Apr 20, 2009

daddy mummy வீட்டில் இல்ல(series 1) - பகுதி 5

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4

4 பசங்க, இப்பெண்கள் அமர்ந்து இருக்கும் பஸ் ஸ்ட்டாப்பை நோக்கி வந்தனர்.

"ஏய் 4 குஜிலீங்க..." என்றான் ஒருவன். பெண்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. வேர்க்க ஆரம்பித்தது.

"தோடா...இந்த நேரத்துல...அதுவும் இந்த இடத்துல...நாலு பொண்ணுங்க...என்ன பாப்பாக்களா, பார்ட்டியோட பிக்கப் பாயிண்ட்டா இது?" இன்னொருவன் வாய்க்கு வந்தபடி உளறினான்.

உடனே கலாவுக்கு ஒரு யோசனை வந்தது. தன் கைபையில் இருந்த காலேஜ் identity cardயை வெளியே எடுத்து நீட்டினாள்,

"i am acp அன்புச்செல்வி. we are police on patrol." என்றதும் பசங்களுக்கு அதிர்ச்சி! பசங்க மப்பில் இருந்ததால் கார்ட்டை சரியாக கவனிக்கவில்லை.

பெண்களை சுற்றி நின்றவர்கள் அவர்கள் முன்னாள் சென்றனர். போலீஸ் என்று சொன்னதும் கையில் இருந்த சிகரெட்டையும் பாட்டிலையும் கீழே போட்டனர். பேச முடியாமல் அதில் ஒருவன்,

'சாரி....சாரி...மேடம்..தெரியாம...சாரி." வார்த்தைகள் வெளியே வர மறுத்தன.

தொடர்ந்தாள் கலா, "எங்களுக்கு நிறைய complaint வந்துச்சு. இந்த ஏரியாவுல பசங்க குடிச்சுட்டு வந்து கலாட்டா பண்றதா? சோ...நீங்க தான் அந்த culprits! am i right?" என்று மூன்று முகம் அலேக்ஸ் பாண்டியன் ரஜினி போல் அதட்டினாள்.

"இல்ல மேடம்...இல்ல... நாங்க சும்மா இந்த பக்கமா இன்னிக்கு தான்...இப்ப தான்...." பயத்தினால் என்ன சொல்வது என்று தெரியாமல் தத்தளித்தான்.

"நைட்ல கூட்டமா இப்படி போக கூடாதுன்னு rules இருக்கா இல்லையா?" சாமி விக்ரம் போல் கத்தினாள் கலா. ஒருத்தன் முகத்தை ஒருத்தன் பார்த்து கொண்டான். விஜி, சுதா, சசிக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது எப்படி இந்த கலா இப்படி போட்டு அசத்துகிறாள் என்று.

"கூட்டமா போனதுக்கு, பொது இடத்துல தண்ணி, தம் அடிச்சதுக்கு, பெண்களை கேலி செஞ்சத்துக்கு, அதுவும் பெண் போலீஸ பாத்து கிண்டல் செஞ்சத்துக்கு, சிகரெட்டையும் பாட்டிலையும் கீழே போட்டீயே..பொது இடத்துல குப்ப போட்டதுக்கு....இப்படி வரிசையா charge போட்டா உங்க நிலைமைலாம் என்ன ஆகும் தெரியுமா?" இப்போது honest raj விஜயகாந்த் போல் மாறினாள் கலா.

"மேடம் மேடம்....எங்கள ஒன்னும் பண்ணிடாதீங்க மேடம். படிக்குற பசங்க... எங்க படிப்பு...future எல்லாம் கெட்டு போயிடும் மேடம்." கலாவின் கால்களை பிடித்து கெஞ்சினான் ஒருத்தன்.

"ச்சீ...மேல ஏந்திரி. இந்த புத்தி முன்னாடி இருந்திருக்கனும்....காலேஜ் படிக்குற பசங்களுக்கு நைட்ல என்ன வேலை வெளியே?" கலா சொன்னது பசங்களுக்கு அறிவுரை சொன்னதுபோல் இருந்தாலும் விஜி, சுதா,சசிக்கு சிரிப்பு வந்தது.

"எனக்கு இவன பாத்தா சந்தேகமா இருக்கு... கஞ்சா கடத்துறவன் மாதிரி இருக்கு. check this fellow, constable 420." என்று கலா உத்தரவு போட்டாள் விஜி, சுதா, சசியை பார்த்து. யாரை பார்த்து கூப்பிடுகிறாள் என்று தெரியவில்லை. மூவரும் முழித்தனர்.

