Apr 30, 2009

இந்த எழவு எல்லாம் ஆர்மோன் செய்யும் கலகம் தானடா!

இருவரும் threadmillலில் ஓடினர் 20 நிமிடங்களுக்கு. சனிக்கிழமை என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது உடற்பயிற்சி மையத்தில். பெண்கள் ஆண்கள் என நிறைய பேர் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். 10 நிமிடம் பிரேக் எடுத்து கொள்வதற்காக ஷாலினியும் ரீனாவும் அங்கிருந்த சோபாவில் ஓய்வு எடுத்தனர். கையில் இருந்த '100- plus energy drink' பாட்டிலை ஷாலினியிடம் தூக்கிபோட்டாள் ரீனா.

ரீனா தனக்கும் ஒரு பாட்டிலை எடுத்து திறந்து குடித்தாள். அவர்கள் உட்கார்ந்து இருந்த இடத்திலிருந்து ஆண்கள் பயிற்சி செய்வதை நன்கு பார்க்கலாம். ரீனா பார்த்து வியப்படைந்தாள். "oh god... just look at him. he's so cuteee..." ரீனா நல்லா சைட் அடித்தாள்.

ஷாலினிக்கு இந்த சைட் அடிப்பது, ஆண்களை பற்றி பேசுவது-எதுவுமே பிடிக்காது என்பதால் ரீனா சொல்வதை காது கொடுத்து கேட்கவில்லை.

"அங்க பாரேன்...." ரீனா குஷியாகி ஷாலினியின் மடியை தட்டினாள்.

"ஏய் ரீனா... stop your nonsense. behave yourself!" அதட்டினாள் ஷாலினி.

"ஏய்.. பாட்டி மாதிரி பேசாத. we are 23 only. இப்ப சைட் அடிக்காம அப்பரம் எப்போ?" மீண்டும் தன் பார்வையை ஆண்கள் உடற்பயிற்சி இடத்திற்கு திருப்பினாள்.

"நான் கிளம்புறேன்." வெறுப்புடன் ஷாலினி புறப்படும்போது, ரீனா அவள் கையை வலுகட்டாயமாக பிடித்து மறுபடியும் சோபாவில் உட்கார வைத்தாள்.

"ஏய் என்ன ஆச்சு? ஏன் உனக்கு இதலாம் பிடிக்கறது இல்ல.... எனக்கு தெரிஞ்சு.... ரொம்ப காலமா இப்படியே இருக்கீயே ஏன்? you mean you don't like guys?" வினாவினாள் ரீனா. பதில் எதுவும் பேசாமல் கீழே படத்து push-up செய்ய ஆரம்பித்தாள்.

"ஓய் ஷாலு... i am talking to you." தனக்கு பதில் அளிக்குமாறு ரீனா, தன் குரலை உயர்த்தினாள்.

"என்ன மேன் உனக்கு வேணும்?.... எனக்கு ஆண்கள பிடிக்காதுன்னு நான் சொன்னதே இல்லையே..there is nothing fascinating about them. that's all. and i feel disgusted about these unwanted concepts of சைட் அடிக்கறது....love... what not." ஷாலினி நெத்தியடியான பதிலை கூறினாள்.

"அதான் ஏன்? இங்க பாரு... 10 பேர பாத்தோமா... அதுல 5 பேர செலக்ட் பண்ணோமா... அதுல 3 பேர ஃபிரண்டாக்கி... அதுல நமக்கு பிடிச்ச ஒருத்தன காதலிச்சோமான்னு... இருக்கனும். இதாண்டி லைவ்! பாரு... சொல்லும்போதே, எவ்வளவு excitingஆ இருக்கு?" ரீனா கண்களில் உற்சாகம் துள்ளியது.

"காதலிச்சு?" கேள்வி தொடுத்தாள் ஷாலினி.

"அப்பரம் என்ன.... கல்யாணம் தான்...." ரீனா புன்னகையித்தாள்.

"அப்பரம்?" ஷாலினி புருவங்களை உயர்த்தி.

"அப்பரம் என்னடி அப்பரம்... கல்யாணம்... குடும்பம், சந்தோஷம்... குழந்தைங்க..." பதில் அளித்தாள் ரீனா.

