Apr 4, 2009

அயன் - கே வி ஆனந்து சாரே, கலக்கிட்டய்யா!

எனக்கு சூர்யாவும் பிடிக்காது(இப்படி உலகத்துல நான் மட்டும் தான் இருப்பேன்னு நினைக்குறேன்), தமன்னாவும் பிடிக்காது...அப்பரம் எதுக்கு நீ அயன் படம் பார்க்க போனேன்னு நீங்க முறைச்சுகிட்டு கேட்பது எனக்கு தெரியது. wait a minute for 5 mintues..அதுக்கு தானே வரேன்.

நான் இந்த படத்தை பார்க்க செல்ல மூன்று பேர் காரணம். இயக்குனர் கே வி ஆனந்த், எடிட்டர் ஆண்டனி, காமெடியன் ஜெகன். மூன்று பேரும் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளனர் என்றே சொல்லலாம்.

கே வி ஆனந்த சாரே, கலக்கிட்டீங்கய்யா! நிறைய யோசிச்சு இருக்கீங்க! அதன் வெளிபாடு நல்லா தெரியுது. இருந்தாலும் சில லாஜிக் இடித்தல்களை சரிசெய்து இருக்கலாம்!

ஆண்டனி- அண்ணா, வா அண்ணா, வா அண்ணா! உன்னைய அடிச்சுக்க ஆளே இல்ல. படத்தை இவ்வளவு விறுவிறுப்பாக போக காரணம் நீங்களும் தான். இருந்தாலும்,அனைத்து பாடல்களின் எடிட்டிங் ஒரே மாதிரி இருக்குப்பா... கொஞ்சம் வேற மாதிரி எடிட்டிங் செய்யுங்க அண்ணா! :)

ஜெகன் - oh my god, jagen, you simply rock i tell u! சமீப காலத்தில் காமெடி என்ற பெயரில் விவேக்கும், வடிவேலும் ரொம்ப டேமேஜ் செய்துவிட்டார்கள். சந்தானம் கொஞ்ச பரவாயில்லை என்ற ரகத்தில் இருக்கிறார். காமெடியில் கலக்க நான் வரேண்டா என்று நீங்கள் வந்து இருப்பது ரொம்ப அருமையாக உள்ளது. மச்சி, அசத்துறீங்க!

படத்தை பார்க்க, நான், என் அக்கா, என் தோழி மூவரும் சென்றோம். படம் ஆரம்பிக்கும் முன் அக்கா கேட்டார், இந்த படத்துல யாரு காமெடியன். நான் உடனே சொன்னேன் , "அநேகமா பிரபு தான்". இருவரும் சிரித்தனர். சீரியஸான சீன்களை தேவையில்லாமல் காமெடியாக்கிவிடுவார் என்று நினைத்தேன். என் கருத்தை தவறாக்கிவிட்டார். சும்மா சொல்லகூடாது, பிரபுவின் நடிப்பு செதுக்கி வைத்தது போல் அளவான நடிப்பு! படத்தின் ஒரு பலம் பிரபு!

romantic comedy thriller என்று வகைப்படுத்தப்பட்டாலும், romance ரொம்ம்பவே குறைவு. காமெடியும் திர்ல்லரும் அதிகம்!
வசனமும், நகைச்சுவையும் இந்த படத்திற்கு ஒரு மிகப்பெரிய ப்ளஸ். இந்த படம் ஏதோ ஒரு ஆங்கில நாவலை தழுவி வந்தது என்று கேள்விப்பட்டேன். கதை என்ன என்பதையெல்லாம் சொல்ல போவது இல்லை. நிறைய வலைபதிவர்கள் எழுதிவிட்டார்கள்.

படத்தில் எனக்கு பிடிக்காதது....

1)பாடல்களின் நடன அமைப்பு சொதப்பல்ஸ்.

2) அடிக்கடி சூர்யா சட்டையை கழட்டி தனது 6-pack உடலை காட்டுவது சலிப்பை தட்டுகிறது.இந்த கதையில் நாயகன் ஓடி கொண்டே இருக்கிறார். எங்க டைம் இருக்கு உடற்பயிற்சி செய்து 6-பேக் உடலை உருவாக்க நேரம் இருக்கு. ஏங்க, தமிழ் சினிமா திருந்தாதா?

3) அண்ணன் ஜெகன் இறந்த பிறகு, தங்கை தமன்னா, அவனது செல்போனில் இருக்கும் video galleryயை பார்ப்பது, யதார்த்தத்தை மீறிய செயலாக இருக்கு.

4)நெருப்பினால் காயம் ஏற்பட்ட பிறகும் நாயகன் டயலாக் பேசுவது! (ச்சே... ஆனந்து சாரு, நீங்களுமா?)