"excuse me, constable 420...you....please check him." என்று கலா சசியை பார்த்து கை நீட்டினாள். விஜிக்கும் சுதாவிற்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. சசிக்கு கோபமாக வந்தது.

"மேடம் மேடம்... எங்க கிட்ட ஒன்னுமில்ல மேடம்...." என்று அவனாகவே பாக்கெட்டில் உள்ள அனைத்தையும் வெளியே கொட்டினான். கொட்டிய பொருட்களில் நிறைய சிகரெட்டுக்கள் தான் இருந்தது.

"படிக்குற பசங்களுக்கு சிகரெட்டு ஒரு கெடு..." என்று கலா அவனின் பின் மண்டையில் அடித்தாள்.

"மேடம் மேடம்...சாரி." என்றான் மண்டையை தேய்த்து கொண்டு.

"எந்த காலேஜ்டா நீங்கலாம்?" கலா கொட்டிய பொருட்களை எடுத்து பார்த்தாள்.

"நாங்க கே எல் வி காலேஜ்" என்றார்கள். அந்த காலேஜில் தான் கலாவின் அக்கா பயின்றார். ஆகவே, அந்த காலேஜின் தலைமையாசிரியர் பெயர் கலாவிற்கு தெரிந்து இருந்தது.

"ஓ...உங்க principal...mr SE ashvan kumar தானே." என்றதும் பசங்களுக்கு மேலும் அச்சமாக இருந்தது.

"complaint எதுவும் செஞ்சுடாதீங்க.... நாங்க இனிமேலு... எந்த தப்பும் செய்ய மாட்டோம்." என்று மன்றாடினர்.

கலாவும், "சரி... this is the first and last warning...திரும்பி பாக்காம ஓடி போயிடுங்க... இதலாம் எடுத்துகிட்டு." என்றாள் கீழே விழுந்தகிடந்த பொருட்களை சுட்டி காட்டி. பசங்களும் ஒரே ஓட்டமாக ஓடினர்.

விஜி, சுதா, சசி கலாவை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. "தலிவா... நீ தான் எங்கள் டான்!" என்றாள் சுதா.

"உன் மூளைக்கு என்ன ஒரு மூளை." என்றாள் விஜி.

"எல்லாருக்கும் மூளைக்குள்ள ஐடியா இருக்கும். எனக்கு ஐடியாக்குள்ள தான் மூளையே இருக்கு." தற்பெருமை கொண்டாள் கலா.

"அது ஏண்டி... நீ மட்டும் ஏ சி பி? நான் constableஆ?" சசி கேட்டாள்.

"ஹாஹா.... அந்த நேரத்துல அப்படி வந்துட்டு டி...." கலா கூறினாள். மூவரின் தோள்களில் மீதும் கை போட்டு நடந்தாள் கலா, "நான் இருக்கேன் டி.. உங்கள காப்பாத்த."

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே என்ற தீம் மியூசிக் பின்னாடி ஒலிப்பது உங்களுக்கு கேட்குதா?

கொஞ்ச தூரம் நடந்த பிறகு, ஒரு டெக்ஸி வந்தது. வீடு வந்து அடைந்தனர். போட்டிருந்த ஆடைகளை சும்மா வெறும் தண்ணியில் அலசி எடுத்து காய வைத்தனர் வீட்டில் இருந்த எல்லாம் fanகளை ஆன் செய்து. அப்போதே மணி காலை 5 ஆகிவிட்டது. வேகமாக காய வைக்க, வீட்டில் இருந்த hair dryerயும் உதவிக்கு எடுத்தனர். துணிகளை iron செய்து எப்படி இருந்ததோ அவ்வாறே மடித்து கலாவின் அக்கா பீரோவில் வைத்தனர்.

அடித்து போட்டதுபோல் அவர்கள் உறங்கினர் காலை 6 மணி அளவில். மதியம் 1 மணிக்கு கலாவின் பெற்றோர்களும் அக்காவும் வீடு திரும்பினர். இன்னும் யாரும் எழுமால் இருப்பதை கண்ட கலாவின் அம்மா,

"என்னங்கடி..... இவ்வளவு நேரமா தூக்கம்...எந்திரிங்க..." அவர்களை திட்டினார்.

தூக்க கலக்கத்துடன் விஜி, "ஹாலோ ஆண்ட்டி... எப்ப வந்தீங்க?...."