"கல்யாணமா? marriage is a gamble! அதுல யாரும் ஜெயிச்சதா சரித்திரம் கிடையாது." ஷாலினி கூறினாள். ரீனாவிற்கு குழப்பமாக இருந்தது. sit-ups செய்து கொண்டே ஷாலினி,

"ரெண்டு பேருமே ஏதோ ஒரு வகையில தங்களோட தனித்தன்மைய இழக்கனும்."

"சில விஷயங்கள இழக்கறதுல தான் அதிக சந்தோஷம் கிடைக்கும்." ரீனாவின் பதில்.

சிரித்து கொண்டே 10வது sit-upயை தொடர்ந்தாள் ஷாலினி, "அப்படின்னு நாமே நம்மள ஏமாத்திகிட்டு வரோம். 25 வருஷமா நம்ம நாமாகவே இருந்துட்டு, அப்பரம் மத்தவங்களுக்காக நம்மள மாத்திக்கனுமா? we lose this game no matter what happens."

"என்ன ஷாலு நீ... தோத்துடுவோம், தோத்துடுவோம்னு சொல்லிகிட்டு இருக்கே... இது நீ சொல்ற மாதிரி விளையாட்டு இல்ல. இது வாழ்க்கை. இதுல விட்டுகொடுக்கறது சகஜம் தான். அன்பு, பாசம், காதல், அக்கறை... see... so many emotions and feelings!... அனுபவிக்கனும் ஷாலு!" ரீனா jumping jacks செய்தாள்.

"காதல்?? பாசம்?? ஹாஹா... all utter crap. ஆயுத எழுத்து படத்துல வர சுஜாதா வசனம் மாதிரி... இதலாம் சும்மா organic chemistry..x chromosome, y chromosome, xx, xy.. அவ்வளவு தான். ஓட்டல், பீச், பார்க், பெட். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். அதுக்கு அப்பரம் chapter over." சலித்து கொண்டாள் ஷாலினி.

ரீனாவிற்கு சற்று கோபம் வந்தது, "ஏய், உலகத்துல யாரும் கல்யாணம் பண்ணிக்கலையா? சந்தோஷமா இல்லையா? இதலாம் நடக்கலைன்னா, நீயும் நானும் இப்படி இங்க நின்னு பேசிகிட்டு இருக்கமாட்டோம்!"

"கல்யணாம் பண்ணியிருக்காங்க. ஆனா அவங்கள கேட்டு பாரு, வாழ்க்கைல ஒரு தடவையாவது நினைச்சு இருப்பாங்க ஏண்டா கல்யாணம் பண்ணிகிட்டோம்னு! நீயும் நானும் இங்க இருக்குறது.... it was not our choice babe. I can't be responsible for the choice being made." என்று சொல்லிவிட்டு சைக்கிளிங் வண்டியில் level 10 என்று பட்டனை அழுத்தினாள்.

பக்கத்திலுள்ள படிஏறும் இயந்திரத்தில் ஏறினாள் ரீனா.

"இப்ப வக்கனையா பேசுவே? ஆனா, நாளைக்கே... வயசான பிறகு நமக்கு ஒரு துணை இருக்கனும்னு நினைப்ப... atleast ஒரு பிள்ளையாவது நம்மகூட இருக்கனும்னு கண்டிப்பா நினைப்ப." ரீனா பேசினாள்.

வேர்வை கொட்ட விடை அளித்தாள் ஷாலினி, " அப்படி ஒரு நினைப்பு எனக்கு வராது. டீவி, புக்ஸ், இசை, நிம்மதியான தூக்கம், ஆரோக்கியமான உடல்நிலை, அளவான சாப்பாடு,traveling around the world... இது போதும்டி எனக்கு. தனிமையில் நிச்சயம் இனிமைய அனுபவிக்க முடியும். பிள்ளையா? ஹாஹா... குழந்தைங்கலாம் ஒன்னாவது போகும்வரைக்கு தான் cuteஆ இருப்பாங்க. அதுக்கு அப்பரம் வளர்ந்து.... அதுங்க teenage வயச அடைஞ்ச பிறகு, போடுற skirt கட்டையா போகும், பேசுற வாய் நீளமா போகும்.... அப்பரம் அவங்கள நினைச்சு நினைச்சு... சோகம் தான்! இதலாம் நமக்கு தேவையா?"

