Dec 29, 2008

என்னை ஏமாத்திய கஜினி

ஹிந்தி கஜினி, ஆஹா ஓஹோ என்று முருகதாஸ் ஒரு பக்கம், அமீர் கான் ஒரு பக்கம் படத்தை promote பண்ணியதால் படத்தை பார்க்கும் ஆர்வம் அதிகமானது. நானும் என் தோழிகள் இருவரும் போனோம்.



என்னை ஏமாத்திவிட்டார் அமீர் கான். படம் சுத்த bore! தமிழில் ஏற்கனவே பார்த்துவிட்டதால் என்னவோ, படம் கொஞ்ச நேரத்திலேயே எனக்கு போர் அடித்தது. பாடல்கள் சும்மார் ரகம். ஏ ஆர், kya? என்ன ஆச்சு? ஒரே ஒரு பாடல் மட்டும் தான் நல்லா இருக்கு.



அமீர் கானுக்கும் அசினுக்கும் chemistryயே இல்ல!! அசின் இனி பாலிவுட்டில் பெயர் போடுவது கஷ்டம்! இன்னும் நிறையவே எதிர்பார்த்தேன். காமெடி சீன்களில் அதிகபடியாக நடித்து இருக்கலாம்! என்னமோ போங்க... இந்த வருஷத்த ஒரு நல்ல படம் பார்த்து முடிக்கலாம்னு பார்த்தா இப்படி போச்சு.

ஹிந்தி தெரிந்த ஒரு இயக்குனர் படத்தை இயக்கி இருந்தால், நல்ல இருந்திருக்கும் என்பது எங்கள் கருத்து(தோழிகளும் நானும்). நயன் ரோலில் ஜியா கான்...ஐயோ... நயனே பரவாயில்ல! இயக்குனர், கேமிராமேன், ஹீரோயின், இசையமைப்பாளர் என்று தமிழர்கள் சேர்ந்து ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுத்திருக்க வேண்டாமா!

தமிழிலுள்ள லாஜிக் இடித்தல்களை சரிசெய்ய வேண்டும் என்று நினைத்து திரைக்கதையை சற்று மாற்றி, மெதுவாக நகர்த்திவிட்டார். இந்த படத்தை தான் 2 வருடமா எடுத்தாரா என்று கேள்விகுறியுடன் தியெட்டரிலிருந்து வெளியேறினோம். கிளைமெக்ஸை மாற்றி அமைத்து, கதைக்கு வலுபெறாமல் போனது.

அமீர் கான் 8 pack மட்டுமே பிரமிக்க வைக்கிறது. அதுகூட கதைக்கு எந்த வகையிலும் வலு சேர்க்கவில்லை. தன் கதாபாத்திரத்தை இன்னுமே உள்வாங்கி நடித்துஇருக்காலம் அமீர்! ஆனா, அவர் ஆத்திரத்தில் அழும்போது ரொம்பவே பாவமா இருந்துச்சு!

தோழி தெலுங்கு பொண்ணு. ஆக, இந்த படத்த தெலுங்கில் எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை பாதி படத்திலிருந்து discuss பண்ணி காமெடி செய்து கொண்டிருந்தோம்!

கஜினி- கொல்றீங்க எல்லாரையும்!

6 comments:

சந்தனமுல்லை said...

ஓ அந்தளவுக்கா இருக்கு?? :(

பிரியமுடன்... said...

அம்மா...தாயே...கெளம்பீட்டியா,
என்னை பிரிச்சு மேய்றது இருக்கட்டும், இப்படி எல்லா படங்களையும் பிரிச்சு மேய்வது நிறுத்தினால், பல படம் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்படும், எல்லோரையும் படம்பார்கவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் கிளம்பியிருக்கிறீங்க, நீங்க மட்டும்தானா...இல்ல கூடவே தோழியுமா.....என்ன கொடுமை ....கா..கா...கா....காயத்த்திரி....ஜாரி பேரை மறந்துட்டேன், ஷார்ட் டைம் லாஸ் மெமெரி....தான்.....ஹா.ஹா...ஹா..

விஜய் ஆனந்த் said...

:-)))...

நீங்க ஏன் சினிமா பாக்கறத நிறுத்திட்டு படிப்புல கான்சன்ட்ரேட் பண்ணக்கூடாது!!!

Cable சங்கர் said...

படத்தில் எங்கே திரைகதையில் மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். க்ளைமாக்ஸை தவிர. படம் படு ஸ்லோவா இருக்கிறது என்கிறீர்களே.. அப்படியானல் உங்களுக்கு தமிழ் கஜினி கூடத்தான் ஸ்லோவாக இருக்க வேண்டும்.

priyamudanprabu said...

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

/////

இதுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்
...............

Karthik said...

படம் நல்லாயில்லையா?
:(

புத்தாண்டு வாழ்த்துக்கள்!