May 15, 2009

biggest loser-எந்த கடையில நான் அரிசி வாங்கினேன்?-3

உடற்பயிற்சியுடன் டையட்டும் முக்கியம். மூன்று இட்லிகள் சாப்பிடும் நேரத்தில் இரண்டை சாப்பிட ஆரம்பித்தேன். இப்படி பாதி அளவு சாப்பாட்டை குறைத்தேன். ஆரம்ப காலங்களில் கஷ்டமாக தான் இருந்துச்சு. chocolates, pepsi, coke, ice cream, biscuits, snacks, முறுக்கு, மற்ற பலகாரங்களை முற்றிலும் தவிர்த்தேன். அந்த நேரங்களில் தான் வீட்டில் உள்ளவர்கள் kfc, macdonald's, pizza, burger இப்படி ஏதாச்சு வாங்கி வருவார்கள். ஆனால், எதையும் தொட மாட்டேன். சில சமயங்களில் ஏக்கம் வரும்.

இவர்கள் வாங்கி கொண்டு வரும் நேரம் குறிப்பா இரவு நேரங்களில் தான் இருக்கும். ஏக்கத்தை தவிர்ப்பதற்கே நான் இரவு 7 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவேன். முழித்து இருந்தால், அவற்றை சாப்பிட்டு விடுவேனோ என்ற பயம். இரவு நேரங்களில் சாதம் சாப்பிடுவதை முற்றிலுமாக கைவிட்டேன். நாம் அதிகபடியாக சாதம் சாப்பிடுவதே நம் உடல் பருமனாக இருக்க காரணம். இரவு நேரங்களில், பழங்கள் அல்லது சப்பாத்தி என்று உணவு பழக்கம் மாறியது. சாப்பிடும்போது பாதி வயிறு நிரம்பும் வரை தான் சாப்பிட வேண்டும்.

பின்னர், aerobics, hip hop வகுப்புகளுக்கு சென்றேன். பயிற்சிவிப்பாளர் ஆடும்போது அது ஹிப்-ஹாப், அதே ஸ்டப்புகளை நம்ம போடும்போது, ஏதோ டப்பாங்குத்து மாதிரி இருக்கும். ஆமா.. சரியா ஆடி நம்ம என்ன உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சிக்கா போக போறோம். கை கால்களை அசைத்து, வேர்வை வெளியாகி, caloriesகளை குறைப்பதே எனது நோக்கம்.

இப்படி செய்ய, 9 மாதங்களில் 66 கிலோவில் இருந்த நான் 53 கிலோவிற்கு வந்தேன். பெரிய பெரிய சாதனை. பார்த்தவர்கள் நிறைய பேர், ரொம்ப இளைச்சுட்டே என்று சொல்லும்போது என்னுள் எழுந்த பெருமிதம் வானளவு!
காலேஜில் நிறைய பேர், "ஏய் என்னடி... செஞ்சே...you look good...you lost so much of weight.." என்று பாராட்டினர்.

போட முடியாத சட்டைகள் பல அதற்கு அப்பரமும் போட முடியவில்லை.
காரணம்?
அவை இப்போது பெரியாதாய் இருந்தன.ஹாஹாஹா.... நிறைய உடைகளை alter செய்து தான் போட்டுகொண்டேன்.

வீட்டில் ஒரு digital weighing machine வாங்கினேன். அதில் தினமும் காலையில் எடை பார்த்தபிறகு தான் மறுவேலை நடக்கும்.

எனக்கு ஒரு ஆசை, பேராசைகூட வைத்து கொள்ளலாம். 53 கிலோவில் இருக்கும் நான், 50க்கு வர வேண்டும் என்பதே! எல்லாரும் 50 கேஜி தாஜ்மகால்ன்னு சொல்றாங்களே, அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்பதே ஒரு முறை உணர்ந்து பார்க்க வேண்டும்.

சிரமம் எடையை குறைப்பது என்றால் அதைவிட சிரமம் 53விலே maintain செய்வது.

