Apr 13, 2009

daddy mummy வீட்டில் இல்ல(series 1)- பகுதி 2

பகுதி 1

"ஓ மை காட்...நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சு தான் சொல்றீயா?" சசி வாயை பிளந்தாள்.

"hey come on girls..இந்த மாதிரி சான்ஸ் நமக்கு இனிமேலு கிடைக்காது. நமக்கு எல்லாருக்குமே கிளப்பிங் போனும்னு ஆசை இருக்கு. ஆனா வீட்டுல விடமாட்டாங்க. நமக்கு கல்யாணமும் ஒன்னு நடந்த பிறகு...புருஷன்கார இதுக்கலாம் ஒத்துப்பானான்னு தெரியாது. இப்ப வீட்டுல யாருமே இல்ல... செம்ம சான்ஸ் டி இது. நம்ம எல்லாருமே போறோம்! ஒகே!" கொள்ளை கூட்டத்தின் தலைவர் போல் ஆர்டர் போட்டாள் கலா.

"ஏய்...இன்னும் ஒரு வாரத்துல நமக்கு பரிட்சை இருக்கு டி...இப்ப போய்...இதலாம் டைம் வேஸ்ட்டு! நான் வரலப்பா!" சுதாவிற்கு பயம் வந்தது.

"ஓய்..காற்றுள்ள போதே தூற்றி கொள்! சின்ன வயசுல படிச்சது இல்ல....படிச்சத மறந்துட்ட பாத்தீயா...நம்ம தமிழ் டீச்சருக்கு துரோகம் பண்ணாதே?" கலா சுதாவை தன் பக்கம் இழுக்க பார்த்தாள். விஜி எப்போதுமே கலா பக்கம் தான்! அதனால், கலாவின் பிளானுக்கு விஜியின் முழு ஆதரவு எப்போதுமே உண்டு.

விஜி, " இங்க பாருங்க டி... நம்ம ரிவிஷன் பிளான் படி காலையில படிச்சுட்டு, மதியம் கொஞ்ச நேரம் தூங்கிட்டு...திருப்பி மறுபடியும் ஈவ்னிங் படிக்கனும். கிளப்பிங் போறதுனால மதியம் தூங்க வேண்டாம்...படிப்போம். இன்னிக்கு உள்ள ரிவிஷன் முடிச்சுட்டா...அப்பரம் என்ன கவலை....?" விஜி தூண்டில் போட்டாள் சுதாவிற்கு. சசி எதுவுமே பேசாமல் வாய் அடைத்து போய் இருந்தாள்.

தொடர்ந்தாள் கலா, "ஏய்..ஏய்...நம்ம அங்க தண்ணி அடிக்க போகல....தம் அடிக்க போகல...சும்மா எப்படி இருக்குன்னு பாத்துட்டு....கொஞ்ச டான்ஸ் ஆடிட்டு, atmosphereஎ நல்லா எஞ்சாய் பண்ணிட்டு வந்திடுவோம்....நம்ம யாருமே கிளப்பிங் போனது இல்ல... இந்த வாய்ப்ப விட்டா...அப்பரம் ரொம்ப கஷ்டம்...யோசிச்சு பாருங்க?"

பாம்பாட்டியின் மகுடிக்கு மயங்கும் பாம்புபோல் சுதா அவர்கள் பக்கம் சேர்ந்துகொண்டாள். சிறிது தயங்கத்துடன், "சரி டி...போவோம்!"சுதாவின் முகத்தில் பிரகாசம் தெரிந்தது. சசி மட்டும் எதுக்கும் அசையவில்லை.

"நோ!!! கிளப்பிங் போறது தப்பு! நான் வரல...."கத்தினாள். அடம்பிடித்தாள் சசி. கொஞ்சம்விட்டால் அழுது இருந்திருப்பாள்.

