Jun 27, 2009

நாடோடிகள்- தார் strong ஆனா ரோடு மேடுபள்ளமா இருக்கு மாமே!

நாடோடிகள்- ரொம்ப எதிர்பார்த்த படம். ஏதோ ஒரு வகையில் என் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் போனது இப்படம்.

நல்ல கதை, நெத்தியடியான கருத்து. நண்பரின் காதலை ஜெயிக்க வைக்க போராடும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை தந்துள்ள படம். ஆனால், திரைக்கதை ரொம்ப மெதுவாய் சென்று, ஒரு இடத்தில் வேறு எங்கோ சென்று, மறுபடியும் அதே trackல் வந்து, சுத்தி....பிறகு கதையை முடித்து இருக்கிறார்கள். கிட்டதட்ட 3 மணி நேரம். எடிட்டர் சார், கொஞ்சம் வெட்டி இருக்க கூடாதா?

சுந்தர் சி பாபுவின் இசை, ஒரு காத்தாழ கண்ணால அல்லது வாளைமீனுக்கும் போன்ற பாடல்களை தராமல் போனது ஏனோ? பாடல்கள் எதுவுமே மனதில் ஒட்டவில்லை.

நடிப்பு பொருத்தவரை, சசிகுமார் சுப்பரமணிபுரம் படத்தில் வந்தது போலவே தெரிகிறார். உடம்பை இன்னும் கொஞ்சம் ரிலேக்ஸா விடுங்க....நல்லா emote பண்ணி நடிங்க....உங்களுக்கு எத்தன பெண் ரசிகர்கள் தெரியுமா சிங்கையில்? இன்னும் நல்லா செஞ்சா, உருகிவிட தயாராக இருக்காங்க.:) நடனம் சுத்தமாக வரவில்லை சசிக்கு. இருந்தாலும் நல்ல முயற்சி. body language, voice modulation ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம்!

கல்லூரி படத்தில் நடித்த பரணி இப்படத்தில் இன்னும் அதிகமாய் நடிக்க நல்ல வாய்ப்பு. முடிந்தவரை பயன்படுத்தியிருக்கிறார். சத்தமாக பேசும்போது வார்த்தைகள் சரியாக விளங்கவில்லை. :( கல்லூரியில் நடித்த மாதிரியே இருந்துச்சு.

கஞ்சா கருப்பு காமெடிக்கு உதவி செஞ்சு இருக்கிறார். அவ்வளவு தான்! சொல்லி கொள்ளும் அளவு அப்படி ஒன்னுமில்ல.

என்னை பொருத்தவரை சென்னை 28 விஜய் தான் கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் நடித்து உள்ளார். ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. நல்ல character artisteஆக வர வாழ்த்துகள்!

படத்தில் வந்த ஹீரோயின்கள்: சசிக்கு வந்த ஜோடிக்கு நல்ல நடிப்பு. அழுவும்போதும், சிரிக்கும்போது, காமெடி செய்யும்போது சிறப்பாய் செய்துள்ளார். சசிக்கு தங்கச்சியாக நடித்த பெண் நிஜமாகவே ஒரு காது கேட்க முடியாதவள்/ வாய் பேச முடியாத பொண்ணு. ஆனால், அவரை பேசி, நடிக்க வைத்துள்ளார் சமுத்தரக்கனி! இந்த இடத்துல உங்கள கண்டிப்பா பாராட்டியே ஆகனும்!

வசனங்கள்- நெத்தியடியான வசனங்கள்!

அரசியல்வாதியாக வரும் நபர் அடிக்கும் லூட்டி ரொம்ப ஜாலியா இருந்துச்சு.
ஒரு காட்சியில் கிணத்தில் குதித்து சாக போகிவிடுவான் சசியின் நண்பன் சரவணன். சசியும் மற்ற நண்பர்களும் சரவணனை மடியில் போட்டு "சரவணா சரவணா" என்று கதறுவார்கள்.

அப்போது அரசியல்வாதி தன் ஆட்களுடன் வந்து சரவணாவை தலைகீழ் நிற்க வைத்து முதுகில் அடித்து அவனை ஒரு குலுக்கு குலுக்கி காப்பாற்றிவிடுவார்கள். அதற்கு அப்பரம் அரசியல்வாதி சொல்வார், "இப்படி பண்ணனும். சும்மா சரவணா சரவணான்னு சொன்னா புழைச்சுடுவானா?"

செம்ம காமெடி பஞ்!

ஆங்காங்கே இயக்குனர் முன்பு எடுத்த அரசி சீரியலின் காட்சிகள் போல் சில தென்பட்டன! :)
கிளைமெக்ஸ் இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக இருந்திருக்கலாமோ!

எனிவே,
நாடோடிகள்- தார் ஸ்ட்ராங், ஆனா ரோடு மேடுபள்ளமா இருக்கு மாமே!

21 comments:

G3 said...

hai. naan firsta innikku :D

G3 said...

//எனிவே,
நாடோடிகள்- தார் ஸ்ட்ராங், ஆனா ரோடு மேடுபள்ளமா இருக்கு மாமே!
//

sema punchchu maamae :)))

மயாதி said...

mmm...

Unknown said...

உடம்பை இன்னும் கொஞ்சம் ரிலேக்ஸா விடுங்க....நல்லா emote பண்ணி நடிங்க....உங்களுக்கு எத்தன பெண் ரசிகர்கள் தெரியுமா சிங்கையில்? இன்னும் நல்லா செஞ்சா, உருகிவிட தயாராக இருக்காங்க.:)


விட்டா ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடுவீங்க போல் இருக்க்கின்றது..