5) கிளைமெக்ஸ் காட்சி, வில்லனும் நாயகனும் ஒன் -டு- ஒன் சண்டை போடுவது.

6) வில்லனக்ளுக்கு ஒரு item song வைப்பது( எந்த வில்லன்களுக்கு கலைகள் மீது இவ்வளவு ஆர்வம் என்று தெரியவில்லை)

7) சூர்யா ஒரு கடத்தல்காரர் என்று தெரிந்தும், custom officers அவனைகூடவே வைத்து கொண்டு குற்றசெயல்களை கண்டுபிடிப்பது, பின்னர் கடைசியாக அவனுக்கு வேலை கொடுப்பது...கொஞ்சம் ஓவரா இருக்கு!

8) சூர்யாவின் அம்மா கடையில் தமன்னா 'whisper sanitary napkin' வாங்க வருவார். அதற்கு சூர்யா, "இது என்னது... அடிக்கடி டீவியில காம்பிக்கிறான்... இது என்ன breadஆ?" என்று கிண்டல் அடிப்பது. சகிக்க முடியாத ஜோக். it was a crude joke, an insulting statement. சென்சார் போர்ட் என்ன செய்து கொண்டிருக்கிறது???

ஐயோ... அப்பரம் இந்த படத்தில் நல்லதே இல்லையா? இருக்கு இருக்கு.... நான் சொன்னவை எல்லாம் படத்தில் ஆங்காங்கே சின்ன சின்ன இடங்களில் வந்தவை.தவிர்த்து இருக்கலாம்.

எனக்கு பிடித்தது....

1) title song

2) ஆப்பிரிக்காவை காட்டிய விதம்

3) விழி மூடிடும் பாடலில் வந்த காட்சிகள். குறும்பின் உச்சக்கட்டம்.

4) வில்லனின் hairstyle(ஹாஹா....)

5)ஆப்பிரிக்காவில் நடந்த stunt chase. stunt coordinator william wong கலக்கி இருக்காரு!

6) உங்களுக்கு அசின் பிடிக்குமா, சமீரா பிடிக்குமா? என்று கேள்விக்கு, "எனக்கு எப்போதும் ஜோ தான்" என்று சூர்யா சொல்வது, அசத்தல்! (கண்ணு, நல்லா பொழைக்க தெரிஞ்சவங்க நீங்க)

7) கதைக்களம்

8) சூர்யாவின் அம்மா கதாபாத்திரத்திற்கு ரேணுகாவை போட்டது. அந்த கதாபாத்திரத்தை அவரால் மட்டுமே செய்யமுடியும் என்ற அளவுக்கு நடித்துவிட்டார்!:)

9) பொன்வண்ணன் காமெடி

சூர்யாவுக்கு இது வெற்றி படமே! சன் பிக்சர்ஸ் முதன் முதலாக ஒரு தரமான படத்தை கொடுத்துள்ளது. பாராட்டுக்கள்!

அயன் - பார்க்கவேண்டிய interesting entertainer!

24 comments:

Karthik said...

hey me the first.

nice review. naalaikku polamnu irukken. :)

Karthik said...

hi, enakkum thamanna pitikathu.

padam ootuma?

Thamizhmaangani said...

@karthik

//hi, enakkum thamanna pitikathu.

padam ootuma?//

அட நம்ம கட்சி? வெரி குட். படத்துல அந்த புள்ள 4 சீன்ல தான் வரும். அதனால கவலை வேணாம். படம் worth watching

satheeskannan said...
This comment has been removed by the author.
satheeskannan said...

தமன்னாவ பிடிக்காதுன்னு சொல்றவன் குருடன் யா... :)
nice review..

மின்னுது மின்னல் said...

மருவதையா போட்டாச்சி...!!

vinoth gowtham said...

Super Review.

.:: மை ஃபிரண்ட் ::. said...

Nice..

Yesterday bought ticket for midnight movie. but i missed the show.. Hmm.. need to buy the ticket again for another show... hmm..

தமிழ் பிரியன் said...

மாசக் கணக்கா காத்துக்கிட்டு கிடந்தீங்களே.. இப்ப தான் ஜென்ம சாபலயம் கிடைத்து போல.. ;-)

Anonymous said...

Hello madam,
I stopped believing guys reviews. They boasted lot abt Vaaranamaayiram. Ippavaraikkum tension poogala... Can I go and watch this movie? You are the only gal has given review abt this movie... I can trust you right... ? I need to travel 4 hrs (up & down) to watch movie. Will be done with my thesis in 10 days time and I really need a break. Neenga paakalam endu sonnaal naan paakiran... Konjam karunai kaatti unmaiyai sollugappa..