"எந்த மடையன் சொன்னா அப்படி. இங்க பாரு Miss sasi daughter of sundaralingam, கிளப்பிங் போற எல்லாருமே கெட்டவங்களும் கிடையாது, கோயிலுக்கு போற எல்லாருமே நல்லவங்களும் கிடையாது!" கலா சசியை பார்த்து முறைத்தாள்.

கலா சொன்ன பஞ் டயலாக் பிடித்தபோனவளாய் விஜி, "ஐய்ய்ய்யோ...எப்படி கலா பஞ் எல்லாம் சும்மா அள்ளிவிடுறே."

செய்தித்தாளில் இருந்த சிம்பு படத்தை தொட்டு கும்மிட்டு கலா சொன்னாள், "எல்லா என் தலைவன் சொல்லி கொடுத்தது."

"நீயும் உன் தலைவனும்! ச்சி...." சசி துப்பினாள்.

"ஓய்... மூஞ்சில கண்ணாடி போட்ட உனக்கே இம்புட்டுன்னா...கண்ணாடில மூஞ்சிய பாக்குற எங்களுக்கு எம்புட்டு இருக்கும்!" கலா குதித்தாள். பக்கத்தில் இருந்த சுதா கலாவிடம்

"boss, இந்த பஞ் ரொம்ப கேவலமா இருக்கு பாஸ்!"

"ஹாஹா...சாரி...கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுடேன்...." சமாதானமானாள் கலா. நால்வரும் ஒரு மணி நேரமாய் இதை பற்றியே விவாதம். மணி 2 ஆகிவிட்டது. விஜி சண்டையை முடிக்க ஒன்றே ஒன்று சொன்னாள்,

"சசி, லுக் இயர். இந்த உலகம் February 27th 2014ல அழிய போகுதுன்னு அன்னிக்கு நியூஸ் பேப்பர்ல படிச்சேன். அதுக்கு இன்னும் 5 வருஷம் தான் இருக்கு.... நம்மால எவ்வளவு எஞ்சாய் பண்ண முடியுமோ பண்ணிடலாம்! வருஷத்துக்கு ரெண்டு செம்மஸ்ட்டர் இருக்கு. ரெண்டு தடவ பரிட்சை வரும். ஆனா இந்த சான்ஸ்...ம்ஹூம்..ஒத்துக்கோ டார்லிங்" சசியின் கன்னத்தை தொட்டு கெஞ்சினாள் விஜி. விஜி சொன்ன திடிகிடும் தகவல் சசிக்கு மேலும் வருத்தத்தை கொடுத்தது.

"என்ன விஜி, கெஞ்சிகிட்டு இருக்கே? எங்க ஆத்தா ஆடு வளத்துச்சு, கோழி வளத்துச்சு..ஆனா வீட்ட பாத்துக்க நாய் வளக்கல...அதுக்கு பதிலா சசிய வளத்துச்சுன்னு சொல்லி போயிகிட்டே இருப்பேன்.... இவ வளரலையின்னா வீட்ட பாத்துப்பா?" எரிச்சல் பொங்க கூறினாள் கலா.

சசிக்கு வேறு வழி இல்லை. உலகம் அழிய போகிறது, வீட்டில் தனியாக இருக்க வேண்டும், இரவு நேரம்- ஆகிய சிந்தனைகள் சசிக்குள் ஓட ஒரு முடிவு எடுத்தாள்.

"ஒகே, நான் வரேன்!" சசி சொன்ன போது, கலாவிற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. சசியை கட்டிபிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

"ச்சீ...அசிங்கம்" என்று சசி கன்னங்களை துடைத்தாள்.

