Jan 23, 2009

சும்மா அரட்டை-3

தோழியின் chat status- 'I can't wait for 6th feb to end.' இதை பார்த்தவுடன் அவளின் chat windowவ திறந்து பேச ஆரம்பித்தேன்.

நான்: ஏய் என்னச்சா..... ஏன் 6th feb?என்ன கல்யாணமா உனக்கு?

தோழி: உதை வாங்குவே. இல்லடி, அன்னிக்கு தான் என்னோட insurance policy module பரிட்சை. அது முடிஞ்சதுன்னா, அங்க தல வச்சு படுக்கவே மாட்டேன்! யப்பா சாமி... போதும் அங்க போய் கிளாஸ் படிச்சது.

நான்: ஓ அந்த கம்பெனிக்கு போய் தனியா coaching கொடுப்பாங்களே அங்கவா... i thought u like that personal trainer?...அவரு பெயருகூட... என்னமோ சொன்னியே!

தோழி- கோபிநாத்! :)

நான்: அட வெட்கத்த பாரு....

தோழி: நாங்க ரொம்ப closeஆ போயிட்டோம்.

நான்: நெருக்கம்ன்னா... ஒரு 0.00001 cm?

தோழி: அடியே!!!!

நான்: சரி கூல் கூல்.....

தோழி: but i had a crush on him too. but....

நான்: ஏய்... அவர் படம் இருக்கா... நான் பாக்கனும்!

தோழி: என்கிட்ட இல்லையே...

நான்: அப்பரம் என்ன படிச்ச கிளாஸுல.... அவர் நம்பர் வாங்கனோமா... இமெயில் அட்ரஸ வாங்கனோமா... இப்படி இத பத்தி பேசமா..நீங்க என்ன பண்ணீங்க?

தோழி: ஏய், அவர் தப்பா நினைச்சுப்பாரு.... he will think that i like him or what so ever...

நான்: ச்சே.. இந்த பொண்ணுங்களே இப்படி தான்...

தோழி: ஒய்... என்ன இந்த பொண்ணுங்களே இப்படி தான் சொல்ற... என் இடத்துல நீ இருந்து பார் உனக்கு தெரிஞ்சு இருக்கும்...

நான்: அப்படி ஒரு சான்ஸ் கிடைச்சு இருந்தா.. இந்நேரம் அவங்க பாட்டி பொறந்த தேதி முதல் அவங்க தாத்தா retire ஆனா தேதி வரை full detailsவோட இருந்திருப்பேன்... நீ சுத்த வேஸ்ட்டு! don't be a girl, be a WOMAN!

தோழி: ம்ஹும்ம்ம்....

நான்: சரி சரி... அவரோட பெயரு...... கோபிநாத் ரைட்டு?

தோழி: ஆமா... என் கேட்குற திருப்பி... என்ன பண்ண போற?

நான்: facebookல search பண்ணி பாத்தா, எதாச்சு மாட்டாது?... அதுக்கு தான்.

தோழி: ஏய் அப்படி இருந்தா எனக்கும் லிங் கொடு....

நான்: ஆமாங்கடி....

நான்: ஏய், search results...வந்தாச்சு... gopalakumar gopinath, gaeesh gopinath, senthil gopinath.... சிங்கப்பூர் networkல இவங்க தான் மாட்டுனாங்க.... ஆனா யாருக்குமே படங்கள் இல்ல.

தோழி: அவருக்கு facebook இல்லன்னு நினைக்குறேன்.

நான்: no facebook? does he have a life? இந்த காலத்துல இதுகூட இல்லாம...oh god, இந்த மாதிரி பசங்கள நீ தான் பா காப்பாத்தனும்....

தோழி: இல்லடி, அவருக்கு அதுக்கலாம் டைம் இல்ல.

நான்: அப்ப, நாங்க மட்டும் என்னவாம் டைம பாக்கெட்குள்ளயா வச்சுகிட்டு திரியுறோம்.

தோழி: அப்படி இல்லபா... அவருக்கு அதுல interest இல்ல. ஆனா, நிறைய படம் பார்ப்பாரு... நம்மள மாதிரியே. என்கிட்ட எல்லாத்தையும் சொன்னாரு... late night 1, 2 மணிக்கு தான் படுக்க போவாராம்.

நான்: ஹாஹா.... எல்லாத்தையும் சொல்ற அளவுக்கு closaa...சரி சரி...ரைட்டு!

தோழி: i won't say he is thattttt good-looking, but he is cute.

நான்: இங்க பாரு... பசங்கல அஞ்சு வகை இருக்கு....

தோழி: ஐயோ போதும்டி.... எத்தன தடவ இதயே சொல்லி அறுப்பே.

நான்: ஏய் theory புரிஞ்சா தான்...practicalல நல்லா செய்ய முடியும்.

தோழி: ஒய்...ரொம்ப ஓவரா போது... உனக்கும் ஒரு நாள் இருக்குடி.... உன்கிட்ட எவனாச்சு மாட்டிக்கிட்டு முழிக்க போறான்..

நான்: அபச்சாரம், அபச்சாரம்! யார பாத்து என்ன வார்த்த சொல்லிட்ட... நான் ஆஞ்சநயா பக்தை!! ஜெய் ஆஞ்சநயா!

தோழி: அட கடவுளே! இது ரொம்ம்ம்ப டி உனக்கு! கொடுமை கொடுமை!

நான்: உண்மை கசக்கும் மகளே! anywayz all the best for exam!

தோழி: thanks. meet you at the gathering on monday. tc.

11 comments:

ச.பிரேம்குமார் said...

ஓ மை காட்!!! பொண்ணுங்களும் இப்படித்தானா? ;-)

நாகை சிவா said...

Good One :)

priyamudanprabu said...

//
நெருக்கம்ன்னா... ஒரு 0.00001 cm?
///

ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு ஆகாது...............!!!!!!!!!

Karthik said...

Great chat. :)

//பொண்ணுங்களும் இப்படித்தானா? ;-)

I guess this is moderated version.
:)

சென்ஷி said...

:-)))

தாரணி பிரியா said...

எப்படிங்க இப்படியெல்லாம் :)

//அப்ப, நாங்க மட்டும் என்னவாம் டைம பாக்கெட்குள்ளயா வச்சுகிட்டு திரியுறோம்.//

முடியலை :)


Good Chat ஒரு அஞ்சாறு வருசம் பின்னாடி கூட்டிகிட்டு போயிட்டிங்க. (ஆனா நாங்க அரட்டை அடிச்சது போன்ல :)

FunScribbler said...

@பிரேம்

//ஓ மை காட்!!! பொண்ணுங்களும் இப்படித்தானா? ;-)//

எங்கள மாதிரி நல்ல பொண்ணுங்க இப்படி தான்:)

FunScribbler said...

@நாகை சிவா

நன்றி!:)

FunScribbler said...

@பிரபு

//ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு ஆகாது...............!!!!!!!!!//

என்னங்க பண்றது...:)

FunScribbler said...

@கார்த்திக்

//I guess this is moderated version.
:)//

haha.. no ya. it's sort of the exact chat that we had:)

FunScribbler said...

@பிரியா

//Good Chat ஒரு அஞ்சாறு வருசம் பின்னாடி கூட்டிகிட்டு போயிட்டிங்க. (ஆனா நாங்க அரட்டை அடிச்சது போன்ல :)//

ஓ...நீங்களும் அப்படி தானே! வாங்க வாங்க...