"ஓய்.... நீ ஏன் இப்படி pessimisticஆ இருக்க? நல்லதே உன் மனசுல தோணாதா?அப்பரம் பிள்ளைங்க இருக்குறவங்க எல்லாம் என்ன சோகமாவா இருக்காங்க?" 100 calories burnt out என்று ரீனாவின் இயந்திரத்தில் காட்டியது.

"ஹாஹா.... சரி உன் வழிக்கே வரேன்... ஆனா... என்ன guarantee?" ஷாலினி புருவங்களை உயர்த்தினாள்.

"guaranteeஆ? ஏய்... இது வாழ்க்கை ஷாலு... இதுக்கு போய்..." ரீனாவின் பதில்.

"அது எப்படி ரீனா... கடைக்கு போய் ஒரு டீவி வாங்குறோம். 24 மணி நேரமும் பாக்க போறது கிடையாது.. எப்பவாச்சு பாக்குற டீவிக்கே 5 வருஷம் guarantee கிடைக்குமா இல்ல... அதுக்கு மேலயும் டீவி ஏதாச்சு இருக்கான்னு பாக்குறோம். எப்பவாச்சு பாக்குற டீவிக்கே guarantee முக்கியம். கடைசி வரைக்கும் வாழற போற வாழ்க்கைக்கு?... உன்னால life-long guarantee கொடுக்க முடியுமா?" தனது கருத்தை ஆணித்தரமாக மறுபடியும் ரீனா முன்னிலையில் வைத்தாள் ஷாலினி.

தொடர்ந்தாள் ஷாலினி,

"சரி... கல்யாணம் பண்ணிக்கிறோம்....நம்ம வேலைக்கு போறோம். வார நாட்கள்ல சமைக்க முடியாது... வீக்கெண்ட்டுல தான் முடியும்னு சொல்றோம். ஆரம்பிக்கும்போது எல்லாம் நல்லா தான் போகும். ஆனா திடீரென்னு சொல்வாங்க... ஏன் நீ வார நாட்களையும் சமைக்க டிரை பண்ணலாமேன்னு? அப்ப நமக்கே தோணும்... ஐயோ அப்ப நம்ம எடுத்த முடிவு தப்பான்னு... நம்மளே நம்மை சந்தேகப்பட ஆரம்பிச்சுடுவோம். நம் முடிவு மேலயே நமக்கு தன்னம்பிக்கை வராம போயிடும்...."

ரீனா சகித்து கொண்டு பதில் அளித்தாள், "உன்னைய திருத்த முடியாது.. வாழ்க்கையில் நீ நிறைய விஷயங்கள மிஸ் பண்ண போற.."

"கண்டிப்பா கிடையாது. be single, double the happiness. கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாமே இனிக்கும் விருந்து தான்... அதுக்கு அப்பரம் எல்லாம் வேப்பங்கொழுந்து!" வாய் விட்டு சிரித்தாள் ஷாலினி.

தனது சிரிப்பை தொடர்ந்தாள், "பொண்ணுங்க மட்டும் இல்ல... பாவம் ஆண்களும் நிறைய கஷ்டங்கள பாக்க வேண்டிய சூழ்நிலை வரும். இப்ப ஒரு உதாரணம்... எல்லாரும் வெளியே போறோம். நமக்கு பிடிச்ச கலருல ஒரு சேலை கட்டிகிட்டு போறோம். அப்போ மாமியாருக்கு அந்த கலரு பிடிக்காது.... போய் வேற கட்டிகிட்டு வான்னு சொல்வாங்க. பிடிச்ச கலர கூட போட முடியாத சூழ்நிலை நமக்கு. அம்மா பேச்சையும் தட்ட முடியாது, மனைவி ஆசையும் நிறைவேறாமல் போயிடுச்சேன்னு அவரும் நினைப்பாரு... கஷ்டம் ஆண்களுக்கு தான்... "

"ஏய்.. கண்ட கண்ட புத்தகத்த படிச்சு நீ ரொம்ம்ப கெட்டு போய் இருக்க.. அது மட்டும் நல்லா தெரியுது." ரீனா தனது உடற்பயிற்சியில் கவனத்தை செலுத்தினாள்.

