Jun 9, 2009

ம்ம்ம்....

காலை மணி 6 ஆனது. மாலினி சீக்கிரமாகவே எழுந்துவிட்டாள். குளித்து முடித்துவிட்டு, மாறனுக்கு பிடித்த காலை உணவை தயார் செய்தாள். பூஜை அறையில் சிறிது நேரம் தியானம், ஒரு ஸ்பெஷல் வேண்டுதல். எல்லாவற்றையும் முடித்துவிட்டு, படுக்கை அறைக்குள் சென்றாள். ஆபிஸ் செல்வதற்கு தயாரானாள். மாறனுக்கு பிடித்த வெள்ளை நிற சுடிதார் ஒன்றை அணிந்தாள். கண்ணாடி முன்னாடி நின்று பொட்டு வைக்கும்போது மாறன் இன்னும் உறங்கி கொண்டிருப்பதை கண்டாள்.

அவன் அருகில் அமர்ந்தாள் மாலினி. வெட்கம் கலந்த சந்தோஷம் மாலினியின் உடம்பிலுள்ள நரம்புகளில் ஊடுருவியது. கலைந்திருந்த அவனது முடியை சரி செய்து அவனது காது அருகே, "happy wedding anniversary dear." என கூறலாம் என்று குனிந்தபோது, மாறனின் கைபேசி அலறியது. திடுக்கிட்டு எழுந்தான். மாலினியை கவனிக்கவில்லை.

"ம்ம்ம்...ஒகே. இன்னும் கொஞ்ச நேரத்துல இருப்பேன் ஆபிஸுல..." என்று மாறன் கைபேசியில் பேசிகொண்டே குளியலறைக்கு சென்றான். தன்னை கவனிக்காதது மாலினிக்கு சற்று வருத்தத்தை தந்தது.

மாறன் ரொம்ப ரொம்ப அமைதி. கேட்ட கேள்விக்கு பதில். சத்தமாக சிரிக்ககூட மாட்டான். புன்னகைகூட ஒரு செண்ட்டிமீட்டர் தான். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன்.

காலை உணவை மேசையில் எடுத்த வைத்தாள் மாலினி. வேலை காரணமாக தினமும் அவளால் காலை உணவு செய்ய முடியாது. சாப்பிட உட்கார்ந்த மாறன் எதுவும் பேசவில்லை. இன்று ஸ்பெஷலா செஞ்சு இருக்காளே, ஏதேனும் விசேஷமா என்று மாறன் கேட்பான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றம். மாறன் அமைதியாக சாப்பிட்டான். அவன் இன்றைய நாளை மறந்துவிட்டான்.

"சாப்பாடு நல்லா இருக்கா மாறன்?"

"ம்ம்ம்.. நைஸ்." செய்தித்தாளை புரட்டினான்.

"இன்னிக்கு வெளியே போவோமா?"

"...."

"மாறன்?...."

"i'll msg u later."

காபியை அருந்திவிட்டு உடனே கிளம்பிவிட்டான். மாலினிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உண்மையாகவே மறந்துவிட்டானா, இல்லை வேண்டும் என்றே தெரியாததுபோல் நடிக்கிறானா. surprise ஏதேனும் செய்வதற்காகவே இந்த நடிப்பா என்று அவளுக்குள் பல சிந்தனைகள் ஓட, குழாயில் தண்ணீர் ஓடியது. பாத்திரங்களை கழுவினாள். வீட்டின் வாசல் மணி ஒலித்தது. கதவை திறக்க சென்றாள்.

"சாரி...மறந்துட்டேன் மாலினி..." மாறன் வாசலில். மாலினிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

"என்னோட கார் key..." எடுத்து கொண்டு மறுபடியும் கிளம்பிவிட்டான். மாலினிக்கு ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை.

இவன் ஏன் இப்படி இருக்கிறான். சிரிச்சு பேச மாட்டேங்குறான்... எப்ப பாத்தாலும் வேலை..வேலை... முக்கியமான நாள்கூட ஞாபகமில்ல...- மனதில் புலம்பல்கள் வெடித்தன.

ஆரம்பித்தில் அவனது அமைதியான சுபாவத்தை ரசித்தவள் இன்று அதை ரசிக்க முடியவில்லை. அவன் பக்கத்தில் இருந்தும், அவன் இல்லாததுபோலவே உணர்கிறாள் மாலினி.

தொலைக்காட்சி பார்க்கும்போது மாலினி, "ஏய், அஜித் இந்த மாதிரி மொக்கையான படத்துல நடிச்சு இருந்திருக்க கூடாது. i think his vaali movie was the best... தப்பான படத்துல நடிச்சு அவரோட மார்க்கெட்ட கெடுத்துக்குறான்..."

