Jun 16, 2009

கேள்வி கேட்குறது ரொம்ப ஈஸி, பதில் சொல்றது தான் ரொம்ப கஷ்டம்

இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்தவர் srivats. சார், என்னை பழிக்கு பழி வாங்கிவிட்டார்!!:) கீழ்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லனுமாம்!

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

இரண்டு மூனு பெயரை சின்ன பேப்பரில் எழுதி போட்டு கடவுள் முன் வைத்தார்களாம். என் அக்கா தான் ஒரு பெயரை எடுத்தாள். அந்த பெயர்-காயத்ரி. அப்பரம் வலைப்பூ ஆரம்பிக்கும்போது, புனைபெயரில் எழுத வேண்டும் என்ற ஆசை(பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் புனைபெயரில் எழுதுவதால் வந்த தாக்கம்...ஹிஹி...) ஆக ரொம்ப யோசிச்சு தமிழ்மாங்கனின்னு வச்சேன்.(மாம்பழம் பிடிக்கும் என்பதால்)

ஆக, எனக்கு 2 பெயருமே ரொம்ப பிடிக்கும். அப்பரம் காயத்ரி என்ற பெயர் பிடித்தமைக்கு இன்னொரு காரணம் சிம்ரன். ஆமாங்க....நான் அகில உலக சிம்ரன் ரசிகர் மன்றத்தின் தலைவர்!! சிம்ரன் நடித்த ஜோடி மற்றும் சேவல் படங்களில் அவரது பெயர் 'காயத்ரி'!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

நேத்து....

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

கோழி பிரியாணி, கோழி சுக்கா, கோழி வறுவல்....

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ம்ம்ம்...மனசுக்கு தோணிச்சுன்னா, கண்டிப்பா நண்பரா ஆயிடுவேன்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கழிவறையில் குளிக்க பிடிக்கும்! என்னய்யா கேள்வி இது......

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தை.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச‌து: ரொம்ப லொள்ளு பேசுவேன். கொஞ்சம் நல்லா எழுதுவேன்.நிறைய கனவுகள் காண்பது
பிடிக்காத‌து: கோபம், too sensitive

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இந்த கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்!pass!

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படி யாரும் இல்ல. தனிமை ரொம்ப பிடிக்கும்.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
நீல கலர்.

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பார்ப‌து : வேற‌ என்ன‌? க‌ணிணிதான் :)
கேட்ப‌து: ஒன்னுமில்ல.

13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

orange. my favourite colour!!!!!!

14. பிடித்த மணம்?

தமிழ்மணம்(அட்ரா அட்ரா அட்ரா......) ஹாஹா...சரி சரி, பிடித்த மணம்....கோழி குழம்பு வாசம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கோபி: நிறைய எழுத ஆசைப்படுபவர். நல்ல உற்சாகம் கொடுப்பவர்.::)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

அவர் ஒரு ஆங்கில கவிதை எழுதினார். simply superbbb!! http://stavirs007.blogspot.com/2009/06/us-that-never-was.html

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட். we eat, drink, talk,breathe cricket.(not like dhoni) ஆஹா...என்னை அறியாமல் வந்துவிட்டது:)

18. கண்ணாடி அணிபவரா?

perfect eyesight எனக்கு.

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

romantic comedies, thriller, suspense, இந்தி படங்கள் எப்படி இருந்தாலும், பார்த்துவிடுவேன்.

20. கடைசியாகப் பார்த்த படம்?
drag me to hell- வயிறு, கண் எல்லாம் கலங்கிபோச்சு. பேய் படம்ங்க அது! ராத்திரி தூக்கம் வரல!

21. பிடித்த பருவ காலம் எது?

பள்ளி காலம் தான்!

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

self-made man by norah vincent.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

இல்லை.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த‌து: சத்தம்.... எப்படிங்க பிடிக்கும்?

பிடிக்காத‌து: போக்குவரத்து சத்தம்

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
new zealand.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சுடு தண்ணி சூப்பரா போடுவேன். அப்பரம் என்னய்யா கேள்வி இது...தனித்திறமை...keyboard வாசிப்பேன்...:)

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஆண்களின் ஆதிக்கம்

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ஈகோ தான்!

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

queenstown in new zealand. ஆனால் நீண்ட நாள் கனவு- mumbai and new york செல்ல வேண்டும் என்று!

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

bmw car, three-storey bungalow house with mini theatre, swimming pool and a mini gym. mthly income generated: US$30,000
ஹாஹா...எப்படி?

31. மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

நான் இப்ப தான் எல் கே ஜி முடிஞ்சு யூகேஜி போறேன்.:)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
ஒரு வரியில் சொல்ல முடியாதது தான் வாழ்க்கை

(எப்படி காயத்ரி உனக்கு மட்டும் இப்படிலாம் தோணுது....அட்ரா அட்ரா அட்ரா!! ஹிஹி)

16 comments:

வந்தியத்தேவன் said...

