Jan 23, 2009

கடைசி நாளாக இருந்திருக்கும்...

வெள்ளிக்கிழமை மாலை 4 மணி. அம்மா ஃபோன் செய்தார்.

"காயத்ரி. வேலை முடிஞ்சுட்டு...அழைக்க வரீயா?"

"சரி மா" என்று சொல்லி முடித்து கார் சாவியை எடுத்து கொண்டேன்.

4.10 ஆகிவிட்டது. அம்மா வேலை இடத்திற்கு செல்ல இரண்டு வழிகள் உண்டு. expressway மற்றும் normal ரோட். normal ரோட் வழியாக செல்லலாம் என்று மனசு சொல்லியது. ஆனால் ஏனோ தெரியவில்லை expressway பக்கம் திருப்பினேன். கொஞ்ச தூரம் சென்றேன். இடது பக்கம் திரும்புவதற்காக slip roadல் நிறுத்தி main roadல் ஏதேனும் கார் வருதா என்று பார்த்தேன்.

மணி 4.20

நிறுத்தி இருக்கும் வேலையில் பின்னால் இருந்து ஒரு மினி வேன் 'படார்' என்று என் காரை மோதி தள்ளியது! வந்த வேகத்தில் கார் ஒரு குலுங்கு குலுங்கியது!

தூக்கி வாரி போட்டது என் மனம், என் உயிர்!

ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன்!

சீட் பெல்ட் போட்டு இருந்தேன். இல்லையெனில் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே தூக்கி ஏறியப்பட்டிருந்திருப்பேன்.

steering wheelலை டக்கென்று பிடித்து கொண்டேன். இல்லை என்றால், மூக்கு, வாய், பல் எல்லாம் போயிருக்கும்!

ஷாக், கோபம், ஏரிச்சல், படபடப்பு என்று லட்ச உணர்வுகள் ஒரே சமயத்தில்!

காரிலிருந்து இறங்கி வேன் ஓட்டுனரை பார்த்தேன். அவரும் அவரது காரிலிருந்து வெளியே வந்தார். வயது 65வது இருக்கும். அந்த சின்ன slip roadல் எதுக்கு அவருக்கு இந்த வேகம்?

என் கார் பின் பகுதி உடைந்து போனது.
அதை பார்த்தவுடன்
ஏரிமலை போல் கோபம் கொப்பளிக்க "don't you know how to drive? %&*#*#(#"

கெட்ட வார்த்தை அருவி போல் கொட்டியது.
கொஞ்சம் கோபம் தணிந்தது போல் உணர்ந்தேன்.

போலிஸுக்கு ஃபோன் செய்து நடந்தவற்றை கூறினேன்.

"மேடம், யாருக்காச்சு அடிப்பட்டு இருக்கா?"

"இல்லை"

"அப்போ, நீங்க அவரோட கார் நம்பரை மட்டும் எடுத்துங்கோ, insurance claim பண்ணிடுலாம். " என்று முடித்துவிட்டார்.

"what the *(#&#@#$%?"

எனக்கு உதவி தேவைய்யா!! தனியா நின்னு தவிச்சுகிட்டு இருக்கேன்!

உடனே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஃபோன் செய்தேன்.

அதற்குள், வேன் டிரைவர் அவசரப்படுத்தினான். 'why are you wasting my time?' என்று அவர் என்னை பார்த்து கேட்டார். கோபம் மலையையும் தாண்டிவிட்டது. அவர் தண்ணி அடித்து இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். உலற ஆரம்பித்தார், ஒரு இடத்தில் இல்லாமல் அங்கயும் இங்கயும் திரிந்தார். கண்கள் சிவப்பா இருந்துச்சு.

நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன். "ஹாய் வீரா...." என்று ஆரம்பித்து நடந்தவற்றை கூறினேன். அவன் ரொம்ப உதவி செய்தான். அவன் சொன்னதுபோல் செய்தேன்.

மறுபடியும் ஃபோன் செய்தேன் காவலர்களுக்கு.

நான்: இங்க ஒரு accident. வேன் டிரைவர் என் வண்டியை இடித்துவிட்டான். ஆனா, இங்க சத்தம் போட்டு கொண்டு இருக்கிறார். சண்டை போடுகிறார். தண்ணி அடிச்சுட்டு ஓட்டி இருக்கிறார் என்று சந்தேகபடுறேன்.