பரிட்சையில் தோல்வி அடைந்தவன் வெற்றி பெற்றுவிடுவான் அடுத்த முறை. ஆனால் இந்த 99 மார்க் வாங்கினவன் 100 மார்க் எடுக்க ரொம்ப ரொம்ப கஷ்டப்படுவான். இந்த நிலைமையில் தான் நான் இருக்கிறேன். 9 மாதங்களில் 53க்கு வந்த நான், 53லிருந்து 50க்கு வர ரொம்ப கஷ்டமாக இருக்கு!:)

17 comments:

யாத்ரீகன் said...

great.. and i've started now.. i hope i could also make it :-D ... this post is an inspiration now for me ;-)

துளசி கோபால் said...

அருமை.

அதேதான் எடையை மெயிண்டெய்ன் செய்யறதுதான் ரொம்பக் கஷ்டம்..கொஞ்சம் எடை குறைக்கணுமுன்னு இப்போ தினமும் 70 நிமிஷம் ட்ரெட் மில்லில் நடக்கிறேன்.

முதலும் கடையும் பத்து பத்து நிமிஷம் வார்மிங் அப் & கூலின் டௌன்.

நடுவில் 50 நிமிஷம் மூணு மைல் வேகத்தில் சீரான நடை.

ஒரு பாட்டு ஸிடி போட்டுக்குவேன். சரியா 70 நிமிசம் வரும்.

என்ன செய்யறது? ஏறும் வேகத்தில் இறங்க முடியலையே(-:

துளசி கோபால் said...

oops.....

கடைசின்னு படிங்க.

எந்தக் கடைன்னதும் நானும் கடைசிக்குக் கடைன்னு எழுதிட்டேன்(-:

Thamizhmaangani said...

@யாத்ரீகன்

//this post is an inspiration now for me ;-)//

மிக்க மகிழ்ச்சி! all the best:)

Thamizhmaangani said...

@துளசி

//எந்தக் கடைன்னதும் நானும் கடைசிக்குக் கடைன்னு எழுதிட்டேன்(-://

பரவாயில்லங்க...it's ok:)

Anonymous said...

hey i am also trying to loose my weight i have joined in gym and swimming..but i am unable to control the food..any advice on wht to eat...

ivingobi said...

ada kuraichuttingala.... ? paravayilllaiyae... Poraamaiyudan

Srivats said...

Congrats!! thats so painful yet good for you.

reena said...

சூப்பர் காயத்ரி... எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கீங்கனு நல்லா புரியுது... ஏன்னா நானும் இப்போ எடை குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.

Thamizhmaangani said...

@அந்நியரே,

//any advice on wht to eat...//

இப்ப சாப்பிட்டு கொண்டு இருக்கும் அளவில் பாதியை குறையுங்கள்! அதுவே முதல் முன்னேற்றம்:)

Thamizhmaangani said...

@ஸ்ரீ, ரீனா

நன்றி:)

Bhuvanesh said...

ஐயோ.. நான் எடை குறைக்க மாங்கு மாங்குன்னு நடக்க அராம்பிசிருகேன்.. இருவது நாளுல ஒரு கிலோ கம்மி பண்ணிட்டேன்.. பாக்கலாம்..

Divyapriya said...

wonderful post!!! but it totally demotivated me :)) ரொம்ப கஷ்டம் போல இருக்கே? என்னால கண்டிப்பா முடியாது :)

Thamizhmaangani said...

@புவனேஷ்

வாழ்த்துகள்! நிச்சயம் வெற்றி நிச்சயம்

@திவ்யாபிரியா

கஷ்டமாக தான் இருக்கும் ஆரம்பிக்கும்போது...போக போக சரியா வந்துடும்! கவலை வேணாம்!

லோகு said...

காத்தடிச்சா பறக்கற மாதிரி இருக்கற என்ன மாதிரி ஆளுங்க எடை கூடவும் எதாவது சொல்லுங்களேன்..

Monks said...

ஐம்பதிலும் ஆசை வரும் ஆனால்
ஐம்பதுக்காக ஆசைப் படலாமா ?

(முதல் வருகை அதனால அதிரடி என்ட்ரீ :)

Thamizhmaangani said...

@லோகு

காலையில 10 இட்லி,
மதியம் 5 பிளேட் சிக்கன் பிரியாணி
இரவு 20 தோசை
அப்பரம் ஐஸ்கீரிம், சாக்லெட் அப்படி இப்படின்னு சாப்பிடுங்க... நல்லா எடை போட்டுடும்!:)