Jun 21, 2009

இந்த மானக்கெட்ட பொழப்பு தேவையா?

விஜய் டீவி அவார்ட்ஸ் நிகழ்ச்சிய பார்த்தபிறகு....சாரி சாரி, அந்த சூர்யா family function நிகழ்ச்சியை பார்த்தபிறகு எனக்கு தோன்றியது தான் இப்பதிவின் தலைப்பு!

உளறல்கள்:

அது எப்படி, தமிழ் சினிமாக்காரர்கள் உளறுவதில் இப்படி கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கமல் முதல் மனோரமா வரை எல்லாரும் ஏதோ சம்மந்தம் இல்லாமல் பேசியது சிப்பா இருந்துச்சு! அதுவும் சிவாகுமார் பேசியது நகைச்சுவையிலும் நகைச்சுவை!! அண்ணன் பையனுக்காக கமல் தான் சூர்யாவுக்காக விருதை விட்டுகொடுத்தது என்று கூறுகையில்......... என்னால முடியல்ல!!!

மடத்தனம்:

காமெடி என்ற பெயரில் பார்த்திபன் சொன்னது. ஐயோ...... மடத்தனத்தின் மன்னன் அவரே! "அவார்ட்ஸ் முத்தம் மாதிரி. கொடுக்கும்போதும் சந்தோஷம் வாங்கும்போதும் சந்தோஷம்...." அதுக்கு அப்பரம் அவார்ட்ட சிநேகாவிடம் கொடுத்தது....யப்பா நான் இதுக்கு மேலேயும் எதுவும் சொல்லல....அப்பரம் ஏதாச்சு சென்சார் போர்ட் பிரச்சனை வந்திட போது!

எரிச்சல்ஸ்:

டிடி வந்தவர்களிடம் அவர்கள் அணிந்திருந்த உடைகளை எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டது சலிப்பை தந்தது. எரிச்சலாக இருந்தது. ஆனால், சிலர் போட்டு வந்த உடைகள், அப்படியே தூங்கி எந்திரிச்சு வந்த மாதிரியே இருந்துச்சு!! (வெங்கட் பிரபு, பிரேம் ஜி.....தூங்கிட்டீங்களா?)

சின்னப்புள்ளத்தனம்:

கௌதம் மேனன் ஹாரிஸிடம் விருதை கொடுத்துவிட்டு மேடையை விட்டு விழுந்து அடிச்சு பின்னால் ஓடியது....ஹாஹா..... அதுவும் கோபி அவரை வலுக்கட்டாயமாக கேள்வி கேட்டு மடக்கியது..... ஹாஹா......

அடுத்த அரசியல் தலைவர்:
விருது பெற்றால் சரி, காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள்ளலாம். விருது பெற்றவரிடம் ஏன் யா விழுவுற? விஜய் கமலிடம் விருதை கொடுத்துவிட்டு காலில் விழுந்தார். விஜய் அரசியலுக்கு போக போகிறார் என்பதை நிருபித்துவிட்டார். அதுவும் மைக்கை பிடித்து அவ்வளவு நேரம் விஜய் பேசியது வியப்பாக இருந்துச்சு.

குடும்ப நிகழ்ச்சி:

என்னை மிகவும் ஆத்திரம் அடைய செய்தது சூர்யாவின் செயல் தான். ஆசிர்வாதம் வாங்கி கொள்வது வேறு, ஒருத்தன் காலில் விழுவது வேறு! சூர்யா சார், ஏன் இப்படி உணர்ச்சிவசப்பட்டீங்க? இதுக்கு முன்னாடி எத்தனையோ விருதுகளை பெற்றபோது, இப்படி தான் குடும்பத்தையே மேடைக்கு அழைச்சீங்களா?இல்லை இப்படி தான் யோசிக்காமல் காலில் விழுந்தீங்களா? நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபி செய்த கூத்து ஒரு காரணம்! தேவையில்லாமல் சூர்யாவின் குடும்பத்தினரை மேடைக்கு வர சொன்னது, ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக என்பது அப்பட்டமாக தெரிந்தது.

இப்படி ஒரு பொழப்பு தேவையா?

எங்களை முட்டாளாக்கிய விதம்:

ஏ ஆர் ரகுமான் வரவில்லை. ஆனால் அவருக்கு விருது கொடுத்தது போல் காட்டினீர்கள். சிம்ரன் best supporting actress விருது கிடைத்தது. அவர் வரவில்லை என்பதால் இவ்விருது கொடுக்கப்படாது என்று கோபி கூறினார். என்னடா நிகழ்ச்சி பண்ணுறீங்க? ஒரு standard procedure வேண்டமா?

பாம்பே ஜெய்ஸ்ரீ வரவில்லை. ஆனால், அவர் சார்பா விருதை திருமதி ஹாரிஸ் ஜெய்ராஜ் வாங்கி கொண்டார்.

????? என்னங்கடா நிகழ்ச்சி இது?
கமல் கமல் கமல்:

இந்த நிகழ்ச்சியை பொருட்செலவு இல்லாமல் செய்து இருக்கலாம். கமலின் வீட்டின் பூங்காவில் இந்நிகழ்ச்சியை simpleஆ முடித்து இருக்கலாம்! ரசிகர் வாக்குகள், நாக்குகள், மூக்குகள் என்று எங்களை ஏமாற்றுவதை, நிறுத்தவேண்டும்.

