விஜய்காந்த் நடித்த மரியாதை படத்தை பார்த்தேன் சனிக்கிழமை அன்று. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்த பட போஸ்ட்டரை பார்த்து சிரித்தேன். சரி, விஜயகாந்த் இன்னொரு ஒரு காமெடி படத்தை தரவுள்ளார், வாரணம் ஆயிரம் பார்ட் 2 என்று இமெயிலில் கலாய்த்து இருந்தார்கள். ஆனால், நான் நினைத்தது தவறு என்பதை காட்டிவிட்டார். தேவையில்லாத சண்டை, பஞ் டயலாக், அபத்தமான stunts, சுவரில் ஏறி அடிப்பது என்று எந்த ஒரு காமெடி விஷயத்தையும் செய்யாமல் ஒரு குடும்ப படத்தை தந்து இருக்கிறார்.
கதை, திரைக்கதை எல்லாமே சூர்யவம்சம்+ வானத்தை போல படங்களே! விக்ரமன் இதை விட்டு வெளிவராமல் இருக்கிறார். இருந்தாலும் படத்தில் எனக்கு பிடித்தது ஒரு விஷயம் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள், முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் எதுவுமே இல்லாமல் ஒரு படம். அனைவருமே குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கலாம்! இப்படி ஒரு 'சுத்தமான' படத்தை சமீப காலமாக பார்க்க முடியவில்லை. அப்படி ஒன்றை தந்ததற்கு இயக்குனர் விக்ரமனை பாராட்டியே ஆக வேண்டும்.
படத்தில் எனக்கு பிடித்தது:
1) வசனங்கள். படத்தில் அம்பிகா நன்றாக சமைப்பவர் அல்ல. விஜயகாந்திடம் ,"இத்தன நாளா நான் சமைச்சத எப்படி சகச்சிகிட்டு இருந்தீங்க?" என்று கேட்பார். அதற்கு பதில்- நல்ல சமைக்கறவ தான் வேணும்னா.. கல்யாணம் எதுக்கு. அதுக்கு ஒரு சமையல்காரியே போதுமே. மனைவி என்பவள் அது மட்டும் அல்ல... என்று சொல்வது ரொம்ப யதார்த்தமாக இருந்தது.
2) பெற்றோர்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற கருத்து. தப்பு செஞ்சா கண்டிக்கனும், தொட்டதுக்கு எல்லாம் கண்டிக்க கூடாது என்று வலியுறுத்தும் காட்சிகள்
3) இன்பமே உந்தன் பெயர் பெண்மையோ ரீமிக்ஸ் பாடல்(கேட்பதற்கும் மட்டும் நல்லா இருந்துச்சு)
4) சில நகைச்சுவை காட்சிகள்
படத்தில் பிடிக்காதது:
1) அரைச்ச மாவையே அரைத்தது- கதை, திரைக்கதை
2) பல வருடங்களாக பார்த்து பார்த்து சலித்து போன செண்டிமெண்ட் காட்சிகள்
3) பெண் பார்க்க வரும்போது, பெண்ணை பாட சொல்வது
4) விஜயகாந்த் இன்னும் மகன் கதாபாத்திரத்தில் நடிப்பது
5) பாடல்கள் சுத்த போர். இன்னும் பின்னணி இசைக்கு விக்ரமனின் அக்மார்க் "ல்லலா...ல்லலா..." என்று இசை கொடுப்பது.
6) மீரா ஜாஸ்மீன் ரொம்ம்ப குண்டா தெரியுறாங்க. (கொஞ்ச இடையை குறைக்கவும் அக்கா)
7) எனக்கு பிடித்த வில்லன் சம்பத்(ஹிஹி...) அவருக்கு சின்ன கதாபத்திரத்தை கொடுத்தது.
8) ரீமிக்ஸ் பாடலின் நடனம்! (ஹாஹா....)
எனக்கு இன்னும் புரியாதது. அது எப்படி விக்ரமன் படங்களில் எல்லாருமே நல்லவங்களா இருப்பாங்க. உலகம் இப்படி இல்லை, சார்! லோக்கேஷன்களை மாத்துங்க சார்! வானத்தைபோல படத்தில் வந்த அதே வீடு! உஷ்ஷ்......