பாதி தூக்கத்துடன், "அம்மா.... காலையில மூனு மணிக்கு எந்திரிச்சு படிச்சுட்டு இப்ப தான் காலையில 9 மணிக்கு படுத்தோம்.... " மறுபக்கம் புரண்டு படுத்தாள் கலா.

"அம்மா, எல்லாம் பொய் மா. இந்த மூஞ்சிலாம் படிச்சே இருக்காது." கலாவின் அக்கா சீண்டினாள்.

அக்காவின் குரல் கேட்டு எழுந்து உட்கார்ந்தாள் கலா. கலா, "அம்மா....இத ஏன் மா அழைச்சுகிட்டு வந்தீங்க....நான் தான் இதுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சு அங்கேயே விட்டுடு வர சொன்னேன்ல...""

அக்கா, "அப்பா... எங்க பாருங்க."

அப்பா, "அடடா...வந்தவுடனே ஆரம்பிச்சாச்சா.... சரி சரி...girls...எந்திரிங்க..." கலாவின் பெற்றோர்களும் அக்காவும் கலாவின் அறையைவிட்டு சென்றனர்.

இவர்கள் போட்ட சத்தத்தில் அனைவரும் எழுந்துவிட்டனர். படுக்கையில் புரண்டு கொண்டிருந்த கலா மற்ற பெண்களை பார்த்து, " டேடி மம்மீ பாட்டுக்கு சரியா ஆடாம விட்டுடோம்ல.."

சசி," நீ திருந்தவே மாட்டீயா? உயிர் போய் உயிர் வந்துருக்க.... உன் பேச்ச இனி கேக்கவே கூடாது." விரிந்திருந்த கூந்தலை கட்டினாள்.

"உங்களுக்கு ஒரு புது உலகத்தையே காட்டியிருக்கேன். என்னைய போய்.... ச்செ... நன்றி கெட்ட உலகம்டா இது." கலா சொன்னாள்.

"ஓய்... ஆனா... இத பத்தி வெளியே மூச்சு விட கூடாது. ஏய் சசி உனக்கு தான் முக்கிய சொல்றேன். நம்ம நாலு பேருக்குள்ள தான் இருக்கனும். யாருகிட்டயாவது உலறி வச்சே....you will be going straight into the coffin." கட்டளை போட்டாள் விஜி.

அச்சமயம் சசியின் கைபேசி ஒலித்தது. சுதா பக்கத்தில் தான் கைபேசி இருந்தது.

"வீட்டுலேந்து தம்பி மேசேஜா இருக்கும்....எப்ப வர? என் இவ்வளவு லேட்டு அப்படின்னு இருக்கும்... எடுத்து என்னான்னு படி டி...." சலிப்புடன் சசி.

சுதா எடுத்து படித்தாள் -

ஹாய், நான் தான். நேத்திக்கு கிளப்புல தெரியாம உங்க சீட் பக்கத்துல உட்கார்ந்தேனே. நீங்க கூட ஹாலோன்னு சொன்னீங்களே. hope you remember me.:) அப்ப பாக்கும்போதே யோசிச்சேன்...உங்கள எங்கேயோ பாத்த மாதிரி இருக்கேன்னு. அப்பரம் இன்னிக்கு தான் facebookல சும்மா பாத்துகிட்டு இருந்தபோது....கண்டுபிடிச்சேன்...you are my brother's friend's sister. என் அண்ணா கல்யாணத்துல உங்கள பாத்துருக்கேன். நம்பர் எப்படி கண்டுபிடிச்சேன்னு கேக்காதீங்க. அது ரகசியம்!நேத்திக்கு நீங்களும் ரொம்ப மூட் அவுட்ல இருந்தீங்க...அதான்...சும்மா... are you alright today? :)

விஜி சுதா கலாவிற்கு அதிர்ச்சி. சசிக்கு அதற்கும் மேல்!

கலா, "ஓய்... என்ன டி நடக்குது இங்க? இதலாம் எப்ப டி நடந்துச்சு."

சசி, "சத்யமா எனக்கு எதுவுமே தெரியாதுடி."

விஜி, "நாங்க அங்க soundtrackக்கு ஆடிகிட்டு இருந்தப்ப...நீ இங்க ஒரு lovetrack ஓடிகிட்டு இருந்திருக்க!"

சசி, "ஐயோ அநியாயமா பேசாத."

சுதா,"ஒன்னு தெரியாத பாப்பு, குளிக்காத போது போட்டாளாம் சோப்பு!"