வருத்தம்:

அபியும் நானும் ஒரு விருதுகூட பெறாதது!

மெகா வருத்தம்:

ஏகன் படத்துக்கு எந்த விருதும் கிடைக்காதது!(ஹிஹிஹி...)

போங்கடா நீங்களும் உங்க அவார்ட் ஷோவும்!

17 comments:

andygarcia said...

நடிகர்கள் எந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட வேண்டும், யாரிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்பதை நீங்க தான் முடிவு செய்வீங்களா, என்னங்கடா நீயாயம் இது??

mvalarpirai said...

விஜய் டீவி மேல கொஞ்சம் மரியாதை இருந்தது.ஆனால் நாங்க மட்டும் ஏன் அப்படி இருக்கனும்னு காட்டிட்டாங்க ! சிறந்த புதுமுகம் - சாந்தனு இது ஒன்னே சாட்சி ! ....கமலே புகழாலே முகம் சுழிச்சிட்டார்..அதுவும் சிவக்குமார் சொன்னாருங்க பாருங்க ...ஒரு வார்த்தை கமல் படத்தை வைத்து தெய்வமேனு எழுதிவைத்திருந்தாராம் சூர்யா...முடியலடா சாமி !
விருதுகள் ஒரு தலை பட்சமாகவே இருந்தது .. இதுக்கு இவங்க பண்ண build up இருக்கே சாமி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லவேளை நான் பாக்கல அந்த கொடுமைய!!

ivingobi said...

ippo thaan visaarichen antha programme a Comedy time la relay panna vaendiyathu thappa play pannittangalaam.... vidunga paavam....

Prabhu said...

இந்த கொடும டிவில போடுற முன்னாடியே நேர்ல பாத்த ஒருத்தரு ப்ளாக்குல புலம்பிருந்தாரு. அத வச்சு தெளிவாயிட்டோம்ல. இதுக்குதான் ஒழுங்க பெரியவங்க பேச்சக் கேக்கனும்ங்கிறது.

Prabhu said...

ஆமா.............. கதை எங்க?

FunScribbler said...

@andy

//நடிகர்கள் எந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட வேண்டும், யாரிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்பதை நீங்க தான் முடிவு செய்வீங்களா, என்னங்கடா நீயாயம் இது??//

எப்படி வேண்டுமென்றாலும் ஆசிர்வாதம் செஞ்சுகிட்டும், அதை பொது இடத்திற்காக ஓவரா பண்ணும்போது தான் இப்படி பொங்குவோம்!:)

FunScribbler said...

@வளர்

//இதுக்கு இவங்க பண்ண build up இருக்கே சாமி..//

சாமிக்கே தாங்காது!

@குறை ஒன்றும் இல்லை

gr8 escape!

@pappu

கதை கூடியவிரைவில் வரும்!:)

மயாதி said...

அரசியலில இதெல்லாம் சகஜமப்பா !

Karthik said...

ஹி..ஹி.. ஒரு காமெடி போஸ்ட் கிடைக்க வழி செய்த அவர்களுக்கு நன்றிகள் பல! :)

ச.பிரேம்குமார் said...

கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்ட மாதிரி தெரியுது. இதே விஷால் செஞ்சிருந்தா கோபம் வந்துருக்காது தானே ;)

FunScribbler said...

@பிரேம் அண்ணா

//இதே விஷால் செஞ்சிருந்தா கோபம் வந்துருக்காது தானே ;)//

யாரா இருந்தாலும் கோபம் வரும்! அநியாயம் நடந்தா, நாங்க அய்யனார் மாதிரி பொங்கிடுவோம்!:)

விக்னேஷ்வரி said...

எரிச்சல்ஸ் எனக்கும் எரிச்சலா தான் இருந்தது.

விஜய் இம்சை தாங்க முடியல.

ஆமா தமிழ் மாங்கனி, நம்மை ரொம்ப தான் முட்டாளாக்கிட்டாங்க.

அட ஆமாங்க, ஏகன் படத்தை கன்சிடர் பண்ணவே இல்லையே.

MyFriend said...

//விஜய் கமலிடம் விருதை கொடுத்துவிட்டு காலில் விழுந்தார். விஜய் அரசியலுக்கு போக போகிறார் என்பதை நிருபித்துவிட்டார். //

:-))))

MyFriend said...

//மெகா வருத்தம்:

ஏகன் படத்துக்கு எந்த விருதும் கிடைக்காதது!(ஹிஹிஹி...)//

இது கொஞ்சம் ஓவரா தெரியல? :-)

MyFriend said...

//பெயர் பிடித்தமைக்கு இன்னொரு காரணம் சிம்ரன். ஆமாங்க....நான் அகில உலக சிம்ரன் ரசிகர் மன்றத்தின் தலைவர்!! சிம்ரன் நடித்த ஜோடி மற்றும் சேவல் படங்களில் அவரது பெயர் 'காயத்ரி'!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
//

அரசு படத்திலும் அவங்க பேரு காயத்ரிதான். :-)

Anonymous said...

// மயாதி said...//

//அரசியலில இதெல்லாம் சகஜமப்பா //

ரிபீட்ட்ட்டு

by
mcxmeega