மாறன் அஜித்தின் தீவிர ரசிகன் என்றபோதும்கூட, "ம்ம்ம்...this movie is bad." அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. அவன் அஜித்தை பத்தி ஏதேனும் சொல்ல, அதற்கு தானும் ஏதேனும் சொல்லி, சின்ன சண்டை போட்டு கொள்ளலாம் என்று மாலினிக்கு ஆசை. இருந்தாலும், வாக்கியத்தின் கடைசியில் முற்றுப்புள்ளி வைப்பதுபோல், மாறன் எல்லாவற்றிருக்கும் ஒரு புன்னகை. புன்னகை அழகாய் தெரிந்த காலம் மாறி இன்று அது மாலினிக்கு பெரிதாய் ஏரிச்சலை உண்டாக்கியது சில நேரங்களில்.

"என்ன ஆச்சு மாலினி?" ஆபிஸை வந்து அடைந்ததும் அவள் தோழி வினாவினாள் மாலினியின் முகத்தை கண்டபிறகு.

"nothing...." என்று சொன்னவள் காலையில் நடந்தவற்றை கொட்டினாள் தோழியிடம்.

தோழி," guys are like that! even mine forgets everything. ஆனா, எந்த cricket match என்னிக்குன்னு கேளு? they have it all at their finger tips." தோழியும் சலித்து கொண்டாள். மீண்டும் தொடர்ந்தாள்,

"சரி நீ மாறனுக்கு ஒன்னும் present பண்ணலைய்யா?"

மாறனின் ஆபிஸில், sheela flower shopலிருந்து ஒரு பையன் நின்றுகொண்டிருந்தான். மாறனின் ஆபிஸில் வேலை பார்க்கும் ஒருவர் அந்த பையனிடம்

"நீங்க யார பாக்க வந்தீங்க?"

அந்த பையன் கையில் ஒரு தாளை நீட்டி, "மிஸ்ட்டர் மாறனோட wife mrs malini, இந்த flower bouquetட்ட மாறன் கேபின்ல வைக்க சொன்னாங்க."

மாறனின் மேசையில் பரிசு வைக்கப்பட்டது. ஆனால், மாறன் கேபினில் இல்லை. அன்று காலை ஆபிஸ் வந்ததும் கம்பெனி விஷயமாக headquartersக்கு சென்றுவிட்டான்.

பூக்களில் இருந்த ஒரு வாழ்த்து அட்டையில்-

hello handsome, happy anniversary. இந்த ஒரு வருஷம் போனதே தெரியல்லடா. இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.just love you lots! ஒரே ஒரு சின்ன request. உன்கூட நிறைய டைம் spend பண்ணனும்னு ஆசையா இருக்கு. நீ நிறைய என்கூட பேசனும்னு ஆசையா இருக்கு. இத படிக்கும்போதாவது கொஞ்சம் சிரியேன்! :) இந்த ஒரு வருஷத்துல நான் ஏதாச்சு தப்பா பேசியிருந்தா, really sorry for that! இப்போ எனக்குள்ள இருக்குற உணர்ச்சிகள பத்தி எழுத வார்த்தைகள் இல்ல.:) அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்.

hugs&kisses

with love,

malini

(இன்னிக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்துருடா!:)

பூக்களும் வாழ்த்து அட்டையும் மேசையில் கிடந்தன.

மாலை மணி 6 ஆனது. மாலினி வீடு திரும்பிவிட்டாள். ஆனால், மாறன் இன்னும் வரவில்லை. எந்த வேலையையும் செய்ய மனமில்லாமல் டிவியிலுள்ள எல்லாம் சேனல்களையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தாள். மாறன் வந்தான் இரவு 9 மணிக்கு. மாலினி உட்கார்ந்து இருப்பதை கவனித்தான். புன்னகையித்தான்.
மாலினி அவனை கண்டு கொள்ளவில்லை. அவனும் எதுவும் பேசவில்லை.

அவனிடம் பேசகூடாது என்று கோபம் இருந்தாலும் அவனிடம் பேசமால் இருக்க முடியவில்லை மாலினிக்கு,

"மாறன், இன்னிக்கு ஆபிஸுல நீ இருந்தியா?"

"இல்லமா, நான் headquartersக்கு போயிட்டேன்."

பரிசை அவன் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை என்பது மாலினி விளங்கியது.

அவனை பார்க்க பிடிக்கமால் திரும்பி படுத்திருந்தாள் மாலினி. நாட்கள், வாரங்கள் ஆயின. அவள் கொடுத்த பரிசை பற்றி கேட்கவில்லை. கேட்க மனமில்லை.

ஒரு சனிக்கிழமையன்று ஏதோ ஒரு சிந்தனையில் மாலினி ஜன்னல் அருகே நின்று யோசித்து கொண்டிருந்தாள். மாறன் பின்னாடியிலிருந்து அவளை அணைத்து, "happy anniversary malini." என்று அவள் இடது காது மடலை அழகாய் உரசினான்.

மாலினிக்கு ஆச்சிரியம்! மறு வினாடி கோபம். இத்தனை வாரங்கள் மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டினாள்.

"ஓ...உனக்கு இப்ப தான் ஞாபகம் வந்துச்சா? for your information, நம்ம கல்யாண நாள் பல வாரத்துக்கு முன்னாடியே வந்துட்டு. உனக்கு இப்ப தான் ஞாபகம் வருதா? அது சரி... உனக்கு என்னையே ஞாபகம் இருக்கான்னு தெரியல்ல...."