"ஏய் உனக்கு இன்னொரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோ....நமக்குள்ள இருக்குற ஈகோவ தட்டி எழுப்புற function பேரு தான் கல்யாணம்!" என்று ரீனாவின் முகத்தை பார்த்து கூறியபோது ரீனாவிற்கே ஆச்சிரியம் கலந்த சிரிப்பு வந்தது.

"உனக்கு யாரடி இதலாம் சொல்லி கொடுக்குறா? உன்கூட பேசுன்னா... எல்லாரையும் ஆஞ்ஜநயா பக்தரா ஆகிடுவே!" என்றாள் ரீனா. உடற்பயிற்சி முடித்து கார் பார்க்கில் இருந்த தனது காரை நோக்கி நடந்தாள் ஷாலினி, பக்கத்தில் ரீனா.

"இதலாம் யாரும் சொல்லி கொடுக்க தேவையில்ல. உலகத்த பாத்து தோன்ற விஷயம் தான் இது. இங்க பாரு.. நீ கேட்டே, நான் என் கருத்த சொன்னேன். அதுக்கும் நீயும் இதே மாதிரி ஆகனும்னு சொல்லல. நாளைக்கே உனக்கு கல்யாணம்னா, முதல் ஆளா வந்து நிற்பேன் பெரிய giftடோட, குழந்தைக்கு பெயர் வைக்கனுமா... கண்டிப்பா நல்ல பெயர select பண்ணி தருவேன். நீ உன் விருப்பப்படி வாழு, நான் என் விருப்பப்படி இருக்குறேன். அவ்வளவு தான். one man's poison is another man's meat!" ஷாலினி ரீனாவின் வீட்டை அடைந்தாள்.

"சரி சரி... உன் வீடு வந்தாச்சு... கிளம்பு... நாளைக்கு ஜிம்ல பார்க்கலாம்!" ஷாலினி சொல்ல, ரீனாவும் அமைதியாக வீட்டை நோக்கி நடந்தாள். களைப்பாக இருந்ததால், குளித்துவிட்டு படுக்கையில் விழுந்தாள். ஷாலினி சொன்ன வார்த்தைகள் அவள் மூளையிலும் மனதிலும் எதிரோலித்தது- organic chemistry, x chromosome, y chromosome, be single double the happiness, life-long guarantee. நினைத்து கொண்டே தூங்கினாள்.

எழுந்தாள்.மதிய 2 மணி ஆகியது, ஷாலினிக்கு ஃபோன் செய்தாள்.

"என்ன ரீனா... இன்னும் கேள்வி கேக்கனுமா? சண்டைய நீ இன்னும் முடிக்கலையா?" சிரித்தாள் ஷாலினி.

"அது எல்லாம் ஒன்னுமில்ல... சும்மா தான் ஃபோன் செஞ்சேன். சாப்பிட்டீயா?" வினாவினாள் ரீனா.

"ம்ம்ம்... ஆச்சு. இப்ப வெளியே கிளம்பிகிட்டு இருக்கேன்..." என்றாள் ஷாலினி.

"எங்க?" கேட்டாள் ரீனா.

"single's club meeting..." விடை சொன்னாள் ஷாலினி.

"நானும் வரலாமா?" என்றாள் ரீனா. வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள் ஷாலினி.

*முற்றும்*

29 comments:

Divya said...

சூப்பர்!!

Divya said...

உரையாடல் வழக்கம்போல் கலக்கல்ஸ் காயத்ரி:)

\\"உனக்கு யாரடி இதலாம் சொல்லி கொடுக்குறா? உன்கூட பேசுன்னா... எல்லாரையும் ஆஞ்ஜநயா பக்தரா ஆகிடுவே!" என்றாள் ரீனா.\\

'யாரோ' ஆஞ்ஜநயா பக்தர்ன்னு கொஞ்ச நாள் முன்னாடி என்கிட்ட சொன்னாங்களே......அது ஏன்னு இப்பத்தான் புரியுது:)

கடைக்குட்டி said...

உரையாடல் கலக்கல் :-)

நீஇங்க விவரிச விதம் ஏதோ அவங்ககூட நாமளும் நடந்துக்கிட்டு பேசுற மாதிரி இருந்துச்சு ..

