Jan 2, 2009

மாப்பிள்ள பாக்க வேண்டிய வயசுல.... என்னை போய்.....

2009 வின் புது வரவு!

8 வருஷமா எங்க வீட்டுல வேலை செஞ்ச பணிப்பெண் இந்த வருஷத்தோட ஊருக்கு போறாங்க. அவங்களுக்கு கல்யாணமாம். திருப்பி வர மாட்டாங்க. பணிப்பெண் என்றாலும் எங்க குடும்பத்துல அவரும் ஒருத்தர். அக்கா, தங்கச்சி, எனக்கும் நல்ல தோழி! அவங்க கிளம்புறது கொஞ்ச கஷ்டமா இருக்கு.... இருந்தாலும் என்ன செய்ய....

சிங்கையில பொதுவா பணிப்பெண்கள் இருந்தால் தான் குடும்ப வண்டி ஓடும். அதுவும் எங்க வீட்டுல கட்டாயம் தேவையான ஒன்று. ஆக, ஒரு புது பணிப்பெண் தேடனும். சென்ற வாரம், ஒரு maid agencyக்கு போனாங்க அம்மாவும் அப்பாவும். எனக்கு தெரியாது இந்த மாதிரி maid agencyகிட்ட 4 மாசத்துக்கு முன்னாடி register பண்ணிவச்சாங்க அப்படி இப்படின்னு.

ஏன் இந்த மாதிரி முக்கியமான விஷயங்கள எங்கிட்ட சொல்லாம விட்டுடீங்கன்னு சரியான கோபத்துல இருந்தேன். கார் ஓட்டிகொண்டே

“ஆமா, ஆமா முக்கியமான விஷயத்துலாம் சொல்லிடாதீங்க. அப்பரம் வீட்டுல ஏதாச்சு நடந்தா...உனக்கு தெரியாதா...நீயும் இந்த வீடுல தானே இருக்கேனு...ஒன்னு சொல்வீங்க...” என்றேன் கோபத்துடன்.

அம்மா: சொல்லிட்டேனு நினைச்சேன்....

நான்: அது எப்படி நினைக்க முடியும்...மறந்துட்டேனு சொல்லுங்க...

maid agency வந்து அடைந்தோம். அவர்கள் இருவரும் மட்டுமே உள்ளே சென்றனர். கார் பார்க் செய்ய இடமில்லாததால் நான் வேறு இடத்திற்கு சென்று கார் நிறுத்தினேன். காரில் நான் உட்கார்ந்து தோழிக்கு ஸ் எம் ஸ் அனுப்பி கொண்டிருந்தேன்.

25 நிமிடம் கழித்து அம்மா ஃபோனில் அழைத்தார்....

அம்மா: காயத்ரி, கார அங்க எங்கயாச்சும் பார்க் பண்ணிட்டு இங்க வா.

நான்: why?

அம்மா: இங்க ஒரு பொண்ணு இருக்கா....வந்து இந்த பொண்ண பாரு.

எனது மனம்: ஆஹா, மாப்பிள்ள பாக்க வேண்டிய வயசுல என்னைய போய் பொண்ண பாக்க வைக்குறாங்களே! என்ன கொடுமை விநாயகா இது!

நான்: பொண்ணா? நானா? நீங்களே decide பண்ணுங்க...நான் வந்து என்னதான் பண்ண போறேன்.

ஃபோனை வைத்துவிட்டேன். 2 நிமிடம் கழித்து அப்பா அழைத்தார். சரி இந்த தடவையும் ‘பிகு’ பண்ணா, சோறு கிடைக்காது என்று நினைத்து.. அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றேன். ஒருத்தர் நின்று கொண்டிருந்தார். ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி இருந்தாங்க..

அம்மா: இவங்க தான். நீ ஏதாச்சு கேள்வி கேட்கனும்னா கேட்டுக்கோ.

அந்த பொண்ணை பார்த்து

“நீங்க எந்த ஹீரோவோட ரசிகர்?” என்று கேட்க வாய் துடித்தது. ஆனால் சொற்களை முழுங்கி கொண்டு

நான்: ஐயோ நான் என்ன கேட்க.... ஒன்னுமில்ல...

என்று சொல்லியபடி அவரை பார்த்து சிரித்து வைத்தேன். பதிலுக்கு அந்த பொண்ணும் சிரித்தார்.

வீட்டில் எத்தனையோ துடைக்க வேண்டிய fanகள் இருந்தாலும், அசைக்க முடியாத மூன்று fanகள் உள்ளன

அஜித் fan- என் அக்கா
விஜய் fan- நான்
சிம்பு fan- என் தங்கச்சி...

புதுசா வரவங்க எந்த கட்சியில சேர போறாங்கன்னு தெரியல...let's wait and watch :)

17 comments:

நாமக்கல் சிபி said...

யாரோட ஃபேன் என்பது ரொம்ப முக்கியமான விஷயமா என்ன?

