பகுதி 1
பகுதி 2
இதய துடிப்பு இரட்டிப்பானது! யார் இந்த சமயத்தில் என்று பார்வைகள் பறந்தன. விஜி, சுதா, சசி ஆகியோர் வீட்டிற்குள் ஓடினர். சுதாவிற்கு தான் அதிக கவலை. கிளப்பை சேரும்வரை அவளுக்கு நிம்மதியாகவே இருக்காது போல.
கலா கதவை திறந்தார். அங்கு ஒருவர் கையில் கணக்குடன் நின்றார். "மேடம், இந்த மாசம் நியூஸ் பேப்பர் பில்."
ஒரு நிமிடத்தில் எங்களை ஏன் இப்படி பயம் காட்டி மிரள வைத்துவிட்டீர்கள் என்று அவரை கேட்க வேண்டும் என்று தோன்றினாலும் வார்த்தைகளை அடக்கி கொண்டாள் கலா. வீட்டில் யாரும் இல்லை அடுத்த வாரம் வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று பதில் அளித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். நடந்ததை சொல்லி முடித்தாள் கலா, மற்ற மூவரிடம். பிறகு, தான் அனைவருக்கும் நிம்மதி வந்தது!
"ஆண்ட்டி வீட்டுக்கு ஃபோன் பண்ணா?" என்னொரு முக்கியமான விஷயத்தை கேட்டாள் சசி.
"வெரி சிம்பல்." என்று சொல்லிய கலா, தனது கைபேசியை எடுத்தாள். அப்பாவுக்கு ஸ். எம்.ஸ் அனுப்பினாள்- "அப்பா, அங்க போய் சேந்தாச்சா? எப்படி போகுது ஏற்பாடு எல்லாம்?"
உடனே அப்பா பதில் அளித்தார்- " நாங்க வந்தாச்சு. function preparation ஜாலியா இருக்கு. நீ படிச்சாச்சா?"
அதற்கு கலா அனுப்பினாள்- "ஆமா இன்னிக்கு ரிவிஷன் முடிச்சிட்டோம். ரொம்ம்ப களைப்பா இருக்கு. அதான்..தூங்க போறோம். குட் நைட்."
அதற்கு அப்பாவின் பதில்- "ஓகே...குட் நைட்"
எல்லாம் 3 நிமிடங்களுக்குள் முடிந்தது. கலாவின் அபார திறமையை கண்கொட்டாமல் பார்த்து வியந்தனர் மற்ற மூவரும். "எப்படி இப்படிலாம் யோசிக்குற?" சுதா ஆச்சிரியப்பட்டாள். மற்றவர்கள் வீட்டிற்கும் இதே மாதிரி ஸ்.எம்.ஸ் அனுப்பி காரியத்தை முடித்தாள் கலா.
"மாட்டிகொள்ளாமல் பொய் சொல்வது எபப்டி?...அப்படின்னு ஒரு பெரிய ஆராய்ச்சியே செஞ்சு இருக்கேன்..கூடிய சீக்கிரத்துல புத்தகம்கூட போடலாம்... இங்க பாரு, நான் ஃபோன் பண்ணி பேசியிருந்தேனா...அது கொஞ்சம் artificalஆ இருந்திருக்கும். எப்போதும் ஃபோன் பண்ணாதவ இப்ப ஏன் ஃபோன் பண்ணி தூங்க போறான்னு சொல்றா? அப்படின்னு அப்பா மனசுல தோன்றியிருக்கும். அதான் ஸ்.எம். ஸ் அனுப்பினேன். எல்லாம் ஒருவித psychology மச்சி!" lecture அடித்தாள் கலா.
"சரி சரி...வாங்க போவோம்.டைம் ஆச்சு." சுதா அவசரப்படுத்தினாள். டெக்ஸியில் ஏறி ஆல்பட் கிளப்பை அடைந்தனர். அங்க தடி மாடு மாதிரி 4 bouncerகள் வெளியே நின்று கொண்டிருந்தார்கள். சசிக்கு ஒன்றும் புரியவில்லை.
"யாரடி இவங்க?" சசி கேட்டாள்.
"எல்லாம் உன் அத்தை பசங்க தான்." கிண்டலடித்தாள் விஜி டெக்ஸி டிரைவரிடம் காசை கொடுத்துவிட்டு.