மதியம் யாரும் தூங்கவில்லை. தீவிரமாய் படித்து கொண்டிருந்தனர். ஆனால், சசிக்கு பயமாக இருந்தது. அதே சமயம் உள்ளக்குள் சந்தோஷமாகவும் இருந்தது. பக்கத்து தெருவுக்கு போவதற்கே தம்பியை கூட அனுப்புவார்கள் அவள் வீட்டில். இன்று தோழிகளுடன் கிளப்பிங் செல்வது அவளுக்கு, "i am not a girl anymore, i am a WOMAN." என்ற கம்பீரத்தை கொடுத்தது. கொஞ்ச நேரம் சிந்தனைக்கு பிறகு சசி,

"girls... உள்ளே எப்படி இருக்கும்? ஆயத எழுத்து படப்பாட்டு யாக்கை திரி மாதிரி... அங்க சித்தார்த் மாதிரி ஆளுங்க வந்து நம்மள disturb பண்ணா என்ன செய்யுறது?" அப்பாவியாய் கேட்டாள் சசி.

மற்ற மூவரும் ஒருவருக்கொருவர் பார்த்தனர் ஒரு நொடி. மறுநொடி, விழுந்து விழுந்து சிரித்தனர். சுதா,

"அது எப்படி டி, ஒரே நேரத்துல ரெண்டு ஜோக் அடிக்குற?"

"என்ன ரெண்டு ஜோக்?" சசி குழம்பினாள்.

"ஆமாண்டி, நீ திரிஷா....முதல் ஜோக், உன்னைய disturb பண்ணுறவன் சித்தார்த்துன்னு சொன்னீயே...அது வந்து...ரெண்டாவது ஜோக்!" சிரிப்புக்கு நடுவே வார்த்தைகளை விட விஜிக்கு வயிறு வலியே வந்துவிட்டது.

"ச்சி பாவம் டி குழந்தை. தெரியாம தானே கேக்குறா? நீ கவலைப்படாத செல்லம், அங்க போனபிறகு நீயே கத்துப்ப?" கலா சொன்னாள்.

இரவு 8 மணியானது. "டேய், செலவுக்கு காசு?" விஜி ஒரு முக்கியமான விஷயத்தை நினைவுப்படுத்தினாள். சுதாவிற்கு சசிக்கும் திக் என்று இருந்தது. ஐயோ ஒரு வேளை காசு இல்லை என்றால் போக முடியாமல் போய்விடுமோ என்று சுதா வேதனை அடைந்தாள்.

"கலா இருக்க பயம் ஏன்?" என்று சொல்லிவிட்டு கலா ஒரு பெட்டியை எடுத்துவந்தாள். அந்த பெட்டிக்குள் இருந்த இன்னொரு சிறு பையை எடுத்து கீழே கொட்டினாள். பணநோட்டுகள் விழுந்தன.

"என்னடி இது?" சுதா கேட்டாள்.

"சின்ன வயசுலேந்து சேமிச்சு வந்தது." கலா சொன்னாள் ஒவ்வொவரு காசையும் எண்ணியவாறு.

"ஓ...அப்ப உனக்கு சின்ன வயசுலேந்தே கிளப்பிங் போனும்னு ஆசை இருந்துச்சா?" விஜி கேட்டாள்.

"ஐயே... மூஞ்சிய பாரு. அப்படிலாம் ஒன்னுமில்ல. எப்போதுமே சேமிப்பேன். ஆத்தர அவசரத்துக்கு உதவும்னு!" கலா விடை சொன்னாள்.

"கிளப்பிங் போறது உனக்கு ஆத்தர அவசரமா?" சசி கேட்டது கலாவிற்கு கோபம் வர,

"இல்ல மூ..மூ...." என்று பதில் அளிக்க வந்த கலாவின் வாயை மூடினாள் சுதா.

"நோ நோ...நோ bad words here!" சுதா சாந்தப்படுத்தினாள் கலாவை.

"அப்பரம் என்னடி இவ... cross examination பண்ணிக்கிட்டு இருக்கா?" கலா அமைதியானாள்.

சசி மீண்டும் தொடர்ந்தாள், " காசு இருக்கட்டும்! நம்ம எப்படி இப்படியே போறது. புதுசா dress போட்டுக்க வேண்டாமா?" மேதாவி கேள்வி கேட்டாள்.