//பிடிச்ச‌து: ரொம்ப லொள்ளு பேசுவேன்.
பிடிக்காத‌து: கோபம், too sensitive//

லொள்ளு பேசுபவர்களுக்கு அவ்வளவாக கோபம் வராது.

Prabhu said...

மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

நான் இப்ப தான் எல் கே ஜி முடிஞ்சு யூகேஜி போறேன்.:)
///////

இதுல ஏதோ உள்குத்து இருக்கே! i can smell something fishy/

ivingobi said...

Ungalukku rommmmmmba lollu nu thaan theriyuthe.... ella prblm la yum ennayum izhuthu vachu gummi adikkum pothu..... sari mudinjavarai unmaiya answer solla try pannuren..... k ?
aandavaa en answer a padikka poara viewers a epdiyavathu kasdap pattu kaappathu......

சந்தனமுல்லை said...

:-)) கோழிக்குழம்பு வாசம்...சூப்பர்!

sri said...

Thanks for writing, ungal badhil ellam super and unique.

//self-made man by norah vincent.//

Epdi erukkunnu sollunga :)

சப்ராஸ் அபூ பக்கர் said...

/////ஒரு வரியில் சொல்ல முடியாதது தான் வாழ்க்கை/////

இங்க தான் இருக்குது ஒட்டு மொத்த போய்ன்ட்டும்....

அது சரி..... யாரு உங்கள நடிகர் மன்ற தலைவருக்கு?????? ஐயோ....ஐயோ... சின்ன புள்ளத் தனமா இருக்குது இல்ல???? (ஹி...ஹி.......ஜொல்லு........)

அப்படியே எங்க ஏரியாவுக்கும் வந்துடுங்க......

www.safrasvfm.blogspot.com

ச.பிரேம்குமார் said...

நான் இப்ப தான் எல் கே ஜி முடிஞ்சு யூகேஜி போறேன்.:)//

பொய்க்கு சொல்ற வாய்க்கு போஜனம் கிடைக்காது...

Karthik said...

பதில் சொல்லச் சொன்னா காமடி போஸ்ட் போட்டு சிரிக்க வெச்சிட்டு இருக்கீங்க? :))

LOL.

//நான் அகில உலக சிம்ரன் ரசிகர் மன்றத்தின் தலைவர்!!

அந்த பாட்டி இப்ப எப்படி இருக்காங்க? ;)

//கழிவறையில் குளிக்க பிடிக்கும்!

யூ மீன் குளியலறை? (தமிழ் தெரியாதா? :P)

//ஒரு வரியில் சொல்ல முடியாதது தான் வாழ்க்கை

இதைத்தான் ஸ்ரீமதியும் சொல்லியிருந்தாங்கள்ல? ;)

//(எப்படி காயத்ரி உனக்கு மட்டும் இப்படிலாம் தோணுது....அட்ரா அட்ரா அட்ரா!! ஹிஹி)

இது வேறயா? நடத்துங்க..! ;)

புதியவன் said...

//ஒரு வரியில் சொல்ல முடியாதது தான் வாழ்க்கை//

அதான் சொல்ல முடியாதுன்னு
ஒரு வரில சொல்லிட்டீங்களே...

கலையரசன் said...

மச்சி சோக்கா எலுதுறியே நீ..
மயின்டுல வச்சிகிறேன்!
அப்பாலிகா கண்டுகறேன்..

இப்ப பாலோ பண்றேன்..

FunScribbler said...

@தேவன்

//லொள்ளு பேசுபவர்களுக்கு அவ்வளவாக கோபம் வராது.//

நான் ஆயிரத்தில் ஒருத்தி:)

FunScribbler said...

@பாப்பு

//இதுல ஏதோ உள்குத்து இருக்கே! i can smell something fishy/

இந்த innocent girlல பாத்து எப்படி சொல்லலாமா?:)

FunScribbler said...

@கோபி

//ella prblm la yum ennayum izhuthu vachu gummi adikkum pothu//

ஏதோ என்னால முடிஞ்ச சமூக சேவை:)

FunScribbler said...

@பிரேம் அண்ணா

//பொய்க்கு சொல்ற வாய்க்கு போஜனம் கிடைக்காது...//

அட விடுங்கண்ணா, வாய்க்கு லட்டு, கேசரி கிடைச்சா போதும்!:)

FunScribbler said...

@கார்த்திக்

//அந்த பாட்டி இப்ப எப்படி இருக்காங்க? ;)//

ஹாலோ, உங்க ஏரியாவுக்கு ஆட்டோ வருது!சிங்கத்தின் குகைக்குள்ள நீங்களே entry ஆயிட்டீங்க...:)

FunScribbler said...

@கலையரசன்

//மச்சி சோக்கா எலுதுறியே நீ..//

நன்றி பாஸ்!:)