Jan 20, 2009

என்னை காதலிக்க வைத்துவிட்டான்

ஒரு காலத்தில் முற்றிலும் வெறத்த ஒன்றை, இப்போது முற்றிலும் விரும்ப ஆரம்பித்துவிட்டேன்.

பிடிச்சுருக்கு, ரொம்ப பிடிச்சுருக்கு....

புத்தகம் என்றாலே அலர்ஜி ஆகும் எனக்கு, இப்போது அவை மீது தீராத மோகம் வந்துவிட்டது.

எனக்கு பொதுவா ப்ளாக்கில், இணையத்தில் படிக்க பிடிக்கும். நம்ம வசதிக்கேற்ப, ஒரு நேரத்தில் நாலு ஐந்து விஷயங்களை படிக்கலாம். ஆனா, புத்தகம் என்றால்...ஒரே ஒரு focus தான் இருக்கும்.

எப்படி புத்தகம் படிப்பதற்கு இவ்வளவு ஆர்வம் வந்துச்சுன்னா...

ஒரு நாள் என் அக்கா ஒரு புத்தகத்தை நீட்டி, 'இத படி, ரொம்ப சூப்பரா இருக்கு' என்றாள்.

வாங்கி புத்தகத்தின் தலைப்பை பார்த்தேன் "one night @ the call centre by chetan bhagat"

"ஓ.. indian writer?" என்றேன்.

"படிச்சு பாரு...ஒரு இரவுல ஒரு ஃபோன் வருது.. அதுவும் கடவுள் ஃபோன் பண்றாரு..." என்றாள் அக்கா.

அட நல்லா இருக்கே என்று சொல்லி கொண்டே படிக்க ஆரம்பித்தேன். பொதுவா அக்காவுக்கு பிடிச்சது எனக்கு 100% பிடிக்கவே பிடிக்காது. எனக்கு பிடிச்சது அக்காவுக்கு 200% பிடிக்கவே பிடிக்காது.

அக்கா- அஜித் ரசிகை, வியாழன் சைவம், பிடிச்ச கலர் ப்ளாக்
நான் - விஜய் ரசிகை, வாரத்துக்கு எட்டு நாளும் அசைவம், வெள்ளை பிடிக்கும்.

அக்கா கொடுத்த புத்தகமாச்சே...சும்மா பார்ப்போமே என்று புரட்டி பார்த்தேன். ஆனா, எங்கள் இருவருக்கும் பிடித்த முதல் விஷயமே இந்த புத்தகம் தான்!

don't judge a book by its cover என்பார்கள். ஆனா, you can judge a book by its second page. ஏன்னா, அதுல தானே எழுத்தாளர் படம் போட்டு இருக்கும். ஹாஹா...

படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் 25 பக்கமாவது படித்துவிடுவேன். அடுத்த என்ன ஆகும்... எப்ப அந்த ஃபோன் வரும் என்று ஆர்வத்தை தூண்டிவிட்டார் எழுத்தாளர். கதையை முடித்தவுடன் ஏதோ அதிகமாய் அறிவு கூடியது மாதிரி ஒரு உணர்வு. :)

அதற்கு அப்பரம் தான் தோன்றியது, புத்தகம் படிப்பது எவ்வளவு சுவாரஸ்சியமான ஒன்று என்று! பிறகு, அதே எழுத்தாளர் எழுதிய 'five point someone' புத்தகத்தை படிக்க தொடங்கிவிட்டேன்.

அக்காவுக்கு நன்றி!
புத்தகம் படிக்கும் ஆசையை தூண்டிவிட்டு, அவைமீது காதல் ஏற்படுத்தி, என்னை காதலிக்க வைத்துவிட்ட சேத்தன் பக்காத்விற்கு நன்றி!

chetan bhagat's website

11 comments:

இராம்/Raam said...

//நான் - விஜய் ரசிகை,//

ங்ஙே... விஜய்'க்கு ரசிகையா??

வினையூக்கி said...

மூன்றாவதாக கிரிக்கெட் பற்றிய புத்தகமும் எழுதி இருக்கிறார் பாதி படித்துக்கொண்டிருக்கும்பொழுது சுவீடன் வர வேண்டியது இருந்ததால் புத்தகத்தை ஆட்டையப் போடாமல் நண்பரிடம் திருப்பிக்கொடுத்து விட்டேன்.

அவருடைய தனிப்பட்டக் கதையும் சுவாரசியமாகவே இருக்கும். 5.சம் ஒன் த்ரீ இடியட்ஸ் என படமாக வருகிறது.

மாதவன் கூட ஒரு இடியட். அமீர்கான் முதல் இடியட்

தமிழன்-கறுப்பி... said...

:)

ராமோட கமன்ட்டுக்கு ரிப்பீட்டு போட்டாலும்....................

...............................


..............................


..............................



...............................




................................




............................

...................................

விஜய் வாழ்க...!

;)

Divya said...

Reading is a very intresting Hobby Gayathri:))

Keep reading more......and enjoy ur readings:))

priyamudanprabu said...

//நான் - விஜய் ரசிகை,//

ங்ஙே... விஜய்'க்கு ரசிகையா??

///


ரிப்பீட்டு

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள் புத்தக உலகம் உங்களை வரவேற்கிறது.

Anonymous said...

welcome to the club!

fps is awesome novel. though im no longer chetan bhagats' fan, i like this book. his third book about cricket is a crap.

-karthik narayan - rainbow street

FunScribbler said...

@ராம்

என்னங்க பண்ண? விஜய் ரசிகர்ன்னு சொல்லிக்கவே கொஞ்ச கஷ்டமா இருக்கு இப்போ!:(

FunScribbler said...

@வினையூக்கி

//அமீர்கான் முதல் இடியட்//

.. அமீர்கான்!!! oh my god, i better start saving money to watch the movie!:)

FunScribbler said...

@திவ்ஸ், ஷங்கர்

தேங்கஸ் உங்க வாழ்த்துகளுக்கு!:)

பிரியமுடன்... said...

கொடுமை கொடுமைன்னு கோவில்லுக்கு போனா...அங்கே ரெண்டு கொடுமை அஞ்சப்பரில் வாங்கிகொண்டுவந்து அடிச்சுவுட்டுகிட்டு இருந்துச்சாம்!

வாரம் முழுக்க அசைவம்! விஜய் ரசிகை! இதில் எல்லாம் எந்த தப்பும் இல்லை, இருந்தாலும் புத்தகம் படித்து கெட்டுபோவது மட்டும் ஏற்றுக்கொள்ளவே முடியாது! ஏன்னா... தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரு வார்த்தை படிப்பது!! இதுக்கு ஒரு காரணமும் இருக்கு, வேற வழியில்லாமல் பல்கலைக்கழகம் வரை படித்ததும், இப்ப புத்தகத்தை பார்தால் என்னவோ எதிரியை பார்பதுபோன்றும் இருப்பதுதான், இதப்பாரும்மா. இனிமே புத்தகம படிப்பது அது இதுன்னு எழுதினால், இந்த பக்கமே நான் வரமாட்டேன்...ஆமாம்...