"ஏய்... இவங்க தான் bouncer. உள்ளே தகராறு செய்யும் ஆட்கள வெளியே வந்து போடுவார்கள்." கலா கூறினாள்.
"ஐயோ அப்ப தகராறு நடக்குமா?எனக்கு பயமா இருக்குடி...."சசி கண்ணாடியை சரி செய்து கொண்டு.
"சும்மா பேசாம வா." கலா அதட்டினாள். உள்ளே நுழையும்போது bouncerகள் அவர்களை ஒரு விதமாய் பார்த்து, "நீங்க new entryயா?"
ஆம் என்பதுபோல் தலையை எல்லாம் பக்கமும் ஆட்டினர். "உங்க பெயரு என்ன?" என்று மன்சூர் அலிகான் குரல் கொண்ட ஒருவர் கேட்டார்.
மற்ற மூவரும் பதில் அளிக்கும் முன் கலா முந்திகொண்டு, "என் பேரு ஷாமா, இவ ஹேமா, அவ பாமா, இவ உமா." என்று வாய்க்கு வந்த நான்கு பெயர்களை அள்ளிவிட்டாள்.
"ஓகே மேடம்... நீங்க உள்ளே போலாம்." சிரிக்காத முகத்துடன் நின்றனர்.
"ஏண்டி, பெயர்லாம் கேக்குறாங்க?" சசிக்கு மீண்டும் கேள்வி எழும்பியது.
"பொங்கலுக்கு சேலை எடுத்து கொடுப்பாங்க. வந்து வாங்கிட்டு போறதுக்கு. யவடி இவ... எல்லாம் ஒரு registration formality தான். இங்க பாரு.. நம்மளே இங்க திருட்டு தனமா வந்திருக்கும். உண்மையான பெயர சொல்லி மாட்டிக்க கூடாது. தப்பு செஞ்சா தடயம் இல்லாம செய்யனும்." தான் ஒரு தலைவி என்பதை கலா மீண்டும் நிருபித்தாள்.
டிஸ்கோ விளக்குகள், புகைமூட்டம், காதில் இரத்தம் வரும் அளவிற்கு பாட்டு சத்தம், கூச்சல், தண்ணி அடித்துவிட்டு ஆட்டம் போடும் ஆண்கள், பெண்கள், அன்று நடக்கும் காற்பந்தாட்டத்தை டீவியில் பார்த்து கொண்டிருக்கும் இன்னொரு கூட்டம்- இப்படி ஒவ்வொரு மூலையிலும் ஏதேனும் ஒன்னு நடந்து கொண்டிருந்தது. 'where is the party tonight?' என்ற சிலம்பாட்டம் பட பாடல் போட்டவுடன், கலா மூவரையும் ஆடும் இடத்திற்கு இழுத்து சென்றாள். பாடல் ஆரம்பித்ததுதான் தெரியும், அதற்கு அப்பரம் கலா மலை ஏறிவிட்டாள். அவளை பார்த்த விஜியும் பேய்யாட்டம் ஆடினாள். சுதா ஏதோ கைகளையும் கால்களையும் அசைத்தாள். சசிக்கு ஆட வராது. ஏதோ சானி மிதிப்பதுபோல் மிதித்து கொண்டிருந்தாள்.
டிஸ்கோவில் இருந்த டிஜே வரிசையாக குத்து பாடல்களை போட்டு தாக்கினார். "போட்டு தாக்கு..." என்னும் குத்து பட பாடலை போட்டவுடன் கலா கட்டிவைத்திருந்த தலைமுடியை அவிழ்த்துவிட்டு சாமி வந்ததுபோல் ஆட தொடங்கினாள்.
அங்கு ஆடி கொண்டிருந்த பலரும் அப்படியே செய்தனர். நால்வரும் ஒரு வட்டமாக ஆடி தொடங்கினாலும், போக போக அது பிரிந்து, விஜியும் சுதாவும் கலாவும் அங்கு வந்திருந்த மற்றவர்களுடன் சேர்ந்து ஆட தொடங்கினர். சசிக்கு களைப்பாக இருந்ததால் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தாள். சுதாவும் வந்து அமர்ந்தாள்.
