Apr 3, 2009

பார்வை ஒன்றே போதுமே

ஹாலில் அப்பா, அம்மாவுக்கு உதவியாய் காய்கறி வெட்டிகொடுத்து கொண்டிருந்தார். நான் சும்மா உட்கார்ந்து இருந்தேன். அப்போது,வீட்டின் நுழைவாயில் ஒரு சத்தம் கேட்டது. "ஹாலோ, யாராச்சு இருக்கீங்களா?"

அம்மா கதவு அருகே சென்றார். புதிதாக ஒரு பெண்மணி. "ஹாய், நாங்க எதிர்த்த வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கோம். பால் காய்ச்சினோம். அதான் கொஞ்சம் உங்களுக்கு கொடுத்துவிட்டு போகலாம்னு வந்தேன்..." அவர் புன்னகையித்தார். அம்மா உள்ளே அழைத்தார். இருந்தாலும் தனக்கு வேலைகள் இருப்பாதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.அவர்கள் கதவு அருகே பேசியதால், புதுசா வந்திருக்கிற ஆண்ட்டி முகத்த பார்க்க முடியவில்லை.

நாட்கள் செல்ல செல்ல, நிறைய விவரங்களை அறிந்து கொண்டேன். அவர்களது குடும்பம் சிறியது தான். அப்பா, அம்மா, ஒரே ஒரு பையன். பையனுக்குகூட வயது 24. ஐயோ... நானாக எதையுமே கேட்கவில்லை. செய்திகள் அதுவாகவே வந்து குவிந்தன. ஆனால், ஆண்ட்டியையும் அங்கிளையும் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை... சரி சரி ஒத்துகிறேன்... அவனையும் பார்க்க வாய்ப்பு கிட்டவில்லை.

ஒரு நாள் மாலை நான் மொட்டை மாடியில் இருந்தேன். மாலை நேர பொழுது. வெயில் அதிகமாக இல்லை. வானத்தில் மேகங்கள் வாக்கிங் போய் கொண்டிருப்பதை ரசித்து கொண்டிருந்தேன்.இதமான தென்றல். ரம்மியமான சூழல். அப்போது தான் அவன் வீட்டு மொட்டை மாடியை கவனித்தேன்.அவன் அங்கு இருப்பதை பார்த்தேன். சும்மா சொல்லகூடாது. நல்லாவே இருந்தான். அவனும் என்னை பார்ப்பதை கவனித்தேன். "ஓ மை காட்...." என்று மனம் படபடத்தது. நான் பார்க்காததுபோல் இருந்தாலும் அவன் விடுவதாக இல்லை. அவன் பார்வை என்னைவிட்டு விலகவில்லை.

உள்ளூர சின்ன சந்தோஷம். இருந்தாலும் கொஞ்ச பயம், ஒருவித படபடப்பு! கொஞ்ச நேரம் கழித்து அவன் கை அசைத்தான் என்னை பார்த்து. நான் பறப்பதுபோல் உணர்ந்தேன். ஒன்றும் சொல்ல முடியவில்லை! என்னடா இது, இவனுக்கு ரொம்ப தைரியம் தான் என்று மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கியது.

வாக்கிங் சென்ற மேகங்கள் கால் தடுக்கி கீழே விழ, அவை அழ ஆரம்பிக்க, மழை பொழிய தொடங்கியது. அம்மா தங்கையிடம், "ஏய், மொட்டை மாடில காய போட்டுருக்கும் உன் அக்காவோட நீல கலர் சுடிதார எடுத்துட்டு வந்துடு"

ஓடி வந்த தங்கை, கொடியில் காய்ந்து கொண்டிருந்த என்னை 'வெடு'க்கென்று அள்ளி கையில் போட்டவாறு ஓடினாள். போகும்போது, எதிர்த்த வீட்டில் காய்ந்துகொண்டிருந்த வெள்ளை டீஷர்ட்டை ஆண்ட்டி எடுத்து போவதை பார்த்தேன்

18 comments:

Revathyrkrishnan said...

உயிரில்லா பொருளுக்கும் ரொமான்ஸ் வர வெச்சுட்டியே... காயத்ரி தி க்ரேட்

Revathyrkrishnan said...

