Aug 15, 2008

காதல் எனப்படுவது....யாதெனில்

இந்த தொடர் பதிவோட்டத்தில் என்னை இணைத்த திவ்யாவுக்கு நன்றி! எழுத முடியுமா? என்று கேட்டபோது, சரி என்று தைரியமாக சொன்னேன். ஆனால், எழுத உட்காரும்போது, வார்த்தைகள் வர அடம்பிடிக்குது. முக்கியமான போஸ்ட்கள் (அதாவது, இது போன்றவை) எழுதும்போது, ஆழ்ந்த சிந்தனை தேவை. ஆக, பக்கத்து தெருவில் இருக்கும் பார்க் சென்றுவிடுவேன். அங்க உட்கார்ந்து யோசிச்சாவது, ஏதாச்சு தோணுமான்னு தான்! இதற்கு முன்னால் எழுதியவர்களின் சிலர் பதிவுகளை பார்த்து மிரண்டுவிட்டேன்! சரி கவிதையா எழுதிவிடுவோம் என்று வெள்ளை ஜிப்பா போடாத வைரமுத்து போல யோசித்தேன்...



காதல் எனப்படுவது
காட்டுத்தீயாக இருந்தால்
வா,
நாம் இருவரும்
குளிர்க்காய்வோம்!



காதல் எனப்படுவது
கானல் நீராக இருந்தால்
வா,
நாம் இருவரும்
அதில் மறைந்துபோவோம்!

காதல் எனப்படுவது
கரிசல்காடாக இருந்தால்
வா,
நாம் இருவரும்
அதில் நடந்து செல்வோம்!

காதல் எனப்படுவது
புயல் காற்றாக இருந்தால்
வா,
நாம் இருவரும்
கைகோர்த்து பறந்து செல்வோம்!

காதல் எனப்படுவது
ஆகாய சந்தையாக இருந்தால்
வா,
உன் கண்களைபோல் இருக்கும்
நட்சத்திரங்களையும்
உன் முகம்போல் இருக்கும்
நிலாவையும்
வாங்கி வருவோம்!

எழுதிமுடிப்பதற்கு,2 கிலோ மீட்டர் ஓடி முடித்ததுபோல் ரொம்ப tiredaa போயிட்டேன். இதை எழுதுவது கஷ்டம், ஆனா, அடுத்து யாரை கூப்பிடலாம் என்பது ரொம்ப ஈசி!! தற்போது கவிதைகளா கொட்டி தீர்க்கும் கார்த்திக் அவர்களை அடுத்து அழைக்கிறேன்... வாங்கப்பா மின்னல்...!!:)

31 comments:

மங்களூர் சிவா said...

காதல் எனப்படுவது எப்படி இருந்தாலும் ரெடியா இருக்கீங்க போல!?!?

தப்பும்மா ரொம்ப தப்பு

நிஜமா நல்லவன் said...

ஆஹா...ஒரு முடிவோட தான் எழுதி இருக்கீங்க....:)

நிஜமா நல்லவன் said...

ஒரு வாரமா நீங்க யோசிச்சி யோசிச்சி ஒரு வழியா எழுதிட்டீங்க...நல்லாவே இருக்கு...:)

ஜோசப் பால்ராஜ் said...

//எழுத முடியுமா? என்று கேட்டபோது, சரி என்று தைரியமாக சொன்னேன். ஆனால், எழுத உட்காரும்போது, வார்த்தைகள் வர அடம்பிடிக்குது.//

இங்கயே உங்க கவிதைய ஆரம்பிச்சுட்டீங்க.

ரொம்ப நல்லா இருக்கு பதிவு.
நல்ல கவிதைகள். கவிதாயினி என்று தைரியமாக அழைக்கலாம் அம்மணி.
திவ்யா ஒரு பொறுப்பான ஆளிடம்தான் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
வாழ்த்துக்கள்.

MSK / Saravana said...

//மங்களூர் சிவா said...
காதல் எனப்படுவது எப்படி இருந்தாலும் ரெடியா இருக்கீங்க போல!?!?//

ரிப்பீட்டேய்..

தமிழன்-கறுப்பி... said...

\\\சரி என்று தைரியமாக சொன்னேன். ஆனால், எழுத உட்காரும்போது, வார்த்தைகள் வர அடம்பிடிக்குது. \\\

இதையும் காதல்னுதான் சொல்றாய்ங்க...

தமிழன்-கறுப்பி... said...

காதல்னா இப்படில்லாம் இருக்குமா...

தமிழன்-கறுப்பி... said...

ரொம்ப யோசிச்சிருக்கிங்க போல...:)

தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா said...
\
காதல் எனப்படுவது எப்படி இருந்தாலும் ரெடியா இருக்கீங்க போல!?!?

தப்பும்மா ரொம்ப தப்பு
\

அதத்தானே தல காதல்ன்னுறாங்க...;)

(இதை நான் சொல்லலை)

தமிழன்-கறுப்பி... said...

கவிஞர் காயத்ரி வாழ்க...

Ramya Ramani said...
This comment has been removed by the author.
Ramya Ramani said...

Kalakkals Gayathri :))

ச.பிரேம்குமார் said...