"என்னடி நீங்க.... யாருக்கூடவோ ஆடுறீங்க?" சசி மூச்சுயிறைக்க சொன்னாள்.
"அதான் டி கிளப்பிங் culture. தெரிஞ்சவங்ககூடவே ஆடனும்னா வீட்டுலேயே ஆடலாமே, இங்க வந்துட்டா அப்படி தான் இருக்கனும்." சுதா கூறினாள்.
"ஆமா இதலாம் உனக்கு எப்படி தெரியும்?" சசி மீண்டும் கேள்வி கேட்டாள்.
"ஆடிகிட்டு இருக்கும்போது கலா சொன்னா..." சுதா ஆரஞ்சு ஜூஸை அருந்தியவாறு பதில் அளித்தாள்.
"உன்னைய ரொம்ப கெடுக்குறா அவ!" சசிக்கு பிடிக்கவில்லை.
'it's the time to disco' என்னும் ஹிந்தி பாடலை கேட்டவுடன் உற்சாகம் அடைந்த சுதா, "ஓ மை காட்...my fav song yea!!" என்று சொல்லிகொண்டே ஆடும் இடத்திற்கு ஓடினாள். மற்றவர்களுடன் ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்தாள். அந்த பாடலில் ப்ரித்தி சிந்த்தா எப்படி ஆடுவாளோ அப்படியே ஆடினர் கலாவும் சுதாவும், விஜியும்!
சசி சோபாவில் உட்கார்ந்து இருந்த போது, ஒருத்தன் அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.
"ச்சே, நான் அப்பவே சொன்னேன்.. இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் நான் வரலேன்னு.... ச்சி... i hate these guys." புலம்பினான் அவன். சசி பக்கத்தில் உட்கார்ந்து இருப்பதை கவனிக்கவில்லை அவன்.
"ஹாலோ..." என்றாள் சசி.
"ஓ...சாரி...சாரி...நான் பார்க்கல்ல...." என்றவன் எழுந்து வேற இடத்திற்கு செல்லும்போது, அவன் கைப்பேசி அழைத்தது. அதை எடுத்து பேசி கொண்டே நகர்ந்தான், 'டேய், எங்கடா இருக்கீங்க? நான் போறேன். இந்த இடம் எனக்கு தலைவலியா இருக்கு. நான் போறேன்..." அவன் பேசியதை சசி கேட்டாள். மனதிற்குள் அவளுக்கு சிந்தனை ஓடின, "ம்ம்ம்...நம்மள மாதிரியே சில பசங்களுக்கும் இந்த இடம் பிடிக்கல....உஷ்...." என்று பெருமூச்சுவிட்டாள் சசி.
அப்போது யாரோ சசியை பிடித்து இழுத்து சென்றார்கள். மூன்று முரட்டர்கள்போல் இருந்தனர். கழிவறைக்கு இழுத்து சென்று அவளை அறைந்தார்கள். ஏதோ கையில் பீர் போல் இருப்பதை அவள் வாயில் திணிக்க முற்பட்டபோது, அவள் அலற ஆரம்பித்தாள், "அம்ம்ம்ம்ம்மாஆஆஆ!"
பக்கத்தில் இருந்த சுதா, விஜி, கலா மூவரும் சசியை பிடித்து, "என்னடி ஆச்சு?"
சசி சுயநினைவுக்கு வந்தாள். தான் கண்டது ஒரு கனவு என்பதை அவர்களிடம் விளக்கியபோது, அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். வெறுவாயிற்கு அவல் கிடைத்ததுபோல, கலா சசியை தாறுமாறாக கலாய்த்துவிட்டாள். அச்சமயம், "டேடி மம்மீ, வீட்டில இல்ல..." என்ற பாடல் ஒலித்தது. குஷியான கலா,
"ஓ மை காட்....நம்ம பாட்டு டி இது...வாங்க வாங்க...போய் ஆடலாம்." என்றாள்.
