Jun 2, 2009

2 வார்த்தைகளில் கதை எழுதலாமாம்!

சுஜாதா எழுதிய 'சிறு சிறு கதைகள்' என்னும் புத்தகத்தில் படித்தது- 2 வார்த்தைகளில் கதை எழுதலாமாம். அவர் சில உதாரணங்களை கொடுத்து உள்ளார். அவை....

தலைப்பு: கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்
கதை: ஐயோ சுட்டுடாதே!

தலைப்பு:2050ல் குழந்தை
கதை: தங்கச்சின்னா என்னம்மா?

தலைப்பு: வசந்தாவின் கணவன்
கதை: சுசீலாவோடு எப்படி?

சரி படிக்கும்போதே ரொம்ப சுவாரஸ்சியமா இருந்துச்சு. நானும் முயற்சி செய்யலாம்னு...

1) தலைப்பு: மாமியாரின் கோபம்
கதை: பொண்ணு பொறந்திருக்கு!

2) தலைப்பு:காதல் கசக்குதய்யா!
கதை: "இந்தாங்க.... invitation."

3) தலைப்பு: முடிவு
கதை: "மச்சி, ஊத்திகிச்சுடா!"

4)தலைப்பு:கனவுகள்
கதை: வேலை போச்சு!

5) தலைப்பு: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
கதை: "யாரும்மா இவரு?"

இந்த கடைசி கதை மட்டும் சிலருக்கு புரியாமல் இருக்கும். அது என்ன மேட்டர்ன்னா... பலர் வெளிநாடுகளில் வேலை செய்கிறோம். லீவு நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும்போது, பிள்ளைகளுக்கு தங்களது அப்பாவையே அடையாளம் காண முடியவில்லை. அந்த அளவுக்கு இருக்கு நிலைமை. அது தான் அந்த கதை! புரிஞ்சுதோ????

23 comments:

சென்ஷி said...

//2) தலைப்பு:காதல் கசக்குதய்யா!
கதை: "இந்தாங்க.... invitation."//

இதில் தலைப்பில் சிறிய மாற்றம்..

தலைப்பு: காதல் கவுக்குதய்யா! :-)

மற்றபடி கடைசி கதை மனதை தொடுகிறது. ஏன்னா அது உண்மை நிகழ்வு. நான் பல இடங்களில் பார்த்ததுண்டு :(

நல்ல முயற்சி.. மற்றும் வாழ்த்துக்கள்!

ஆ! இதழ்கள் said...

நன்றாக இருந்தது.

*இயற்கை ராஜி* said...

தலைப்பு: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
கதை: "யாரும்மா இவரு?"
//


ithu arumai:-(

Anonymous said...

தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
மேலும் படிக்க

http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html

sri said...

Kalakareenga ponga , last story was good

மயாதி said...

நான் கொஞ்சம் சொல்லுறன் எப்படி இருக்கு...(இது என் கதைகள்)

தலைப்பு - கைபேசி
கதை- இருந்தும் என்ன பயன் நீ பேசாமல் .

தலைப்பு - நிஜம்
கதை - யாவும் கற்பனை சில கதைகளின் முடிவில்

தலைப்பு- மூன்று பொய்
கதை- நான் சொல்லுவதெல்லாம் உண்மை நீதிமன்றத்தில்

தலைப்பு-இரு சொல் கதை
கதை- கற்பனை செய்துகொள்

தலைப்பு - ஜனநாயகம்
கதை- எல்லோரும் பேசலாம் எழுதிக்கொடுபபத்தை மட்டும்

தலைப்பு- கலர் டீ வி
கதை - ஓட்டுக்கு லஞ்சம்

தலைப்பு- ஒருசொல் கதை
கதை- முற்றும்

எப்படி இருக்கு நான் என்ட தளத்தில போஸ்ட் பண்ணலாமா ?

சென்ஷி said...

http://pitbuzz.blogspot.com/2009/06/blog-post_03.html


உங்க பதிவு தடுமாறி மெயில் ஏறி ஊர் சுத்தி இன்னொரு புதுப்பதிவா வந்திடுச்சு :-(

ப்ரியமுடன் வசந்த் said...

கலக்கல் கதைகள்.......

Divyapriya said...

super kadhaigal...kadaisi kadhai neenga solradhukku munnaadiye enakku therinjiruchu :))

FunScribbler said...

வாழ்த்துகளுக்கு நன்றி!:)

FunScribbler said...

@மயாதி

//எப்படி இருக்கு நான் என்ட தளத்தில போஸ்ட் பண்ணலாமா ?//

தாராளமா பண்ணுங்கோ!:) அந்த கலர் டீவி கதை சூப்பர்:)

FunScribbler said...

@திவ்யாபிரியா

//.kadaisi kadhai neenga solradhukku munnaadiye enakku therinjiruchu :))//

நன்றி:)

Gowripriya said...

நல்லா இருக்கு. நிறைய பேருக்கு சுஜாதா இந்தக் கதைகள் பற்றி எழுதியிருக்கறது தெரியும்... ஆனா எத்தனை பேர் தானும் எழுத முயற்சி பண்றாங்க?? அதுக்காகவே உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து..

Karthik said...

பின்றீங்கபா! அந்த கடைசி கதை சூப்பர்ப்!! :)

gils said...

WOOOOOOWWWWWWWWW....ella thalaipum kathaiyum toppu..chaancela..sooper eluthirukeenga

FunScribbler said...

@பிரியா

//ஆனா எத்தனை பேர் தானும் எழுத முயற்சி பண்றாங்க?? அதுக்காகவே உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து..//

நன்றி. :)

ச.பிரேம்குமார் said...

//5) தலைப்பு: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
கதை: "யாரும்மா இவரு?"//

:(((

ச.பிரேம்குமார் said...

நல்ல முயற்சி. வாழ்த்துகள் :)

सुREஷ் कुMAர் said...

இப்படியும் கதைகளா..
வித்தியாசமா இருந்தது..
ஐந்துமே சூப்பரப்பு..
வாழ்த்துக்கள்..

ivingobi said...

Thalaippu; Congrats
Story : Simply superb.....
ithu epdi keethu ?

கடைக்குட்டி said...

ஒரு விஷயத்துலேர்ந்து நம்மளும் இப்பிடி பண்ணிப் பார்க்கலாமேன்னு பண்றதுதான் படைப்பின் அடிநாதம்.

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

3 (மட்டும்) பிடிக்கவில்லை...

5-- டிஸ்கி தேவையில்லை..

1,2,4 அருமை

தொடர வாழ்த்துக்கள் தோழி :-)

ஊர்சுற்றி said...

எல்லா கதைகளும் அருமை.

கடைசி கதை நீங்க சொன்ன விளக்கத்துக்கு அப்புறம்தான் புரிஞ்சது.

Anonymous said...

உங்கள் இரண்டு வார்த்தை கதைகள் பற்றி ஓர் எழுத்து ஓர் வார்த்தை இல் சொன்னால் அனைத்து கதைகளும்,

"தீ"

by,
mcxmeega