ஆனாலும் படம் மோசமிலைங்க...

சசியோட ஜோடி ரொம்ப சூப்பருங்க..

இராயர் said...

nadotigal release ayidicha??

Karthik said...

எங்க பிடிக்கிறீங்க இந்த மாதிரி பஞ்ச்செல்லாம்? :))

என் மாமா படம் சூப்பரோ சூப்பர்ங்கிறார்??

ivingobi said...
This comment has been removed by the author.
ivingobi said...

நாடோடிகள்- தார் ஸ்ட்ராங், ஆனா ரோடு மேடுபள்ளமா இருக்கு மாமே!

aniyaayathukku poattu thaakkuringa....

Ungalranga said...

மீ டூ சீயிங் த மூவி.

எ மெகா சீரியல் இன் மினி டைம்.!!

Anonymous said...

//இன்னும் நல்லா செஞ்சா, உருகிவிட தயாராக இருக்காங்க.//

"உருகிவிட"வ கொஞ்சம் மாத்தி எழுதுங்க "கி", "வி" மாதிரி தெரியப்போகுது.

இது எப்படி இருக்கு மாமே...

நம்ம கஞ்சா கருப்பு பாணியில் சொல்லனும்னா "விமருசனம் எழுதுறதுக்குல்லாம் ஒரு மொகரவேணுமப்பு".

சரவண வடிவேல்.வே said...

//சசிக்கு தங்கச்சியாக நடித்த பெண் நிஜமாகவே ஒரு காது கேட்க முடியாதவள்/ வாய் பேச முடியாத பொண்ணு. ஆனால், அவரை பேசி, நடிக்க வைத்துள்ளார்///

சமுத்தரக்கனி.. உண்மையாகவே சாதித்துவிட்டார்

சரவண வடிவேல்.வே said...

//சசிக்கு தங்கச்சியாக நடித்த பெண் நிஜமாகவே ஒரு காது கேட்க முடியாதவள்/ வாய் பேச முடியாத பொண்ணு. ஆனால், அவரை பேசி, நடிக்க வைத்துள்ளார்///

சமுத்தரக்கனி.. உண்மையாகவே சாதித்துவிட்டார்

Hari said...

பாராட்ட பட வேண்டிய படம் . விஜய் , விஷால் போன்றவர்கள் பார்த்து திருந்த வேண்டிய படம், மணி ரத்னம் , சங்கர் பயப்பட வேண்டிய படம் .
அது சரி , நீங்க விஷால் ரஷிகையாச்சே , ரோதனை (தோரணை ) படம் பார்கலையா இன்னும் , அதுக்கும் விமர்சனம் போட்டா நல்லா இருக்கும் :) படம் சூப்பர் டூப்பரோ , சத்தமே இல்லாம இருக்கீங்க , அந்த ரோடும் எப்படி இருக்குன்னு பாத்துட்டு வந்து சொல்லுங்க .. :)

Prabhu said...

VIMARSANAMLA elutha arambichutinga? periya aaluthan ponga!

Anonymous said...

படம் சூப்பரோ சூப்பருங்க...எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

Anonymous said...

{ விமருசனம் எழுதுறதுக்குல்லாம் ஒரு மொகரவேணுமப்பு }

அட இங்க‌ பாருங்கடா
அனானிமஸ் சொல்ல வந்துட்டார்
அந்த பொண்ணுக்கு புடிச்சத சொல்லி இருக்கு
உனக்கு புடிச்சா படி இல்லனா விடு
நீ படிக்கலனு யார் அலுதாங்க‌

MyFriend said...

//சுந்தர் சி பாபுவின் இசை, ஒரு காத்தாழ கண்ணால அல்லது வாளைமீனுக்கும் போன்ற பாடல்களை தராமல் போனது ஏனோ? //

நீங்க கானா பாட்டுக்கு ஏங்குறீங்க..

நானோ ஒரு “இடம் பொருள் பார்த்து”, “மனசுக்குள்” பாடல்கள் மாதிரி மனதை வருடும் பாடல் இருக்கும்ன்னு கேட்டு ஏமாந்து போயிட்டேன்..

MyFriend said...

//என்னை பொருத்தவரை சென்னை 28 விஜய் தான் கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் நடித்து உள்ளார். ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. நல்ல character artisteஆக வர வாழ்த்துகள்!//

ஆனா, இவர் சென்னை 28-இல் பார்க்க நல்லா இருந்தார்.. இதுல மீசை எல்லாம் வச்சிக்கிட்டு ரொம்ப வயசானதுபோல் இருக்கு. :-))

MyFriend said...

//Blogger பேரரசன் said...




விட்டா ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடுவீங்க போல் இருக்க்கின்றது..//

இவங்கதான் ஏற்கனவே விஷாலுக்கு ஆரம்பிச்சுட்டாங்கல்ல. :-)

ஊர்சுற்றி said...

கிளைமேக்ஸ் இன்னும் உணர்வுப்பூர்வமா இருக்கணும்னா இரண்டு பேரையும் கொன்னுருக்கணும். அதைச் செய்தால் சரியா?!!!

நல்ல கிளைமேக்ஸ்தான்... நண்பர்களின் மனநிலையை தெளிவாக எடுத்தை வைக்கும் முடிவு.

Anonymous said...

unna lam yaaru vimarsanam pannanum nu azhuthadu... kodumai.... please i beg you... hereafter don't review any movies...