(நண்பர் கொடுத்த ஐடியா படி நடந்தேன்.)

உடனே காவலர்கள் வந்தார்கள். அப்பா, அம்மா வந்துவிட்டார்கள். நான் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும் தான் ஃபோன் செய்தேன். வீட்டிலுள்ள அக்காவுக்கு விஷயத்தை சொல்லவில்லை. ஆனா, அதற்குள் அம்மா ஃபோன் செய்து "காயத்ரிக்கு accident" என்று முழுவிவரத்தையும் சொல்லாமல் விட்டார்.

அக்கா பாவம்! பயந்துபோய் ஓடி வந்தார்.

காவலர்கள் வந்தார்கள். என்னுடைய details எடுத்து கொண்டு, என்னிடம் கேட்டார்.

"உங்களுக்கு அவர் குடித்து இருக்கிறார் என்று எப்படி தெரியும்?"

உள்மனசு: ம்ம்...அவருக்கு நான் தான் ஊத்தி கொடுத்தேன்.

எனக்கு ஆச்சிரியமாக இருந்தது அவர் கேள்வி. "madam, i didn't say he was drunk. i reported that he might be drunk. i said i just suspect so."

என் பதிலை கேட்டு விட்டு அவரிடம் சென்றார். ஏதோ details எடுத்து கொண்டார்.

கொஞ்ச நேரம் விசாரணைக்கு பிறகு, வேன் டிரைவர் எங்கள் காரை சரி செய்து கொடுக்கிறார் என்று வாக்குறுதி கொடுத்தார்.

உடனே கார் workshopக்கு சென்றோம். அங்கே அவர் என்ன செய்தார் தெரியுமா?

mechanicக்கிடம் சென்று "bumperர சும்மா glue போட்டு ஒட்டி கொடு" என்றார்.

இவரை என்ன செய்வது என்று புரியவில்லை. ஆனால், mechanic நியாயமானவர். உண்மையை சொல்லிவிட்டார். ஒழுங்கான முறையில் எல்லாவற்றையும் செய்தார்.

car bumper, car sensor light, boot area என்று பல இடங்களில் உடைந்துகிடந்தவற்றை சரிசெய்து கொடுத்தார்.
வேன் டிரைவர் அப்பரம் வந்து என் அப்பாவிடன் 'you happy, i happy. everything ok." என்று சொல்லிவிட்டு கைகுலுக்கிவிட்டு சென்றார்.

என்னிடமும் வந்து கை கொடுத்தார். நான் கண்டுகொள்ளாமல் நின்றேன்!

வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, அம்மாவுக்கு மனசு சரியில்லை.

"அப்பவே ஜோசியக்காரன் சொன்னான்..." என்று ஆரம்பித்தார்.

"சட்னி அரைக்கும்போது, கீழே விழுந்துட்டு jar... அப்பவே நினைச்சேன்.." என்றார்.

ஆஹா... இத கேட்ட பிறகு, வேன் டிரைவர் இடித்ததால் கொடுத்த ஷாக் எவ்வளவோ பெட்டர் என்று தோன்றியது!

13 comments:

நிஜமா நல்லவன் said...

வோட் போட்டுட்டேன். உங்களுக்கு எதுவும் ஆகாத வரையில் ரொம்ப சந்தோசம்.....வாழ்க வளமுடன்!

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்..பார்த்துங்க..நாம பார்த்து ஓட்டினாலும்,மத்தவங்க பார்க்காம ஓட்டறாங்களே!!

தமிழன்-கறுப்பி... said...

பாத்துங்க எப்பவுமே நெரிசலற்ற சாலைகள் போக்குவரத்துக்கு உகந்தது...

இராம்/Raam said...

ஏந்தாயி நீங்க ராங்கா போயி இடிச்சிட்டு அந்த ஆளை வம்பிழுந்தமாதிரி இருக்கே... ஹிம் சிங்கப்பூரு'லே கார் ஓட்ட பெரிய தைரியம் வேணும் போலே... :)

Karthik said...

Ooops, இப்ப ஓகேதானே??

//"கடைசி நாளாக இருந்திருக்கும்..."