மற்ற மூவரும் சிரித்து கும்மாளம் போட, சசிக்கு மட்டும் ஒரு மாதிரியாக இருந்தது. சசியின் கைபேசி மீண்டும் அலறியது. மூவரும் கைபேசியின் மேசேஜை படித்தனர்.

"ஹே... சாரி...என் பெயரு சொல்ல மறுந்துட்டேன்...by the way, i am siddarth." இதை படித்தவுடன் மூவரும்,

"மச்சான்....சாச்சுபுட்டான் மாச்சான்!" படுக்கையில் சிரித்துகொண்டே விழுந்தனர்.

*முற்றும்*

26 comments:

வடிவேலன் ஆர். said...

நாந்தான் முதல்ல நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள் இது நிஜமா பொய்யா
தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி வாழ்த்துக்கள்

Thamizhmaangani said...

@வடிவேலன்

வாழ்த்துகளுக்கு நன்றி.

//இது நிஜமா பொய்யா//
ஆஹா...ஏங்க இப்படிலாம் உங்களுக்கு தோணுது! இந்த கதை முழுவதும் கற்பனையே!:) யாருடைய வாழ்க்கையையும்
பிரதிபலிக்கவில்லை!

வடிவேலன் ஆர். said...

உடனே பதில் சொல்லிட்டிங்க நன்றி

புதியவன் said...

//விஜி, "நாங்க அங்க soundtrackக்கு ஆடிகிட்டு இருந்தப்ப...நீ இங்க ஒரு lovetrack ஓடிகிட்டு இருந்திருக்க!"

சுதா,"ஒன்னு தெரியாத பாப்பு, குளிக்காத போது போட்டாளாம் சோப்பு!"//

அடுக்கு மொழிகள் அருமை (T.R கிட்ட ட்ரெய்னிங் எடுத்த மாதிரி இருக்கு)...

கதையை நல்லா முடிச்சிருகீங்க,
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் தமிழ்...

Srivats said...

LOL

Romba nalla erundhudhu - Sasi , sidharth kalakkal

Experiance maari konjam theriyudhey ;)

Srivats

Bhuvanesh said...

"தலைவி... நீ தான் எங்கள் டான்!"

"உங்க மூளைக்கு என்ன ஒரு மூளை"

"எல்லாருக்கும் மூளைக்குள்ள ஐடியா இருக்கும். உங்களுக்கு ஐடியாக்குள்ள தான் மூளையே இருக்கு"

Karthik said...

ha..ha. :)))

kala interesting aana character ah iruppaanga polirukke! hats off to the brainy!

oh ithu kathai illa? he he ;)

atuththu ithe mathiri oru hilarious series aarampinga. :))

Karthik said...

//by the way, i am siddarth

LOL.

Ramya Ramani said...

கலக்கல்ஸ்!! பொண்ணுங்க அட்வென்சர் பண்ணனும்னு நெனைச்சு வம்புல மாட்டிக்கிட்டத இயல்பா சொன்னீங்க. ஆனாலும் இவங்க அலப்பறை கொஞ்சம் ஓவரு தான்

Divyapriya said...

//"i am acp அன்புச்செல்வி. we are police on patrol."//
ஆனாலும் இந்த கலா பொண்ணுக்கு மூளையோ மூளை தான்…

// இப்போது honest raj விஜயகாந்த் போல் மாறினாள் கலா.//

உவமை ஒன்னொன்னும் செம சூப்பர் :)

// ,"ஒன்னு தெரியாத பாப்பு, குளிக்காத போது போட்டாளாம் சோப்பு!"//

ஹா ஹா :D

Really different and a lively story…hats off :) esp. this part is too good…really enjoyed reading the whole story...

Srivats said...

yakkov neenga evlo video poteenga, bahdilukku onnu dhaan potten - en endha kola veri :( avvvuuuuu

Divya said...

செம விறுவிறுப்பா கதையை கொண்டு போனதிற்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு காயத்ரி!!

Divya said...

முக்கியமா.......டயலாக் பார்ட் எல்லாம், ரொம்ப natural ஆ இருந்தது:))

பொண்ணுங்க பண்ணின அழிச்சாட்டியமெல்லாம் 'ரொம்ப அதிகம்'னாலும், அதை ஜாலியா , கலாட்டாவா நீங்க சொன்ன விதம் நல்லா இருந்தது.

" உழவன் " " Uzhavan " said...