கலா சசியை பார்த்து சிரித்து கொண்டே, "ஒரு கொசு நீயே இவ்வளவு யோசிக்கும்போது, ஒரு பாஸு நான்...இத யோசிச்சு இருக்கமாட்டேனே?"

தொடர்ந்தாள், "என் அலமாரில நிறைய டிரஸ் இருக்கு. அத போட்டுக்குங்கடி." ஒரு வரியில் பிரச்சனையை முடித்தாள்.

விஜி கேட்டாள், "ஆனா என்னோட சைஸ் கொஞ்சம் பெரிசு. எப்படி உன்னோடது பத்தும்?"

அதற்கும் ஒரு பதில் ரெடியாக வைத்திருந்தாள், "அக்காவோடத எடுத்து போட்டுக்கோ!"

சுதா கலாவின் காலில் விழுந்து, "தலிவா....நீ தான் எங்கள் தலைவி! எல்லாத்துக்கு ஒரு ஐடியா வச்சுருக்கீயா! நீ bsc maths எடுத்ததுக்கு பதிலா business management எடுத்து இருந்தேன்னா...ஒரு பெரிய தொழில் அதிபரா வந்து இருப்பீயே தலிவா!"

இரவு 9 மணி ஆனது. அனைவரும் ரெடியாகி நின்றனர். திரிஷா, ஸ்ரேயா, அசின், நயன் தாரா நால்வரையும் ஒரே நேரத்தில் பார்த்து இருக்கீங்களா? இல்லையா அப்ப கலா, விஜி, சுதா சசியை பாருங்க! இரண்டு குரூப்புக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல!

சமையலறையில் உள்ள நாள்காட்டியை புரட்டி கொண்டிருந்தாள் சசி. சுதா சசியை பார்த்து,

"என்னடி பண்ணுறே?"

சசி அதற்கு, "நல்ல நேரம் பாக்குறேன்?"

கலாவுக்கு சசி செய்யும் லூசுத்தனமான செயலை கண்டு சிரிப்பு வந்தது. "அடியே,first nightக்கா போறோம்? first time clubbing போறோம் டி. இதுக்குமா நல்ல நேரம் பார்ப்பே?"

அனைத்து அறை ஜன்னல்களை சாத்திவிட்டு வந்த கலா சசியின் முகத்தை பார்த்து, "என்னடி இது.குங்குமம் வச்சுருக்க...நம்ம என்ன மாரியாத்தா கோயிலுக்கு கூழ் ஊத்த போறோமா?"

சசி தயக்கத்துடன், "இல்ல கலா. முதன் முதலா ஒரு காரியத்துக்கு போறோம். அதான்...." அவள் இழுத்தாள்.

கலா மீண்டும், " அப்படியே போற வழில ரெண்டு மொழம் பூ வாங்கி வச்சுட்டு வாயேன்!"

சுதாவும் விஜியும் சிரித்தனர். ஜன்னல்களை சாத்திவிட்டோமே, அறை கதவுகளை சாத்திவிட்டோமே என்பதை பார்த்துவிட்டு கிளம்பினார்கள்.

'டிங் டொங், டிங் டொங்' வாசலில் மணி ஒலித்தது.

நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியில் உரைந்தனர்.

(பகுதி 3)

11 comments:

Bhuvanesh said...

கதை சும்மா கல கலனு இருந்துச்சு!!
தொடரும் போட்ட இடம் லக லகனு இருக்கு!!

mvalarpirai said...

என்னங்க இது சங்கரோட பாய்ஸ் மாதிரி இது தமிழ் ஓட கேர்ள்ஸா...என்னமோ போங்க நல்லா இருந்தா சரி..
இந்த கூட்டத்தில கலாவ கூட நம்மிடலாம் சசி மாதிரி இருக்கிற பொண்ணுங்களை தான் நம்ம முடியாது..கிளப்லா கலக்கினது சசிதானே ? :):):)

புதியவன் said...

//கொள்ளை கூட்டத்தின் தலைவர் போல் ஆர்டர் போட்டாள் கலா.//

ஆஹா...என்ன ஒரு அழகான உவமை...