தொடரவும்

FunScribbler said...

@திவ்ஸ்

//யாரோ' ஆஞ்ஜநயா பக்தர்ன்னு கொஞ்ச நாள் முன்னாடி என்கிட்ட சொன்னாங்களே......அது ஏன்னு இப்பத்தான் புரியுது:)//

சரியா ஞாபகம் வச்சு மாட்டிவிடுறீங்களே! :)

FunScribbler said...

@கடைக்குட்டி

//உரையாடல் கலக்கல் :-)//

நன்றி:)

Karthik said...

இவ்வ்வ்வ்வ்வ்ளவு பெரிய்ய்ய்ய்ய்ய கதைய்ய்ய்ய்ய்ய்யா? இருங்க படிச்சிட்டு வர்றேன். :)

Karthik said...

டைட்டில் சூப்பர். :)

இருங்க இன்னும் கதை படிக்கல. :)

Karthik said...

shalini seems to be a bad influence! he he. ;)

no.. seriously speaking what she says is true to some extent. you cant live on your own terms in the married life, i think.

but staying single is ,according to me, not a best option. if marriage is a gamble, i'd say, you can try to win a best bet. :)

really nice! keep rocking!

Revathyrkrishnan said...

நல்ல உரையாடல் காயத்ரி... ஆனா இவ்ளோ பேசிட்டு ரீனா மாறிட்டாளா??? :(( சரி, ஒரு பாட்டு கேட்டதும் பதிவு தோன்றுமா?இல்லை பதிவிடும் போது கேட்கும் பாட்டு டைட்டில் ஆகிறதா கண்ணே?

Gajani said...

சூப்பரோ சுப்பர்

FunScribbler said...

@karthik

//if marriage is a gamble, i'd say, you can try to win a best bet. :)//

so u were the one who was in disguise at the casino that day! caught u!:)

FunScribbler said...

@ரீனா

//ஆனா இவ்ளோ பேசிட்டு ரீனா மாறிட்டாளா??//

இரண்டு மணி நேரம் வில்லனா இருந்துட்டு, கிளைமெக்ஸுல நல்லவனா மாறுவது இல்லையா.. அந்த மாதிரி தான்!:)

//சரி, ஒரு பாட்டு கேட்டதும் பதிவு தோன்றுமா?//

இப்படி தான் தோன்றும்! ஆஹா.. தொழில் ரகசியத்தை சொல்லிட்டேனே!:)

FunScribbler said...

@gajani,

thanks:)

புதியவன் said...

//"அதான் ஏன்? இங்க பாரு... 10 பேர பாத்தோமா... அதுல 5 பேர செலக்ட் பண்ணோமா... அதுல 3 பேர ஃபிரண்டாக்கி... அதுல நமக்கு பிடிச்ச ஒருத்தன காதலிச்சோமான்னு... இருக்கனும். இதாண்டி லைவ்! பாரு... சொல்லும்போதே, எவ்வளவு excitingஆ இருக்கு?"//

என்ன ஒரு தத்துவம்...

உரையாடல் அருமை...ரொம்ப நல்லா இருக்கு...

mvalarpirai said...

நான் இப்ப சொல்றேன் எழுதி வச்சுகோங்க ! நீங்க சொன்ன கதாபாத்திரங்கள் உண்மையா இருந்த இந்த ஆஞ்சனேயா பக்தைக்கு தான் ( ஷாலினி :) ) முதல கல்யாணம் நடக்கும் !

இப்படிதான் எங்க ரூம் மெட் அடிக்கடி சொல்லுவாம் "கல்யாணம்ல என்னத்த..." அப்படினு..
அவனுக்கு தாங்க முதல்ல கல்யாணம் நடந்துச்சு ..இப்ப அவங்கிட்ட போன்ல பேசினால..மூச்சுக்கு மூண்ணூறு தரவ பொண்டாட்டி பொண்டாட்டிகிறான்..
அவன் பேச்சை கேட்டப்ப நாங்க கூட "ஆமா இல்லை" ..அப்படினு நினைத்தோம்...இப்ப அது இல்லைனு மட்டும் ஆயிடுச்சு !
ஆயிரம் தொல்லைகள் இருந்தாலும் கல்யாணம் ரொம்ப முக்கியம்னு இப்ப சொல்றான்....:)
என்ன பண்றது...

