியாய் இருந்தான், காபியை குடித்து கொண்டு.
“office is going on well...so problem is somewhere else. என்ன ரோஹித்....ஷீலாகூட பிரச்சனையா?” என்று ஒரு தோழன் போல் கேட்டார்.

தயங்கிய குரலில் “என்ன ஆச்சுன்னு தெரியல.... கொஞ்ச நாள்ல அவ என்கூட....” என்று தொடங்கியவன் நடந்தவற்றை கூறினான் ரோஹித்.
பாஸ் சில நேரங்களில் முட்டாள்தனமாக ஜோக்கு அடித்தாலும், தன் ஊழியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்களுக்க முடிந்த வரை உதவி செய்வார். ரோஹித் சொன்னதை கவனமாக கேட்ட அவர்,
“ம்ம்ம்....பொண்ணுங்க அப்படி தான். they need time. ஷீலா is a brilliant girl. u don't worry....she will definitely be alright."
“thanks sir....நான் cabinக்கு போறேன்.... அந்த report முடிச்சுட்டேன். நீங்க ஒரு தடவ பாத்துட்டீங்கன்னா...we can send to the authorities."

“nothing doing rohit. உனக்கு rest தேவை. நீ வீட்டுக்கு கிளம்பு. மத்ததை அப்பரம் பாத்துக்கலாம்.” என்ற பாஸ் ரோஹித்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

மணி அப்போது தான் 330pm. வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சி. ஷீலா சோபாவில் உட்கார்ந்து இருந்தாள் அழுது கொண்டு. ரோஹித்தை பார்த்தவுடன் ஓடிவந்து அவனை இறுக்க கட்டிகொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.

ஒன்றுமே புரியவில்லை ரோஹித்துக்கு.
"என்னமா ஆச்சு?...என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே....ஏன் அழுவுற?” என்றான் படபடப்புடன்.

“ரோஹித், i am sorry. guilt is killing me."
"என்னமா சொல்ற.” என்றவன் அவள் தலைமுடியை கோதிவிட்டு சமாதானப்படுத்த முயன்றான். இருவரும் சோபாவில் உட்கார்ந்தனர். தன் கைகளால் அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டான்.
“ok relax... what happened?" என்றான் ரோஹித் அவள் கண்களை பார்த்து.

அவன் நெஞ்சில் தன் தலையை சாய்த்த ஷீலா “நான் இத உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்க வேணும். நான் செஞ்ச தப்பு.” என்றாள் அழுகையின் இடையே.


தொடர்ந்தாள் “நான் காலேஜ்ல படிச்சபோ விமல்ன்னு ஒரு பையன் இருந்தான். முதல friendshipஆ தான் ஆரம்பிச்சுது. அதுக்கு அப்பரம்...அவன் ஒரு நாள் என்கிட்ட love propose பண்ணிட்டான். எனக்கும் அவன பிடிச்சு இருந்துச்சு... நாங்க 2 வருஷம் லவ் பண்ணோம். ரொம்ப சின்சியரா லவ் பண்ணோம்.... ஆனா 2nd இயர்ல அவன் வேற ஊருக்கு போயிட்டான்... ஏதோ அவங்க அப்பா வேலை transfer அப்படின்னு சொல்லிகிட்டாங்க.... நானும் கொஞ்ச நாளா அவனை பத்தி விசாரிச்சு பாத்தேன். ஆனா ஒரு contactக்கும் கிடைக்கல.... அப்பரம் நானும் விட்டுட்டேன்.... final year exam, அப்பா இறந்த விஷயம், அதுக்கு அப்பரம் நடந்த அண்ணா கல்யாணம்....நாங்க இங்க வந்தது...இப்படி அவன பத்தி totalஆ மறந்துட்டேன்.”

அவள் பேசும்போது கீழேயே தலைகுனிந்து இருந்தாள். அவனின் முகத்தை பார்க்க விருப்பமில்லை. தைரியம் இல்லை.

“ஒரு வாரத்துக்கு முன்னாடி புதுசா ஒரு மேனேஜர் எங்க ஆபிஸ்ல வந்து இருக்கிறார்...விமல் தான் அவர்” என்று தயங்கினாள்.

“நம்ம கல்யாணம் அப்பவே சொல்லனும்னு இருந்தேன்.... ஆனா friendsலாம் வேணாம்னு சொல்லிட்டாங்க.... வரபோறவரு எப்படி எடுத்து பாரு....life spoil ஆயிடும்....அப்படி இப்படின்னு பயபுறுத்தி விட்டாங்க....that's why rohit...am sorry. i didn't want to hide it from you purposely. sorry..." என்று ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டாள்.

“விமல் வந்த பிறகு, i was totally stunned. ஒன்னுமே புரியல. i was totally confused. அவர்கிட்டையும் பேச முடியல.... உன்கிட்டையும் எப்படி சொல்றதுன்னு....என்னால முடியலடா....” என்றவள் தன் நெற்றியில் அடித்துகொண்டாள்.