என்ன கொடுமை சார் இது?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

>>சிங்கையில பொதுவா பணிப்பெண்கள் இருந்தால் தான் குடும்ப வண்டி ஓடும். >>

எதனால் இப்படிச் சொல்கிறீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

>>மாப்பிள்ள பாக்க வேண்டிய வயசுல..>>

ஹலோ,அம்மா,அப்பாஸ் ஆஃப் காயத்ரி,நோட் த பாயிண்ட்...

பூங்குழலி said...

எனது மனம்: ஆஹா, மாப்பிள்ள பாக்க வேண்டிய வயசுல என்னைய போய் பொண்ண பாக்க வைக்குறாங்களே! என்ன கொடுமை விநாயகா இது!
காயு ,உங்க காதல் கவிதையில் எதையாவது வீட்டில் காண்பிக்க வேண்டியது தானே ..பெண் பார்க்கும் படலத்தில் பஜ்ஜி சொஜ்ஜி உண்டா ?

சந்தனமுல்லை said...

:-))

//"மாப்பிள்ள பாக்க வேண்டிய வயசுல.... என்னை போய்....."//

lol!

FunScribbler said...

@ஷிமி

//யாரோட ஃபேன் என்பது ரொம்ப முக்கியமான விஷயமா என்ன?//

கண்டிப்பா ஆமாங்க!

FunScribbler said...

@அறிவன்

//>>சிங்கையில பொதுவா பணிப்பெண்கள் இருந்தால் தான் குடும்ப வண்டி ஓடும். >>

எதனால் இப்படிச் சொல்கிறீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா?//

புள்ளி விவரம் காட்டுதுங்க. வீட்டுல எல்லாரும் வேலைக்கு போயிடுவாங்க. வீட்டுல குழந்தைக்கு பாத்துக்கு ஆளு வேணும்! பாட்டி தாத்தா இருப்பாங்க...அவங்கள பாத்துக்கவும் ஆளு வேணும்! அதுக்கு தான்...

FunScribbler said...

@பூங்குழலி

//உங்க காதல் கவிதையில் எதையாவது வீட்டில் காண்பிக்க வேண்டியது தானே//

ஏங்க... நான் அடி வாங்குறதுல உங்களுக்கு அவ்வளவு ஆனந்தமா!? ஹாஹா...

//பெண் பார்க்கும் படலத்தில் பஜ்ஜி சொஜ்ஜி உண்டா ?//

நோ நோ...only chicken briyani!

மங்களூர் சிவா said...

//"மாப்பிள்ள பாக்க வேண்டிய வயசுல.... என்னை போய்....."//

புரியுது! புரியுது!!
:))))

மங்களூர் சிவா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிரியமுடன்... said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் காயு!
வருஷமும் புதுசு, வந்திருக்கும் பெண்ணும் புதுசு!
வீட்டை சுத்தமாக வைத்திருக்க வந்திருக்கும் பெண்ணின் மனசை அழுக்கு படுத்திவிட வேண்டாம்!
கதாநாயகர்களை நினைத்துகொண்டே வேலை செய்தால்....காப்பியில் சர்க்கரைக்கு பதில் உப்புதான் இருக்கும் சரியா.....உங்க வேலையை நீங்க பாருங்க...ஆதாவது...இந்த ரீல்ஸ்...டிரீம்ஸ்.....பிலீங்ஸ்....போன்ற வேலைகளைச் சொன்னேன்....அந்த பெண் அது வந்த வேலையை பார்க்கட்டும் சரியா....அப்பா, அம்மாவுக்கு மீண்டும் ஒரு ஆள் தேடும் வேலையை வைக்காமல், உங்க வால்தனத்தையெல்லாம் அங்கே காட்டாமல் சும்மா இருங்க ஓகே வா.....

காண்டீபன் said...

//ஆஹா, மாப்பிள்ள பாக்க வேண்டிய வயசுல என்னைய போய் பொண்ண பாக்க வைக்குறாங்களே! என்ன கொடுமை விநாயகா இது!
//

ரசித்தேன்..

வருபவங்க உஷா பேன் ரசிகையா இருந்தா?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தலப்பை நம்பி ஏமாந்துட்டனே.........

priyamudanprabu said...

//
அஜித் fan- என் அக்கா
விஜய் fan- நான்
சிம்பு fan- என் தங்கச்சி...

புதுசா வரவங்க எந்த கட்சியில சேர போறாங்கன்னு தெரியல...let's wait and watch :)
///

இது ஒரு.......................
?????????????????????

Karthik said...

நல்லாருக்கு.
:)

அப்புறம் உங்க அக்காவுக்கு நல்ல டேஸ்ட் இருக்கு.

Shwetha Robert said...

'title' purinjiduchuuuuuu machi nala purinjidicheyyyy:)))

FunScribbler said...

@ஸ்வேதா

//'title' purinjiduchuuuuuu machi nala purinjidicheyyyy:)))//

ஆஹா...என்ன ஒரு வில்லத்தனமான சிரிப்பு!அவ்வ்வ்வ்