//காதல் எனப்படுவது
காட்டுத்தீயாக இருந்தால்
வா,
நாம் இருவரும்
குளிர்க்காய்வோம்!
//
கலக்கல்

//காதல் எனப்படுவது எப்படி இருந்தாலும் ரெடியா இருக்கீங்க போல தப்பும்மா ரொம்ப தப்பு//

கிகிகி.... நானும் ஒரு ரிப்பீட்டு போட்டுக்கவாம்மா?

ச.பிரேம்குமார் said...

//தற்போது கவிதைகளா கொட்டி தீர்க்கும் கார்த்திக் அவர்களை அடுத்து அழைக்கிறேன்... வாங்கப்பா மின்னல்...!!:)
//

அட்ரா, அட்ரா! நல்ல தேர்வு தான்.. செல்லம் இப்போவெல்லாம் ஒரே காதல் கவிதையா எழுதி கொட்டுறாரு.... கார்த்திக், வாய்யா! வந்து அடிச்சு ஆடு

Known Stranger said...

neengalum khadal enapaduvathu yathenin.

thanks sanjai for visiting my 3rd eye page. ( vaishnav) from paul page. will read your poems and will leave my karuthu ellamay kenathanama than irukum. azhaithu viturgal athanal ungalai thotuvitathu enudaiya kodumai

Karthik said...

//தற்போது கவிதைகளா கொட்டி தீர்க்கும் கார்த்திக் அவர்களை அடுத்து அழைக்கிறேன்...

நான் எழுதியதை கவிதை என்று ஏற்றுக் கொண்டதற்க்கு, நன்றி!

//வாங்கப்பா மின்னல்...!!:)

இது வேறயா? ம்ம்ம்...
:)

Karthik said...

கவிதை சூப்பர்ப்!
:)

Karthik said...

//அட்ரா, அட்ரா! நல்ல தேர்வு தான்..

பிரேம்குமார்

அட, எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க?

Karthik said...

//செல்லம் இப்போவெல்லாம் ஒரே காதல் கவிதையா எழுதி கொட்டுறாரு....

ரேடியோவில இப்பல்லாம் லவ் பாட்டாத்தான் கேட்கப் பிடிக்குது.
:)

பிரியமுடன்... said...

வாழ்க்கையில் வரக்கூடாது என்று சில இருக்கிறது!
வரவேண்டியது என்று சில இருக்கிறது
அதில் ஒன்றுதான் இது....அட அந்த மூன்றெழுத்து நல்லவார்த்தைதான்!
வந்திருந்தால் வாழ்த்துக்கள்!
வாழ்ந்திருந்தால் மகிழ்ச்சி!
ஒரூ கவிதை
ஒருவரின் உள்ளம்!
ஒருவரின் உள்ளம்
ஒரு கவிதை!

கவிதையில்
காதல் இருக்கலாம்
காதலில் எல்லாம்
கவிதை இருப்பதில்லை!
கவிதைக்கு எல்லாம்
காதலும் இல்லை!
எது இருக்கோ இல்லையோ,
உங்க கவிதை ரொம்ப நல்லாயிருக்கு!

FunScribbler said...

வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி:)

FunScribbler said...

@ஜோசப்

//கவிதாயினி என்று தைரியமாக அழைக்கலாம் அம்மணி.//

நன்றி, அப்படியே சேர்த்தே டாக்டர், patient...இப்படி பட்டம் கொடுத்தா நல்லா இருக்கும்:)

FunScribbler said...

@தமிழன்

//ரொம்ப யோசிச்சிருக்கிங்க போல...:)//

மண்டை காஞ்சுடுத்து!!:)

FunScribbler said...

@கார்த்திக்

//ரேடியோவில இப்பல்லாம் லவ் பாட்டாத்தான் கேட்கப் பிடிக்குது.
:)//

part 2 paruthiveeran in the making!:)

Divya said...

காயத்ரி.......கலக்கல்ஸ் கவிதை!!

அசத்திபுட்டீங்க அசத்தி!!

மிகவும் ரசித்தேன் உங்கள் கவிதையை,

வாழ்த்துக்கள் & tag post எழுதியதிற்கு நன்றி காயத்ரி!!

FunScribbler said...

@திவ்ஸ்

வாய்ப்பு அளித்த உங்களுக்கும் நன்றி!::)

கூத்தன் said...

காதல் எனப்படுவது
கரிசல்காடாக இருந்தால்
வா,
நாம் இருவரும்
அதில் நடந்து செல்வோம்!///

அதுல விவாசயம் பண்ணிபாருங்க அப்பால தெரியும் உங்க காதலு..

Divya said...

hi Gayathri...

long time no see,
busy with studies huh?

seekiram oru post potu thakkunga:))

பிரம்மன்கவி என்கிற கிரிநாத் said...

Very nice kavidhaigal... keep writing...

Kindly visit my haiku tamil kavidhai blog and post your comments and feedback please...:-)

http://brahmankavi.blogspot.com

FunScribbler said...

@giri,
உங்க பாராட்டுகளுக்கு நன்றி:)

Om Santhosh said...

ரொம்பவே யோசித்து இருகேங்க நல்ல இருக்கு . ஓடி போறதுலயும் கரெக்டா இருகீங்க