Thamizhmaangani said...

@sathees

//தமன்னாவ பிடிக்காதுன்னு சொல்றவன் குருடன் யா... :)
nice review..//

எனக்கும் தமன்னா பிடிக்காதே!:)

Thamizhmaangani said...

@மின்னது மின்னல்

ஓட்டு போட்டதற்கு நன்றி:)

Thamizhmaangani said...

@வினோத் கௌதம்

//super review//

நன்றி:)

Thamizhmaangani said...

@மை ஃபிரண்ட்

//Yesterday bought ticket for midnight movie. but i missed the show.. Hmm.. need to buy the ticket again for another show... hmm..//

ஆஹா வடை போச்சே!:)

Thamizhmaangani said...

@தமிழ் பிரியன்

//இப்ப தான் ஜென்ம சாபலயம் கிடைத்து போல.. ;-)//

ஹாஹா... ஆமாங்க கிட்டதட்ட அப்படிதான்:)

Thamizhmaangani said...

@triumph

//I need to travel 4 hrs (up & down) to watch movie.//

ஆஹா..அவ்வளவு தூரமா?

//Konjam karunai kaatti unmaiyai sollugappa..//

ஆஹா..என்னங்க இப்படி என்னைய மாட்டிவிடுறீங்க.. நான் என்ன சொல்ல... இவ்வளவு தூரம் வந்து படம் பார்க்க வேண்டும் என்றால் எந்த தமிழ் படமும் not worth watching என்றே சொல்லுவேன்.

ஆனா..வேட் வேட்...இப்படம் பார்க்கலாம். உங்களது வேலை பளுவிலிருந்து relax செய்ய ஓரளவுக்கு உதவும் என்று நம்புகிறேன்:)

Suresh said...

arumai valthukkal unga rendu pathivum padichu vottum pottachu kalakunga

goma said...

தரமான விமரிசனத்துக்குக் காத்திருந்தேன் .தந்து விட்டீர்கள் .வேறு யாராவது குழப்பும் முன் சீக்கிரமே அயன் பார்த்துவிடுவேன்

Thamizhmaangani said...

@suresh, goma

பாராட்டுகளுக்கு நன்றி:)

vasanth said...

ஒரு மொக்கை படத்துக்கு இவ்ளோ பெரிய பாராட்டு பத்திரமா?
லாஜிக் இல்லாத கடத்தல் காட்சிகள். கேவலமான காமெடி,அப்புறம் பார்க்க சகிக்க முடியாத காதல் காட்சிகள், சம்பந்தமில்லாத இடைசெருகலாய்
பாடல்கள். நம்ம சூர்யாவுக்கு இது தேவையா?
முதல் பாதி ஜெமினி படம் பார்த்த மாதிரி இருந்தது.அப்புறம் நிறைய ஆங்கில படம்,ஏன் ஹிந்தி கஜினி வரைக்கும் சுட்டுடாங்க.
தப்பு தப்பாய் சென்னை பாஷை பேசுறாரு. திடீர்னு தாறுமாறா இங்கிலீஷ் பேசுறாரு. ஆப்ரிக்கா காங்கோ பாஷை மட்டும் தான் பேசல சூர்யா.முதல் பாதியில கலர் கலராய் போலீஸ் க்கு தண்ணி காட்ற சூர்யா
இரண்டாவது பாதியில போலீஸ் கூட சேர்ந்து படம் பார்க்கிற நம்மளுக்கு கலர் கலராய் பூ சுத்துறாரு.
வழக்கம் போல லூசு குடும்பம், லூசு ஹீரோயின்,மொக்கை வில்லன் வேற எதுவும் சொல்றதுக்கு இல்லை.
சண்டை காட்சிகளில் காமெராவும், இசையும் சூர்யா வுடன் சேர்ந்து
ஆறுதல் தருகிறார்கள். ஜெகனை மட்டும் நம்பி இருக்காமல் நம்ம
தமிழ் நாடு போலீசையும் காமெடிக்கு நல்லா பயன்படுத்தி இருக்காங்க.
இப்படி படம் தர்றதுக்கு கே வி ஆனந்த் திரும்பவும் கேமரா பக்கமும், சுபா பல்சுவை நாவலும் எழுத போயிடலாம்.

@வசந்த்

//ஒரு மொக்கை படத்துக்கு இவ்ளோ பெரிய பாராட்டு பத்திரமா?//

பாஸ், என்ன பாஸ் இது! இந்த படம் மொக்கையின்னா... அப்ப தமிழ் படங்கள் எல்லாமே மொக்கை தான் பாஸ்!:)

Karthik said...

en blogai follow seireenga.. rombha nandri thozhare... nalla vimarsanam.. ore alavarisai!! :)