ஐயோ அதுக்குள்ள கதை முடிஞ்சதா?? செம இன்ரஸ்டிங்.. உங்களோட கதை புத்தகம் எங்கே கிடைக்கும்னு சொல்லுங்களேன்?
கிரேசி மோகன் குரூப்புல சீக்கிரம் சேர்ந்திருங்க.. ஆல் த பெஸ்ட்!

Thamizhmaangani said...

@புதியவன்

//அடுக்கு மொழிகள் அருமை (T.R கிட்ட ட்ரெய்னிங் எடுத்த மாதிரி இருக்கு).//

அவர் தான் என்கிட்ட ட்ரெய்னிங் எடுத்தார்!:)

Thamizhmaangani said...

@srivats

//Experiance maari konjam theriyudhey ;)//

ஐயோ ஆஞ்ஜநயா, அபச்சாரம் அபச்சாரம்!:)

Thamizhmaangani said...

@ரம்யா ரமணி

//ஆனாலும் இவங்க அலப்பறை கொஞ்சம் ஓவரு தான்//

என்ன பண்றது... இந்த காலத்து பிள்ளங்களே இப்படி தான்! எல்லாரும் என்னைய மாதிரி நல்ல பொண்ணா இருக்கனும்னு எதிர்பார்க்க முடியாது!:)

Thamizhmaangani said...

@திவ்யாபிரியா

//Really different and a lively story…hats off :) esp. this part is too good…really enjoyed reading the whole story.//

நன்றி அக்கா!:)

Thamizhmaangani said...

@திவ்ஸ்

//செம விறுவிறுப்பா கதையை கொண்டு போனதிற்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு காயத்ரி!//

நன்றி:)

Thamizhmaangani said...

@உழவன்

//உங்களோட கதை புத்தகம் எங்கே கிடைக்கும்னு சொல்லுங்களேன்?//

ஆஹா... இது வேறய்யா!! இருந்தாலும் அப்படி ஒன்னு இருந்தா, எனக்கும் கொஞ்சம் அனுப்பி வையுங்க!:)

Thamizhmaangani said...

@உழவன்

//கிரேசி மோகன் குரூப்புல சீக்கிரம் சேர்ந்திருங்க.. ஆல் த பெஸ்ட்!//

நம்மெல்லாம் born leaders... நம்மளே ஒரு குரூப் ஆரம்பிச்சுட வேண்டியது தான்:)

reena said...

காயூ... சான்ஸே இல்ல. எப்படிம்மா இதெல்லாம்? கதை ரொம்ம்பபப நல்லா இருக்கு... அதுவும் முடிவு!!!!!!!!!!

reena said...

முடிவு!!!!!!!!!! சாச்சுப்புட்டீங்க... உரையாடல்கள் இயல்பாக இருந்தன. கலா அப்படியே உங்களை மாதிரி போல? எல்லா க்ரூப்லயும் ஒரு சசி இருக்காங்கப்பா... இந்த கதையில எத்தனை தமிழ் சினிமா டைட்டில் வருதுனு சரியா சொல்ரவங்களுக்கு ஒரு பரிசே அறிவிக்கலாம்... ஜாலி கலாட்டா. என்ஜாய் பண்ணி படிச்சேன்

Thamizhmaangani said...

@ரீனா

//காயூ... சான்ஸே இல்ல. எப்படிம்மா இதெல்லாம்? கதை ரொம்ம்பபப நல்லா இருக்கு... அதுவும் முடிவு!!!!!!!!!!//

:) நன்றி நன்றி! தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் உங்களை போன்றவர்களுக்கு நன்றி நன்றி நன்றி:)

சும்மா எழுத ஆரம்பிக்கும்போது, சில ஐடியா இருக்கும். அப்படி எழுத எழுத, கதை நமக்கே பிடிச்சுருந்தா... அப்படி involve ஆயிடுவோம்.output நல்லா வந்துடும்!:)

Thamizhmaangani said...

@ரீனா

//கலா அப்படியே உங்களை மாதிரி போல//

ஹாஹா.. எப்படி யக்கா கண்டுபிடிச்சீங்கோ!

//இந்த கதையில எத்தனை தமிழ் சினிமா டைட்டில் வருதுனு சரியா சொல்ரவங்களுக்கு ஒரு பரிசே அறிவிக்கலாம்//

ஆஹா... இது நல்லா இருக்கே! எனக்கு தோணவே இல்ல! பரிசு- பத்து பவுன் தங்க சங்கிலி:)

Anonymous said...

very interesting..................