புதியவன் said...

//விஜி, " இங்க பாருங்க டி... நம்ம ரிவிஷன் பிளான் படி காலையில படிச்சுட்டு, மதியம் கொஞ்ச நேரம் தூங்கிட்டு...திருப்பி மறுபடியும் ஈவ்னிங் படிக்கனும். கிளப்பிங் போறதுனால மதியம் தூங்க வேண்டாம்...படிப்போம். இன்னிக்கு உள்ள ரிவிஷன் முடிச்சுட்டா...அப்பரம் என்ன கவலை....?"//

இதத்தான் டைம் ’மேனேஜ்மெண்ட்’ அப்படின்னு சொல்லுராங்களோ...?

புதியவன் said...

//கிளப்பிங் போற எல்லாருமே கெட்டவங்களும் கிடையாது, கோயிலுக்கு போற எல்லாருமே நல்லவங்களும் கிடையாது!//

அருமையான தத்துவம்...

புதியவன் said...

//"என்னடி இது.குங்குமம் வச்சுருக்க...நம்ம என்ன மாரியாத்தா கோயிலுக்கு கூழ் ஊத்த போறோமா?"//

கதையில் உங்கள் நகைச்சுவை உணர்வு வெகுவாக தெரிகிறது...அதுவே கதையின் சிறப்பும் கூட...கதையை தொடருங்க காத்திருக்கிறோம்...

Karthik said...

//மூஞ்சில கண்ணாடி போட்ட உனக்கே இம்புட்டுன்னா...கண்ணாடில மூஞ்சிய பாக்குற எங்களுக்கு எம்புட்டு இருக்கும்!

அட, இது புதுசா இருக்கே! நான் கேட்டதில்லை. :))

//மதியம் யாரும் தூங்கவில்லை.

ஏதோ நடுராத்திரி மாதிரி சொல்றீங்க??? LOL.

//அங்க சித்தார்த் மாதிரி ஆளுங்க வந்து நம்மள disturb பண்ணா என்ன செய்யுறது?

ஹா..ஹா, சிவகாசி போறேன்னு சொன்னா போதும். ஓடிருவாங்க. :)

// திரிஷா, ஸ்ரேயா, அசின், நயன் தாரா நால்வரையும் ஒரே நேரத்தில் பார்த்து இருக்கீங்களா? இல்லையா அப்ப கலா, விஜி, சுதா சசியை பாருங்க!

அவ்வளவு சுமார் தானா?? ;)

Karthik said...

hilarious as ever. :))

keep rocking!

Anonymous said...

//கிளப்பிங் போற எல்லாருமே கெட்டவங்களும் கிடையாது, கோயிலுக்கு போற எல்லாருமே நல்லவங்களும் கிடையாது!//

அருமையான தத்துவம்...

I second in :-)

Hey gal,
Vairu valikkuthu.. Just hilarious as usual. We have a group just like these girls. I mean the way they talk. So, I can, sort of visualize the scenes.

Divya said...

asusuall kalakkals gayathri:))

siriththu , rasiththu padithein.....!

Srivats said...

I was laughing out loud on the following lines,

//இங்க பாரு Miss sasi daughter of sundaralingam,

"ஓய்... மூஞ்சில கண்ணாடி போட்ட உனக்கே இம்புட்டுன்னா...கண்ணாடில மூஞ்சிய பாக்குற எங்களுக்கு எம்புட்டு இருக்கும்!" கலா குதித்தாள். பக்கத்தில் இருந்த சுதா கலாவிடம்

"ஒரு கொசு நீயே இவ்வளவு யோசிக்கும்போது, ஒரு பாஸு நான்...

"என்னடி இது.குங்குமம் வச்சுருக்க...நம்ம என்ன மாரியாத்தா கோயிலுக்கு கூழ் ஊத்த போறோமா?"
//

Chance ellai, please keep writing such funny stuff :)