மாறன் பேசமால் நின்றான்.

தொடர்ந்தாள் மாலினி, "எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா அன்னிக்கு. ச்சே.... உனக்கு நான் முக்கியமில்ல மாறன். உனக்கு எப்போதும் உன் வேலை தான் பெரிசு. i feel like a stranger in this house....." அவளுக்கு அதற்கு மேல் பேச வார்த்தைகள் வரவில்லை. கண்கள் குளமாகின.

மாறன் பேசினான், "நான் கல்யாண நாள்ல மறக்கல்ல... நீ தான் மறந்துட்ட?"

மாலினிக்கு சற்று குழப்பமாக இருந்தது.

மாறன், "உங்க வீட்டுல உள்ளவங்க சொன்னதுனால, இந்த arranged marriageக்கு ஒத்துகிட்ட. ஆனா, எனக்கு தெரியும் ஆரம்பித்துல உனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சுன்னு....உண்மைய சொல்ல போனா உனக்கு என்னைய பிடிச்சு இருந்துச்சாகூட தெரியல்ல... but after sometime, u became very comfortable. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. முதல் தடவ என்கிட்ட ஐ லவ் யூன்னு சொன்ன. அந்த நாள்ல நான் மறக்கவே இல்ல மா- 8th june 2008. என்னைய பொருத்தவரைக்கும் அன்றைய நாள்லேந்து தான் நாம்ம உண்மையா வாழ ஆரம்பிச்சோம்.... நீ என்கிட்ட ஐ லவ் யூ சொன்ன நேரம்கூட நல்ல ஞாபகம் இருக்கு. it was at 3.30pm. "

கடிகாரத்தை பார்த்தாள் மணி 3.35pm என்று காட்டியது. அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. கன்னங்களில் கண்ணீர் துளிகள் வழிந்தன ஆனந்தத்தால். மேலும் தொடர்ந்தான் மாறன்,

"அன்னிக்கே பாத்தேன் உன் flower bouquetட்ட. it was really sweet.thanks malini. இன்னிக்கு சொல்லனும்னு தான் இருந்தேன், நீ அதுல சொல்லியிருந்த ஆசைய நிறைவேத்திட்டேன். 5 நிமிஷத்துக்கு மேல பேசியிருப்பேன்ல?" என்றான் அந்த ஒரு செண்ட்டிமீட்டர் புன்னகையுடன்.

மாலினி மாறனை இறுக்கி கட்டிபிடித்து கொண்டாள்.

மாறன், "சாரி மா, என் மேல கோபமா?"

மாலினி, "yes you idiot!" செல்லமாய் அவன் நெஞ்சில் அடித்தாள்.

*முற்றும்*
------------------------------------------------------------------------------------

credits: இக்கதையை எடிட்டு செய்ய உதவியாக இருந்த என் அருமை தம்பி வானவில் வீதி கார்த்திக் அவர்களுக்கு ஒரு நன்றி.

8 comments:

Srivats said...

wow!!

chanceless epdi endha maari ellam ezhudhareenga

Characterisation is super, girls mentality guys mentality ellam correcta fit agudhu.

Great going, keep writing such amazing stuff

Karthik said...

really nice, like already said. :)

plz do write stories like this often.

jackiesekar said...

முதல் தடவ என்கிட்ட ஐ லவ் யூன்னு சொன்ன. அந்த நாள்ல நான் மறக்கவே இல்ல மா- 8th june 2008. என்னைய பொருத்தவரைக்கும் அன்றைய நாள்லேந்து தான் நாம்ம உண்மையா வாழ ஆரம்பிச்சோம்.... நீ என்கிட்ட ஐ லவ் யூ சொன்ன நேரம்கூட நல்ல ஞாபகம் இருக்கு. it was at 3.30pm.//

எங்க வீட்ல கூட அப்படித்தான் கதை ரொம்ப நல்லா காதலுடன் இருக்கு

Divyapriya said...

too cute and romantic :)

புதியவன் said...

கதை வழக்கம் போல அருமை...

//நீ என்கிட்ட ஐ லவ் யூ சொன்ன நேரம்கூட நல்ல ஞாபகம் இருக்கு. it was at 3.30pm//

இந்த வரிகள் அழகு...

Thamizhmaangani said...

@sri

//Characterisation is super, girls mentality guys mentality ellam correcta fit agudhu.//

நன்றி நன்றி!:)

@கார்த்திக்

உனக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி கதைக்கு உதவியாய் இருந்ததற்கு.

@சேகர்

உங்க வீட்டுல இந்த கதையா? :) அண்ணிக்கு ஹாய் சொல்லிடுங்க:)

@திவ்யாபிரியா &புதியவன்
உங்களது ஆதரவுக்கு நன்றி நன்றி நன்றி:)

ivingobi said...

Epadi wish panna... hmmmmm.
Chance a illa pa very good Love la irukkura ella feelings m kalanthu irukku...
athuvum konjam sogam kalanthu avlothaana love nu think pannum pothu varum chinna ninaivu kooda Romba periya happy a kudukkum....
thodarnthu ezhuthunmga....
All the best....

VISA said...

Nice:)