முதலில் இந்த டைட்டிலோட பயங்கரம் புரியலை. படிச்சு முடிச்சப்புறம்தான் புரியுது.
:((

நவீன் ப்ரகாஷ் said...

//ஆஹா... இத கேட்ட பிறகு, வேன் டிரைவர் இடித்ததால் கொடுத்த ஷாக் எவ்வளவோ பெட்டர் என்று தோன்றியது!//

:))))))

நாகை சிவா said...

//"அப்பவே ஜோசியக்காரன் சொன்னான்..." என்று ஆரம்பித்தார்.//

:))))))))

Thamizhmaangani said...

@நிஜமா நல்லவன்

//வாழ்க வளமுடன்!//

நன்றி:)

Thamizhmaangani said...

@சந்தனமுல்லை

//நாம பார்த்து ஓட்டினாலும்,மத்தவங்க பார்க்காம ஓட்டறாங்களே//

சரியா சொன்னீங்க:)

Thamizhmaangani said...

@கார்த்திக்

//Ooops, இப்ப ஓகேதானே??//

yep now alrite!

வினையூக்கி said...

ம்ம்ம்ம்ம்

பிரியமுடன்... said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகவேண்டும்!

உங்கள் காடியின் பின்புறம் மோதியவர் நேராக நிறுத்தாமல் வந்து மோதினாரா அல்லது உங்கள் பின்னால் நீண்டநேரம் காத்திருந்துவிட்டு நீங்கள் அங்கேயே நிற்பதால் கடுப்பாகி மோதினாரா?

இல்ல ஏன் கேட்கிறேன் என்றால் சமயங்களில் பெண்களின் டிரைவிங் அப்படி வெறுபேற்றும் எல்லோரையும்! ஹி..ஹி.ஹி..
சாரி செல்லம்! ரொம்ப பயத்துட்டியா...இதெல்லாம் ஓட்டும் போது சகஜம்தான். பயம் தேவையில்லை! உன் பெற்றோர்கள் செய்த புண்ணியம் உனக்கு எதுவும் நடக்கவில்லை. நடக்காது! துணிந்து காடியை ஓட்டவும், ஆனால் விரைவுச்சாலையை தவிர்பது நல்லது! சாலைக்கு வந்துவிட்டால்,சகலமும் சாத்தியம்தான்! சமாதனப்படுத்திக்கொள்! ஓட்டும்போது மனதில் பயம் வந்துவிட கூடாது! முட்டாள்தனமாக ஓட்டாமல் இருந்தாலே விபத்துகளை வெகுவாக குறைக்கலாம்! இந்த நேரத்தில் ஒன்றை உன்னிடம் பகிர்ந்துகொள்கிறேன். கடந்த 11 வருடமாக எந்த தவறும் செய்யாமல் சிங்கப்பூரில் காடி ஓட்டினேன், ஆனால் கடந்த வருடம் முதல்தேதி PIE ல் 104 கி.மீ வேகத்தில் ஓட்டியதால் 6 புள்ளிகள் பெற்று என்னுடைய 11 வருட நல்ல சாதனை ஒரு முடிவுக்கு வந்தது. அதுவே எனக்கு பெரிய அளவில் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் அதை ஒரு பாடமாக எடுத்துகொண்டு எந்த தவறும் செய்யாமல் அந்த வருடம் முழுவதும் ஓட்டியதால், அந்த 6 புள்ளிகளும் மீட்டுக்கொள்ளப்பட்டது. இப்போது நல்ல பதிவு உள்ளது. எனவே தயவுசெய்து சாலையில் நடக்கும் சம்பவங்களினால் மனம்தளராமல் இருக்கவும்! உங்கள் கெட்ட நேரம் உங்களைவிட்டு கழிந்துவிட்டது, இனி இதுபோல் நடக்காது, இறைவனை இருக்கிறான்! நம்பிக்கைதான் வாழ்க்கை!!

" உழவன் " " Uzhavan " said...

'you happy, i happy. everything ok."

ஹா ஹா.. ஜூப்பர்

பல நேரங்களில் நம்ம வாழ்க்கையை ஓட்டிட்டுப் போறது இந்த பாழாபோன ஜோசியக்காரங்க தானோ???