எல்லாவற்றையும் அமைதியாய் கேட்டவன், “என்னைய பாரு” என்று கத்தினான்!!!

மிரண்டு போன ஷீலா பயந்துபோய் அவன் முகத்தை பார்த்தாள்.

மழையில் நனைந்த பூனைக்குட்டி போல் நடுங்கிய அவளை பார்த்து ‘குபீர்’ என்று சிரித்துவிட்டான் ரோஹித்.

“ஹாஹா... பயந்துட்டீயா? ஹாஹா....oh my god இதுக்கு தான் இந்த mood outஆ? crazy girl...." என்று கைதட்டி சிரிப்பை தொடர்ந்தான்.

என்ன நடக்குமா என்று பயந்து கொண்டிருந்த ஷீலாவுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம் என்று மனம் சற்று அமைதியடைந்தாலும் ஒரு பக்கம் குழப்பமாகவே இருந்தது.

“ரோஹித்...aren't u angry with me?"

"angry? எதுக்கு இதுக்கா....hey u mad woman...college love எல்லாம் ரொம்ப natural. இப்பலாம் 3 லவ் பண்ணிட்டு, கடைசில 4வது பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்கிறாங்க...நம்ம ஆட்டோகராப் படம் பாத்தது இல்ல...அந்த மாதிரி!” என்றவன் அவள் மடியில் கைவைத்து

“இங்க பாருமா...i understand your situation. காலேஜ்ன்னா அப்படி தான் இருக்கும்.one side-love, love letters, sight அடிக்குறது.... இப்படி எத்தனையோ...அதலாம் enjoy பண்ணாதான் life! கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாருக்கும் ஒரு past இருக்கும். அது ஒரு sweet memoryயா மனசுல வச்சுக்கனும். போட்டு குழப்பிக்க கூடாது.”

ரோஹித் பேசியது ஷீலாவின் குழப்பத்திற்கு ஒரு புற்றுபுள்ளி வைத்தது. மனம் நிம்மதி அடைந்தது. அவன்மீது அதிகம் மரியாதை எழுந்தது.

“கல்யாணத்துக்கு அப்பரம் வாழ்க்கைய எப்படி lead பண்றோம்.. அது தான் முக்கியம். i know you really love me lots...எனக்கு தெரியும். அது போதும்.”

ஷீலா “இருந்தாலும்....” என்றாள்.


“ஷீலா, இதலாம் part and parcel of life. என்கிட்ட இதலாம் முன்னாடி share பண்ணியிருக்கலாம்.. அதுக்கு போய் எத்தன டென்ஷன்...எத்தன சோகம்... யப்பா.... ஆனா என் ஷீலாவுக்கு லவ் பண்ண தெரியும்னு நினைக்கும்போது... மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது” என்று அவளை கிண்டல் செய்தான். சிரித்த ஷீலா அவன் கையில் செல்லமாக அடித்தாள்.


“ஷீலா...சொல்லுமா...எப்படி ஆரம்பிச்சுது உங்க love story.” என்று ஆர்வமாய் வினாவிய ரோஹித்திடம் ஷீலா தன் காதல் கதையை சொன்னாள். அவள் சொன்னதை கேட்டுகொண்டிருந்தான். நடந்ததை ஒவ்வொன்றையும் கேட்ட ரோஹித்

“oh my god... you were such a sweet angel... பாவம் விமலுக்கு தான் கொடுத்து வைக்கல...” என்று புன்னகையுடன் கண் சிமிட்டினான்.

“ஒகே ஷீலா, hope u r completely relieved now...let's go out for dinner tonight" என்று சொல்லியபடி hyaat உணவகத்தில் இரண்டு சீட் புக் பண்ண ஃபோன் செய்ய போனான்.

எழுந்தவனின் கையை பிடித்து “thanks dear!" என்றாள் ஷீலா.


“you are most welcome. by the way உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்....next week நம்ம வீட்டுல ஒரு small gathering பண்ணலாம்னு இருக்குறேன். let it be a mini christmas celebration too. ரொம்ப நாளாச்சு நம்ம வீட்டுல gathering வச்சுல.... உன் friends, colleagues எல்லாரையும் invite பண்ணு.... and don't forget to invite விமல்!” என்றான் ரோஹித்.

அவன் அசைவுகளை கண்கொட்டாமல் பார்த்த ஷீலா தனக்குள்ளே சொல்லி கொண்டாள், “i love this crazy fellow."

*முற்றும்*

10 comments:

Sumi Raj said...

touching....

பிரியமுடன்... said...

கதையின் சாரம் ஒன்றும் பெரிசு இல்லை என்றாலும், இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமாகிவிட்டது!

அது என்ன ஆண்கள் லவ் பண்ணிவிட்டு வேறு பெண்களை திருமணம் செய்யலாம், பெண்கள் பண்ணியிருந்தால் மட்டும் ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! உண்மையில் ரோஹித் கதாபாத்திரத்தை போன்றே எல்லா ஆண்கள் இருக்கவேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு!
ஆனால் இது போன்ற ஆண்களை இளிச்சவாயன் என்று நினைத்து புருஷன் இருக்கும்போது...பாய் பிரண்ட் தேடும் படுபாவிகளும் உலகில் அதிகரித்துவிட்டார்கள், அதையும் கருத்தில்கொள்ளவேண்டும்!

