Apr 5, 2009

அயன் படத்துக்கு அப்பரம் நடந்த கதை

நேற்று அயன் படத்தை பார்த்தேன். அதுக்கு விமர்சனம் போட்ட பிறகு, தமிழ்மணத்தில் 'சூடனா இடுகைகள்' பகுதியிலும் தமிலீஷ்.காமில் popular பதிவில் இந்த திரைவிமர்சன பதிவு வந்தது ரொம்ம ஆச்சிரியமா இருந்துச்சு. 4 வருஷமா எழுதுறேன், ஒரு தடவகூட எந்த பதிவும் இப்படி வந்தது இல்ல. ஆனா, நேத்திக்கு... ஹாஹா... நன்றி கே வி ஆனந்து சாரே!!

அயன் படம் பார்த்துவிட்டு நடந்த ஒரு சம்பவம். செம்ம காமெடியா போச்சு. படம் பார்த்து கொண்டிருந்தபோது, எங்கள் பக்கத்தில் ஒரு சீன பெண்மணி உட்கார்ந்து இருந்தார். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னடா இவங்க, தியெட்டர் மாறி வந்துட்டாங்களான்னு நினைத்தோம். ஹிந்தி படங்களுக்கு மற்ற மொழி மக்கள் வருவார்கள், அப்படங்களுக்கு ஆங்கில subtitle இருக்கும். தமிழ் படங்களுக்கு அப்படி இருக்காது. ஆனா, ரொம்ப நேரம் கவனித்தோம் அவரை. அவரும் ரசித்து பார்த்து கொண்டிருந்தார். சில பாடல்களும் முடிந்தபிறகு, கைதட்டினார் வேற.

இடைவேளையின் போது,அவரிடம் கேட்டோம் உங்களுக்கு ஏதாச்சு புரியுதா. அவர் ஆங்கிலத்தில் சொன்னார், "எனக்கு இந்திய படங்களை பார்க்க புடிக்கும். சூர்யாவ பிடிக்கும். பின்னாடி ஒருத்தர் உட்கார்ந்து இருக்காரே,அவர் சூர்யாவா?"

நாங்கள் பின்னாடி திரும்பி பார்த்தோம், ஒருத்தர் உட்கார்ந்திருந்தார், வழக்கை தலை.. பார்ப்பதற்கு பொன்னம்பலம் மாதிரி இருந்தார். ஹாஹா... இவரை போய்... ஐயோ ஐயோ.. படம் முடிந்து அந்த சீன பெண்மணி தைரியமாக பின்னாடி திரும்பி 'பொன்னம்பலத்திடம்' கேட்டார், "நீங்க தானே படத்துல நடிச்சவங்க?"

எங்களுக்கு நெஞ்சு வெடிச்சுடுச்சு. 'பொன்னம்பலம்' பக்கத்தில் இருந்த அவரின் girlfriend/wife(யாருன்னு சரியா தெரியல்ல...) விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார். எங்களுக்கு சிரிப்பு தாங்க முடியல. கொஞ்ச நேரம் இருந்திருந்தால், அந்த சீன பெண்மணி என் அக்காவை பார்த்து,

"நீங்க தானே தமன்னா?" என்று கேட்டு இருப்பார். அக்கா(தமன்னாவின் தீவிர ரசிகர்)வும் ஆமா ஆமா என்று தலையாட்டி இருந்திருப்பார்!!!

நான்: ஆனா, அக்கா கொஞ்ச மாநிறமாச்சே....

என் தோழி: அக்கா சொல்லும் 'நான் வெள்ளையா தான் இருந்தேன்.. .சிங்கப்பூர் வெயில இப்படி மாறிட்டேன்னு' பீலா வுடும்!

ஹாஹாஹா.....

10 comments:

ஆயில்யன் said...

//எங்களுக்கு சிரிப்பு தாங்க முடியல. கொஞ்ச நேரம் இருந்திருந்தால், அந்த சீன பெண்மணி என் அக்காவை பார்த்து,

"நீங்க தானே தமன்னா?" என்று கேட்டு இருப்பார். அக்கா(தமன்னாவின் தீவிர ரசிகர்)வும் ஆமா ஆமா என்று தலையாட்டி இருந்திருப்பார்/

ஆஹா மொத்தத்துல்ல பதிவு போட்டு அக்கா இமேஜை டேமேஜ் பண்ணிட்டீங்க நல்லா இருங்க...!

:)

சுரேகா.. said...

சூர்யாவுக்கு இப்படி ஒரு அவமானமா?
:)

அதேபோல் அக்காவுக்கு இப்படி ஒரு தங்கையா?
:)

Karthik said...

//எங்களுக்கு சிரிப்பு தாங்க முடியல. கொஞ்ச நேரம் இருந்திருந்தால், அந்த சீன பெண்மணி என் அக்காவை பார்த்து,

"நீங்க தானே தமன்னா?" என்று கேட்டு இருப்பார். அக்கா(தமன்னாவின் தீவிர ரசிகர்)வும் ஆமா ஆமா என்று தலையாட்டி இருந்திருப்பார்/

Total Damage ஆயிடிச்சு....!

FunScribbler said...

@ஆயில்யன்

//ஆஹா மொத்தத்துல்ல பதிவு போட்டு அக்கா இமேஜை டேமேஜ் பண்ணிட்டீங்க//

இமேஜ் யாருக்கு இருந்தாலும், அத டேமேஜ் செய்வதே எங்கள் பணி:)

FunScribbler said...

@சுரேகா

//அதேபோல் அக்காவுக்கு இப்படி ஒரு தங்கையா?//

சார், அக்கா கொடுத்து வச்சிருக்கனும் இப்படி ஒரு தங்கச்சி கிடைக்க!:)

Vijayaraj said...

Nalla comedya eluthureeinga...2 month back, i came acorss your blog...read most of your blogs..Some blogs are awesome and few are okay.

Keep rocking..All the Best..

priyamudanprabu said...

ஆஹா மொத்தத்துல்ல பதிவு போட்டு அக்கா இமேஜை டேமேஜ் பண்ணிட்டீங்க நல்லா இருங்க...!

Karthik said...

//அக்கா(தமன்னாவின் தீவிர ரசிகர்)

அஜித் ரசிகர் அக்காவா???

//தமிழ்மணத்தில் 'சூடனா இடுகைகள்' பகுதியிலும் தமிலீஷ்.காமில் popular பதிவில் இந்த திரைவிமர்சன பதிவு வந்தது ரொம்ம ஆச்சிரியமா இருந்துச்சு.

வாவ்..! :)

FunScribbler said...

@vijayraj

//Some blogs are awesome and few are okay.//

வாழ்த்துகளுக்கு நன்றி. இன்னும் நல்லா எழுத முயற்சி செய்கிறேன்.

Anonymous said...

ǝʎıןɐʎıpnɯ ɐqɯɐu