சசிக்கு போக இஷ்டமில்லை. மற்ற மூவரும் ஆடிகொண்டிருந்த நேரம் பார்த்து, போலீஸ் வாகனம் சத்தம் கேட்டது. அனைவரும் ஓட ஆரம்பித்தனர். என்ன நடக்கிறது என்பது இவர்களுக்கு புரியவில்லை. கலா மற்ற மூவரையும் இழுத்து கொண்டு தங்களது கைபைகளை எடுத்து கொண்டு தப்பிக்க முற்பட்டனர். ஓடும்போது விஜி கேட்டாள் கலாவிடம், "என்னடி நடக்குது."
கலா அதிர்ச்சியுடன், "ஓ காட்.... எனக்கும் தெரியல்ல... "
எங்கே ஓடுவது என்று தெரியவில்லை. அங்கே ஆடி கொண்டிருந்த சிலர் பிடிப்பட்டனர். மற்றவர்களை பிடிக்க முற்பட்டபோது, இவர்கள் ஒரு மறைவுக்கு பின் ஒளிந்து கொண்டன. காவலர்கள் பேசி கொள்வது அவர்கள் காதில் விழு- "இந்த இடத்துல கஞ்சா கடத்துறாங்க... ஒரு இடம் விடாம தேடு. எல்லாரையும் பிடிச்சு வண்டில போடு."
இவர்களுக்கு ஆச்சிரியம், அதிர்ச்சி, சிலையாய் நின்றனர். சசிக்கு அழுகையே வந்துவிட்டது. அந்த மறைவான இடத்திற்கு சில காவலர்கள் வருவதை பார்த்துவிட்டனர்....
(பகுதி 4)
11 comments:
யக்கா கலக்கிறிங்க போங்க!!!!!!!!!!!
//மாட்டிகொள்ளாமல் பொய் சொல்வது எபப்டி?...அப்படின்னு ஒரு பெரிய ஆராய்ச்சியே செஞ்சு இருக்கேன்..கூடிய சீக்கிரத்துல புத்தகம்கூட போடலாம்//
இந்த ஐடியாவெல்லாம் கூட இருக்கா...?
நல்ல சஸ்பென்ஸோட முடிக்கிறீங்க...கதையின் அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்...
சமீபத்துல பெங்களூர்ல நடந்த incident வச்சு கதையா??? கலக்குங்க...பாவம் பொண்ணுங்க...
புதியவன்
//நல்ல சஸ்பென்ஸோட முடிக்கிறீங்க..//
நன்றி:)
@திவ்யாபிரியா
//சமீபத்துல பெங்களூர்ல நடந்த incident வச்சு கதையா???//
அப்படியா? என்ன நடந்துச்சு?
//கலக்குங்க...பாவம் பொண்ணுங்க...//
யாரு.. இந்த பொண்ணுங்களா பாவம்??ஐயோ ஐயோ...
//மாட்டிகொள்ளாமல் பொய் சொல்வது எபப்டி?...அப்படின்னு ஒரு பெரிய ஆராய்ச்சியே செஞ்சு இருக்கேன்..கூடிய சீக்கிரத்துல புத்தகம்கூட போடலாம்//
இந்த ஐடியாவெல்லாம் கூட இருக்கா...?
I 2nd in.. ada pavingala...iam waiting to see that book...
gallatava poitiruntha kathai.......ippo thrilling aa suspence oda move aguthu, jooper Gayathri:))
\\சசி சுயநினைவுக்கு வந்தாள். தான் கண்டது ஒரு கனவு என்பதை அவர்களிடம் விளக்கியபோது, அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.\\
intha dream .......club kulla irukirapo va??
angey ukanthu epdi kanavu kanda intha ponnu??
next partum seekiram potudunga.....ponunga matinangla iliyanu therinjuka , waitings:))
//யக்கா கலக்கிறிங்க போங்க!!!!!!!!!!!
repeateyyyyyy!! post the next part asap. :)
chennaila thaan tamil paata poda matraangala?!
//சசி சுயநினைவுக்கு வந்தாள். தான் கண்டது ஒரு கனவு என்பதை அவர்களிடம் விளக்கியபோது//
இந்த சூழ்நிலையில கனவா??? ஓவரா கதை விடாதீங்க.
//பொங்கலுக்கு சேலை எடுத்து கொடுப்பாங்க. வந்து வாங்கிட்டு போறதுக்கு. யவடி இவ... எல்லாம் ஒரு registration formality தான்.//
LOL
Wow you are very good!
Post a Comment