இந்த கதையை கூட ஒரு தவறான ஆங்கிலில் பார்போமா...
விமல் வந்தபிறகு ரோஹித்தை கலட்டிவிட பிளான் செய்துதான் அவனை உதாசீன படுத்தியிருப்பாலோ...ஆனால் அவன் அதை சட்டை செய்யாமல் அநியாயத்திற்கு பாசத்தை காட்டியவுடன், சீ...இந்த கழுதையை கழட்டிவிடவே முடியாது போலவே...வேறு வழியில்லை...வீட்டில் இந்த கழுதையையும்,அலுவலகத்தில் அந்த அழகனையும் அட்சஸ் செய்து தொலைக்கவேண்டியதுதான் என்று உண்மையை சொல்லி நல்லவள் போல் நடித்தாலோ....ஹ..ஹ...மன்னிக்கவும், பல கோணத்தில் பார்பது, எழுதுவதும் நம்மை போன்ற பதிவர்களுக்கு அழகு அல்லவா....

Karthik said...

"and they lived happily ever after" right?

nice feel gud story thamizh. i liked it.
:)

FunScribbler said...

@சுமி

நன்றி.

FunScribbler said...

@பிரியமுடன்

//உண்மையில் ரோஹித் கதாபாத்திரத்தை போன்றே எல்லா ஆண்கள் இருக்கவேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு!//

உண்மை தான்!

//இந்த கதையை கூட ஒரு தவறான ஆங்கிலில் பார்போமா//

ஏங்க ஏன்? தெருவுல போற சனியன பனியனுக்குள போட்ட கதையா போச்சு!

//விமல் வந்தபிறகு ரோஹித்தை கலட்டிவிட பிளான் செய்துதான் அவனை உதாசீன படுத்தியிருப்பாலோ...ஆனால் அவன் அதை சட்டை செய்யாமல் அநியாயத்திற்கு பாசத்தை காட்டியவுடன், சீ...இந்த கழுதையை கழட்டிவிடவே முடியாது போலவே...வேறு வழியில்லை...வீட்டில் இந்த கழுதையையும்,அலுவலகத்தில் அந்த அழகனையும் அட்சஸ் செய்து தொலைக்கவேண்டியதுதான் என்று உண்மையை சொல்லி நல்லவள் போல் நடித்தாலோ//

நீங்க இந்த கதையே பிடிக்கல. வேஸ்ட்டான கதையின்னு சொல்லியிருந்தாகூட நான் கவலைப்பட்டிருக்க மட்டேன். ஆனா, இப்படி யோசிச்சு இருக்கீங்கன்னு நினைக்கும்போது இனி கதை எழுதவே பயமா இருக்கு.

//மன்னிக்கவும்,//

முடியாதுங்க...

FunScribbler said...

@karthik

//nice feel gud story thamizh. i liked it.
:)//

thanks pa.

Divya said...

a feel good story:))

Great job Tamilmangani!!

Keep rocking!

நாகை சிவா said...

சஸ்பென்ஸ் எல்லாம் வைக்காம சிம்பிளா முடிச்சுட்டீங்க... சுவீட்....

:))))

FunScribbler said...

@திவ்ஸ்

//a feel good story:))//

அப்படி இருக்க வேண்டும் என்று எண்ணியே எழுதப்பட்டது, உங்களுக்கு அந்த feeling கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி!:)

பிரியமுடன்... said...

மன்னிக்கவேண்டுகிறேன்! நெறைய தமிழ் படங்கள் பார்த்து கெட்டுபோய் இருக்கோம்ல...அதன் தாக்கம்தான் இந்த கருத்து, ஆதாவது தமிழ் சினிமாக்களில் இதுவரை ஏகப்பட்ட கதைகளை பார்த்து பார்த்து நாமலே ஒரு பெரிய கதையாசிரியர் ஆகும் அளவிற்கு அவர்கள் நமக்கு வித்தியாசமான கதைகளை தருகிறார்கள்.....எனவே உங்கள் கதையில் சற்று நடையை மாற்றி எழுதியிருந்ததால் இதுபோன்று நெகடிவ் திங்கிங் வருவதற்கு வாய்பாக இருந்துவிட்டது!
தயவுசெய்து தொடர்ந்து எழுதுங்கள், நானும் நல்ல கருத்துக்களை பின்னூட்டமிடுகிறேன் சரியா! இதுக்கெல்லாம் பயந்தா எப்படி? தமிழ் பெண்களுக்கு அதுவும் சிங்கப்பூர் வாழ் தமிழ் பெண்களுக்கு பயத்தின் அர்த்தமே தெரியகூடாது என்ன சரியா....Thats good! keep it up ya! All d very best n vazthukkal too.....bye