ப்ளூ அன்ட் ஒயிட்... நல்ல காம்பினேஷன் தான்;)))

Revathyrkrishnan said...

அட me the first

Bhuvanesh said...

அருமையான நடை.. கலக்கறீங்க !!

mvalarpirai said...

தமிழ்..எனக்கென்னமோ ..இது சுடிதார் பேசின மாதிரி தெரியல ! ..பார்த்து சூதானமா நடந்துகங்க.. சொல்லிப்பிட்டேன் ஆமா :) :)

FunScribbler said...

@ரீனா

//உயிரில்லா பொருளுக்கும் ரொமான்ஸ் வர வெச்சுட்டியே... காயத்ரி தி க்ரேட்//

க்ரேட்டா? ஹாஹா... அந்த அளவுக்கு எல்லாம் ஒன்னுமில்லங்க:)

//ப்ளூ அன்ட் ஒயிட்... நல்ல காம்பினேஷன் தான்;)))//

நன்றி:)

FunScribbler said...

@புவனேஷ்

தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் உங்களுக்கு நன்றிகள்:)

FunScribbler said...

@வளர்

//தமிழ்..எனக்கென்னமோ ..இது சுடிதார் பேசின மாதிரி தெரியல ! ..பார்த்து சூதானமா நடந்துகங்க.. சொல்லிப்பிட்டேன் ஆமா :) :)//

ஹாஹா...கவலை வேண்டாம், இந்த ஆஞ்ஜநயா பக்தைக்கு எதுவும் ஆகாது!:)

இங்க வீட்டுல நீல கலர் சுடிதாரும் இல்ல. எதிர்த்த வீட்டுல மொட்டை மாடியும் இல்ல. ஆனா பையன் இருக்கான்.... வயது இப்ப தான் 2 ஆகுது! :)

Unknown said...

ரொம்ப நல்லா இருந்தது.. :))) உண்மைய சொல்லனும்னா கடைசியா ஏதோ பல்பு இருக்க போகுதுன்னு நினைச்சாலும்... உங்க நடை ஒரு நல்ல காதல் கதைய சொல்லியது.. வாழ்த்துகள் காயத்ரி.. :))))

Karthik said...

ஒரு நல்ல காதல் கதை போலன்னு நினைச்சேன். :(

ஆனால் முடிவு சூப்பர்ப். எதிர்பார்க்கவே இல்லை. :))

தேவன் மாயம் said...

நல்ல கதை!

முதலில் புரியவில்லை!!

ஜியா said...

:))

//எதிர்த்த வீட்டில் காய்ந்துகொண்டிருந்த வெள்ளை டீஷர்ட்டை ஆண்ட்டி எடுத்து போவதை பார்த்தேன்//

kaaynthu kondiruntha AVANAI nu vanthirukanumo?

FunScribbler said...

@ஸ்ரீமதி

//கடைசியா ஏதோ பல்பு இருக்க போகுதுன்னு நினைச்சாலும்... உங்க நடை ஒரு நல்ல காதல் கதைய சொல்லியது..//

புத்திசாலிங்க நீங்க!
வாழ்த்துகளுக்கு நன்றி

FunScribbler said...

@கார்த்திக்

//ஆனால் முடிவு சூப்பர்ப். எதிர்பார்க்கவே இல்லை. :))//

நன்றி:)

FunScribbler said...

@thevanmayam

//முதலில் புரியவில்லை!!//

புரியாத அளவுக்கா கதை எழுதுறேன்..அப்ப தேரிட்டேன்னு நினைக்குறேன்..ஹிஹி:)

புதியவன் said...

யூகிக்க முடியாத முடிவு...கதை அருமை...

FunScribbler said...

@புதியவன்

//யூகிக்க முடியாத முடிவு...கதை அருமை.//

நன்றி:)

ivingobi said...

naan kooda nalla romantic a oru kathai sollavarreenga nu nnaichaen kadaisiyil kavuthuttinga.... irunthaalum uyir illa porulukkum unarvugal irukkalam nu puriya vachuttinga....