சூப்பர் படம் என்றும் சொல்ல முடியாது. மொக்கை படம் என்றும் சொல்லமுடியாது. சில இடங்களில் நல்லா இருக்கும், சில இடங்களில் போர் அடிக்கும். விஜயகாந்த், அம்பிகா, மீனா என்று சீனியர் நடிகர்களை விட்டு விட்டு இளசுகளை வைத்து படம் பண்ணுங்க, விக்ரமன் சார்! திறமைமிக்க ஒரு இயக்குனரிடம் அதிகமான மரியாதை வைத்திருக்கும் ஒரு ரசிகை கேட்டு கொள்வது- அரைச்ச மாவை கொஞ்சம் தள்ளி வைங்க. புதுசா யோசிங்க!
21 comments:
சரியாய் சொன்னீங்க
//3) இன்பமே உந்தன் பெயர் பெண்மையோ ரீமிக்ஸ் பாடல்(கேட்பதற்கும் மட்டும் நல்லா இருந்துச்சு)//
அதுதான் அந்தப் பாடலின் பெருமை. பயங்கரமாக சிதைக்கப் பட்டபின்னும் கூட மக்களைக் கவருகிறது. அதை உண்மையான வடிவத்தைக் கேட்டுப் பாருங்கள். ரீமிக்ஸ் பாடல்களுக்கு எதிராக ஒரு மாபெரும் இயக்கத்தை தொடங்கி விடுவீர்கள்
Romba nalla vimarsanam
Ungalukku romba porumai dhaan!
Vanathai pola konjam , suriya vamsam nalla dhaan erundhudhu.
Ana thirumba thirumba adhey maari thirumbavum padam pakka mudiyaadhu
Oru remix padal vaikanumnu edho sentiment vandhiruchi pola
Sindhu bhairavi fulla pakkala, first paatu mattum parthuttu thungitten :)
// வசனங்கள். படத்தில் அம்பிகா நன்றாக சமைப்பவர் அல்ல. விஜயகாந்திடம் ,"இத்தன நாளா நான் சமைச்சத எப்படி சகச்சிகிட்டு இருந்தீங்க?" என்று கேட்பார். அதற்கு பதில்- நல்ல சமைக்கறவ தான் வேணும்னா.. கல்யாணம் எதுக்கு. அதுக்கு ஒரு சமையல்காரியே போதுமே. மனைவி என்பவள் அது மட்டும் அல்ல... என்று சொல்வது ரொம்ப யதார்த்தமாக இருந்தது.//
தங்கச்சி,
இந்த மெசேஜ் எங்களுக்கா இல்லை தெய்வமச்சானுக்கா? :-)
@srivats
//Oru remix padal vaikanumnu edho sentiment vandhiruchi pola//
அது விக்ரமனுக்கும் வந்தது தான் ரொம்ம்ப ஆச்சிரியமா இருக்கு.
//Sindhu bhairavi fulla pakkala, first paatu mattum parthuttu thungitten :)//
ஓ.. நான் முழுசா பாத்துட்டு நைட் 12 மணிக்கு தான் தூங்குனேன். :) தண்ணி தொட்டி பாடல் சூப்பர்ர்ர்!! தேர்வு முடிஞ்ச எல்லாருக்கும் இப்பாடலை சமர்ப்பிக்கிறேன்.:)
@வெட்டிபயல்
//தங்கச்சி,
இந்த மெசேஜ் எங்களுக்கா இல்லை தெய்வமச்சானுக்கா? :-)//
இரண்டு பேருக்கும் தான்! குறிப்பா ரெண்டாவதா சொன்னீங்களே, அவருக்கு தான்!:)
//இரண்டு பேருக்கும் தான்! குறிப்பா ரெண்டாவதா சொன்னீங்களே, அவருக்கு தான்!:)//
அப்போ தெ.ம கொடுத்து வெச்சவர் தான்.. சமைச்சு போடறேன்னு சொல்லறீங்களே, அதுவே இந்த காலத்துல வரம் தான்!! ஹி ஹி!!
உங்க தலைவர் படத்த இவ்வளவு சீக்கிரம் பாத்து இருக்கீங்க.. விமர்சனமும் செஞ்சாச்சு.. அடுத்து என்ன ? "தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (5) " னு ஒரு பதிவு போடா வேண்டியது தான் பாக்கி!!
@புவனேஷ்
//உங்க தலைவர் படத்த இவ்வளவு சீக்கிரம் பாத்து இருக்கீங்க.. விமர்சனமும் செஞ்சாச்சு.. அடுத்து என்ன ?//
தலைவரா? ஆஹா... அவர் என் தலைவர்னு நான் எப்போ சொன்னேன்..அவ்வ்வ்...
//தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (5) " னு ஒரு பதிவு போடா வேண்டியது தான் பாக்கி!!//
ஓ.. ஒகே... போட்டா போச்சு!:)
ஏங்க தேர்தல் நேரம் என்பதால் அனுதாப ஓட்டு வாங்கும் முயற்சியாக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளீர்களோ!!
அட, மரியாதை படம் பார்த்த விஷயம் பத்திதான் சொல்றேன்!! :))))
இன்னும் பார்க்கல.. பார்த்த பிறகு படித்து பின்னூட்டுகிறேன்..
உங்களை நம்பி பார்க்கப் போகிறேன்... நீண்ட காலத்துக்குப் பிறகு கேப்டனின் படத்தை.. ;)
//திறமைமிக்க ஒரு இயக்குனரிடம் அதிகமான மரியாதை வைத்திருக்கும் ஒரு ரசிகை கேட்டு கொள்வது- அரைச்ச மாவை கொஞ்சம் தள்ளி வைங்க. புதுசா யோசிங்க!! //
திருப்பதிக்கே லட்டா ?? விக்ரமனுகே செண்டிமெண்டா?? இத அவரு பாத்தா அவருக்கு RR ல "லலால.. " கேட்கும்!!
(நீங்களும் ஒரு "லலால.. " Imagine பண்ணி மெதுவா இந்த வசனத்த சொல்லிபாருங்களேன், விக்ரமன் பட வசனம் மாதிரியே இருக்கு!! )
//இன்பமே உந்தன் பெயர் பெண்மையோ ரீமிக்ஸ் பாடல்(கேட்பதற்கும் மட்டும் நல்லா இருந்துச்சு)
என்ன கொடுமை சரோஜா இது?
//மொக்கை படம் என்றும் சொல்லமுடியாது.
என்ன, என்ன கொடுமை சரோஜா இது?
தமிழ், நீங்க ஃப்ரியா இருக்கீங்கன்னு புரியுது. அதுக்காக இப்படியா?
பேசாம கலாவை கூட்டிக்கிட்டு டிஸ்கொதே போயிருக்கலாம்ல? ஒருவேளை பதிவு எழுத மேட்டர் கிடைக்கலையா? ஹி..ஹி! ;)
//பெண் பார்க்க வரும்போது, பெண்ணை பாட சொல்வது
அக்கா, இந்த மெசேஜ் எங்களுக்கா இல்லை தெய்வமச்சானுக்கா? :-)
பிடித்தவைகள் 4; ஆனால் பிடிக்காதது 8.. அப்புறம் எப்படிங்க படம் நல்லாருக்குனு சொல்றீங்க? :-)
போஸ்டர்லயே தலைவரை பார்க்க சகிக்காமத்தான் குங்குமப் பூ.. க்கு போயிட்டேன்.
எங்கே இந்த படத்துக்கு விமர்சனம் யாருமே எழுதாமப் போயிடுவாங்களோன்னு யோசிச்சிட்டு இருந்தேன், உண்ணாவிரதத்தில இன்னிக்கு வலையுலகமே மூழ்கிட்டதால...
நல்ல வேளை, கேப்டன் பட விமர்சனத்தை போட்டீங்க. இதை வச்சே ஒரு வாரத்தை ஓட்டிடலாம். :)))
wow... ungkalukku porumai romba adhigam thaan........ sari yaarantha Theiva machaan..... enakkum sollu thangachi.....
ஹே காயத்ரி... விமர்சனம் நல்லா இருக்கு... அதுவும் சம்பத்க்கு கம்மியா சீன்ஸ் வெச்சதை கண்டிச்சுருக்கீங்க இல்ல? இதை நான் ஆதரிக்கிறேன். படத்துல பார்க்கிற மாதிரி இருக்குற சில முகங்களையும் சரியா காமிக்கலேன்னா எப்படி?
@ரீனா
//படத்துல பார்க்கிற மாதிரி இருக்குற சில முகங்களையும் சரியா காமிக்கலேன்னா எப்படி?//
சரியா சொன்னீங்க யக்கா:)
Inda padam kooda paarthengala?? unga mela enakku periya MARIYAADAI (periya mariyaadai la adhaan CAPS la) vandudichi!!!
www.Tamilers.com
You Are Posting Really Great Articles... Keep It Up...
We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers
தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
தமிழர்ஸின் சேவைகள்
இவ்வார தமிழர்
நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.
இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்
இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.
இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்
சிறந்த தமிழ் வலைப்பூக்கள்
Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.
This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.
"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்
சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.
நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்
Post a Comment