இந்த கதையில் ரொம்ப எதார்த்தமான உண்மை எந்த வரினா...

// அம்மா பேச்சையும் தட்ட முடியாது, மனைவி ஆசையும் நிறைவேறாமல் போயிடுச்சேன்னு அவரும் நினைப்பாரு... கஷ்டம் ஆண்களுக்கு தான்... //
மாமியார் மருமகள் சண்டையால மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள் ஆண்கள் ..100% உண்மை !
நான் என்னோட ஒரு பதிவில் எழுதின வரிகள் ..(http://m-valarpirai.blogspot.com/2009/03/blog-post_02.html)
" மாமியார் மருமகள் சண்டையிலே என்னை அம்பயர் ஆக்கி
அம்மாவுக்கு அவுட் குடுக்க சொல்லுவாளோ ! " :)

FunScribbler said...

@புதியவன்

நன்றி:)

FunScribbler said...

@வளர்

//இந்த ஆஞ்சனேயா பக்தைக்கு தான் ( ஷாலினி :) ) முதல கல்யாணம் நடக்கும் !//

ஹாஹா..ஐயோ ஷாலினிக்கு வேண்டாம் இந்த விஷப்பரிட்சை!

//ஆயிரம் தொல்லைகள் இருந்தாலும் கல்யாணம் ரொம்ப முக்கியம்னு இப்ப சொல்றான்....:)
என்ன பண்றது...//

சரி விடுங்க வளர், வாழ்க்கையின்னா எப்போதுமே சந்தோஷமா இருக்க முடியுமா என்ன, அதான் அவர் கல்யாணம் பண்ணியிருப்பார்:)

FunScribbler said...

@வளர்

//மாமியார் மருமகள் சண்டையிலே என்னை அம்பயர் ஆக்கி
அம்மாவுக்கு அவுட் குடுக்க சொல்லுவாளோ !//

ஆஹா.. வரிகள் கலக்கலா இருக்கே:)

Swami www ji said...
This comment has been removed by the author.
Swami www ji said...

Very true ...living together is better!

Anonymous said...

Sema Mokka...

Divyapriya said...

dialogues ellaam sema weightaa irukku...chanceless....nalla nethiyadi vasanangal...

aanaa kadaisila thodarum podaama, muttrum pottuteenga...adhu mattum thaan varutham :(

Anonymous said...

அருமையா இருக்குபா.

FunScribbler said...

@சுவாமி

//Very true ...living together is better!//

ஆஹா.. இது ரொம்ப controversial concept.:)

FunScribbler said...

@திவ்யாபிரியா

//dialogues ellaam sema weightaa irukku...chanceless....nalla nethiyadi vasanangal...//

நன்றி யக்கா!:)

//aanaa kadaisila thodarum podaama, muttrum pottuteenga...adhu mattum thaan varutham :(//

ஹாஹா.. இதுக்கு மேலேயும் எழுதுனா, அப்பரம் கல்யாணம் ஆனவர்கள் எல்லாரும் 'ஆஹா.. கல்யாணம் பண்ணிகிட்டது தப்பா போச்சே'ன்னு நினைக்க ஆரம்பிச்சுடுவாங்க. அப்பரம் கல்யாணம் பண்ணிக்க போறவங்க, "இந்த கல்யாணம் வேண்டாம்'ன்னு சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க. தேவையில்லாமல் ஒரு புரட்சி பண்ணனுமான்னு யோசிச்சு, ஒரு பாகத்துடன் கதைய முடிச்சுகிட்டேன்:) :)

FunScribbler said...

@மகா

//அருமையா இருக்குபா.//

நன்றி:)

Karthik lollu said...

Sooperunga!! Love panna ponnu kidaikka maatengidu, idhula kalyanam veraya?? narayana!!

sri said...

Hmm Miss anjenyar bhaktar :)

I agree to ur say. I am living unmarried .However we need someone to hold on to, no need to be husband but atleast a friend dont you think ?

Anonymous said...

இதுக்குப் பேர் கதையாம்மா. கொடுமை.